புற்றுநோய் விழிப்புணர்வு இன்றைக்கு தேவை

மனிதனை அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். மருத்துவத் துறை பல அரிய கண்டுபிடிப்புகள் மூலம் கடந்த பல பத்தாண்டுகளாக அச்சுறுத்தி வந்த ஆபத்தான நோய்களுக்கு தீர்வு கண்டிருக்கிறது.இந்த நிலையில் புற்றுநோய் விழிப்புணர்வு பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை தேவைப்படுகிறது.

ஆனால் பல பத்தாண்டுகளாக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டும் புற்று நோய்க்கான சரியான காரணங்களை இதுவரை மருத்துவத் துறை கண்டறியவில்லை.

ஆனாலும் மேலோட்டமான சில முக்கிய காரணங்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்.

அதிர்ச்சித் தகவல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.61 லட்சமாக உள்ளது.

இது 2025-ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக உயரும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கணித்திருக்கிறது.

நாட்டில் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. ஆண்களில் பலருக்கு நுரையீரல், வாய் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இந்நோய் பாதிக்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.

பெண்களுக்கு அதிகமாக மார்பகம், கருப்பை ஆகிய பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதையும் அந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.

குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய்ப்புற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சத்துக்கும் அதிகம் என ஏற்கெனவே மத்திய அரசு அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது.

வைரஸ் தாக்குதல்

நாட்டில் உயிர்கொல்லி நோய்களில் இதய நோய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை புற்று நோய் இடம் பிடித்திருக்கிறது.

உணவுப் பழக்கத்தால் வருவதோடு, வைரஸ் பாதிப்பு மூலமாகவும் இந்நோய் வரலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

கர்ப்பப்பை வாய், ஆண்குறி, குதப் பகுதி போன்றவற்றில் இந்நோய் வைரஸ் தாக்குதல் காரணமாக உருவாகின்றன. இந்த வகை வைரஸ்களுக்கு இப்போது தடுப்பூசிகளும் வந்துவிட்டன.

போலியோ தடுப்பூசிகள் போன்று வயது 9 முதல் 13 வயது வரையிலானவர்களை வரும் முன் காப்போம் என்ற நடவடிக்கையாக இத்தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள இப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் மக்களிடம் இல்லை.

உடல் எடை குறைக்க பாதுகாப்பான வழி

ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை

எந்த புற்று நோயாக இருந்தாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் உள்ளது.

இதனால்தான் 40 வயதைக் கடந்தவர்கள் கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் விழிப்புணர்வு இன்னமும் பாமர மக்களை முழு அளவில் சென்றடையவில்லை. படித்தவர்கள் மத்தியிலும் கூட இந்த நோய் ஆபத்தானது என்ற அளவுக்கு தெரிந்த அளவில் வராமல் தடுப்பதற்கான புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இந்திய சுதந்திர தினம்: போற்றுவோம் கொண்டாடுவோம்!

இந்திய சுதந்திர தினம் (indian independence day) – இத்தினத்தில் இந்திய விடுதலைக்காக பாடுபட்டு உயிர்நீ்த்த தியாகிகளை போற்ற வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகளின் கடமை.

தமிழர் பங்களிப்பு

இந்தியாவின் விடுதலைக்கான எழுச்சி வரலாற்றில் தமிழர்கள் குறிப்பிடும்படியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
1867-இல் நடந்த சிப்பாய் கலகத்துக்கு முன்பே 1757-ஆம் ஆண்டில் மன்னன் அழகுமுத்துக்கோன் நடத்திய போர்தான் முதல் இந்திய விடுதலைப் போர்.

அழகு முத்துக்கோன் (1728-1757) திருநெல்வேலி மாவட்டம், கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர்.

ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்ற எட்டயபுரம் மன்னரின் நண்பர். கான் சாஹிப் என்ற வெள்ளையனின் கைக்கூலியான தமிழின துரோகியிடம் பணிபுரிய மறுத்து அவனது பீரங்கி குண்டுகளுக்கு பலியானவர்.

பூலித்தேவன்

நெற்கட்டான்செவல் பாளையம் என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு பூலித்தேவன் என்பவர் ஆட்சி புரிந்தார். அவர் வெள்ளையரை கடுமை.யாக எதிர்த்தார்.

பூலித்தேவனின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத் தேவன் உள்ளிட்ட பலர் 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

1750-ஆம் ஆண்டு திருச்சிக்கு ராபர்ட் கிளைவ் வந்தார். அப்போது அவர் அங்கு ஆங்கிலக் கொடியை ஏறறி வைத்தார்.

அத்துடன் தென்னாட்டு பாளையக்காரர்கள் அத்தனை பேரும் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று அறிவித்தார்.

இதனால் பூலித்தேவன் வெகுண்டெழுந்து திருச்சிக்கு தன்னுடைய படைகளோடு சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.

1755-ஆம் ஆண்டில் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டார் கெரான் என்பவருக்கு எதிராக அழகு முத்து சேர்வை படையோடு சென்று போரிட்டு வெற்றி பெற்றார்.

பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போரை சந்தித்தவர்.

வேலு நாச்சியார்

1752-ஆம் ஆண்டில் விசயகுமார நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் மீது கேப்டன் கோப் தலைமையில் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர்.

இதை அறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப் மற்றும் அவரது படையை விரட்டினார்.

மீண்டும் விசயகுமார நாயக்கரை மதுரை மன்னராக பதவி அமர்த்தினார்.

அவரது இறப்புக்குப் பிறகு அவருடைய மனைவி வேலு நாச்சியாரும் படைத் தளபதிகளான மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தனர்.

இப்படி அழகு முத்துக்கோன், பூலித்தேவன், முத்துராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன், வாளுக்கு வேலி அம்பலம் உள்ளிட்டோர் அந்நியர்களை எதிர்த்து போராடியவர்களில் முக்கியமானவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி

காலனித்துவ ஆட்சி என்று அழைக்கப்படும் பிரிட்டீஷ் ஆதிக்கம் 1757-ஆம் ஆண்டு பிளாசி போருக்கு பிறகு இந்தியாவில் தொடங்கியது.
பல்வேறு போர்களின் மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா வந்தது.

அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் 89 ஆண்டுகள் (1858-1947) ஆண்டார்கள்.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மங்கள் பாண்டே. இவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராணுவ சிப்பாய்.

1857 மார்ச் 29-இல் கொல்கத்தாவை அடுத்த பாரக்பூரில் பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய புதிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்து கலகம் செய்தார்.

உடல் நலத்துக்கும் நகத்துக்கும் உள்ள தொடர்பு

முதல் புரட்சி

அவர் உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்களின் கிளர்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தது.
இதனால் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். இதுவே முதல் சுதந்திரப் போராடடமான சிப்பாய் கலகம் என வர்ணிக்கப்படுகிறது.

ஆனால் வரலாற்று ரீதியாக, 1806 ஜூலை 10-இல் தென்னிந்தியாவில் நடந்த சிப்பாய் புரட்சியே ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி.

இப்போது நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம். அதை நாம் கொண்டாடும் இத்தருணத்தில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட வழிவகுத்த, அந்த சுதந்திரத்தை பெற உயிர் நீத்த, போராடிய தியாகிகளை நினைவில் கொள்வோம்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மறைந்த அடையாளம் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்.

இந்திய சுதந்திர தினம் நாம் கொண்டாடும் திருநாள்களில் முக்கியமானது என்பதும் கூட.

வெப் ஸ்டோரிஸை காணுங்கள்.

சிறந்த பண்புகள் மேலானது: திருக்குறள் கதை 28

குறளமுதக் கதைகள் வரிசையில் மனிதனுக்கு உரிய அங்கங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதைவிட முக்கியம் சிறந்த பண்புகள் என்று எடுத்துச் சொல்கிறது இக்கதை.

ஆனந்தனின் சந்தேகம்

ஆனந்தன் அவசரமாக தர்மநாதரிடம் ஓடி வந்தான். தாத்தா ஒரு குறட்பாவுக்கு எனக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை. சொல்ல முடியுமா? என்று கேட்டான்.

சரி… அந்த குறளை முதலில் சொல் என்றார் தாத்தா.

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

(குறள்- 993)

ஆனந்தா… திருவள்ளுவர் இந்த குறட்பா மூலம் நமக்கு ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.

சிறந்த பண்புகள் இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து நம் இனத்தவர் என மக்களாக பொருத்தி பேசுவது பொருந்தாது. நற்பண்புகள் கொண்டு ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவார்கள் என்று கூறுகிறார்.

அதாவது உடலால் மற்றவர்களைப் போல் தோற்றமுடையவன் மனிதன் அல்ல. சிறந்த பண்புகள் கொண்ட குணமுடையவனாக யார் இருக்கிறார்களோ அவர்களே மனிதர் என்று சொல்லியிருக்கிறார்.

உதவி கோரிய அந்தணன்

அளமுகன் என்னும் அந்தணன் நிலத்தை உழுவதற்குச் சென்றான். அங்கே குருதத்தர் என்னும் முனிவரை பார்த்தான்.

முனிவரே… எனக்கு ஒரு உதவி புரிய வேண்டும் என்றான் அளமுகன். அதைக் கேட்ட முனிவர் சம்மதம் தெரிவித்து தலையசைத்தார்.

நான் நின்ற நிலம் பதமாய் இல்லை. அதனால், மேற்குப் பக்கத்து நிலம் நோக்கிச் செல்ல நினைக்கிறேன்.

என் மனைவி எனக்காக உணவு கொண்டு வருவாள், அவள் என்னை இங்கே சுற்றி தேடுவாள்.

அவள் இங்கு வரும்போது, நான் மேற்குப் பக்கத்துக்கு கழனிக்கு சென்றிருப்பதாக அவளுக்கு வழி காட்டினாள் நன்றாக இருக்கும் என்றான் அளமுகன்.

நண்பகல் நேரம் வந்தது. அந்தணனின் மனைவி அங்கு வந்தாள், சுற்றிலும் அவனை தேடிப் பார்த்தாள். அவனை காணவில்லை.

அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த முனிவரை கண்டாள். சரி.. அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்து அவருகே சென்றாள்.

தியானத்தில் ஆழ்ந்த முனிவர்

முனிவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய தவத்தை களைப்பதா என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவர் நீண்ட நேரம் ஆகியும் கண் திறக்கவில்லை. அதனால், நான் இந்தப் பகுதி கழனியை பார்த்துக் கொள்ளும் அந்தணனின் மனைவி. அவரை தேடி வந்தேன். அவரை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டாள்.

முனிவர் அவளுடைய பேச்சை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. பல முறை முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் மாலை நேரம் வரை காத்திருந்துவிட்டு, தன்னுடைய கணவர் பசியோடு இருப்பாரே என்ற கவலையோடு வீடு திரும்பினாள்.

பொழுது சாயும் வேலையில் அந்தணன் களைப்பாக வீடு திரும்பினான். மனைவியிடம் நீ கழனிக்கு ஏன் வரவில்லை? என்று கோபப்பட்டான்.

உடனே அவள், வழக்கம்போல கழனிக்கு சாப்பாடு எடுத்து வந்தேன். உங்களை காணவில்லை. அங்கு தியானத்தில் இருந்த முனிவரிடம் கேட்டுப் பார்த்தேன். அவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

அதனால் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு சற்று முன்புதான் வீடு திரும்பினேன் என்றாள் அவள்.

முனிவர் மீது கோபம் கொண்ட அந்தணன்

பசியால் வாடியிருந்த அவனுக்கு எல்லை மீறிய கோபம் வந்தது. அந்த முனிவரிடம் சொல்லிச் சென்ற பிறகும் அவர் தன் மனைவி கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருந்திருக்கிறாரே என்ற ஆத்திரம் வந்தது.

நேராக முனிவர் இருந்த இடத்துக்குச் சென்றான். அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.

அவரை வாய்க்கு வந்தபடி திட்டினான். அப்போதும் அவரிடம் எந்த அசைவும் ஏற்படவில்லை.

இதனால், இன்னும் அவனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. சுற்றிலும் விறகுக் கட்டைகளை வைத்து தீ மூட்டினான். அத்தீயில் அவர் கருகி சாம்பலாகிவிடுவார் என நினைத்தான்.

அவர், மனம், மொழி, மெய்களை அடக்கி அற ஒழுக்கோடு தியானத்தில் உயர்ந்து நின்றதால் அந்த தீ அவரிடம் இருந்து விலகியே நின்றது.

முனிவரை வணங்கிய தேவர்கள்

இதை வானத்தில் உலா வந்த தேவேந்திரனும், தேவர்களும் கண்டார்கள். முனிவரின் தவ வலிமையை போற்றி அவரை வந்து வணங்கத் தொடங்கினார்கள்.

இதைக் கண்ட அளமுகன் தன்னுடைய தவறை உணர்ந்தான். அவன் உடனடியாக தீயை அணைத்து அவரது காலடியில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

அவனின் செயலை பார்த்த முனிவர் எந்த கோபமோ, வருத்தமோ இன்றி அவனை ஆசிர்வதித்தார்.

திருக்குறள் கதை சொல்வது என்ன?

ஒழுக்கநெறி தவறாத முனிவர்கள் மட்டுமல்ல, ஒழுக்கநெறி தவறாத மனிதர்களும், பிறரின் இழிமொழிகளையும், சுடுமொழிகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது சிறந்த பண்புகள் கொண்டவர்களிடமே காணப்படுவது.

திருவள்ளுவர் சொன்ன கருத்து

ஆனந்தா, முனிவரிடம் இருந்த உறுப்புகள்தான் அந்த அந்தணனிடமும் இருந்தது. ஆனால் அவனிடம் நல்ல பண்புகள் இல்லை. முனிவரிடமோ, பிறர் துன்பம் விளைவித்தாலும் அதை பொறுத்துக் கொள்ளும் மனம் இருந்தது.

இதனால் மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும்.

இந்த நிலையான பண்பே ஒருவனுக்கு வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் என்று கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

தீயோர் நட்பு – திருக்குறள் கதை 27

தோல் சுருக்கத்துக்கு காரணம் இதுதான்

தீயோர் நட்பு: திருக்குறள் கதைகள் 27

குறளமுதக் கதைகள் வரிசையில் தீயோர் நட்பு தவிர்ப்பது தொடர்பான திருக்குறள் விளக்கமும், கதையும் இந்த திருக்குறள் கதை 27-இல் இடம்பெறுகிறது.

தேர்வு கூடம்

ஆனந்தனுக்கு அன்று தேர்வு. அவன் தன்னுடைய நண்பன் வருணோடு தேர்வறைக்குள் நுழைந்தான். அப்போது ஆசிரியர் வினாத் தாளுடன் தேர்வு அறைக்குள் வந்தார்.

எல்லோருக்கும் விடை எழுதுவதற்கான தாள்களை விநியோகித்தார். தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 5 நிமிடம் இருந்தது.

அப்போது அவர், மாணவர்களே, இப்போது வினாத்தாளை உங்களுக்கு விநியோகிக்கப் போகிறேன்.

வினாக்களுக்கான விடைகளை கவனமாக எழுதுங்கள். அதே நேரத்தில் விடை தெரியாத நிலையில், மற்றவர்களை பார்த்து எழுதுவதற்கு முயற்சிக்கக் கூடாது.

நீங்கள் யாரேனும் சிறு குறிப்புகளை உங்கள் ஆடைகளில் மறைத்து எடுத்து வந்திருந்தாள். அதை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

தேர்வு நேரம் தொடங்கியது. எல்லா மாணவர்களும் வினாத் தாளை படித்து விடை எழுதத் தொடங்கினார்கள்.

காப்பியடித்த நண்பன்

மாணவர்களை சிறிதுநேரம் கண்காணித்துக் கொண்டிருந்த அவருக்கு தேர்வறை வாசலில் தேநீர் கொடுக்க பள்ளி ஊழியர் காத்திருந்தார். அவர் அதை வாங்கச் சென்றார்.

ஆனந்தனும், அவனது நண்பன் வருணும் அருகருகே இருந்த மேஜைகளின் முன்பு அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் தேநீர் குடிக்கச் சென்றதைக் கண்ட வருண், ஆனந்தனிடம் அவன் எழுதிய விடைத்தாளை கேட்டான்.

ஆனந்தன் நண்பனின் தொடர் வற்புறுத்தலால் வேறு வழியின்றி தான் எழுதிய விடைத் தாளை தந்தான்.

அதை வாங்கிய அருண், ஆனந்தனின் விடைத் தாளை அப்படியே காப்பியடித்தான். தேர்வறையை மீண்டும் கண்காணிக்கத் தொடங்கிய ஆசிரியர் ஆனந்தன் முகத்தில் ஒரு பதட்டத்தை பார்த்தார்.

தலைகுனிவை சந்தித்த ஆனந்தன்

அருகில் இருந்த மேஜையில் வருண் எதையோ பார்த்து காப்பியடிப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ஆசிரியர் மற்றொரு விடைத்தாளை பார்த்து எழுவதைக் கண்டு அதை அவனிடம் இருந்து பறித்தார்.

அந்த கையெழுத்து ஆனந்தனுடையது என்பதை அறிந்த ஆசிரியர், இருவரின் விடைத் தாள்களையும் பெற்றுக் கொண்டு தேர்வு அறையை விட்டு வெளியேறச் சொன்னார்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்த ஆனந்தன் செய்வதறியாது கண்ணீர் விட்டான். தன்னால் வருண் பாதிக்கப்பட்டதை உணராமல், தான் மாட்டிக் கொண்டதை மட்டுமே சொல்லி புலம்பினான்.

வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்த தர்மர், ஆனந்தன் மிக சோகமாக வீட்டை நோக்கி வருவதைக் கண்டார்.

அவனை அருகே அழைத்து தேர்வு சரியாக எழுதவில்லையா என்று கேட்டார். அவன் அழுதபடியே நடந்ததைச் சொன்னான்.

ஆனந்தா, உன் நண்பனாக இருப்பவன் வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சை கேட்காதவன். படிப்பில் கவனம் செலுத்தாதவன். அவனோடு நட்பு வைத்தது உன் தவறு. இப்போது வருத்தப்பட்டு என்ன பயன் என்று கூறினார்.

திருக்குறள் விளக்கம்

திருவள்ளுவர் ஒரு திருக்குறளில் தீய நட்பு குறித்து கூறியிருக்கிறார். அதைக் கேள்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

(குறள் – 792)

அதாவது நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். இறுதியில் சாதலுக்கும் அதுவே காரணமாகி விடும்.

இதனால் இனிமேலாவது நண்பராக ஒருவரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்த பிறகே நட்பு கொள்ள வேண்டும். புரிகிறதா…

நல்ல வேளையாக இது அரையாண்டு தேர்வு. இதனால் உன்னுடைய எதிர்காலம் பாதிக்காது.

நான் உன் ஆசிரியரை சந்தித்து நடந்தவற்றை கூறி, ஆனந்தன் இனி தவறு செய்ய மாட்டான் எனறு கோரிக்கை விடுத்து வரும் தேர்வுகளை எழுத வைக்கிறேன் கவலைப் படாதே.

அடுத்த தேர்வில் கவனம் செலுத்தி படி என்றார் தாத்தா.

தீயோர் நட்பு

தீயோர் நட்பு நமக்கு எப்போதும் தீமையைத்தான் தரும். நல்லவர் நட்பு மட்டுமே நமக்கு நன்மை தரும். நாம் பழகும் ஒருவர் தீய பண்புடையவர் எனத் தெரியவந்தால் அவரிடம் இருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறது.

திருக்குறள் கதைகள் 27 உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு மறக்கமாமல் ஷேர் செய்யுங்கள்.

தன் குறை நீக்கு – திருக்குறள் கதை

தொலைத் தொடர்பில் நாசா புதிய கண்டுபிடிப்பு

உப்பு அதிகமானால் ஆபத்து!

நம்முடைய உணவுக்கு சுவை கூட்டுவது உப்பு. ஆனால் அதை நாம் அதிகமாக உணவில் கலந்து சாப்பிடும்போது ஏற்படும் தீங்குகளால் நம் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.

அதிக உப்பு ஆபத்து

நம்முடைய உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதிக உப்பு சத்தமில்லாமல் உயிரை கொல்லும் என்று சொல்வதுண்டு. இதனால்தான் நாம் உணவில் அதிகமாக அதை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சர்க்கரை எப்படி உடல் நலத்துக்கு எதிராக மாறுகிறதோ, அதுபோல சால்ட் நம் உடல் நலத்துக்கு எதிராக மாறுகிறது.

ஆரோக்கியத்துக்கு 5 கிராம் போதும்

அதிக சால்ட் கலந்த உணவை நாம் சாப்பிடும்போது, குறிப்பிட்ட 5 கிராம் எடைக் காட்டிலும் கூடுதலாக உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதனால் சில நேரங்களில் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன.

நம் உடலில் அதிகமாக சால்ட் சேர்ந்திருப்பதை, வயிற்றுப் புண், இதய சுவரில் வீக்கம் ஏற்படுதல், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக் கல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படும்போதுதான் நாம் அறிகிறோம்.

உடலில் அதன் அளவு அதிகமாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறைந்து அது வலுவிழக்கிறது. சில நேரங்களில் நோய் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, சால்ட் உடலில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போய்விடுகிறது.

இவற்றை சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராது

பருமனாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை

அதிக சால்ட் குறிப்பாக உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோய் பாதிப்படைந்தவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக வாய் ருசிக்காக சால்டை அதிகமாக உணவில் சேர்க்கிறோம். வழக்கமாக சேர்க்கும் சால்ட் அளவை பாதியாக குறைத்தாலே நமக்கு உப்பினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துவிட முடியும்.

உடலுக்கு சால்ட் தேவைதான். குறிப்பாக நம் உடலில் நீர்ச்சத்து, ரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க இது உதவுகிறது. ஆனால் அதிகப்படியான சால்ட் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. அவற்றில் அளவுக்கு அதிகமான உப்பு ருசிக்காகவும், பொருள் நீண்ட நாள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சோடியம் குளோரைடு என்ற இரசாயண வேதிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

பொறுத்தல் குறள் கதை!: தீங்கிழைப்பவனுக்கும் நல்லது செய்

குறளமுதக் கதைகள் வரிசையில் தனக்கு தீங்கு செய்தவனைத் தண்டிக்காமல் பொறுத்தல் என்பதை விளக்கும் பொறுத்தல் குறள் கதை இடம்பெறுகிறது.

துறவம் பூண்ட அமைச்சர்

முன்னொரு காலத்தில் சுரமியம் என்னும் நாட்டை அரவிந்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவனிடம் அந்தணர் குலத்தைச் சேர்ந்த விசுவபூதி என்பவன் அமைச்சனாக இருந்தான்.

அவனுக்கு கமடன், மருபூதி என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். இருவரும் குணத்தால் வேறுபட்டிருந்தார்கள்.

புதல்வர்களுக்கு வசுந்தரி, வருணை என்ற பெயருடைய பெண்களை மணம் முடித்து வைத்தான் அமைச்சன்.

ஒரு நாள் விசுவபூதி தன் தலை முடியில் வெண்மையைக் கண்டான். அதனால் வாழ்வில் வெறுப்புற்றான். துறவரம் போவது என முடிவு செய்தான்.

அமைச்சரான இளைய மகன்

அதனால் தன்னுடைய இளைய மகன் மருபூதியை அழைத்தான். அவனை அரசனிடம் அழைத்துச் சென்று என் மகன் உங்களின் அமைச்சனாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

அரசருக்கும் அமைச்சரின் முடிவை ஏற்று மருபூதியை அமைச்சனாக்கினார்.

அரசரும், நாட்டு மக்களும் விரும்பியவாறு நல்ல அமைச்சனாக மருபூதி திகழ்ந்தான்.

அப்போது, வச்சிர வீரியன் என்னும் மன்னன் தன்னோடு போர் புரிய வருகிறாயா என்று சுரமியம் நாட்டின் மன்னன் அரவிந்தனுக்கு சவால் விடுத்து தூது விட்டான்.

அவனுடைய சவாலை ஏற்று போருக்கு தயாரானான். தன்னுடைய அமைச்சர் மருபூதியோடு படைப் பலத்தோடு போருக்கு புறப்பட்டுச் சென்றான்.

மூத்த மகனின் மோகம்

போருக்கு செல்வதற்கு முன்பு மருபூதியின் மூத்த சகோதரன் கமடனை வரவழைத்து தான் நாடு திரும்பும் வரை கவனமாக நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றான்.

ஆனால் கமடன் அரசர் கொடுத்த பொறுப்பை முறையை கவனிக்கத் தவறினான். போதாக்குறைக்கு தனது தம்பி மனைவி மீது மோகம் கொண்டான்.

அவளை தன்னுடைய மனைவியாகவும் ஆக்கிக் கொண்டான். இதையெல்லாம் மக்கள் தட்டிக் கேட்க முடியாமல் தவித்தார்கள்.

போருக்கு சென்ற அரவிந்தன், சவால் விட்டு அழைத்த அரசன் வச்சிர வீரியனை தோற்கடித்து வெற்றி வாகை சூடி உற்சாகமாக நாடு திரும்பினான்.

இளைய மகனின் மன்னிப்பு

நாட்டில் என்ன நடந்தது என்பதை விசாரித்தபோது, கமடனின் இழிச் செயல் தெரிந்து அதிர்ச்சியுற்றான்.

கமடன் செய்த தவறுக்கான தண்டனையை அமைச்சர் மருபூதி வழங்குவார் என்று நாட்டு மக்களிடம் மன்னர் தெரிவித்தார்.

மருபூதி தன்னுடைய மனைவியை அபகரித்த சகோதரனுக்கு மரண தண்டனை விதிப்பான் என்று அரசர் எதிர்பார்த்தார். நாட்டு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மருபூதி, நான் இநத நாட்டின் அமைச்சர் என்ற முறையில் இதற்கு முந்தைய காலங்களில் இத்தகைய தவறுகளை செய்தவர்களுக்கான தண்டனையை வழங்க அரசரை கேட்டுக் கொள்கிறேன்.

மருபூதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவன் இந்த நாட்டின் குடிமகன். அதனால் அரசர் வழக்கமாக விதிக்கும் தண்டனையே தன்னுடைய விருப்பமும் என்று அமைதியாக தெரிவித்தான்.

இதையடுத்து கமடனையும், அவனின் மோக வலையில் விழுந்த மருபூதி மனைவியையும் நாடு கடத்தும் வழக்கமான தண்டனையை மன்னர் அறிவித்தார்.

பொறுத்தல் குறள் கதைக்கான குறட்பா

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று

(குறள் – 152)

தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க. அந்த தீமையை மனத்துள் வைத்துக் கொள்ளாமல் மறத்தலே பொறுத்தலையும் விட நன்று என்று கூறியுள்ளார்.

இதன்படி, நமக்கு தீங்கு செய்வதவருக்கும் கூட நன்மை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது பொறுத்தல் குறள் கதை.

திருக்குறள் கதைகள் 25 – சொல்லாற்றல் வலிது

கணவரிடம் யோசனை கேட்ட மனைவி

கங்கைகொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பெருமைமிகு பாரம்பரிய சின்னங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில். இது சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையின் அருகே ஜெயங்கொண்டம் குறுக்குச் சாலையில் சுமார் 2 கி. மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

இக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்ட எல்லைக்குள் வருகிறது.

முதலாம் ராசேந்திர சோழன்

இந்த கோயிலையும், சோழ நாட்டின் தலைநகராக இந்த பகுதியையும் உருவாக்கியவர் முதலாம் ராசேந்திர சோழன்.

கோயிலில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாளிகைமேடு பகுதியில் சோழ கேரளம் திருமாளிகை என்ற பெயரில் பெரிய அரண்மனை கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

கங்கைகொண்ட சோழபுரம் அகழ்வாராய்ச்சி பணிகள்

அந்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் அடிப்படையில் தொல்லியல் துறை மாளிகை மேட்டில் கடந்த 2020-22-ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது.

அதில் செங்கல் கட்டுமானங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், செம்பு பொருள்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு போன்ற 1003 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த 2022 தொடங்கி நடத்தப்பட்டது. அதில் 1010 பொருள்கள் கிடைத்தன.

பாபநாசம் சிவன் ஆலயத்தில் பழங்கால நெற்களஞ்சியம்

சொல்லாற்றல் வலிது: திருக்குறள் கதை 25

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 25) ஒருவன் சொல்லாற்றல் மிக்கவனாய் இருந்தால் அவனை வெல்வது கடினம் என்பதை சொல்லும் சொல்லாற்றல் வலிது கதையும், குறளும் இடம் பெற்றிருக்கிறது.

முல்லா நசுருதீன்

வேகமாக ஓடி வந்த ஆனந்தன் தாத்தாவிடம் முல்லா நசுருதீன் என்பவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டான்.

ஏன் அவரைப் பற்றி கேட்கிறாய் என்றார் தாத்தா.

தாத்தா.. அவர் பேச்சாற்றலில் வல்லவர் என்று ஒருவர் என்னிடம் சொன்னார். அதனால்தான் கேட்டேன் என்றான் ஆனந்தன்.

உண்மைதான். முல்லா நசுருதீன் பேச்சாற்றலில் வல்லவராக இருந்தார். அவரைப் பற்றிய ஒரு நகைச்சுவை சம்பவத்தை சொல்கிறேன் கேள் என்றார் தாத்தா.

நகைச்சுவையா… உடனே சொல்லுங்கள் என்று ஆர்வத்தோடு தாத்தா அருகில் அமர்ந்தான் ஆனந்தன்.

முல்லாவை வம்புக்கு இழுத்தவர்கள்

முல்லா நசுருதீன் அறிவாற்றல் மிக்கவராக இருந்தார். பேச்சுத் திறமையும் அவரிடம் இருந்தது. இதனால் அவர் மீது பொறாமை கொண்டவர்களும் இருந்தார்கள்.

முல்லா அறிவாற்றல் மிக்கவரா என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. அவரை சோதிக்க சில கேள்விகள் கேட்க வேண்டும். அதனால் அவரை மேடை ஏற்றுங்கள் என்று முல்லாவுக்கு ஆதரவாக பேசியவர்களிடம் சொன்னார்கள்.

முல்லாவின் ஆதரவாளர்கள் அவரிடம் போய் உங்களுக்கு பிடிக்காதவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு முல்லா எதற்கு அவர்களோடு நாம் போராட வேண்டும். நான் அறிவற்றவன் என்று அவர்கள் நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே என்று அவர்களை சமாதானம் செய்தார்.

மேடை ஏறிய முல்லா

ஆனால் அவர்கள் யாரும் முல்லாவின் சமாதானத்தை ஏற்கத் தயாராக இல்லை. இதனால் முல்லா மேடை ஏறுவதற்கு ஒப்புக்கொண்டார். அப்போது அவருடைய எதிரிகள் சில தவறான கேள்விகளை கேட்பதற்காக ஒரு குழுவை அமைத்து தயாராக இருந்தார்கள்.

முல்லா அவர்களின் சூழ்ச்சியை புரிந்துகொண்டார். முல்லாவின் மேடையில் ஏறி பேசப் போகிறார் என்று கேள்விப்பட்ட மக்கள் அப்பகுதியில் ஒன்று திரள ஆரம்பித்தார்கள்.

முல்லா மேடை ஏறி எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தார். எதிரே காத்திருந்த மக்களைப் பார்த்து நான் என்ன பேசப் போகிறேன், எதைப் பற்றி பேசப் போகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.

வந்தவர்களோ தெரியும் என்றார்கள். உடனே முல்லா, தெரிந்தவர்களிடம் பேசுவது அழகல்ல. அது நல்லது அல்ல என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார்.

இதனால் எதிரிகள் கேள்வி கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்கள்.

மீண்டும் மேடை ஏறிய முல்லா

மறுநாளும் அவரை மேடைக்கு அழைத்தார்கள். சரி என்று மேடை ஏறினார். முல்லா மேடைக்கு வருவதற்குள், நேற்று கேட்ட அதே கேள்வியை முல்லா கேட்டால், தெரியாது என்று சொல்லுங்கள் என்று சொல்வதற்கு சிலரை தயார்படுத்தி வைத்திருந்தார்கள்.

மேடையேறிய முல்லா கூட்டத்தினரை பார்த்து, இன்று நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று தெரியுமா? என கேட்டார். பார்வையாளர்கள் தரப்பில் இருந்து தெரியாது சொன்னார்கள்.

உடனே அவர் தெரியாதவர்களிடம் பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும் என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார் . மீண்டும் கேள்வி கேட்க தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

விடாபிடியாக மூன்றாவது முறையாக அவரை மேடை ஏற்றினார்கள். இப்போதும் அவர், நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் எனத் தெரியுமா என்று கேட்டார்.

இப்போது கூட்டத்தினரிடையே குழப்பம். ஒருசிலர் தெரியும் என்றார்கள். ஒருசிலர் தெரியாது என்றார்கள்.

உடனே முல்லா, சற்றும் தாமதிக்காமல் தெரிந்தவர்கள் எல்லோரும் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாதவர்கள் எல்லோரும், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.

மூன்று முறை அவரை மேடை ஏற்றி வம்புக்கு இழுக்க தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து போனார்கள்.

சொல்லாற்றல் வலிது

சொல்லாற்றல் வலிது என்ற திருவள்ளுவர் சொல்லும் கருத்துடைய பாடலும் உண்டு.

சொலல்வல்லன் , சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

(குறள் – 647)

அதாவது சொல்வன்மை உடையவனாகவும், சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறார் திருவள்ளுவர் என்றார் தாத்தா.

வாசகர்கள் இந்த திருக்குறள் கதைகள் 25 பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவிடுவது எங்களுக்கு உதவியாக இருக்கும்.

முயன்றால் முடியும் – திருக்குறள் கதை 24

கமலம் போட்ட வாடஸ்அப் மெசேஜ்

துறவரம் பூண்ட வட்டி கடை வைத்தி

ஒரு ஊரில் வைத்தி என்பவன் வசித்து வந்தான். அவன் வட்டிக் கடை வைத்திருந்தான்.

ஏழைகள் பலரும் அவனிடம் நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். அவன் அதிக வட்டி வசூலித்ததால் பல நேரங்களில் ஏழைகளின் நகைகள் வட்டி உயர்ந்ததால் மூழ்கி போய்விடும்.

அதை அவனே எடுத்து வைத்துக் கொள்வேன். இப்படியாக ஏராளமான தங்கம், வெள்ளி நகைகளைச் சேர்த்து வைத்திருந்தான்.

யார் உதவிக் கேட்டு வந்தாலும், அவர்களிடம் பலனை எதிர்பார்க்காமல் உதவ மாட்டான். அப்படிப்பட்டவனுக்கு இரு மகன்கள் இருந்தார்கள்.

இருவருமே சோம்பேறிகள். தந்தையின் வட்டித் தொழிலைக் கூட கவனிக்க தகுதி அற்றவர்களாக இருந்தார்கள்.

சோதித்த கடவுள்

வைத்தி வட்டித் தொழிலில் செய்கிற பாவம் நம்முடைய பிள்ளைகளை பாதிக்கிறதே என்ற வருத்தத்தில் வைத்தியை விட்டு தனித்து சென்றுவிட்டாள்.

இப்படி வட்டித் தொழிலில் அவன் ஏராளமான பணம், பொருள்களை சேர்த்து வைத்த அவன் மாதம்தோறும் திருப்பதி கோயிலுக்கு போவதில் மட்டும் தவற மாட்டான்.

வட்டியில் தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க வேண்டிய திருப்பதி உண்டியலில் சொற்பத் தொகையை போட்டுவிட்டும் வருவான்.

வைத்திக்கு சோதனை தந்தால்தான் அவன் இனி திருந்துவான் என கடவுள் முடிவு செய்தார். அதனால் அவர் துறவி வேடத்தில் அவனை ஒரு நாள் சந்தித்தார்.

உதவிக் கேட்டு வந்த துறவியை பார்த்த அவன், அவருடைய கழுத்தில் வெள்ளி பூணுடன் காணப்பட்ட உருத்திராட்சத்தைப் பார்த்துவிட்டான்.

பெரியவரே… நீங்கள் அந்த உருத்திராட்சத்தை கழட்டி கொடுத்தால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்றான்.

துறவியும் அவன் கேட்டபடியே உருத்திராட்சத்தை கழட்டித் தந்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இந்த உருத்திராட்சம் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் என ஆசிர்வதித்து சென்றுவிட்டார்.

தொட்டதெல்லாம் பொன்னான விந்தை

உருத்திராட்சத்தை வாங்கிக் கொண்டு வந்த அவன் பூஜை அறையில் அதை வைத்துவிட்டு, அதன் கதவை சாத்தினான்.

என்ன ஆச்சர்யம்… அந்த கதவு தங்கக் கதவாக மாறியது. அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

பூஜை அறையில் இருந்த பொருள்களை தொட்டபோது அவையும் தங்கமாக மாறிப்போயின.. அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இல்லாமல் போனது.

இந்த அதிசயத்தை உடனே யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று துடித்தான். ஒரு அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த இரு மகன்களையும் தட்டி எழுப்பி இந்த அதிசயத்தை சொல்ல ஓடிப்போனான்.

உள்ளே கட்டிலில் தூங்கிய இரு மகன்களையும் தட்டி எழுப்பினான். உங்கள் இருவருக்காக நான் சேர்த்த சொத்துக்கள் போதாது என்று எனக்கு ஒரு அதிசய சக்தியும் இப்போது கிடைத்திருக்கிறது என்று சொன்னான்.

தூங்கிக் கொண்டருந்த இரு மகன்களும் எழுந்திருக்கவில்லை. அவர்களுடைய உடல் மெல்ல தங்கச் சிலைகளாக மாறிப்போயின.

துயரத்தில் ஆழ்ந்த வைத்தி

அய்யோ… என்னுடைய இரு மகன்களும் சிலையாகிவிட்டார்களே.. நான் என்ன செய்வேன் என்று இப்போது புலம்பத் தொடங்கினான்.

பைத்தியம் பிடித்தது போல் அங்கிருந்த பொருள்களையெல்லாம் தொடவே, எல்லாமே தங்கமாகிக் கொண்டிருந்தன. அவன் வெறுப்பின் உச்சிக்கே சென்றான்.

இனி நான் வாழ்ந்து பயனில்லை. இறக்க வேண்டியதுதான் என எண்ணி புலம்பினான்.

வீட்டுக்குள் அவன் சேர்த்து வைத்த நகைகளையெல்லாம் தெருவில் வீசியெறிந்தான். தெருக்களில் நின்று வேடிக்கை பார்த்த மக்கள் தங்களுடைய நகையை அந்த வட்டிக்கடைக்காரன் திருப்பித் தருவதாகக் கருதி அவரவர் நகைகளை எடுத்துக் கொண்டார்கள்.

வீடே தங்கமாக ஜோலித்தது. வீட்டினுள் இருந்த பொருள்களில் வெள்ளி பூண் போடப்பட்டிருந்த அந்த உருத்திராட்சம் மட்டுமே எந்த மாற்றமும் இன்றி இருந்தது.

அதைப் பார்த்த போது, தன்னிடம் அந்த உருத்திராட்சத்தை தந்த துறவி, “இது உங்களிடம் இருக்கும் வரை தொட்டதெல்லாம் பொன்னாகும்” என ஆசிர்வதித்தது நினைவில் வந்தது.

உடனே அந்த உருத்திராட்சத்தை எடுத்துக்கொண்டு துறவி இருக்கும் இடத்தைத் தேடி ஓடினான். நாள் முழுதும் தேடியும் அந்த துறவி கிடைக்கவில்லை.

மனமுடைந்த அவன் ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, அந்த துறவி ஆற்றில் மூழ்கி எழுந்திருப்பதைக் கண்டான்.

மன்னித்த துறவி

துறவியே… தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்.

இந்தாருங்கள் நீங்கள் கொடுத்த உருத்திராட்சை. நீங்கள் எனக்கு அளித்த ஆசிர்வாதத்தை திரும்பப் பெறுங்கள் என கெஞ்சினான்.

துறவி சிரித்தபடியே, உருத்திராட்சத்தை வாங்கிக் கொண்டு, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனை கடந்து சென்றார்.

இப்போது அவனை பீடித்திருந்த பேராசையும், சுயநலமும் விலகியிருந்தது. இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான அறிவு தோன்றியது.

துறவியாக மாறிய வைத்தி

வீட்டை நோக்கி அவன் நடந்தான். வீடு பழைய நிலைக்கு மாறிப் போயிருந்தது. வீட்டு வாசலில் நின்ற இரு மகன்களும் அவனை வரவேற்றார்கள்.

அவரவர் நகைகளை எடுத்துக் கொண்ட ஏழைகள், வைத்தியை பார்த்து நன்றி சொல்ல காத்திருந்தார்கள்.

வட்டித் தொழிலை கைவிட்ட அவன் தன் மகன்களை வேறு தொழில்களை புரிந்து அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவிடுங்கள் என்று அறிவுரை வழங்கினான்.

தன்னுடைய ஆடம்பர ஆடைகளைக் களைந்து துறவரம் பூண்டு, துறவி காட்டிய பாதையில் நடந்து சென்றான் வைத்தி.

அரசன் சோதித்த இறையருள் சிறுகதை

சாமியாருக்கு எப்படி பொறுமை வந்தது எப்படி? ஒரு நிமிட காமெடி கதை

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

சென்னை: பங்களாதேஷ் நாட்டின் பிரதமரை தங்களுடைய போராட்டங்கள் மூலம் அகற்றி அந்த நாட்டுக்கு இடைக்கால அரசை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பினர்

15 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய சர்வாதிகார ரீதியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டவர் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா. அவர் ஒரு இடஒதுக்கீடு விவகாரம் மாணவர்களிடையே போராட்டமாக மாறி, தன்னுடைய பதவியை இழக்கச் செய்துவிடும் என கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரு நாட்டில் ஒரு தனி நபரின் சர்வாதிகாரமும், வேலைவாய்ப்பு பிரச்னையும் தலைத்தூக்கினால் இளைய சமுதாயம் விழித்துக் கொண்டு அந்த நாட்டின் தலைமையை மாற்றக் கூடிய வல்லமை படைத்தது என்று பங்களாதேஷில் நடந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் என அழைக்கப்படும் வங்க தேசம் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டது.
நாடு விடுதலை அடைவதற்கு முன் ஏற்பட்ட வங்காளப் பிரிவினையின்போது இதனுடைய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்தியா விடுதலை அடைந்தபோது, பாகிஸ்தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் உருவெடுத்தது.
கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முழு சுதந்திரத்தை விரும்பியவர்களாக இருந்த நிலையில், அவர்கள் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள்.

ராணுவ ஆட்சி

இந்த நிலையில், 1970-இல் அந்த நாட்டின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பிரதமராக இருந்தவர் முஜ்புர் ரஹ்மான். தற்போதைய நாட்டை விட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனாவின் தந்தை.
அவர் உள்பட அவரது குடும்பத்தினர் பெரும்பாலோர் அப்போது கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் பங்களாதேஷ் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்கள்.

மீண்டும் மக்களாட்சி

1971-ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் துணையால், வங்காளதேசம் தனி நாடாக மலர்ந்தது. அரசியல் களத்தில் ஏற்பட்ட மாறுதலால் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. பேச்சுரிமை மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1991-ஆம் ஆண்டு அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்தது.
சுமார் 17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாக, உலகின் 8-ஆவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக பங்காளாதேஷ் உள்ளது.
வங்க தேசம் உருவானப் பிறகு இந்தியாவின் வங்கதேச எல்லையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக மாறின.
இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து வந்த முஜ்புர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா 1981-இல் வங்கதேசத்துக்கு திரும்பி ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிற அரசியல் கட்சிகளுடன் கைக்கோர்த்து மக்கள் எழுச்சியை உருவாக்கினார்.
அவர் 1996-இல் முதன்முறையாக பங்களாதேஷில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். மீண்டும் ஹசீனா 2009-இல் நடந்த தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். ஆனால், அவர் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.

வங்க தேசத்தின் தற்போதைய நிலை

ஷேக் ஹசீனா, தன்னுடைய ஆட்சியில், நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு வங்கதேசம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கத் தொடங்கியது. வேலையின்மை அதிகரித்து வந்தது.
அவரது ஆட்சியில் சர்வாதிகாரப் போக்கு கடந்த சில ஆண்டுகளாக தலைதூக்கியது. அவரும், அவரது கட்சியினரும் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலுக்கு பயன்படுத்தினார்கள்.
குடிமக்களுக்கு அடிப்படை வாக்குரிமை மறுக்கப்படும் நிலை சில நேரங்களில் உருவானது. அவருடைய சர்வாதாரப் போக்கு இளம் தலைமுறையினரிடையே அதிருப்தி ஏற்பட வைத்தது.

ஹசீனாவின் ஆத்திரமூட்டிய பேச்சு

அண்மையில் ஷேக் ஹசீனா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பங்களாதேஷ் நாட்டின் ஒதுக்கீடு சீர்திருத்த முறையைப் பற்றி பேசினார்.
அப்போது அவர் அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பீடு செய்து பேசினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்கிறார்கள். அப்படியெனில், பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்களுக்கு ஒதுக்கீடு தர வேண்டுமோ என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

மாணவர்களின் போராட்டம்

ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பாக பங்களாதேஷ் நாட்டின் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷேக் ஹசீனா பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹசீனாவின் கருத்துக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
காவல்துறை, உயரடுக்கு பாதுகாப்பு படையினர், ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் படைகள் என எல்லாமும் மாணவர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்டன.
அத்துடன் ஹசீனாவுக்கு எதிராக போராடியவர்களை இச்சந்தர்ப்பத்தின் ஹசீனாவின் ஆதரவு மாணவர் பிரிவு தாக்குதல் நடத்தியது.
இதனால் நாடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. 3 நாள்களில் பங்களாதேஷ் நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.

மக்கள் எழுச்சியாக மாறிய போராட்டம்

ஒரு கட்டத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டாக்காவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் இறங்கினார்கள்.
இனி நாங்கள் தோட்டாக்களுக்கு அஞ்சப் போவதில்லை என்ற அவர்களின் முழக்கம் மக்கள் எழுச்சியாக உருவெடுத்தது.
இதனால் வேறு வழியின்றி ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என பங்களாதேஷ் ராணுவம் அழுத்தம் கொடுத்தது.
ஒரு கட்டத்தில் பிரதமரின் இல்லத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிடத் தொடங்கியது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ராணுவம் தலையிட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி ஷேக் ஹசீனாவுக்கு 45 நிமிடம் கால அவகாசத்தை ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான் விதித்தார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகி ஹசீனா

ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தன்னை பிரதமர் பதவியில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
நாட்டை விட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவர் வேறு எந்த நாட்டுக்கு செல்வார் என்று தெரியவில்லை.
இதுவரை வேறு எந்த நாடும் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் சொல்லவில்லை.

அழுத்தம் கொடுத்த மாணவர்கள்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அதிபர் முகமது ஷகாபுதீன் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
வங்கதேச பாராளுமன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்தார். உடனடியாக இடைக்கால அரசை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, வங்கதேச போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மாணவர்கள், மீண்டும் ராணுவத்தின் தலைமையிலான ஆட்சியை ஏற்க மறுத்தார்கள்.
பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியலில் மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் முக்கியம் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினார்கள்.

முகமது யூனுஸ் தலைமையில் நிர்வாகம்

அதிபர் முகமது ஷஹாபுதீன், ராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இடைக்கால அரசின் தலைவராக 84 வயதான முகம்மது யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் யூனுஸுடன் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களான நஹித் இஸ்லாம், ஆசிஃப் முகமத் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் கடந்து வந்த வரலாறு

யார் இந்த முகமது யூனுஸ்

வங்கத்தேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றிருக்கும் முகமது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் ஏழைகளின் வங்கியாளர் என்றும் அழைக்கப்படுகிறார்.
வங்க தேசத்தின் குறுகிய கால கடன் பயன்பாட்டின் முன்னோடியாக விளங்குகிறார். அவர் 1983-இல் தொடங்கிய கிராமின் வங்கி மூலம் வங்கதேச ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்.
அவரது கிராமின் வங்கி ஏழை மக்கள் சிறுதொழில்கள் நடத்துவதற்கான குறுகிய கால கடன்களையும் நீண்டகால கடன்களையும் வழங்கியது.
அவரது செயல்பாட்டை பாராட்டி, 2006-ஆம் ஆண்டில் முகமது யூனுஸ் மற்றும் கிராமின் வங்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வங்க தேசத்தில் எழுப்பப்பட்டதும் உண்டு. அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு வயதைக் கடந்து கிராமின் வங்கியில் பணிபுரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
2011-ல் வங்கதேச அரசியல்வாதிகள் மீது அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்பட்டது.
தொழிலாளர் சட்டங்களை அவர் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 6 மாத சிறைத் தண்டனையும் கூட அவருக்கு வழங்கப்பட்டது.

மாணவர் இயக்கம் நம்பிக்கை

முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால அரசை சிறப்பாக வழிநடத்துவார் என புரட்சியில் ஈடுபட்ட மாணவர் இயக்கம் நம்புகிறது.
வங்கதேச மக்களைப் பொறுத்தவரை, நாட்டில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். உடனடியாக சட்டம் ஒழுங்கை பராமரிக்க தொடங்க வேண்டும். நாட்டின் வேலையின்மை பிரச்னைக்கும், பொருளாதார தேக்க நிலைக்கும் முடிவு காண வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இது சர்வாதிகாரத்துக்கு எச்சரிக்கை

வங்க தேசத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒரு விஷயத்தை நாட்டை ஆள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் மறைமுகமாக விடுத்திருக்கிறது.
நாட்டில் தனிநபர் சர்வாதிகார போக்கும், மக்களுக்கு எதிரான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும் அரசுகளையும் எதிர்ப்பதற்கு இன்றைய இளைய தலைமுறை தயாராகி விட்டதை உலகுக்கு பறைசாற்றியிருக்கிறது.

கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து மீட்க முடியுமா?

முயன்றால் முடியும்!: திருக்குறள் கதைகள் 24

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 24) அதிர்ஷ்டத்தை நம்புவதை விட உழைப்பையும், விடா முயற்சியையும் மேற்கொண்டால் வெற்றி என்னும் அதிர்ஷ்ட மாலை நம் கழுத்தில் விழும் என்பதை எடுத்துரைக்கும் முயன்றால் முடியும் கதையையும், குறளையும் உடையது.

விதியை நொந்துகொண்ட ரகு

ரகு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அது அவ்வாறே நடக்கும் என நினைத்தான். ஆனால், ஏன் அப்படி நடக்கிறது என்று அவர் சிந்திக்கவில்லை.

ரகு இப்போது தலையெழுத்தைப் பற்றி யோசிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தன்னுடைய நேரத்தை அதிகம் வீணாக்கி விட்டான்.

ஒரு சில தவறுகளால் தான் நினைத்த ஒரு காரியத்தில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அவன் இப்போது தன்னை துரதிர்ஷ்டசாலி என நினைக்கத் தொடங்கியிருந்தன்.

நண்பனின் ஆறுதல்

ரகு ஆழ்ந்த கவலையில் இருப்பதைக் கண்ட அவனது நண்பன் சேகர் அவனருகே அமர்ந்து என்னடா… யோசனையில் இருக்கே… அப்படின்னு கேட்டான்.

ரகு மிகுநத வேதனையோடு, நான் எந்த வேலையை செய்தாலும் அது வெற்றி அடைவதே இல்லை. அந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டமில்லாதவனாக இருக்கேன்டா… என்றான்.

சோம்பேறித்தனமும், சில தவறுகளும்தான் உன்னுடைய தோல்விகளுக்கு காரணம் என்பதை நீ கொஞ்சம் கூட யோசிக்காமல், அதிர்ஷ்டத்தின் மீது நீ பழி போடுவதைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

முயன்றால் முடியும்

நீ முதலில் உன்னிடம் இப்போது ஏற்பட்டிருக்கிற தாழ்வு மனப்பான்மையை அகற்று. உன் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறது என்பதை பட்டியல் இடு.

தோல்வியின் விளிம்பில் இருந்தவர்கள் பலரும், அவர்களின் விடா முயற்சியினால் வெற்றி கண்டதை நினைத்துப் பார்.

முயற்சிகளை தொடராமல், சும்மா இருந்துவிட்டு அதிர்ஷ்டத்தை நினைத்து பார்ப்பது முட்டாள்தனம்.

நம்பிக்கையோடு நீ எடுத்த முயற்சியில் வெற்றி பெற தொடர்ந்து அடியெடுத்து வை. நிச்சயமாக நீ நினைத்தது நிறைவேறும். முயன்றால் சாதிக்க முடியும் என்று ஆறுதலையும், நம்பிக்கையையும் ஊட்டினான் சேகர்.

ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். திருவள்ளுவர் ஒரு குறட்பா மூலம் சொல்லி இருப்பதையும் உன்னிடம் நினைப்படுத்த வேண்டும்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டுன்றுங் களிறு

(குறள் – 597)

யானையானது போர்க் களத்தில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும்.

அதுபோல ஊக்கமுடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்தாலும் மனம் தளராமல் தம்பெருமையை நிலை நிறுத்தப் பாடுபடுவார்கள் என்று சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்.

உன்னை யானை போல் பலம் பொருந்தியவனாக நினைத்துக் கொண்டு விடா முயற்சியையும், திறமையையும் உன் பாதையில் செலுத்து வெற்றி மாலை தானாக உன் கழுத்தை தேடி வரும் என்றான் சேகர்.

சேகரின் அறிவுரையை கேட்ட ரகுவுக்கு ஒரு புதுத்தெம்பு வந்தது. நிச்சயமாக நான் நினைத்த காரியத்தை செய்து முடித்து வாழ்கையில் வெற்றியாளனாக வருவேன்டா சேகர் என்று அவனை கட்டிப் பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தான் ரகு.

திருக்குறள் கதை 23 – நம்மை அழிக்கும் கோபம்

மகனை திட்டும்போது அம்பானியை வம்புக்கு இழுத்த அப்பா

கோபம் வந்தால்… திருக்குறள் கதைகள் 23

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 23) கோபம் வந்தால் நம்மையே அழித்துவிடும் என்பதை விளக்கும் சிறுகதையும், அதற்கான குறள் விளக்கமும் இடம்பெறுகிறது.

வெப்ப நோய் பாதித்த அரசன்

முன்னொரு காலத்தில் அளகாபுரி என்னும் நாட்டை அரவிந்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் பல கலைகளை கற்றுத் தேர்ந்தவன்.

அதனால் அவன் இன்பத்தை மட்டுமே அனுபவித்து வந்தான். அவனது பேராசை காரணமாக வெப்பு நோய்க்கு ஆளானான்.

இதனால் துன்பம் அடைந்த அரசன் ஒரு கட்டத்தில் அதை தாள முடியாமல், தன் மூத்த மகன் அரிச்சந்திரனிடம், நீ கற்ற வித்தை மூலம் என் வெப்ப நோயைப் போக்கு என்று கேட்கிறான்.

தந்தையின் மீது அரிச்சந்திரன் குளிர்ந்த தென்றலை ஏவினான். இருந்தாலும் அவனுடைய வெப்ப நோய் தீரவில்லை.

ஒரு நாள் அரண்மனை மேல் மாடத்தில் நின்ற இரு மான்களிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவற்றின் ஒன்று காயமடைந்து, அதனுடைய குருதி மேல் மாடத்தில் இருந்து வழிந்து கீழே படுத்திருந்த அரசன் மீது விழுந்தது.

அந்த குருதி தன் மேலே பட்டதும், உடலில் வெப்பம் தணிந்ததை உணர்ந்தான் அரசன்.

உடனே அவன் தன்னுடைய இளைய மகன் குருவிந்தனை அழைத்தான். மகனே நீ உடனடியாக கானகம் செல்.

அங்குள்ள மான் கூட்டத்தை வேட்டையாடி, அவற்றின் இரத்தத்தால் கிணறு ஒன்றை உருவாக்கு. அதில் நான் குளித்து என் வெப்பத்தை தணித்துக் கொள்கிறேன் என்றான்.

அரசிடம் இது பாவச் செயல் என்று குருவிந்தன் எடுத்துரைத்தான். ஆனால் தந்தை அவனுடைய பேச்சை விரும்பவில்லை.

இதனால் ஒரு முனிவரை நாடி நான் என்ன செய்யட்டும் என்று கேட்கிறான். உன் தந்தை செய்த பாவச் செயல்களால்தான் இப்போது வெப்ப நோய்க்கு ஆளாகியிருக்கிறார்.

நீ மான் வேட்டையாடி அவர் அந்த ரத்தக் கிணற்றில் குதித்தாலும் அவருடைய வெப்ப நோய் விலகாது. வீணாக பாவம் செய்யாதே என்று அறிவுரை வழங்கினார்.

தன்னுடைய தந்தையை சமாதானம் செய்ய ஒரு செயற்கை குருதிக் கிணற்றை அமைத்தான். அதில் இறங்கி குளித்த அரசனுக்கு வெப்பம் தணியவில்லை.

கோபம் வந்தால்…

கோபத்தின் எல்லையைத் தொட்ட அரசன் அரவிந்தன், தன் மகனை வாளால் வெட்டிக் கொல்ல துணிந்தான்.

அப்போது, அரசன் விதி வசத்தால், கால் இடரி அவனுடைய வாள் உருவி கீழே விழ, அதைத் தொடர்ந்து அவனும் அதன் மீது விழ, வாளால் வெட்டுண்டு இறந்து போனான்.

இந்த கதைப் போல தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள ஒருவன் நினைப்பானானால். அவன் கோபம் வந்தால் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி கோபத்தை அடக்கா விட்டால், அந்த கோபமே அவனை அழித்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.

அதைத்தான் தனது 305-ஆவது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

(குறள் – 305)

திருக்குறள் கதை – விருந்தோம்பல்

அன்பு மகனுக்கு அப்பா எழுதியக் கடிதம்

அரசன் சோதித்த இறையருள்

ஒரு நாட்டை ஆண்ட மதிமாறன் என்ற அரசன் எல்லாம் இறையருள் என்கிறார்களே அதை என்னால் மாற்ற முடியும் என்ற இருமாப்பில் இருந்தான். ஆனால் இறையருள் யாராலும் மாற்ற முடியாதது என்பது ஒரு அனுபவத்தில் உணர்ந்த கதைதான் அரசன் சோதித்த இறையருள்.

இறையருள் சோதனையில் அரசன்

அரசன் மதிமாறன் மாறு வேடத்தில் அன்றைக்கு நகரை வலம் வந்தான். அவனுக்கு எப்போதும் தான் ஒரு அரசன் என்பதை விட, தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற இருமாப்பும் இருந்து வந்தது.

ஒரு கோயில் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் பிச்சை எடுத்தார்கள். அதை அவன் பார்த்தான்.

ஒருவன் கடவுளின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் பிச்சை எடுத்தான். மற்றொருவனோ, நான் ஊனமுற்றவன், நடக்க முடியாதவன். எனக்கு பிச்சைப் போடுங்கள் என்றான்.

இவர்களை பார்த்ததும், இன்றைக்கு பிச்சைக்காரர்களாக இருக்கும் இவர்களை நாளைக்கு பணக்காரராக்கி பார்க்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்பினான்.

பூசணிக்காய் தந்த அரசன்

மறுநாளும் மாறுவேடத்தில் அரசன், அதே கோயில் வாசலுக்கு வந்தான். கையில் இரண்டு சிறிய பூசணிக்காய்களை எடுத்து வந்தான்.

அந்த பூசணிக்காய்க்குள் பெரிய தங்கக் கட்டிகளையும், வைரங்களையும் கொட்டி மூடி எடுத்து வந்திருந்தான்.

அவனை பார்த்த இரு பிச்சைக்காரர்களும் பிச்சை தட்டை ஏந்தினார்கள். இருவரிடமும் என்னிடம் காசு இல்லை. இந்தாருங்கள்.

ஆளுக்கு ஒரு பூசணிக்காயை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்துவிட்டு திரும்பினான்.

இரண்டு வாரம் கழித்து நகர் வலம் புறப்பட்ட அரசனுக்கு, முன்பு இரு பிச்சைக்காரர்களுக்கு தங்கமும், வைரமும் நிறைந்த பூசணிக்காய்களை கொடுத்தோம்.

அவர்கள் இந்நேரம் அவற்றை விற்று காசாக்கி பணக்காரர்களாக மாறியிருப்பார்கள். அவர்கள் நம் கண்ணுக்கு படுகிறார்களா என்று பார்ப்போம் என்று நினைத்தபடியே நகர் வலம் வந்தான்.

வழக்கமான பாதையில் வரும் அந்த கோயிலை அரசன் வந்தடைந்தபோது அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.

அதிர்ச்சி அடைந்த அரசன்

அதே பிச்சைக்காரர்கள் கோயில் வாயிலில் பிச்சை எடுப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான்.

உடனே, அரண்மனைக்கு திரும்பிய அரசன், அந்த இரு பிச்சைக்காரர்களையும் காவலர்களை விட்டு அழைத்து வரச் சொன்னான்.

இரண்டு பிச்சைக்காரர்களும் அரண்மனையில் அரசன் முன்பு கைக்கட்டி நின்றார்கள்.

அரசன் பேசத் தொடங்கினேன். இரு வாரம் முன்பு இருவருக்கும் தலா ஒரு பூசணிக்காய் கொடுத்தேனே… அதை என்ன செய்தீர்கள் என்று கோபமாகக் கேட்டான்.

அப்போதுதான், பூசணிக்காயை தந்துவிட்டு போனது அரசன் என்பது தெரிந்தது.

ஊனமுற்ற பிச்சைக்காரன் பதற்றமாக அரசனை பார்த்து, அரசே, நீங்கள் கொடுத்த பூசணிக்காயை நான பிச்சைக்காரன் என்பதால் யாரும் வாங்கவில்லை.

அதனால் அதை அருகில் உள்ள கோயில் குளத்தில் உள்ள நீரில் விட்டெறிந்துவிட்டேன் என்றான்.

மற்றொருவன் ராஜாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டான். அரசே, என்னை மன்னித்து விடுங்கள்.

நீங்கள் தந்த பூசணிக்காயை இறைவனே எனக்கு அளித்ததாக நினைத்து நான் தங்கியிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று இறைவனுக்கு படைத்து அதை உடைத்தேன்.

அதில் வைரக் கற்களும், தங்கக் கட்டிகளும் இருப்பதை பார்த்து நகர் முழுவதும் கொடுத்தவரை தேடினேன். அது நீங்கள் என்பது எனக்குத் தெரியாது.

அதனால் அவை இறைவனுக்கே சொந்தம் என நினைத்து அந்த கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன் என்றான்.

இறைவனிடம் வருந்திய அரசன்

இப்போது அவன் இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்ந்து மனதார இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.

எதற்கும் பயன்படாது என நினைத்து பூசணிக்காயை தூக்கி எறிந்த பிச்சைக்காரனை அந்த கோயில் காவலாளியாக ஆக்கினான்.

கோயில் உண்டியலில் தங்கத்தையும், வைரத்தையும் சேர்த்த பிச்சைக்காருக்கு பொன்னும், பொருளும் வாரித் தந்து அந்த கோயிலின் தர்மகர்ததாவாக்கினான்.

சிறு தவறு கற்றுத் தந்த பாடம்

மனைவியை புரிந்துகொண்ட கணவர்

விருந்தோம்பல் சிறப்பு – திருக்குறள் கதைகள் 22

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 22) விருந்தோம்பல் சிறப்பு குறித்து குறட்பா விளக்கத்துடன் விவரிக்கிறது.

விருந்தோம்பல் தம்பதி

பரத கண்டத்தில் நரசில்பம் என்னும் நகரை சேடகன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது மனைவி பத்மாவதி. இவர்களின் மகள் பிரபாவதி.

மன்னன் சேடகன் தன் மகளை ஒத்தாயணன் என்னும் அரசனுக்கு மணமுடித்து வைத்தான்

ஒத்தாயணனுக்கு விருந்தோம்பலில் ஆர்வம் காட்டுபவன். அவனை மணந்த பிரபாவதியும் அவனுடைய விருந்தோம்பலுக்கு பக்கபலமாக இருந்தாள்.

ஒரு நாள் சௌதர்மேந்திரன் சபையில் இவர்களின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சோதித்த தேவன்

இதனைக் கேட்ட மணி சூளன் என்னும் தேவன் இவர்கள் இருவரையும் சோதிக்க விரும்பினான்.

அதனால் அவன் ஒரு தொழு நோயாளி வேடமிட்டு ஒத்தாயணன் இல்லத்துக்கு சென்றான். விருந்தினராக வந்த அந்த தொழு நோயாளியை ஓடோடி வரவேற்று அமர வைத்தான். அவனது மனைவி பிரபாவதியும் அந்த விருந்தினரை வரவேற்றாள்.

தேவனை இருவருமாக ஆசனத்தில் அமர வைத்து பாதங்களை நீரால் கழுவினர். அதைத் தொடர்ந்து அந்த கழுவிய நீரை தலையில் தெளித்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அந்த விருந்தினருக்கு உணவு பரிமாறினர். அவர்கள் அளித்த உணவை வயிறாற உண்டான் அந்த மாறு வேடத்தில் இருந்த தேவன்.

அப்போது திடீரென அவனுக்கு வாந்தி வரவே, பிரபாவதியும், ஒத்தாயணனும் அவன் எடுத்த வாந்தியை தங்கள் கரங்களிலே எந்த அருவருப்பும் இன்றி வாங்கி அப்புறப்படுத்தினர்.

அவரது உடலை தூய்மைப்படுத்தி மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர். இவர்களின் பணியில் அவர்களின் விலை உயர்ந்த ஆடைகளும் வீணானது.

தங்களுடைய உணவால் அவருக்கு இப்படி ஒரு இடையூறு ஏற்பட்டு விட்டதோ என அஞ்சி அந்த தொழு நோயாளியிடம் மன்னிப்பு வேண்டினர்.

அவர்களின் விருந்தோம்பலைக் கண்டு மெய்சிலிர்த்த தேவன், தன்னுடைய சுயரூபத்துடன் அவர்கள் முன் தோன்றினான்.

உங்களைப் பற்றி மக்கள் புகழ்ந்ததைக் கேட்டேன். நீங்கள் எந்த அளவுக்கு ஒரு விருந்தினரின் மனம் கோணாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை அறியவே நான் தொழு நோயாளியாக உங்கள் இல்லத்துக்கு வந்தேன்.

இதுவல்லவோ விருந்தோம்பல்

விருந்தோம்பலில் எந்த இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பதற்றமும், விருந்தினன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், மனதளவில் கூட அவனுடைய செயல்களின் மீது அருவருப்பு கொள்ளாமல் செய்த உங்கள் விரும்தோம்பல் என்னை மெய்மறக்க வைத்துவிட்டது.

நட்பின் இலக்கணம் திருக்குறள் கதை

உங்களைப் போன்ற விருந்தோம்பலில் சிறந்த தம்பதியை இதுவரை நான் காணவில்லை. நீங்களும், உங்கள் குலமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். உங்களின் மறுபிறவியில் எங்களின் விருந்தினராக ஆவீர்கள் என்று கூறி மறைந்தான்.

திருக்குறள் விளக்கம்

இதைத் தான் வள்ளுவன் தன்னுடைய குறட்பாவில் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு

( குறள்-86)

இந்தப் பிறவியில் தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களுக்கெல்லாம் விருந்தினராவான் என்கிறார் குறளாசான்.

காதலை முறித்த மலர் கொத்து

சினம் எனும் பெருந் தீ! – திருக்குறள் கதைகள் 21

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 21) சினம் எனும் பெருந் தீ பற்றிய கதையும், திருக்குறள் விளக்கமும் இடம்பெறுகிறது.

கோபமடைந்த நண்பன்

ஆனந்தனும் , விவேக்கும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனந்தன் விளையாட்டில் வெற்றி பெற்றதைக் கண்ட விவேக், ஆனந்தனின் முதுகில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடினான்.

வலி பொறுக்க முடியாத ஆனந்தன், கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்துக் கொண்டு விவேக்கை தாக்க ஓடினான்.

ஆனந்தனிடம் இருந்து தப்பிக்க விவேக் எதிரே இருந்த ஜினாலயத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.

விவேக்கை ஜினாலயம் தவிர பிற இடங்களில் தேடியதால் அவன் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் ஆனந்தன். விவேக் ஜினாலயத்துக்குள் சென்றிருப்பான் என்பதை உணர்ந்தான்.

அப்போது அவனுடைய கோபம் சற்று குறைந்திருந்தது. இருந்தாலும், விவேக்கை பழிக்கு பழி திரும்ப அடித்து விட வேண்டும் என்ற முடிவு மட்டும் அவனிடம் இருந்து மாறவில்லை.

சினம் எனும் பெருந் தீ

அங்கே அறவுரை மண்டபத்தில் தர்ம நாதர் அறச் சொற்பொழிவாற்றுவதைக் கண்டான். அப்போது, அவர் கோபத்தினால் வரும் கேடுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

சினம் என்பது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை.

எவரிடம் அளவு கடந்த கோபம் உள்ளதோ? அவர்கள் அதை அறவே விட்டொழித்தல் வேண்டும் என்றார்.

மேலும், பிறர் நமக்கு பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தைச் செய்தாலும் அவர் மீது கோபப்படாமல் இருப்பதே நல்லது என்கிறார் பொய்யா மொழிப் புலவர்.

திருவள்ளுவர்

திருவள்ளுவர் சொல்கிறார்

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று

(குறள் – 308)

தீப்பந்தம் போல் மனதை வாட்டும் தீமையை ஒருவன் செய்தாலும்கூட, அவன் மேல் சிறிதளவும் கோபம் கொள்ளாது இருத்தல் நல்லது என்கிறார்.

ஒருவர் நெருப்பை வாரி இறைப்பது போன்ற கடுந்துன்பத்தை மற்றவர்க்குச் செய்தாலும் அவன் மேல் சினம் கொள்ளக் கூடாது.

இத்தகு குணம் ஞானியருள் உயர்ந்த ஞானியருக்கேப் பொருந்தும் என்று எண்ணாது நாமும் முயற்சி செய்து சினத்தைத் துறத்தல் நன்று என்று பேசி தன்னுடைய அறவுரையை நிறைவு செய்தார்.

மனம் வருந்திய நண்பன்

தர்மரிடம் எப்போதும் கதை கேட்கும் ஆனந்தன், இன்றைக்கு அவர் ஒரு பொது இடத்தில் நடத்திய அறவுரையை மிகக் கவனமாகக் கேட்டான்.

அதைத் தொடர்ந்து தன்னுடைய நண்பனை பழிக்கு பழி தீர்க்கும் எண்ணத்தை கைவிட்டான்.

ஆனந்தன் ஜினாலயத்தை விட்டு அமைதியாக திரும்புவதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த விவேக், வேகமாக அவனை பின்தொடர்ந்து ஓடி வந்தான்.

ஆனந்தா… உன் கோபத்தை தனித்துக்கொள். நீ என்னை ஆசைத் தீர அடித்துவிடு என்று முதுகை காட்டினான் விவேக்.

ஆனந்தன் சிரித்தபடியே.. உன் தவறை நீயே உணர்ந்துவிட்ட பிறகு நான் அடிப்பது சரியல்ல.

நீ என்னை வேகமாக அடித்தது எனக்கு வலியை ஏற்படுத்திவிட்டது. அதனால் கோபம் வந்தது. இனி நான் மட்டுமல்ல, யாரையும் விளையாட்டுக்காக அவர்கள் உடல் துன்பமடையும் வகையில் அடித்து விடாதே.

வா இன்றைக்கு இன்னும் வீட்டுப் பாடம் எழுதவில்லை. அதை எழுதி முடிப்போம் என்றான் ஆனந்தன்.

பொறுத்தல் – திருக்குறள் கதை

மனித உடலின் அதிசய செல்கள்