வீடுகளில் பால் – பன்னீர் கொழுக்கட்டை செய்வது கடினமான காரியம் அல்ல. அதற்கான செய்முறைதான் இதோ. ஒரு முறை வீட்டில் செய்து பாருங்களேன்.
உள்ளடக்கம்
இதற்கு தேவையான பொருள்கள்
புழுங்கலரிசி – ஒரு கப்
சர்க்கரை – முக்கால் கப்
காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பால் பன்னீர் கொழுக்கட்டை செய்முறை
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு பன்னீர் துருவலைச் சேர்த்து வதக்கவும். அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். முறுக்கு குழலில் உளுந்து முறுக்கு அச்சைப்போட்டு மாவை நிரப்பிப் பிழியவும்.
நன்கு வெந்து மேலே வந்ததும் எடுக்கவும். தேங்காய்த் துருவலுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பால், மீதமுள்ள நெய், பொரித்த கொழுக்கட்டைகளைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.
மேலே பன்னீர் துருவலைச் சேர்த்துப் பரிமாறவும். தண்ணீரில் வேகவைத்த முறுக்கைச் சேர்த்தும் இதை செய்யலாம்.