சென்னை: விண்கல் பூமியில் விழும்போது ஏற்படும் சத்தம் அணு ஆயுதத்தை வெடிக்க வைக்கும் சத்தத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமானது.
இந்த வார சுவாரஸ்ய தகவல்கள் பகுதியில் விண்கல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களோடு, கடலில் ஏற்படும் ஒலி மாசு, நம் உடலில் மிக உயர்ந்த வேகத்தில் சுற்றிவரும் இரத்தம், நம் உடலில் உள்ள நீரின் பங்களிப்பு, ஒட்டகம் பல நாள்கள் தண்ணீரின்றி சமாளிக்க உதவும் உடலமைப்பு, நாள்தோறும் தேன் சேமிக்கும் தேனீக்கள் பற்றிய அரிய தகவல்கள் இந்த கட்டுரையில் இடம் பெற்றிருக்கின்றன.
உள்ளடக்கம்
விண்கல் ஏற்படுத்தும் ஆபத்தான ஒலி
அணு ஆயுத வெடிப்பின் சத்தம் அதி பயங்கரமானது என்று சொல்வதுண்டு. ஆனால் பூமியில் ஒரு விண்கல் மோதும்போது எழும் சத்தம் அதைவிட 3000 மடங்கு சக்தி மிக்கது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.
பூமியின் மீது ஒரு பெரிய விண்கல் விழும்போது, அது காற்றில் ஒரு மாபெரும் அதிர்ச்சி அலையை (shockwave) உருவாக்குகிறது. விண்கல் ஏற்படுத்தும் இந்த அதிர்ச்சி அலை, நொடிக்கு நூற்றுக்கணக்கான மைல் வேகத்தில் பரவி, மிகப் பெரிய ஒலியை வெளியிடுகிறது.
விண்கல் மோதலால் ஏற்படும் இந்த ஒலி, ஒரு அணு ஆயுதத்தின் வெடிப்பைவிட 3,000 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
விண்கல் ஏற்படுத்தும் ஒலி அலைகள் வளிமண்டலத்தில் மிக நீண்ட தூரம் பயணித்து, நிலநடுக்கங்களைக்கூட (earthquakes) ஏற்படுத்தக் கூடியது.
உதாரணமாக, 1908-ம் ஆண்டில் ரஷ்யாவில் நிகழ்ந்த ‘துங்குஸ்கா நிகழ்வு’ (Tunguska Event), ஒரு விண்கல் வெடித்ததால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. அந்த விண்கல் ஏற்படுத்திய அதிர்வு, சுமார் 1000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் கூட உணரப்பட்டது.
கடல் அமைதி சீர்குலைவு: திணறும் திமிங்கலங்கள்
நாம் அமைதியானதாகக் கருதும் கடலுக்கும் அடியில், நம் காதுகளால் கேட்க முடியாத அளவுக்குச் சத்தங்கள் உருவாகின்றன.
ஆழ்கடலில் வரும் சத்தம், 100 டெசிபலுக்கு மேல் இருப்பது ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது கப்பல்களின் இரைச்சல்.
இதுதவிர, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் காரணங்களால் கடலின் அமைதி சமீப சில பத்தாண்டுகளாக சீர்குலைந்து வருகிறது.
இந்த ஒலி மாசு, கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது.
குறிப்பாக, திமிங்கலங்கள் போன்ற விலங்குகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், வழிசெலுத்தவும் ஒலியைப் பயன்படுத்துகின்றன. ஆனால் கடலில் செயற்கையாக ஏற்படும் ஒலி மாசு காரணமாக அவற்றின் திறன்கள் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் காலத்தை குறைத்து வருகின்றன.
ஆச்சரியப்படுத்தும் மனித ரத்தக் குழாய்கள்
நம்முடைய உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் மிகுந்த ஆச்சரியம் மிக்கவை. மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்களை ஒரே நீளத்தில் இணைத்தால் அதன் நீளம் 60 ஆயிரம் மைல்கள் இருக்கும் என்பதுதான் ஆச்சரியம்.
இந்த தூரம் கிட்டத்திட்ட பூமியை இரண்டு முறை சுற்றிவரும் தூரத்துக்கு சமம். இந்த 60,000 மைல் தூர ரத்தக் குழாய்கள் வழியாகத்தான் ரத்தம் உடல் முழுவதும் பயணித்து, ஒவ்வொரு அணுவுக்கும் ஆக்ஸிஜனையும், சத்துக்களையும் கொண்டு செல்கிறது.
இன்னும் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவெனில், நம் ரத்த ஓட்டம் ஒரு நிமிடத்தில் சுமார் 1,500 முதல் 2,000 முறை உடல் முழுவதும் சுற்றி வருவதுதான். அதாவது, ஒரு நிமிடத்தில் 2000 தடவை உங்கள் கைகள், கால்கள் மற்றும் தலைக்கு ரத்தம் பாய்ந்து திரும்புகிறது.
இந்த அதிவேகம், நம் உடலின் செயல்பாட்டிற்கும் எவ்வளவு ஆற்றல் தேவை என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த அசாதாரணமான வேகம் மற்றும் நீளம், நம் உடலை இயற்கை எவ்வளவு அற்புதமான இயந்திரமாக படைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது வியப்பு மேலிடத்தான் செய்கிறது.
ஒட்டகத்தின் அதிசய நீர் சேமிப்பு அறைகள்
வெப்பமான பாலைவனத்தில் மனிதன் ஒருவார காலம் நீரின்றி வாழ முடியுமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் பதில். காரணம் ஒரிரு நாள்கள் நீர் அருந்தாமல் இருந்தாலும் இரத்த ஓட்டம் பாதித்து மரணத்தை ஏற்படுத்தும்.
ஆனால் ஒட்டகம் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரையிலும் கூட நீர் இன்றி உயிர் வாழ முடியும்.
பலரும் நினைப்பது போல, ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் (hump) தண்ணீர் சேமித்து வைப்பதில்லை. மாறாக, அதன் திமில்களில் கொழுப்புதான் சேமிக்கப்படுகிறது.
ஒட்டகத்தின் உண்மையான தண்ணீர் சேமிப்பு ரகசியம் அதன் வயிற்றில் உள்ள மூன்று அறைகள்தான்.
அந்த அறைகளில் உள்ள சிறப்பு செல்கள், ஒட்டகம் குடிக்கும் நீரை சேமித்து வைத்துக் கொண்டு, அதன் உடலில் தேவையான நேரங்களில் பயன்படுத்த உதவுகிறது.
இந்த ஆற்றல்மிக்க செல்கள், ஒட்டகத்தின் உடலில் உள்ள நீரை, நீண்ட நாட்களுக்குத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்த உதவுகிறது. இதனால்தான், ஒட்டகத்தால் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட நீர் அருந்தாமல் இருக்க முடிகிறது.
ஒரு துளி தேன் சேகரிக்க பல கி.மீட்டர் பயணிக்கும் தேனீ
உங்களுக்குப் பிடித்த தேனின் ஒரு துளி எப்படி உருவாகிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த ஒரு துளியை சேகரிக்க அது செலுத்தும் உழைப்பு வியக்க வைக்கிறது. ஒரு தேனீ தன்னுடைய பயணத்தில் 50 முதல் 100 பூக்களில் அமர்ந்து சேகரிப்பதுதான் ஒரு துளியாக மாறுகிறது. ஒரு கிலோ தேனை சேகரிக்க , ஒரு தேனீ கூட்டம் சுமார் 2 மில்லியன் பூக்களுக்கு பறந்து செல்கின்றன.
இந்த ஒரு கிலோ தேன் சேகரிக்க அந்த தேனி கூட்டம் பயணிக்கும் தூரம் சுமார் 40 ஆயிரம் மைல்கள். அதாவது நமது பூமியின் சுற்றளவுக்கு இது சமம். அத்துடன் இந்த தேன் சேகரிப்பு பயணத்தின்போது ஒவ்வொரு தேனீயும் சிறகுகளை ஒரு நொடிக்கு 200 முறை அசைத்து பயணிக்கின்றன.
இந்த கடின உழைப்புதான் நமக்கு மிகுந்த சுவை மிக்க தேனை அளிக்கின்றன. கிட்டத்திட்ட தேனீக்களின் உழைப்பை நாம் நம் சுயநலத்துக்காக சுரண்டுகிறோம் என்பதுதான் உண்மை.
விண்கல் பயணிக்கும் வேகம் தெரியுமா?
இந்த பிரபஞ்சத்தில் ஒரு விண்கல் எவ்வளவு வேகமாகப் பயணிக்கும் என்று உங்களுக்குத் தெரிந்தால் ஆச்சரியமடைவீர்கள்.
அதன் வேகம் நம் கற்பனைக்கு எட்டாதது. பூமியைச் சுற்றும் ஒரு விண்கல், ஒரு வினாடிக்கு சுமார் 270 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
ஒரு விண்கல் அதன் பயணத்தின் போது ஈர்ப்பு விசையால் (gravity) இழுக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை, விண்கல்லின் வேகத்தை மேலும் அதிகரிக்கிறது.
விண்கல் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் நுழையும்போது, அதன் வேகம் பல மடங்கு அதிகரித்து, மணிக்கு சுமார் 2,60,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
இந்த அதிவேகம்தான், பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது அது வெப்பமடைந்து எரிந்து, ஒரு வால்நட்சத்திரம் (shooting star) போல் தோன்றி மறைகிறது.
உலகின் மிகப் பெரிய விலங்கு இதுதான்
உலகின் மிகப்பெரிய விலங்கு எது? என்று நம்மிடம் கேட்டால், யானைதான் நமக்கு ஞாபகத்துக்கு வரும்.
ஆனால் உண்மையில் கடலில் வாழும் நீலத்திமிங்கலம்தான் உலகில் மிகப் பெரிய விலங்கு.
அது ஒரு யானையை விட, 30 மடங்கு பெரியது, அதன் எடை 200 டன்கள். அதன் இதயம் மட்டும் ஒரு சிறிய கார் அளவுக்கு இருக்கும். அதன் நாக்கு ஒரு யானையின் எடைக்கு சமம்.
அதன் இரத்தக் குழாய்கள் ஒரு மனிதனால் நீந்திச் செல்லக்கூடிய அளவுக்குப் பெரியவை. இந்த நீலத்திமிங்கலம் பிரம்மாண்டமான உடலை பெற்றிருந்தாலும், சிறிய உயிரினங்களை மட்டுமே சாப்பிடுகிறது.
ஒவ்வொரு நாளும், சுமார் 40 மில்லியன் கிரில்ஸ் (krill) என்ற சிறிய கடல் உயிரினங்களைச் சாப்பிடுகிறது.
60 சதவீதம் நீரை கொண்ட மனித உடல்
நமது உடல் 60 சதவீதம் நீரை கொண்டதாக இருக்கிறது. மூளை, இதயம் ஆகியவை 75 சதவீதம் நீரால் ஆனது. நுரையீரல் 83 சதவீதம் நீரால் ஆனது. இந்த நீர் இல்லையெனில் நாம் உயிர் வாழ முடியாது.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், உறுப்புக்கும், திசுவுக்கும் நீர் மிக முக்கியம். அது நமது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது, ஊட்டச் சத்துக்களை எடுத்துச் செல்கிறது, நச்சுக்களை நீக்குகிறது. நம் உடல் ஏற்கெனவே நீரின்றி தவிப்பதை உணர்த்துவதற்கு தாகத்தை உணர வைக்கிறது.
வெறும் 2% நீர் இழப்பு ஏற்பட்டால் கூட, நமது மனம் மற்றும் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. அதனால்தான், தினமும் போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம்.
சரியான அளவு நீர் அருந்துவதன் மூலம், நாம் உடலை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளலாம்.
இருமலுக்கு எளிய இயற்கை வைத்தியம் – (Watch in Youtube)
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.