cm speech - எச்சரிக்கை விடுத்த மேற்கு வங்க முதல்வர்

மம்தா பானர்ஜி அரசியல்வாதிகளுக்கு விடுத்த எச்சரிக்கை

82 / 100


சென்னை: அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமே தவிர, இப்படி கைக்கோர்த்து கொள்ளை அடிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல் மம்தா பானர்ஜி பேசியது எல்லோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த மாநில முதல்வர் வேறு யாருமல்ல. மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜிதான்.

இதை பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் தந்து கடந்த திங்கள்கிழமை செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

மேற்கு வங்க முதல்வர் பேசியது என்ன?

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 42 இடங்களில் போட்டியிட்டது. அதில் 29 இடங்களில் வெற்றி பெற்றது.

ஒருசில மாநகராட்சிப் பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதனால்தான் அக்கட்சி மாநிலத்தில் முழுமையான வெற்றி பெற முடியாமல் போனது.
மாநிலத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில்தான், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளை கையில் எடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

தொண்டர்களுக்கு அறிவுரை

அவர் முதலில் கட்சித் தொண்டர்களை அறிவுறுத்தியிருக்கிறார். நகராட்சிப் பகுதிகளில் நீடித்து வரும் ஆட்சிக்கு எதிரானவர்களின் செயல்பாடுகளை முறியடிக்க வேண்டும்.
சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை நீடிப்பது, கழிவுகளை சுத்தம் செய்வதில் அலட்சியம் காட்டுவது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

டோல்கேட் கட்டணம் செயற்கைக்கோள் மூலம் வசூல்

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

அதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை மாநிலச் செயலகமான நபன்னாவில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் மோசமான நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
ஹவுராவில் உள்ள மோசமான குடிமைப் பணிகள் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தூய்மைப் பணி, சாலைப் பணிகளில் அதிகாரிகளும், அலுவலர்களும் கவனம் செலுத்துவதில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் ஏன் வேலை செய்யவில்லை? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் அதிகாரிகள், போலீஸார், அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் எந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் செய்ய முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? போலீஸார் என்ன செய்கிறார்கள்? வார்டு கவுன்சிலர்கள் என்ன செய்கிறார்கள்?
சட்ட விரோத கட்டுமானங்களை ஏன் அகற்றவில்லை? அதிகாரிகள், காவல் துறையினர் வரை எல்லோரையும் மிரட்டி பணம் பறிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

ஆதாயத்தை பார்க்கும் அரசியல்வாதிகள் கட்சி பேதம் பார்ப்பது இல்லை. இதில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றுதான்.
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமே தவிர, இப்படி கைக்கோர்த்து கொள்ளை அடிக்கக் கூடாது. இந்த மோசமான சமூக விரோத கூட்டணிக்கு முடிவு கட்டப் போகிறேன்.

சிலர் பணம் சம்பாதிப்பதற்காக செய்யும் அத்துமீறல்களால் மேற்கு வங்காளத்தின் அடையாளம் சிதைக்கப்படுகிறது. இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அடையாளம் உண்டு. கலாசாரம் உண்டு. ஆனால் வங்காளத்தின் அடையாளத்தை சிதைக்கும் இத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கிறேன்.
லஞ்சம், ஊழலால் வங்காளத்தின் பெயர் கெட்டுவிடக் கூடாது. இது என்னுடைய முதலும், கடைசியுமான எச்சரிக்கை.
அரசு சொத்துக்கள், நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. இது பணத்துக்காக அனுமதிக்கப்படுகிறது.
அரசு சொத்து யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. பணம் சம்பாதிப்பதை நிறுத்துங்கள். மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
எந்த சட்டவிரோத நடவடிக்கையையும் நான் அனுமதிக்கவும் மாட்டேன். பொறுத்துக் கொள்ளவும் மாட்டேன். நில மாஃபியாக்களை நான் விட மாட்டேன் என்றும் எச்சரித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.
ஒரு மாநிலத்தில் லஞ்சமும், ஊழல் தலைவிரித்தாடினால், அடித்தட்டு மக்களுக்கு பலன்கள் சென்றடையாது என்பதை உணர்ந்து பேசிய பேச்சாக இது அமைந்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

நடிகர் விஜய் அரசியலில் எம்ஜிஆரா, சிவாஜியா

அத்துடன், அவர் எந்த நகராட்சியிலும் விதிகளுக்கு முரணாக வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் தன்னிச்சையாக தன் விருப்பப்படி டெண்டர்களை விடக் கூடாது. சட்டப்பூர்வமாக டெண்டர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனால் திட்டப் பணிகள் நேர்த்தியாகவும், உள்ளாட்சிக்கு வருமானமும் அதிகரிக்கும் என்பதால், இப்பணியில் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டும் என்பதற்காக பல குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜியின் பேச்சால் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாறப் போகிறார்களோ இல்லையோ. கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதைப் படிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply