ரவை பூரி பாயசம் செய்வது எப்படி?

82 / 100

இனிப்பை விரும்புபவர்கள் ரவை பூரி பாயசம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இதை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். அதற்கு தேவையான பொருள்கள் செய்முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேவையான பொருள்கள்

ரவா,

ஒரு கப் சர்க்கரை,

முக்கால் கப் காய்ச்சிய பால்,

3 கப் பாதாம் மிக்ஸ்,

2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள்,

அரை டீஸ்பூன் நெய்,

ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு,

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு. 

ரவை பூரி பாயசம் செய்முறை

ரவாவுடன் உப்பு, சமையல் சோடா, நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் சிறிய துண்டுகளாக உடைக்கவும். பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அத்துடன் பூரிதுண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிடவும்.

பிறகு சர்க்கரை, பாதாம் மிக்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். கலவை கெட்டியாகிவிட்டால் பரிமாறும்போது சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply