சமீபமாக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் இதுவரை டிஸ்னிட்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்று இருந்த செயலி இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்று மாறியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
நீங்கள் டினிஸ்ட்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உபயோகிப்பாளராக இருந்தால் நீங்கள் ஆர்வத்தோடு தேடி எதனால் மாறியது என்று இதை படிக்கும் முன்பே அறிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால், அதைப் பற்றிய ஆர்வம் இல்லாமல் இருக்கும் நிலையில், ஏன் ஜியோ ஹாட்ஸ்டார் என்ற மாற்றம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவே இப்பதிவு.
உள்ளடக்கம்
ஸ்டார் நிறுவனம்
உலக அளவில் பிரபலமானது ஸ்டார் நிறுவனம். இது 1990-இல் தொடங்கப்பட்டது. பின்னர் ஆசிய நாடுகளுக்காக ஸ்டார் பிளஸ் உள்ளிட்ட 5 சேனல்கள் தொடங்கப்பட்டன.
அப்போது 90-களில் பிரபலமாக இருந்த விஜய் டிவியை ஸ்டார் நிறுவனம் வாங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்டார் விஜயாக அது மாறியது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தொலைக்காட்சி, திரையரங்குகளுக்கு மாற்றாக ஓடிடி தளம் அறிமுகம் ஆனது. இந்த நிலையில் ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளம் தொடங்கப்பட்டது.
இணைந்த டிஸ்டினி
2019-இல் உலக அளவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான டிஸ்டினி நிறுவனம், ஹாட் ஸ்டாருடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதனால் கடந்த 5 ஆண்டுகளாக டிஸ்ட்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் இந்த செயலி காணப்பட்டது.
ஜியோ நிறுவனம்
இப்போது ஜியோ நிறுவனம் ஹாட் ஸ்டாருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. அதனால் இப்போது ஜியோ ஹாட்ஸ்டாராக அது மாறியிருக்கிறது. இந்த மாற்றம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்ந்தது.
ஜியோ ஹாட்ஸ்டார் புதிய கட்டண சலுகைகள்
இப்படி மாற்றம் பெற்ற ஜியோ ஹாட்ஸ்டாரை மக்களிடம் முன்பை விட அதிக அளவுக்கு கொண்டு செல்ல ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஏற்கெனவே ஜியோ நிறுவனத்திடம் ஒரு ஓடிடி தளம் இருக்கிறது. இதில் திரைப்படம், வெப் தொடர், கிரிக்கெட் போட்டிகள் போன்றவை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் ஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பதால், ஜியோ சினிமா, டிஸ்ட்னி, கலர்ஸ், ஹச்பிஓ, மார்வெல் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளின் படைப்புகளை இனி காண முடியும்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இருந்தாலும் ஏற்கெனவே ஜியோ சினிமாவில் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ ரசிகர்கள் கட்டணமின்றி பார்க்க முடிந்தது.
இப்போது ஜியோ ஹாட்ஸ்டாருக்கு சந்தா செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது ஒரு மாற்றம். அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
அதிரடி சலுகைகள் திட்டங்கள்
மொபைல் பிளான், சூப்பர் பிளான், ப்ரீமியம் பிளான் என மூன்றுவிதமாக திட்டங்களை ஜியோஹாட்ஸ்டார் அறிமுகம் செய்திருக்கிறது.
மொபைல் திட்டத்தில் ஒரு பயனாளர் 3 மாதத்துக்கு ரூ.150 செலுத்தினால் போதும். ஆண்டுக்கு இது 499-ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் திட்டத்தில் ஜியோ ஹாட் ஸ்டாரை இரண்டு சாதனங்களை பயன்படுத்த முடியும். அதாவது மொபைல் அல்லது ஸ்மார்ட் டிவி அல்லது வேறொரு லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் இரு மொபைல் போன்களிலும் கூட பார்க்க முடியும்.
இதற்கு மாத கட்டணம் ரூ.299 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஓராண்டு கட்டணம் ரூ.899.
.
பிரிமியம் திட்டத்தில் சேர்ந்தால் விளம்பரம் இன்றி அனைத்து திரைப்படங்களையும், தொலைத் தொடர்களையும் காண முடியும்.,
இத்திட்டத்தில் ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் ஜியோஹாட்ஸ்டாரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இத்திட்டத்தில் மாதம் ரூ.299-ம், ஆண்டுக்கு 1499-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் மாற்றம் மேலும் ஒளி வடிவில்
சியா விதைகளில் இவ்வளவு நன்மைகளா?
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.