🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

வெள்ளை தோசை தக்காளி சட்னி

Read in English / பிற மொழிகளில் படிக்க:

வாரத்தில் ஒரு நாள் காலை உணவாக வெள்ளை தோசை தக்காளி சட்னி பயன்படுத்தலாம். இதுகுறித்த தயாரிப்பு பொருள்கள் மற்றும் செய்முறை விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி – ஒரு கப், தேங்காய்த் துருவல், அரை கப்  சர்க்கரை, ஒரு டீஸ்பூன்  நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

அரிசியை குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஊறவைத்துத் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்க வேண்டும்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

அதன் பிறகு சர்க்கரை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

வெள்ளை தோசை தக்காளி சட்னி

அடுப்பு தீயை மிதமாக வைக்க வேண்டும். தோசைக் கல் காய்ந்ததும், மெல்லியதாக மாவை ஊற்றவும். சிறிதளவு நெய்விட்டு மூடி வேக வைத்து எடுக்கவும். தோசை இரண்டு நிமிடங்களில் வெந்துவிடும். தேவையெனில் திருப்பி போட்டு வேக வைக்கலாம்.

இதற்கு சரியான காம்பினேஷன் தக்காளி சட்னி.

தக்காளி சட்னி

ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு டீஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பை சேர்க்கவும்

குறைந்த வெப்பத்தில் உளுத்தம் பருப்பை பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும். 2 அல்லது 3 காய்ந்த சிவப்பு மிளகாய், 4 முதல் 5 மிளகு (தூள் வடிவில்) , ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் சேர்க்கவும்.

ஒன்றரை கப் நறுக்கிய தக்காளி அதாவது 2 பெரிய அளவிலான தக்காளி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

இதை மிக்ஸியில் போட்டு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அறைக்கவும். தேவையெனில் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *