நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

85 / 100


நெல்லிக்காய் ஜூஸ் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறதா? தீமை ஏற்படுகிறதா? எந்தெந்த வகையில் நெல்லிக்காயை நம் உடல் நலத்துக்கு பயன்படுத்தலாம்? உள்பட உங்கள் மனதில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறது இக்கட்டுரை

உள்ளடக்கம்

நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்

நெல்லிக்காய். இது ஆங்கிலத்தில் ஆம்லா என்றும் கூஸ்பெரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நெல்லிக்காய் மூலம் தயாரிக்கப்படும் நெல்லிக்காய் ஜூஸ் சுவையும், ஊட்டத் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய பானமாக இருக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல், பிற நோய்த் தொற்றுகளுக்கு எதிராக நெல்லிக்காய் போராட உதவுகிறது.
நெல்லிக்காய் சாறு தினமும் குடித்து வந்தால், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறைவதாக சித்த மருத்துவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.
இது ஆரோக்கியமான செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. அத்துடன் பளபளப்பான சருமத்தை ஏற்படுத்துகிறது.
மூட்டுவலி இருப்பவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி நீங்குவதோடு, வீக்கமும் நீங்குகிறது என்கிறார்கள் இதை பயன்படுத்துபவர்கள்.
நெல்லிக்காய் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது பல வழிகளில் மனித உடலின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது என்பதும் கண்கூடு.

சத்து நிறைந்த பானம்

100 மில்லி கிராம் புதிய நெல்லிக்காய் சாற்றில் ஒரு கிராம் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சி கொலாஜனை உருவாக்க தேவையான ஒன்று. இது நம் உடல் செல்களை ஒன்றாக வைத்திருக்க உதவும் புரதம்.
இரண்டு ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி ஒரே நெல்லிக்காயில் இருக்கிறது. இது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அஜீரணத்தை நீக்குகிறது.சருமத்தை புதுப்பித்து எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
தினமும் 2 நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி நரைப்பது தடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் முடியின் வேர்க்கால்களை தூண்டி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச் சத்தை அளிக்கிறது.
முகத்தில் உள்ள தோல் அதிக சூரிய ஒளியால் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக பலருக்கு பாதிப்பை ஏற்படுவது உண்டு. இதனால் முகத்தில் சுருக்கம், நிறம் மங்குதல், தோல் அழற்சி, பருக்கள் உண்டாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த அத்தனை குறைபாடுகளையும் நீக்குகிறது நெல்லிக்காய் சாறு.

செரிமான நொதிப்புகள்

நெல்லிக்காய் சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இதில் அதிக நார்ச்சத்தும், செரிமான நொதிகளும் இருப்பதே.
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், மது அருந்துதல் போன்றவற்றால் சிலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.
இதற்கு காரணம் கல்லீரலில் நச்சுக்கள் சேர்ந்து அதை பாழ்படுத்துவதுதான். இந்த நச்சுக்களை நெல்லிக்காய் சாறு உடலில் இருந்து வெளியேற்றி ஆரோக்கியமார கல்லீரல் செயல்பட ஊக்குவிக்கிறது.

கொழுப்பை கரைக்கும் நெல்லிக்காய்

சிறுநீர் தொற்று இருப்பவர்கள் நெல்லிக்காய் சாறு சாப்பிடுவதன் மூலம் அதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
நெல்லிக்காய் சாறு கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் அதில் உள்ள வைட்டமின் சி இரத்த நாளங்களை பெரிதாக்குவதால் ரத்த அழுத்தம் குறைகிறது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு சாப்பிட்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் ஏராளம்.
நெல்லிக்காய் சாறு சிறுநீர் பையில் உள்ள கற்களை உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றவும் உதவுகிறது.
வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்குவதோடு, கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.
மஞ்சள் காமாலை அறிகுறிகள் உள்ளவர்களும் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவது நல்லது.

என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளன

நார்ச்சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பி வைட்டமின், மக்னீசியம், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவை நெல்லிக்காயில் இருக்கின்றன.

நெல்லிக்காய் ஜூஸ் தீமைகள்

நெல்லிக்காய் ஜூஸை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு ஏற்படுவதுண்டு. சிலருக்கு தளர்வான மலம் கழிக்கும் நிலை ஏற்படும். அதிக நெல்லிக்காய் சாறு சில நேரங்களில் வயிற்று வலியை கூட ஏற்படுவதுண்டு

எந்த வகையில் நெல்லிக்காய் சாறு தயாரித்து சாப்பிடலாம்?

பொதுவாக காலை நேரத்தில் நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் சாப்பிட விரும்புபவர்கள் 30 முதல் 50 மில்லி நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

நாள்பட்ட மூலத்துக்கு

நாள்பட்ட மூலத்தைக் கட்டுப்படுத்த, அரை ஸ்பூன் நெய், ஒரு டீஸ்பூன் தேன், 100 கிராம் பால் ஆகியவற்றுடன் புதிதாக பிழியப்பட்ட நெல்லிக்காய் சாற்றை கலந்து மதிய உணவுக்கு பிறகு குடிப்பது நல்ல பலனை அளிக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடல் எடையைக் குறைத்து நல்ல வடிவத்தைப் பெற உதவுகிறது.
நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்துகிறது, கண் அழுத்தத்தை குறைக்கிறது தெளிவான கூர்மையான பார்வைக்கு வழி வகுக்கிரது. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இதில் உள்ளதால், கண் ஆரோக்கியம் மற்றும் பார்வையைப் பாதுகாக்கிறது, மேலும் கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம் பேண

