earthquake (நிலநடுக்கம்) ஏன் ஏற்படுகிறது.

நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

83 / 100

சென்னை: பூமியில் தொடர்ந்து பல இடங்களில் நில அதிர்வு அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.

இது ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? என்பதற்கான அடிப்படை காரணங்களை அறிவது அவசியம்.

நில அதிர்வு ஏன் ஏற்படுகிறது?

பல நேரங்களில் பூமியின் அடியில் உள்ள டெக்டானிக்ஸ் என அழைக்கப்படும் பெரிய அளவிலான பாறைகள் ஒன்றுடன் ஒன்று உரசி நகர்வதால் நில அதிர்வு ஏற்படுகிறது. அதுபற்றிய விரிவான விளக்கத்தை பார்க்கலாம்.

பூமியின் மையப் பகுதி

நாம் வாழும் பூமியின் ரகசியங்களை அறிந்துகொள்வது என்பது இன்னும் முடியாத காரியமாகவே உள்ளது. குறிப்பாக பூமியின் மையப் பகுதி எப்படி உள்ளது என்பதை பல்வேறு யூகங்களில் அடிப்படையில்தான் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகளின் யூகங்களுக்கு ஏற்ப பூமியின் மையப் பகுதி உள்ளதா? என்பதை இன்னமும் அறுதியிட்டு கூறமுடியவில்லை.

புரியாத புதிர்

அறிவியலில் இன்னமும் புரியாத புதிராகவே பூமியின் மையப் பகுதி உள்ளது. தற்போது வரை பூமியில் 12 கி.மீட்டர் ஆழம் வரை மட்டுமே துளையிட்டு அதன் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். அதையும் கடந்த ஆராய்ச்சிகள் தற்போது தொடர்கின்றன.

விஞ்ஞானிகள் ஆய்வு

கோர் என அழைக்கப்படும் பூமியின் மையப்பகுதி பூமியின் மேற்பரப்பில் இருந்து 5 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்த ஆராய்ச்சிகள் வெளியாகும் சூழலில்தான் அதில் நடைபெறும் மாற்றங்களையும், அதனால் பூமியில் வாழும் உயிரினங்கள் சநதிக்கவிருக்கும் ஆபத்துக்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.
பூமியின் மையப் பகுதி திரவ நிலையில் உள்ளதாகவும், அது வேகமாக சுற்றுவதாகவும் ஒருகாலக் கட்டத்தில் விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

அதிர்ச்சித் தகவல்

சமீபத்தில் இந்த மையப் பகுதி தனக்குத்தானே சுற்றுவதை நிறுத்தியுள்ளதாகவும், இனி வருங்காலத்தில் இது எதிர்திசையில் சுற்றும் எனவும் விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கின்றனர்.

பூமி மொத்தம் 3 அடுக்குகளைக் கொண்டது. மேலோடு எனும கிரஸ்ட் நாம் இருக்கும் பகுதி. அதைத்தொடர்ந்து மேன்டில் எனப்படும் மேற்பரப்புக்கும், மையப் பகுதிக்கும் இடையிலான பகுதி. அடுத்து திரவ நிலையில் உள்ள மையப் பகுதி என 3 ஆக பிரிக்கலாம்.

பூமியின் மையப் பகுதி இரும்பு மற்றும் நிக்கல் ஆகியன உயர்வெப்பம் காரணமாக உருகிய நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. இதன் ஆரம் 1221 கி.மீட்டர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் வெப்பநிலை 5400 டிகிரியாகும்

நில அதிர்வு கருவி

நில அதிர்வு காரணங்கள்

இந்த உருண்டை வடிவ மையப்பகுதி ஒருசில காலத்துக்கு ஒரு முறை சுழற்சியை மாற்றிக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் காந்த மண்டலமும் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிகளின்படி கடந்த 1970-இல் தனது சுழற்சியை மாற்றியதாகவும், இதைத் தொடர்ந்து 2040-இல் இது எதிர்திசையில் சுழலும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் (earthquake) எப்படி ஏற்படுகிறது

பூமியில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் மேற்பரப்பில் திடீரென ஏற்படும் அழுத்தம் காரணமாகவே ஏற்படுகிறது.

டெக்டானிக் பிளேட் என அழைக்கப்படும் பெரிய அளவிலான பாறைகள் மீதுதான் கண்டங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வையும், அதனால் ஏற்படும் நிலநடுக்கங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியை இன்னமும் நாம் பெற முடியவில்லை.

பூமியின் ஆழத்தில் ஏற்படும் சிறு அழுத்தங்களால் கூட அதிர்வு அலைகள் ஏற்படும். இவை மேற்பரப்பில் சிறிய அளவிலான நிலநடுக்கங்களை ஏற்படுத்துகின்றன.

கட்டுமானங்கள் பாதிப்பு ஏன்

நிலநடுக்கத்துக்கும், வானிலைக்கும் தொடர்பு கிடையாது. அதேபோல் காலநிலை மாற்றத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்பு இல்லை.

பொதுவாக நிலநடுக்கம் ஏற்படும்போது பல அளவில் பூமியில் அதிர்வு அலைகள் ஏற்படுகின்றன. சிறிய அளவிலான அதிர்வு அலைகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஆனால் பெரிய அளவிலான அதிர்வு அலைகளால் பூமியின் மேற்பரப்பில் உள்ள கட்டடங்கள், கட்டமைப்புகள் சீர்குலைகின்றன. பூமியின் பல இடங்களில் நிலப்பரப்புகளில் விரிசல்கள் கூட ஏற்படுவதுண்டு.

பூமியின் அமைப்பும், நிலநடுக்கமும் – விடியோ

திருக்குறள் கதை 37: மன்னிக்கும் குணமே சிறந்தது!

83 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply