விமானப் பயணத்தில் சில பொருள்களை எடுத்துச் செல்ல விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.
விமானப் பயணத்தில் பெயிண்ட், பெட்ரோல், அம்மோனியா போன்ற அமில வகைகள், தீப்பெட்டிகள், லைட்டர்கள் எடுத்துச் செல்ல முடியாது.
ஹாக்கி ஸ்டிக்குகள், பேஸ்பால் மட்டைகள், கோல்ப் பொருள்கள், வில், அம்புகள், துப்பாக்கிகள், கத்திகள், கத்தரிக்கோல் போன்றவற்றுக்கும் அனுமதியில்லை.
மிளகுத்தூள், நெயில் கிளிப்பர்கள், ஆணி, ரேசர்கள் ஆகியவையும் ஆபத்தான பொருள்களாக கருதப்படுகின்றன.
சட்டவிரோத மருந்துகள், ஆபத்தான விலங்குகள், அனைத்தும் எடுத்துச் செல்ல தடை உள்ளது.
தேங்காயை எடுத்துச் செல்ல முடியாது. இந்த கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களால் விதிக்கப்பட்டிருக்கிறது.