சென்னை: ஒன்றிய பட்ஜெட் 2024-25-இல் பிகார், ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அதன் முக்கிய அம்சங்கள்:
உள்ளடக்கம்
ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு
- மாநில தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்
- மாநிலத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- ஆந்திர மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும்.
- சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும்.
பிகார் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு
- பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
- பிகார் மாநிலம் கயா முதல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.
- பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பிகாரில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க திட்டம் கொண்டு வரப்படும்.
- பிகாரில் உள்ள புராதன கோயில்களை மேம்படுத்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
- பிகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோயில் மேம்பாடு
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயி்ல், பிகார் கயா, புத்த கயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.
நாளந்தா பல்கலைக் கழக மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பழங்குடியின மக்களுக்கு புதியத் திட்டம்
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் அதிகரிக்கவும் நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 5 கோடி பழங்குடியின மக்களுக்காக ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான் என்ற புதியத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
சூரிய சக்தி திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.