பொதுவாக மனிதன் வயது மூப்பு, இதயத்துடிப்பு நின்றுபோதல், விபத்து, மீளமுடியாத நோய் பாதிப்பு, உடலில் ஆபத்தான விஷம் பரவுதல் போன்ற காரணங்களால் மனிதன் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த மரணத்திற்கு முன் மூளையின் செயல்பாடுகள் பற்றி சில உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.
உள்ளடக்கம்
மரணத்திற்கு முன்… மூளை பற்றிய ஆராய்ச்சிகள்
மனிதன் தன்னுடைய மரணத்தின்போது அவனுடைய மூளையில் எந்த விதமான மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிவதற்கு தொடர்ந்து உலகில் பலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
மரணத்துக்கு முன்பும், பின்பும் மனித மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதன் மூலம் இதை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 87 வயதான கை, கால் வலிப்பு நோயாளி ஒருவரின் மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்தபோது ஒரு ஆச்சரியமான தகவல் கிடைத்திருக்கிறது.
ஆராய்ச்சி இதழ் சொல்வதென்ன?
Frontiers in Aging Neuroscience என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரையில், கடைசி நேரத்தில், நினைவகத்தை மீட்டெடுப்பது தொடர்பான முயற்சிகளை மூளை உருவாக்குவது தெரியவந்திருக்கிறது.
லூயிஸ்வில் பல்கலை ஆய்வு சொல்வது என்ன?
அதேபோல் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட, லூயிஸ்வில் பல்கலைக் கழகத்தின் தலைமை ஆய்வு விஞ்ஞானி டாக்டர் அஜ்மல் ஜெம்மர் அண்மையில் தெரிவித்துள்ள தகவல்படி, “இறப்பதற்கு சற்று முன்பு, மரணத்திற்கு மிக அருகில் உள்ள அனுபவங்களையும், முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளையும் மூளை கடைசியாக நினைவு கூர்கிறது.
நோயாளியின் இறப்பைச் சுற்றி 900 வினாடிகள் மூளையின் செயல்பாட்டை ஆராய்ச்சிக்குழு பதிவு செய்தது, குறிப்பாக இதயம் துடிப்பதை நிறுத்துவதற்கு முன்னும் பின்னும் 30 வினாடிகளில் அதிக கவனம் செலுத்துகிறது.
இதில் மூளையின் நினைவகம், அறிவாற்றல் செயல்பாடுகளுடன் இணைந்திருக்கும் பல்வேறு மூளை அலை வடிவங்களில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.
எச்எம்பிவி வைரஸ் தொற்றும் அதன் பாதிப்புகளும்
hmpv virus பற்றிய உண்மைகள் விடியோ வடிவில்
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.