சியா விதை சாப்பிடும் முறை என்ன?

83 / 100


சியா விதை உடல் எடை குறைப்புக்கு உதவி புரிகிறதா? சியா விதை சாப்பிடும் முறை என்ன? யார் இந்த விதைகளை சாப்பிடக் கூடாது? ஆகியவற்றை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சியா விதைகளின் வரலாறு

சியா விதைகள் மாயன் கலாசார காலத்திலேயே பயன்படுத்தப்பட்டவை ஆகும். மாயன் மொழியில் சியா என்றால் வலிமை என்று பொருள்.
கிமு 3500-ஆம் ஆண்டுகளில் இந்த விதைகளை ஆஸ்டெக் மக்கள் பிரதான உணவின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் இந்த விதைகளை புனிதமானவையாகவும் கருதினர். அவர்கள் இந்த விதைகளில் ஒரு மந்திர சக்தி இருப்பதாகவும் நம்பினர்.

குதிரைகளின் உணவு

பதப்படுத்தத் தேவையில்லாத முழு தானியமாக இது இருந்து வந்ததால், தொடக்கத்தில் இதை குதிரைகளுக்குகொடுத்து வந்தார்கள்.

சியா விதை சாப்பிடும் முறை


ஒருசில மனிதர்கள் இதை உணவாக பயன்படுத்தத் தொடங்கியபோது, அவர்களுக்கு அதீத சக்தி இருப்பதை அறிந்து எல்லா மக்களும் இதை பிரதான உணவாக ஏற்றனர்.

சியா விதைகளின் குடும்பம்


சியா விதைகள் புதினா குடும்பத்தைச் சேர்ந்த சால்வியா ஹிஸ்பானிகா என்ற பாலைவனத் தாவர வகையைச் சேர்ந்தது.
இவற்றின் தாயகம் மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா.
சிறிய கருப்பு, வெள்ளை விதைகளாக இவை இருக்கின்றன.
புதினா குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரத்துக்கு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இவற்றின் பூக்கள் ஊதா மற்றும் வெள்ள நிறத்தில் இருக்கும்.

எவ்வளவு கலோரி இருக்கிறது

100 கிராம் விதைகளில் 485 கலோரிகள்
உள்ளன. 31 கிராம் கொழுப்பு, 42 கிராம் கார்பொஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
விதைகளில் 22 அமினோ அமிலங்களில் 18 இருக்கின்றன.
குறிப்பாக, லைசின், லியூசின், ஐசோலூசின், மெத்தியோனைன், த்ரோயோனைன், டிர்டோபான், ஃபைனிலாலனைன், வாலின், ஹிஸ்டாடின் ஆகிய 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன.
நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஆல்பா லோலிக் அமிலம் ஆகியவை நிறைந்தவையாக இந்த விதைகள் உள்ளன.

விதைகள் தன்மை

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த விதைகள் அதிக அளவில் திரவ பொருள்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது.
இந்த விதைகளை அறைக்கவோ, சமைக்கவோ தேவையில்லை. நீரில் ஊற வைத்து சாப்பிட்டாலே போதும்.

கிடைக்கும் நன்மைகள்

இந்த விதைகள் குடலுக்கு உகந்த பேக்டீரியா வளர்வதற்கு உதவுகிறது. விதைகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நுண்ணுயிர்களை துரிதப்படுத்தி செரிமானத்துக்கு உதவுகிறது.

உடல் கழிவுகள் எளிதாக வெளியேறுவதை ஊக்குவிக்கிறது. உடலின் வயது மூப்பை தள்ளிப்போடுகிறது.
செல்கள் சேதமடைவதையும், தோல் திசுக்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் இது உதவுகிறது.
பசியை கட்டுப்படுத்துகிறது. இதை சிறிது நீரில் ஊற வைத்து சாப்பிட்டதுமே, அதிக உணவை உட்கொள்ளும் எண்ணத்தை குறைகிறது. ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது.
சியா விதைகள் கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன. இதனால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
எலும்பு பிரச்னை இருப்பவர்கள் சியா விதைகளை சாப்பிடலாம். ஏனெனில் இதில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை அடங்கியிருக்கிறது.

சியா விதை சாப்பிடும் முறை

காலை நேரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் விதைகளை ஒரு டம்ளர் நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து பருகலாம்.
இதனால் நாள் ஒன்றுக்கு தேவையான நார்ச்சத்தில் 40 சதவீதத்தை மனித உடல் பெற்றுவிடுகிறது.
உடல் எடை மேலாண்மைக்கு, வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன், அத்துடன் இந்த விதைகள் சிறிதளவு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிடலாம்.
நாம் சாப்பிடக் கூடிய டயட் உணவுகளில் எளிதில் சேர்க்க முடியும்.
சாலட்டுகள், பழச்சாறுகள் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். தயிரில் கலந்து சாப்பிடலாம். சூப் வகைகளில் இதை சேர்த்தால் சிறிதுநேரத்தில் சூப் சற்று கட்டித் தன்மைக்கு வந்துவிடும்.
முட்டை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக இந்த விதைகளை ஊற வைத்து சாப்பிடலாம்.
ஒரு ஸ்பூன் விதைகள் 24 மணி நேரம் பசியைத் தாங்கும் திறன் படைத்தவை என்பது ஒருசில ஆய்வுகளில் தெரியவருகிறது.

உடல்நலத்துக்கு உதவும் விதைகள்

மொத்தத்தில், இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
ஆரோக்கியமான சருமத்தை பேண உதவுகிறது. உடல் எடையை குறைக்க அல்லது பராமரிக்க உதவுகிறது, உடல் சூட்டை தணிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

எப்போது சாப்பிடலாம்

இந்தவிதைகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொல்வதுண்டு. ஆனால் இதை காலை நேரத்தில் மட்டுமே சாப்பிடுவது நல்லது.
இரவு நேரத்தில் இவற்றை சாப்பிடுவதால் சிலருக்கு செரிமான பிரச்னை ஏற்படும். தூக்கம் பாதிக்கப்படும்.

எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 கிராம் விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடல்பயிற்சி செய்வதற்கு முன்பு இதை எடுத்துக் கொள்வதால் அதிக நன்மை கிடைக்கிறது.

விதைகள் எங்கு கிடைக்கும்

சியா விதைகள் சூப்பர் மார்க்கெட்டுகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. ஆன்லைனிலும் இந்த விதைகளை வாங்க முடியும்.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது.

குறைந்த ரத்த அழுத்தம், இரத்த உறைவு கோளாறு உடையவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

chia விதைகளை பலவீனமான செரிமானசக்தி உடையவர்களும் சாப்பிடக் கூடாது.
chia விதைகளில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இதை அளவோடுதான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
சிலருக்கு CHIA விதைகளால் அலர்ஜி ஏற்படுவதும் உண்டு.
உடல் பாதிப்புக்காக ஒருசில மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் சியா விதைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
காரணம் இது ஒருசில மருந்துகளின் வீரியத்தை குறைத்துவிடுவதாக சொல்லப்படுகிறது. அதனால், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடுவதே நல்லது.

முன்னெச்சரிக்கை தேவை

CHIA விதைகளை நீங்கள் புதிதாக சாப்பிட விரும்புபவராக இருந்தால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.
தொடக்கத்தில் சிறிய அளவில் CHIA விதைகளை பயன்படுத்துங்கள். அதில் உடல் நலத்தில் எந்த பிரச்னையில் ஏற்படாத பட்சத்தில் படிப்படியாக அதன் அளவை உயர்த்திக் கொள்ளலாம்.
வயிற்றில் CHIA விதைகள் அதிக அளவில் நீரை உறிஞ்சி வயிறை நிரப்பத் தொடங்கும். இதனால் நீரிழப்பைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க தவறாதீர்கள்.
விதைகளை நேரடியாக சாப்பிடாதீர்கள். அவற்றை நீர் அல்லது பிற திரவ உணவுகளில் ஊறவைத்து சாப்பிடுவதுதான் நல்லது.
இதனால் வயிற்றில் இந்த CHIA விதைகளின் விரிவாக்கம் அதிகம் இருக்காது. அதனால் வயிற்றுக்கு சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
சியா விதைகளால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இது மிக அரிதாக இருந்தாலும், உங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டால் தயங்காமல் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

மாயாஜால உணவா

சியா விதைகள் எடை குறைப்புக்கு உதவுகிறது என்றாலும், எந்த உணவாலும், எடை குறைப்பு செய்யக் கூடிய மாயாஜால வித்தையை செய்ய முடியாது.
சீரான உணவுடன், உங்கள் அன்றாட பணிகளை தொடர்வது, தினமும் சுறுசுறுப்பாக இயங்குவது, காலை அல்லது மாலை வேளைகளில் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற நடைமுறைகளை பின்பற்றுபவர்கள் மட்டுமே எடை மேலாண்மையை செம்மையாக நிர்வகிக்க முடியும் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

சியா விதைகள் பற்றிய கூடுதல் தகவல் அடங்கிய விடியோ

மரணத்துக்கு முன் மூளை நினைப்பது என்ன?

83 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply