Good Bad Ugly: சாதனைப் படைத்தது அஜித் பட டீசர்

82 / 100

சென்னை: நடிகர் அஜித்தின் Good Bad Ugly (குட் பேட் அக்லி) படத்தின் டீசர் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. அந்த டீசரில் நடிகர் அஜித் பல்வேறு தோற்றங்களுடன் கலக்குகிறார்.

good bad ugly

இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர் எத்தனை கெட்டப்களில் அவர் அத்திரைப்படத்தில் வருகிறார் என்பது ரசிகர்களுக்கு ஒரே சஸ்பென்சாக இருக்கிறது.

சாதனைப் படைத்த டீசர்

இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யுடியூபில் 3.5 கோடி பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.

இதுவரை அதிகபட்ச சாதனையாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் 1.93 கோடி பார்வைகளை பெற்றிருந்தது.

அந்த சாதனையை அஜித் பட டீசர் முறியடித்திருப்பது வேறு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

ஏப்ரல் 10-இல் வெளியீடு

இதுவரை நடிகர் அஜித் நடித்த படங்களிலேயே மிக விரைவாக அதிக எண்ணிக்கை பார்வைகளை பெற்ற டீசரும் குட் பேட் அக்லிதான் இதுதான்.

படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வருவது மற்றொரு சிறப்பு. படம் பக்கா மாஸ் கமர்ஷியல் படம் என்பதால் ஆவலோடு ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சென்டிமெண்டை கடந்த படம்

பொதுவாக அஜித்துக்கு வி சென்டிமெண்ட் உண்டு. அதாவது வீரம், வேதாளம், விவேகம், விடாமுயற்சி என அவரது படங்கள் பெரும்பாலும் வி…யில்தான் தொடங்கும்.

அதேபோல் அவரது படத்தின் பெரும்பாலான அப்டேட்டுகள் வியாழக்கிழமைகளில் வருவது மற்றொரு சென்டிமென்ட்.

இந்த இரண்டு சென்டிமெண்டுகளையும் குட் பேட் அக்லி விலக்கி வைத்திருக்கிறது.

படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியானது. அதேபோல் படத்தின் டைட்டில் வி மிஸ்ஸிங்.

ரூ.2 கோடி சட்டை அணிந்த அஜித்

இப்படத்தில் ஒரு காட்சியில் அணிந்திருப்பது போல் டீசரில் வந்த சட்டையின் மதிப்பு ரூ.1.80 கோடி என்கிறார்கள். அது பற்றிய தகவல் இன்னும் முழுமையாக வரவில்லை.

ஜியோ ஹாட் ஸ்டாரில் என்ன சலுகை

இளநீர் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply