சென்னை: மக்களவைத் தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஆளும் பாஜகவின் முஸ்லீம் எதிர்ப்பு வெறுப்புணர்வு பிரசாரம் அதிகமாக தலைதூக்கியுள்ளது.
உள்ளடக்கம்
கண்டுகொள்ளப்படாத முஸ்லீம் எதிர்ப்பு பிரசாரம்
ஆனால் தேர்தல் ஆணையம் இந்த பிரசாரங்களை கண்டுகொள்ளாமல் போயுள்ளது எதிர்க்கட்சிகளிடையே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குறைத்திருக்கிறது.
பல்வேறு அரசியல் விமர்சகர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலையாட்டி பொம்மைகளாக ஆளும்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்வதாக குறை கூறியிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும்போது அது நடுநிலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறையும் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்துக்கு அவப்பெயர்
இதுவரை எந்த தேர்தல் ஆணைய தலைமைக்கும் கிடைக்காத அவப்பெயர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், துணைத் தேர்தல் ஆணையர்கள் சுக்நீர் சிங் சந்த், ஞானேஷ் குமார் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே மதரீதியான பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பிரதமர் சார்ந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்.
இது கூட தேர்தல் ஆணையத்தின் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் இஸ்லாமிய வெறுப்பு பிரசார நோக்கத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் கேலிச் சித்திர காணொலி ஒன்று காணப்படுகிறது.
தவறான சித்தரிப்பு
“ஜாக்கிரதை” என்ற தலைப்பிட்டிருக்கும் அந்த காணொளியில், ராகுல்காந்தி, சித்தராமையாவுடன் இணைந்து ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடுகளுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை சேர்ப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அதிக அளவில் நிதி ஒதுக்குவதால் அவர்கள் வளர்ச்சி அடைந்து மற்றவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பது போன்றும் இந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றி பல்வேறு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டதாக பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் மக்கள் விமர்சனம் செய்வது அதிகரித்து வருகிறது.
YOU MAY ALSO LIKE
தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தொடர்பான விடியோ பார்த்துவிட்டீர்களா?