நெல்லிக்காய் சாறு உட்கொள்வோரின் இரத்தத்தில் மொத்த கொழுப்பு மற்றும் எல்டிஎல் (கெட்ட கொழுப்பு) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது, பக்கவாதம் மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை சில

நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்க பல வழிகள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு பலன்களை சார்ந்ததாக இருக்கிறது.
இரு நெல்லிக்காய்களை கழுவி உலர வைக்க வேண்டும். விதைகளை அகற்ற சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிக்சியில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அதை வடிகட்டவும்.
வெறும் சாற்றை குடிக்க கஷ்டமாக இரும்தால் சுவைக்கு சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இது தொடர்ந்து நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் ஆற்றலை தருகிறது.
ஒரு நெல்லிக்காய், 2 கிராமுக்கும் குறைவான அளவில் இஞ்சி ஆகியவற்றை நறுக்கி மிக்சியில் இட்டு, 100 மில்லி கிராம் அளவுக்கு நீர் ஊற்றி அரைத்து அதை வடிக்கட்டி, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது. நோய்கள் அணுகாமல் தடுக்கிறது.

சிறுநீரகக் கல் பிரச்னைக்கு

இரண்டு பெரிய நெல்லிக்காய்கள், ஒரு சிறு துண்டு இஞ்சி, அரைக்கப் நீர் ஊற்றி மிக்சியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிக்கட்டி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.

கல்லீரல் பலமடைய

இரண்டு நெல்லிக்காய், ஒரு துண்டு இஞ்சி, அரை மூடி எலுமிச்சை துண்டு, சிறிதளவு பொதினா கீரை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் இட்டு ஒரு டம்ளர் ஊற்றி நன்றாக அரைத்து வடிக்கட்டி குடித்து வந்தால் கல்லீரல் பலமடையும்.

சகல நோய் நிவாரணியாக

2 நெல்லிக்காய்கள், சிறிதளவு மிளகு, சீரகம், ஓமம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிதளவு, இந்துப்பு சிறிதளவு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்த நெல்லிக்காய் சாறு பருகுவதன் மூலம் சகல நிவாரணியாக விளங்குகிறது.

எப்படி சாப்பிட வேண்டும்

தினமும் புதிதாக தயாரிக்கப்பட்ட சாறு சாப்பிடுவதான் சிறந்தது. அதிக அளவில் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது நல்ல பலனை தராது.
முதன்முறையாக நெல்லிக்காய் சாறு சாப்பிடுவோர் மிகக் குறைந்த அளவு சாறை பருகி பார்க்க வேண்டும். அதனால் உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே 50 முதல் 100 மில்லி கிராம் அளவுக்கு சாற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.
ஏற்கெனவே வயிற்று பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவரை அணுகி நெல்லிக்காய் சாறு சாப்பிடலாமா என்று கேட்டறிந்து சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடிக்கலாமா?

நெல்லிக்காய் சாற்றை தினமும் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. கொழுப்பின் அளவு கட்டுப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.
ஆனால் நீண்ட நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சில நாள்கள் இடைவெளி விட்டு மீண்டும் தொடரலாம்.


நெல்லிக்காய் சாறு குடித்தால் சரும நோய்கள் தீருமா?

நெல்லிக்காய் சாறு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி ஆகியவை சருமத்தை சுத்தப்படுத்துகின்றன. ஆரோக்கியமான முறையில் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள நெல்லிக்காய் சாறு உதவுகிறது.


நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதுதான் நன்மை பயக்கும்.

நெல்லிக்காய் சாற்றை எப்போது குடிக்க வேண்டும்?

நெல்லிக்காய் சாற்றை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. சிலர் மாலை நேரத்திலும் கூட குறைந்த அளவு சாப்பிடுவது உண்டு.

நெல்லிக்காய் சாறு தொப்பையை கரைக்குமா?

நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருப்பதால், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கொழுப்பை குறைக்க உதவுகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது. இதனால் தொப்பை குறைவதற்கு வழி ஏற்படுத்துகிறது.

நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிடலாமா?

சிறுநீரக கோளாறு இருப்பவர்களும், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களும் நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிடக் கூடாது. காரணம் அதில் பதப்படுத்துவதற்காக அதிக அளவில் உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். உப்பில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிரிக்கச் செய்வதோடு சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும்.

நெல்லிக்காய் சாப்பிடுபவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா?

நெல்லிக்காய் டையூரிடிக் தன்மை கொண்டதாக இருக்கிறது. இது தோலில் உள்ள ஈரத் தன்மையை குறைக்கக் கூடியது.
அதிக அளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தும்போது உடல் வறட்சி ஏற்படக் கூடும். சிலருக்கு இதனால் திடீரென எடை குறைந்துவிடும்.
அதனால் அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. சராசரியாக ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பது நல்லது. இல்லாவிடில் சிலருக்கு ஒவ்வாமை, சரும கோளாறுகளை ஏற்படுத்தும்.


நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் குடிக்கலாமா?

இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் சாப்பிடுவது நல்லது.

குரங்கில் இருந்து மனிதன் தோன்றியது உண்மையா?


திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?

85 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply