Read in English / பிற மொழிகளில் படிக்க:
குமரிக் கண்டம் – இது இந்திய பெருங்கடலில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மூழ்கிய தமிழர் வாழ்ந்த பகுதி என்று சொல்லப்படுவது உண்மையா? கற்பனையா?. இதைப் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரைத்தான் இது.
உள்ளடக்கம்
குமரிக் கண்டம்
இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், ஒரு மாபெரும் நிலப்பரப்பு மூழ்கிக் கிடப்பதாக ஒரு கதை நீண்டகாலமாக உலா வருகிறது.
இந்த மூழ்கிய நிலப்பரப்புக்கு மேற்கத்திய ஆய்வாளர்கள் லெமூரியா (Lemuria) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த லெமூரியா பகுதி இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்த ஒரு பழங்கால நிலபரப்பு. இதுதான் பண்டைய தமிழ் நூல்களில் சொல்லப்பட்டு வரும் குமரிக்கண்டம் என்பதை தமிழ் அறிஞர்கள் பல ஆண்டுகளாக குறிப்பிட்டு வருகிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் குமரிக் கண்டம்
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsகுமரிக் கண்டம் குறித்த தகவல்கள் பண்டைய தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
தென்மதுரையில் இருந்த முதல் தமிழ்ச் சங்கம் கடலால் (ஆழிப் பேரலையால்) அழிந்ததாக இறையனார் அகப்பொருள் உரை குறிப்பிடுகிறது. அத்துடன் அந்த தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமான், முருகன், அகத்தியர் முதலானோர் இடம் பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பாண்டிய மன்னர் ஒரு மிகப்பெரும் நிலப்பரப்பை கடல் கோள்களால் (அழிப்பேரலைகள்) இழந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
காவிரிப்பூம்பட்டினம் கடலால் மூழ்கடிக்கப்பட்டதை மிகத் தெளிவாக மணிமேகலை கூறுகிறது. இது குமரி கண்டம் ஒரே நேரத்தில் மூழ்கவில்லை, மாறாகப் பல கட்டங்களாக அது மூழ்கியிருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது.
இந்த மூன்று தகவல்களையும் கடந்த 2000-ஆவது ஆண்டில் தமிழக கடற்கரையோரத்தை ஆழிப்பேரலைகள் தாக்கி அழித்ததோடு ஒப்பீடு செய்து பார்த்தால் இந்த கருத்துகளை நாம் முழுமையாக ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
49 நாடுகளை உள்ளடக்கிய குமரிக் கண்டம்
பண்டைய காலத்தில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பகுதியை நாடு என்றே அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அடியார்க்குநல்லார் கருத்தும் ஏற்புடையதாக உள்ளது.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய இவர், குமரி கண்டம், பஃறுளி மற்றும் குமரி என்ற இரு ஆறுகளுக்கு இடையில் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டிருப்பதோடு, அதில் 49 நாடுகள் இருந்தன. மொத்த பரப்பளவு சுமார் 700 காவதம் என குறிப்பிட்டிருக்கிறார். இது இன்றைய அளவீடாக சுமார் 1,400 கி.மீ. என எடுத்துக் கொள்ளலாம்.
புராணங்களுடன் இணைந்த குமரிக்கண்டம்
குமரி கண்டம் பற்றிய கோட்பாடு, இந்து சமய புராணங்களிலும் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது.
மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தில் வரும் மனுவின் கதையில், ஒரு பெரிய வெள்ளம் (Great Flood) உலகையே மூழ்கடித்ததாகவும், விஷ்ணுவின் மச்ச அவதாரம், மனுவையும் சில உயிரினங்களையும் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
சிவபெருமான் கட்டளைப்படி தெற்கே வந்த அகத்தியர், தென்மதுரையில் இருந்த முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். இது குமரி கண்டத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

குமரிக்கண்டத்தின் கலாச்சாராமும், நாகரிகமும்
குமரிக்கண்டம் பற்றிய விவாதங்கள் தமிழர்களின் அரசியல் மற்றும் கலாச்சார அடையாளத்திலும் முக்கிய இடம் பெறுகின்றன.
முதல் தமிழ்ச் சங்கம் மூழ்கிய குமரிக்கண்டம் பகுதியில் இருந்ததால், தமிழ் மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று வாதிடப்படுகிறது.
மூழ்கிய குமரிக்கண்டம் என்ற பகுதியில் வளர்ந்த மாபெரும் நாகரிகத்தின் வாரிசுகள் நாம் என்ற நம்பிக்கை தமிழர்களிடையே பெரும் கலாச்சாரப் பெருமையையும், அடையாள உணர்வையும் உருவாக்கி வருகிறது.
திராவிட நாகரிகத்தின் தொடக்கம்
சங்க இலக்கியங்கள், குமரி கண்டம் நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களைப் பாண்டியர்கள் என்று குறிப்பிடுகின்றன. அவர்கள் தமிழர்கள் மற்றும் திராவிட நாகரிகத்தின் முன்னோடிகள் என்றும் நம்பப்படுகிறது.
குமரிக் கண்டம் பகுதியில் இருந்த இந்த நாகரிகம் கடல் கடந்த பயணங்களிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கலாம்.
ஒருவேளை, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள பழங்கால மக்களுடன் குமரிக்கண்டம் நிலப்பகுதி மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற கோட்பாடுகளும் உள்ளன.
நவீன அறிவியல் ஆய்வுகள்
குமரிக் கண்டம் குறித்த ஆய்வுகள் இப்போது இலக்கியச் சான்றுகளில் இருந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.
சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசி பனியுகம் முடிவுக்கு வந்தது. அப்போது கடல் மட்டம் சுமார் 120 மீட்டர் உயர்ந்தது. இது உலகின் பல கடலோரப் பகுதிகளை நீரில் மூழ்கடித்தது.
இதற்கு இராமர் பாலத்தையும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு சான்றாக கருதத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் இராமர் பாலம் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாறை மற்றும் மணல் திட்டு அடங்கியது. இது ஒரு காலத்தில் நிலப் பாலமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நீர்ப்பகுப்பாய்வு (Underwater Archaeology): இந்தியா மற்றும் இலங்கை கடற்கரைகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், சுமார் 9000 ஆண்டுகள் பழைமையான சிதைவுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
நவீன தொழில்நுட்பங்கள்: சோனார் தொழில்நுட்பம் மற்றும் ஆழ்கடல் ரோபோக்களைப் பயன்படுத்தி, இந்திய தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) கடலுக்கடியில் உள்ள புவியியல் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.
மரபணு ஆய்வுகள்: பண்டைய மனிதர்களின் மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலம், குமரி கண்ட மக்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தார்களா? என்பதைக் கண்டறிய முயற்சி நடக்கிறது.
தொடரும் மர்மம்
குமரி கண்டம் உண்மையா அல்லது கற்பனையா என்பது இன்றும் ஒரு விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. ஆனால், இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் ஒரு பெரிய நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றன.
எதிர்கால அறிவியல் தொழில்நுட்பம், கடலுக்குள் புதைந்துள்ள இந்த மாபெரும் நாகரிகத்தின் உண்மையை ஒரு நாள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று நம்பலாம்.
குமரி கண்டம் கற்பனையா, அல்லது கடலில் மூழ்கிய ஒரு மாபெரும் தமிழ் நாகரிகத்தின் உண்மையா? இந்த மர்மம் இன்றும் தொடர்கிறது.
இந்தத் தலைப்பு குறித்து உங்களிடம் இருக்கும் கருத்துகள் அல்லது கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்கள், இந்த மர்மத்தை மேலும் ஆராய எங்களுக்கு உதவும்.
குமரிக்கண்டம் குறித்து நூல்களிலோ, அறிவியல் ரீதியாகவோ ஏதேனும ஆதாரங்கள் இருந்தால் அதை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை பற்றிய விரிவான தகவலும் வெளியிடப்படும்.
இந்த தகவலை விடியோவை வடிவில் மேலும் சில ஆதாரங்களுடன் யுடியூப் பக்கத்தில் காணுங்கள்.
மேலும் படியுங்கள்
தனிமை தவிர்த்த முதுமை குறித்த ஒரு பார்வை – தனிமை

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்