விலை உயர்ந்த கைக்கடிகாரம் எது தெரியுமா?

82 / 100

உலகத்திலேயே இப்போது விற்கப்படும் கைக்கடிகாரங்களில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் புல்கறி ஓக்டோ ஃபினிசிமோ அல்ட்ரா காஸ்க் (BVLGARI Octo Finissimo ultra cosc) என்ற பெயருடையதாகும்.

புல்கறி ஒக்டோ பினிஸ்சிமோ அல்ட்ரா காஸ்க்

இந்த பெயரை உச்சரிக்கவே சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் பெயர் புல்கறி ஒக்டோ பினிஸ்சிமோ அல்ட்ரா காஸ்க்.
இதனுடைய விலை தற்போது இந்திய ரூபாயில் 5 கோடிக்கு விற்கப்படுகிறது. இந்த இயந்திர கைக்கடிகாரம் ஸ்பெஷல் எடிஷனாக 20 மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் வெறும் 1.8 மில்லிமீட்டர் தடிமன் கொண்டதாக புல்கறி நிறுவனம் கைக்கடிகாரங்களை தயாரித்து வந்தது.
தற்போது வெளிவந்துள்ள புல்கறி ஒக்டோ பினிஸ்சிமோ அல்ட்ரா காஸ்க் கடிகாரம் 0.5 மில்லிமீட்டர் மெல்லியதாக தயாரிக்கப்ப்ட்டிருக்கிறது. அதாவது ஒரு காகிதம் அளவுக்கு மெல்லியதாக காணப்படுகிறது.


இருந்தாலும் இதில் துல்லியமான பொறியியல் தொழில்நுட்பத்துடன் 170 உதிரி பாகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த கைக்கடிகாரமே உலகின் மிக மெல்லிய இயந்திர கைக்கடிகாரமாக இருக்கிறது.
புதுமையான இந்த கைக்கடிகாரத்தை தற்போது உலகப் பணக்காரர்களில் ஒருவரான மார்க் ஜுக்கர்பெர்க் கட்டியிருக்கிறார். இந்த கடிகாரம் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்

சராசரி மனிதர்கள் வாங்கி அணியும் கைக்கடிகாரங்கள் சில நூறு ரூபாய்களில் இருந்து சில நூறு ஆயிரம் ரூபாய்கள் வரை இருப்பதுண்டு.

இவற்றையெல்லாம் பணக்காரர்கள் அணிவது இல்லை. அவர்கள் தங்களுடைய தகுதியை நிர்ணயித்துக்கொள்ளும் வகையிலான விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை மட்டுமே வாங்கி அணிவது வழக்கம்.

அந்த வகையில், நம்முடைய தமிழ்நாட்டு அரசியலில் ஒரு அரசியல்வாதி அணிந்த கைக்கடிகாரம் கூட பேசுபொருளாக மாறியது.

அந்த கைக்கடிகாரத்தின் பெயர் ரஃபேல். அதனுடைய விலை பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்பதால்தான் அது பேசுபொருளாக மாறியது.

ஆனால் ரஃபேல் வாட்சை விட பல மடங்கு விலை உயர்வான கைக்கடிகாரங்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன.

கிராஃப் டைமண்ட்ஸ் ஹால்லுசினேசன் கைக்கடிகாரம்

இது உலகில் அதிக விலைக்கு விற்பனையாகும் கைக்கடிகாரங்களில் ஒன்று. இந்த மதிப்பில் இதன் விலை ரூ.45 கோடியை தாண்டுகிறது.
விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகத்தில் இந்த கடிகாரத்தின் பிரேஸ்லெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் பல வடிவங்களைக் கொண்ட வண்ணவண்ண நிறங்களில் 110 கேரட் அரிய வகை வைரங்கள் இதில் பதியப்பட்டிருக்கின்றன.

கிராஃப் டைமண்ட் ஃபாசினேஷன்

இந்த கைக்கடிகாரத்தை தயாரித்திருப்பது தி ஃபாசினேன் கிராஃப் டைமண்ட் என்ற பெயருடைய வைர நிறுவனம்.
இதில் 152.96 காரட் வெள்ளைநிற வைரங்கள் பதியப்பட்டிருக்கின்றன. அத்துடன் கடிகாரத்தின் நடுவில் 38.13 காரட் வைர வளையமும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த வைர வளையத்தை தனியாகவும் கழற்றி பயன்படுத்த முடியும். இந்த மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.33 கோடி.

பிரேகுவெட் கிராண்ட் காம்பிளிகேஷன் மேரி அன்டோனெட்

இந்த பெயருடைய இது கைக்கடிகாரமல்ல. இது பையில் வைத்துக் கொள்ளக் கூடிய கடிகாரம்.
இது வட்ட வடிவிலான தங்கத்தில் ஆன கேஸில் கண்ணாடி வழியாக சுழலும் கடிகார சக்கரங்கள் தெரியும் வித்தியாசமான கடிகாரம்.
பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட்டிங் முன்னாள் காதலரால் இது வடிவமைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
1782-ஆம் ஆண்டில் இந்த கடிகாரத்தில் வடிவமைப்புப் பணி தொடங்கியது. 40 ஆண்டுகள் கழித்து 1827-ஆம் ஆண்டில்தான் இது இறுதி வடிவம் பெற்றது.
ஆனால் இந்த கடிகாரத்தை பார்ப்பதற்கு முன்பே அந்த ராணி தூக்கிலிடப்பட்டுவிட்டார். இந்த கடிகாரத்தின் தற்போதைய மதிப்பு ரூ.24 கோடி.

ஜேகர்-லீ கால்சர் ஜொய்லரி 101 மான்செடெ

இந்த கடிகாரம் 576 விலை உயர்ந்த வைரங்கள் மற்றும் நீலமணிகள் நிறைந்தது.
பிரிட்டஷ் ராணி இரண்டாம் எலிசபெத் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதை பாராட்டி அவருக்கு பரிசாக இக்கடிகாரம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு இன்றக்கு ரூ.21 கோடிக்கும் மேல்.

சோப்பார்ட் 201

இந்த கடிகாரமும் பல உயர்ந்தரக வைரங்களால் வடிவமைக்கப்பட்டது. 15 கார்ட் பிங்க் நிறமுடைய வைரம், 12 காரட் நீல நிறமுடைய வைரம், 11 காரட் வெள்ளை நிறமுடைய வைரம் ஆகியன இதில் உள்ளன.
அத்துடன் 163 காரட் வெள்ளை மற்றும் மஞ்சள் வைரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.21 கோடி.

சூரியன், பூமி உருவானது எப்படி?

முகுந்த் வரதராஜன் உண்மை கதையை பிரதிபலிக்கிறதா அமரன்

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply