இயற்கை மருத்துவம்

தசை வலி – மூட்டு வலி – இயற்கை மருத்துவம்!

86 / 100 SEO Score

இன்றைக்கு நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் இருந்தாலும், தசை வலி – மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் நமக்கு பெரும் உதவி புரிகின்றன.

இந்த இயற்கை மருத்துவம் பற்றித்தான் இந்த கட்டுரையில் உரிய ஆதாரங்களுடன் பார்க்கப் போகிறோம். தசைவலிகளுக்கான இயற்கை மருத்துவம் தொடர்பான ஆய்வுகளை விரிவாக தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக, அவற்றின் இணையதள இணைப்புகளும் கடைசியாகத் தரப்பட்டிருக்கிறது.

Table of Contents

இயற்கை மருத்துவம் – வலி நிவாரணம்

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம், அதுவும் பக்க விளைவுகள் இல்லாத தீர்வாக நம் வீட்டிலேயே இருக்கிறது. அந்த தீர்வுகள் எவை? நம் பாரம்பரிய வைத்திய முறைகளைப் பற்றி நவீன அறிவியல் என்ன சொல்கிறது? என்பதையும் இந்த கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

வலி ஏன் ஏற்படுகிறது?

வலி என்பது உடலுக்கான ஒரு எச்சரிக்கை மணி. இது நரம்புகளின் வழியாக மூளைக்கு அனுப்பப்படும் ஒரு சமிக்ஞை. தசை பிடிப்பு, வீக்கம், தசைநார் சிதைவு அல்லது எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த சமிக்ஞை உருவாக்கப்பட்டு மூளைக்கு அனுப்பப்படுகிறது.

வலி ஏற்பட பொதுவான காரணங்கள்

தசை பிடிப்பு (Spasms): இது கடுமையான உடற்பயிற்சி, நீர்ச்சத்து குறைபாடு, அதிக மன அழுத்தம் போன்றவற்றால் வரக் கூடிய பாதிப்பு ஆகும்..

தசை வலி (Muscle Pain): சோர்வு, அதிக வேலை, காயம் போன்றவற்றால் வரும் பாதிப்பாக இருக்கிறது..

மூட்டு வலி அல்லது ஜாயிண்ட் பெயின் (Joint Pain): இது ஆர்த்ரைடிஸ் (Arthritis), மூட்டுத் தேய்மானம், வீக்கம் காரணமாக ஏற்படுவதாகும்..

வலி - இயற்கை மருத்துவம்

எலும்பு வலி (Bone Pain): வைட்டமின் டி குறைபாடு, , கால்சியம் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற காரணங்களால் ஏற்படும் பிரச்னை.

இடுப்பு வலி (Hip Pain): அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, சில நேரங்களில் ஒழுங்கற்ற நிலையில் அமர்ந்திருப்பது, காயங்கள் காரணமாக ஏற்படுகின்றன.

ஆய்வுகள் சொல்லும் தகவல்

இத்தகைய பாதிப்புகளுக்கு ஆங்கில மருத்துவத்தில் இன்றைக்கு பல நிவாரணிகள் பல இருக்கின்றன. எனினும், அவை சில நேரங்களில் தற்காலிக தீர்வுகளாகக் கூட அமைகின்றன.

இந்த நிலையில், பக்க விளைவுகள் அற்ற, மிகுந்த பலனுடைய இயற்கையான முறைகள் சிலவும் இருக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகள் மற்றும் தரவுகளின்படி, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவர் நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறார். ஆண்டுதோறும் 10 பேரில் ஒருவர் புதிதாக நாள்பட்ட வலியுடன் கண்டறியப்படுகிறார்.

குறிப்பாக, இடுப்பு வலியால் (Low Back Pain – LBP) மட்டும் 2020-ஆம் ஆண்டில் உலக அளவில் சுமார் 619 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்புகள், 1990-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 60% அதிகரித்துள்ளதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நாள்பட்ட வலிகள்

நாள்பட்ட வலிகள், ஒருவரின் அன்றாட வாழ்க்கை, வேலை செய்யும் திறன், சமூக உறவுகள் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

நவீன அறிவியல் பார்வை ஒருவரின் உடல்நல பாதிப்புகளுக்கு இயற்கை வைத்தியம் நல்ல தீர்வாக அமைவதை ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

குளிர்ந்த முறை மற்றும் வெப்ப முறை ஒத்தடம்

ஒருவருக்கு வலி ஏற்பட்டதும், உடனடியாக வீட்டில் ஒரு அவசரத் தீர்வு தேவைப்படுகிறது. இந்த சூழலில்தான், சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடம் பயனுள்ளதாக அமைகிறது. இந்த இயற்கை மருத்துவ முறை நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒன்று.

குளிர் ஒத்தடம் (Cold Compress): இந்த சிகிச்சை முறை, புதிதாக ஏற்பட்ட காயங்கள், வீக்கங்கள், தசை பிடிப்பு, தசைநார் சிதைவு, சுளுக்கு போன்றவற்றுக்கு 48 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டியதாகும்.

இந்த சிகிச்சை முறையில் ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி பாதிக்கப்பட்ட இடத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வைக்கலாம். இதனால் ஒத்தடம் கொடுக்கும் இடத்தில் ஏற்படும் pain சற்று குறையும், வீக்கமும் குறைகிறது.

குளிர் ஒத்தடம் கொடுப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக வீக்கத்தை குறைத்து அப்பகுதியில் ஒரு உணர்வற்ற நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் pain குறைகிறது.
சிலருக்கு கடும் உடற்பயிற்சி காரணமாக சில நேரங்களில் வீக்கம் ஏற்பட்டு Pain ஏற்படுவதுண்டு. அப்போதும் இந்த குளிர் ஒத்தடம் தரலாம்.

சூடான ஒத்தடம்: தசை இறுக்கம், நாள்பட்ட வலி அல்லது மூட்டு இறுக்கம் போன்றவற்றுக்கு சூடான ஒத்தடம் தேவைப்படுகிறது.

இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இரத்த ஓட்டம் மேம்படுவதன் காரணமாக, இறுக்கமான தசைகள் தளர்வடைகின்றன. திசுக்கள் மென்மை அடைகின்றன. இதன் காரணமாக நாள்பட்ட வலிகள் குறையத் தொடங்குகின்றன.

Joint pain மற்றும் நாள்பட்ட காயங்களால் ஏற்படும் இறுக்கத்தைப் போக்க சூடான ஒத்தடம் ஒரு சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது.

குழப்பம் தேவையில்லை

குளிர்ந்த ஒத்தடம், சூடான ஒத்தடம் இவற்றில் சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். ஒரு புதிய காயம், திசுக்களுக்கு சேதம் விளைவிப்பதால் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் உடனடியாக வீக்கத்தைக் குறைப்பதே முதல் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, இரத்த நாளங்களைச் சுருக்க வைக்கும் குளிர் ஒத்தடம் தேவைப்படுகிறது.

நாள்பட்ட வலி என்பது இரத்த ஓட்டக் குறைவு மற்றும் தசை இறுக்கத்தால் ஏற்படுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதே உடனடி நோக்கமாக இருக்கிறது. எனவே, இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் சூடான ஒத்தடம் இங்கே தேவைப்படுகிறது.

இவற்றை பயன்படுத்தும் விதத்தில் எச்சரிக்கையும் தேவை. குளிர் அல்லது சூடான ஒத்தடத்தை ஒரே நேரத்தில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஐஸ் கட்டியை நேரடியாக தோலில் வைக்கவும் கூடாது. ஒரு துணியில் சுற்றிப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.

சூடான ஒத்தடத்தைப் பயன்படுத்தும்போது, தோலில் தீக்காயங்கள் ஏற்படாமல் கவனமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை மூட்டு ஆரோக்கியத்தின் காவலர்கள் என்று அழைக்கிறார்கள்.

இவை வீக்கத்தைக் குறைக்கும் சக்திவாய்ந்த பண்புகளைக் கொண்டிருக்கின்றன. Joint pain மற்றும் இறுக்கத்தைக் குறைக்க உறுதுணையாக இருக்கின்றன.

உடலில் ஒமேகா-3 (EPA, DHA) மற்றும் ஒமேகா-6 (Arachidonic Acid) கொழுப்பு அமிலங்களுக்கு இடையே ஒரு சமநிலை உள்ளது.

போதுமான அளவு ஒமேகா-3-ஐ எடுத்துக்கொள்வதன் மூலம், வீக்கத்தை உண்டாக்கும் பொருட்களின் உற்பத்தி குறைக்கப்படுகிறது, அதே நேரத்தில் வீக்கத்தைக் குறைக்கும் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

இந்த செயல்பாடு, நாள்பட்ட வீக்க நோய்களைக் கொண்டவர்களுக்கு, குறிப்பாக முடக்குவாதம் உள்ளவர்களுக்கு, வலி நிவாரண மருந்துகளைச் சார்ந்து இருப்பதை கணிசமாகக் குறைக்கவும் இந்த இயற்கை மருத்துவம் அமைகிறது.

கொழுப்பு அமிலங்களின் பங்கு

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குருத்தெலும்புகளைப் (cartilage) பாதுகாப்பதிலும், மூட்டுகளின் இயக்கத்திற்கு உதவும் சைனோவியல் திரவத்தை (synovial fluid) பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இது மூட்டுகள் மென்மையாக நகரவும், உராய்வு மற்றும் காயத்தின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கொழுப்பு அமிலங்களின் பங்களிப்பு JOINT PAIN நீங்க இயற்கை மருத்துவமாக உதவுகிறது.

ஒமேகா-3 சப்ளிமெண்ட்கள் Joint pain, காலை நேர இறுக்கம், மற்றும் வீங்கிய மூட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பது ஒருசில ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

முடக்குவாதம் மற்றும் Joint pain நோயாளிகள் மீதான ஆய்வில், ஒமேகா-3 எடுத்துக்கொண்ட நோயாளிகள், நிவாரண மருந்துகளை குறைவாகப் பயன்படுத்தியதும் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உணவின் மூலமாகவோ அல்லது சப்ளிமெண்ட்கள் மூலமாகவோ பெற முடியும்.

ஒமேகா 3 உணவுகள் – சப்ளிமெண்டுகள்

சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, மற்றும் ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் ஒமேகா-3-இன் சிறந்த உணவு மூலங்களாகும்.
தாவர அடிப்படையிலான மூலங்களில் ஆளி விதைகள் (flaxseeds), சியா விதைகள் (chia seeds), அக்ரூட் பருப்புகள் (walnuts), மற்றும் கானோலா எண்ணெய் ஆகியவை முக்கியமானவை.

மீன் சாப்பிடாதவர்களுக்கு, கடற்பாசி எண்ணெய் (Algal Oil) ஒரு சிறந்த மாற்று சப்ளிமெண்ட்டாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது மீன்களில் காணப்படும் அதே ஒமேகா-3 வகைகளான EPA மற்றும் DHA-வை வழங்குகிறது.

ஆலிவ் ஆயில்: வீக்கத்தை குறைக்கும் இயற்கை மருத்துவம்

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் (EVOO), அதன் தனித்துவமான ஆரோக்கியப் பண்புகளுக்காகப் பரவலாக அறியப்பட்ட ஒன்று.

ஆலிவ் ஆயிலின் Pain relief மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய வேதிப்பொருள் ஓலியோகந்தல் (Oleocanthal) என்பதே.

இந்த ஓலியோகந்தல், Ibuprofen போன்ற ஸ்டீராய்டு அல்லாத வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளின் (NSAIDs) செயல்பாட்டை கொண்டிருக்கிறது.

இது சைக்கிளோஆக்சிஜனேஸ் (COX) என்ற நொதிகளைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.

இந்த COX நொதிகள் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும் ரோஸ்டாக்லாண்டின்கள் (prostaglandins) எனப்படும் இரசாயனங்களின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த நொதிகளின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம், ஓலியோகந்தல் வீக்கத்தைக் குறைத்து, வலியைப் போக்க உதவுகிறது.

ஆலிவ் ஆயிலின் இந்த செயல்பாடு ஒரு நுட்பமான வேறுபாட்டைக் கொண்டது. இது இப்யூபுரூஃபன் (Ibuprofen) போல உடனடி வலி நிவாரணம் தருவதில்லை.

ஒரு நாளைக்கு 50 கிராம் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொண்டால், அதில் உள்ள ஓலியோகந்தலின் அளவு வயது வந்த ஒருவருக்கு தேவையான இப்யூபுரூஃபன் மருந்தின் அளவில் 1/10 சதவீதம் மட்டுமே.

இதனால், உடனடித் தீர்வு தேவைப்படும் சூழ்நிலைகளில் இது ஒரு மாற்று அல்ல. ஆனால், நாள்பட்ட, மிதமான வீக்கத்தைக் குறைக்க, தொடர்ந்து எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் தேர்வாக அமைய இந்த இயற்கை மருத்துவம் அமைகிறது. இது நாள்பட்ட ஆரோக்கிய மேலாண்மைக்கான நிவாரணமாகவும் கருதப்படுகிறது.

வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தும் ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலின் முழுப் பலன்களைப் பெற, உயர்தர, புதிய மற்றும் குளிர் அழுத்தப்பட்ட எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் மற்ற வகைகளில் இந்த வேதிப்பொருள் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

ஆலிவ் ஆயிலை உள் எடுத்துக்கொள்வது மட்டுமின்றி, வெளிப்புறப் பயன்பாட்டின் மூலமாகவும் அதன் நன்மைகளை அடைய முடியும்.

வலி மற்றும் இறுக்கம் உள்ள தசைகள் மற்றும் மூட்டுகளில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்வது வலியைப் போக்க உதவும்.

மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, தசைகள் தளர்த்தப்படுகின்றன.

ஆலிவ் ஆயிலை மசாஜ் செய்வதற்கு முன் லேசாக அதை சூடாக்குவது நல்லது. அதனால் அதன் உறிஞ்சும் திறனை மேம்படுத்தும். மேலும், இது பல்வேறு மசாஜ் நுட்பங்களுக்குப் பொருத்தமான இயற்கை மருத்துவம் என்ற முறையில், ஒரு கேரியர் ஆயில் ஆகவும் (carrier oil) பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், ஆலிவ் ஆயில் மெதுவாக உறிஞ்சப்படுவதால், சருமத்தில் ஒட்டும் தன்மை ஏற்படலாம். ஆலிவ் ஆயிலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன

Nature இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலியோகந்தல், உடலில் pain உருவாக காரணமான நொதியான COX-1 மற்றும் COX-2 ஐத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி: வலி நிவாரணத்தின் பாரம்பரிய மூலிகை

இஞ்சி, அதன் காரம், சுவை மற்றும் மருத்துவப் பண்புகளுக்காகப் பரவலாக அறியப்பட்ட ஒன்று.

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல்கள் (Gingerols) மற்றும் ஷோகாவோல்கள் (Shogaols) என்ற முக்கிய வேதிப்பொருட்கள் வலி நிவாரண மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

இந்த வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் புரோஸ்டாக்லாண்டின்கள் (Prostaglandins) மற்றும் லியுகோட்ரைன்கள் (leukotrienes) உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் செயல்படுகின்றன.

மேலும், இஞ்சியில் காணப்படும் சாலிசிலேட்டுகள் (salicylates), உடலில் சாலிசிலிக் அமிலமாக (salicylic acid) மாற்றப்பட்டு, வலியைப் போக்க உதவுகிறது.

ஆய்வுகள் சொல்லும் விஷயம்

மூட்டுவலி (Osteoarthritis – OA) நோயாளிகள் மீதான சில ஆய்வுகளில், இஞ்சி வாய்வழியாக உட்கொள்ளப்பட்டபோது வலி குறைந்தது. ஒரு ஆய்வு இஞ்சியை இப்யூபுரூஃபனுடன் ஒப்பிட்டு, இரண்டுமே வலி நிவாரணத்தை அளித்ததைக் கண்டறிந்தது.
மற்றொரு ஆய்வு, நாப்ராக்ஸன் (naproxen) என்ற வலி நிவாரணிக்கு இஞ்சி, மஞ்சள் மற்றும் மிளகு கலவையானது இணையாகச் செயல்பட்டதைக் கண்டறிந்திருக்கிறது.

இருப்பினும், சில ஆய்வுகள் இஞ்சியின் வலி நிவாரணப் பண்புகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று கூறுகின்றன.

இந்த முரண்பாடுகள், ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட இஞ்சியின் அளவு, வடிவம் (பச்சை இஞ்சி, உலர்ந்த இஞ்சி, சாறு), மற்றும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் வேறுபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

The Journal of Pain இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிக உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசை வலியை இஞ்சி உட்கொள்வது குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இஞ்சியின் மாற்று பயன்பாடு

இஞ்சியை உள் எடுத்துக்கொள்ளும்போது சிலருக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இந்த பக்க விளைவுகளைத் தவிர்க்க, இஞ்சியை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது ஒரு பயனுள்ள மாற்று இயற்கை மருத்துவம்.

இஞ்சி ஒத்தடம் (Ginger Compress) கொடுப்பதன் மூலம், நாள்பட்ட மூட்டுவலி அறிகுறிகள், சோர்வு, மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதும் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

இஞ்சி ஒத்தடம் தயாரிக்கும் முறை:

10 கிராம் இஞ்சிப் பொடியை 100 மில்லி வெந்நீரில் கலந்து, ஒரு துணியை அதில் முக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் 30 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம்.

இஞ்சியின் முழுப் பலனைப் பெற, ஒரு நாளைக்கு சுமார் 2 கிராம் இஞ்சியை, குறைந்தது 11 நாட்களுக்குத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்கின்றன ஆய்வுகள்.

மஞ்சள் (Turmeric):

மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி ஆகும்.

எப்படி பயன்படுத்துவது? ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குடிக்கலாம்..

A Comprehensive Review of The Journal of Medicinal Food இதழ், குர்குமின் மூட்டு வலிக்கு உதவும் ஒரு இயற்கையான நிவாரணி என்று கூறுகிறது.

எப்சம் சால்ட் (Epsom Salt) குளியல்:

எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் சல்பேட் தசை இறுக்கத்தைக் குறைத்து, தசை பிடிப்புகளை நீக்குகிறது.

எப்படி பயன்படுத்துவது?: குளிக்கும் தொட்டியில் அல்லது பெரிய வாளியில் எப்சம் உப்பை கலந்து சிறிதுநேரத்துக்கு பிறகு, 15-20 நிமிடங்கள் அதில் அமர்ந்திருக்கலாம்.
எளிய பயிற்சிகள் மற்றும் நீட்சி (Stretching):

எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நீட்டிப்புகள் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்பைக் குறைத்து, வலியைப் போக்க உதவுகின்றன.

BODY PAIN RELIEF – மீள் பார்வை

  1. குளிர்ச்சியான ஒத்தடம் தருவது
    (இது புதிய காயம் ஏற்பட்டதால் ஏற்பட்ட வீக்கத்துக்கு முதல் 48 மணி நேரத்துக்குள் பயன்படுத்துவது)
  2. சூடான ஒத்தடம் தருவது
    நாள்பட்ட வலிகள், தடை இறுக்கம், மூட்டு இறுக்கம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் முறையாக இருக்கிறது.
  3. ஆலிவ் ஆயில்
    நாள்பட்ட மிதமான வீக்கத்தைக் குறைக்க மசாஜ் முறையில் பயன்படுத்துவது, அல்லது தினமும் 2 முதல் 4 தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்கு எடுத்துக் கொள்வது.
  4. ஒமேகா 3
    முடக்குவாதம், மூட்டுவலி போன்ற நாள்பட்ட வீக்க நோய்களுக்கு தீர்வு காணும் ஊட்டச் சத்து. இவற்றை சில வகை மீன்கள், சியா, ஆளி விதைகள் போன்றவற்றின் மூலமோ அல்லது மீன் எண்ணை மாத்திரை வகைகள் போன்ற சப்ளிமெண்டுகள் மூலம் பெற முடியும்.
  5. இஞ்சி
    தேநீராக, மாத்திரைகளாக, பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடமாக பயன்படுத்தக் கூடியது.
  6. மஞ்சள்: மஞ்சளையும் மிளகையும் பாலில் கலந்து சாப்பிடலாம்.
  7. எப்ஸம் சால்ட்: குளியல் முறையில் பயன்படுத்தலாம்
  8. எளிய பயிற்சிகள்: குறிப்பிட்ட பாதிப்புக்கான எளிய பயிற்சி முறைகளை அறிந்து அவற்றை செய்யலாம்.

பாதுகாப்பு குறிப்புகள்

நம் பாரம்பரிய இயற்கை மருத்துவம், நவீன அறிவியல் ஆதாரங்களால் மென்மேலும் நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

Body Pain relief தொடர்பான இந்த எளிய இயற்கை மருத்துவம், நம் உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க ஒரு இயற்கையான, பாதுகாப்பான தீர்வை வழங்குகின்றன. அதே நேரத்தில் body pain relief விஷயத்தில் கவனமும் தேவை.

உங்களுக்கு ஏதேனும் கடுமையான அல்லது நீண்டகால வலி இருக்குமானால், ஒரு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. அந்த நேரத்தில் இந்த இயற்கை மருத்துவம் உடனடியாக கைக்கொடுக்காது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

நீங்கள் ஏற்கனவே body pain relief தொடர்பான வேறு ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், குறிப்பாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகள், இஞ்சி அல்லது ஒமேகா-3 சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதற்கு முன், ஒரு மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

Body pain relief மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இருக்கின்றன. அதே நேரத்தில் body pain relief தொடர்பான இயற்கையான சிகிச்சை முறைகளும் சிலருக்கு கைக்கொடுக்கின்றன.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான உடற்பயிற்சி, மற்றும் இயற்கை மருத்துவம் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம், நாம் வலியில்லா வாழ்க்கையை வாழ முடியும்.

இந்த தகவலை விடியோ வடிவில் காண How to Relieve Joint Pain: காத்திருக்கும் Nature’s gift Natural Remedies

சியா விதைகளை சாப்பிடும் முறையை அறிந்துகொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்

Reference for your study:

வலிகள் மற்றும் உலகளாவிய புள்ளிவிவரங்கள்

  • உலக சுகாதார அமைப்பு (WHO) – நாள்பட்ட இடுப்பு வலி குறித்த வழிகாட்டுதல்கள்:
    • https://www.who.int/news/item/07-12-2023-who-releases-guidelines-on-chronic-low-back-pain
  • உலகளாவிய வலிப் பிரச்சனை ஒரு சுகாதார சவாலாக:
    • https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3201926/

ஆலிவ் ஆயில்

  • ஓலியோகந்தல் (Oleocanthal): அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியல் பாதுகாக்கும் நன்மைகள் குறித்த ஆய்வு:
    • https://kyoord.com/blogs/learn/oleocanthal-101-a-scientific-review-of-its-anti-inflammatory-anti-cancer-and-neuroprotective-benefits
  • ஆலிவ் ஆயிலின் வலி நிவாரணப் பண்புகள்:
    • https://www.arthritis.org/health-wellness/healthy-living/nutrition/anti-inflammatory/the-ultimate-arthritis-diet
  • மசாஜ் செய்வதற்கான ஆலிவ் ஆயிலின் நன்மைகள்:
    • https://www.spa-mobile.com/10-benefits-of-a-body-massage-with/

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

  • மூட்டு ஆரோக்கியம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் ஒமேகா-3-இன் பங்கு:
    • https://www.pdxfootandankle.com/blog/omega-3-fatty-acids-and-joint-health-benefits-and-sources-40772.html
  • முடக்கு வாதத்தில் (Rheumatoid Arthritis) ஒமேகா-3-இன் நன்மைகள்:
    • https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7362115/
  • ஆர்த்ரைடிஸ்-க்கு ஒமேகா-3 நிறைந்த உணவுகள்:
    • https://www.betterhealth.vic.gov.au/health/conditionsandtreatments/arthritis-and-diet

இஞ்சி

  • ஆர்த்ரைடிஸ் வலிக்கு இஞ்சியின் நன்மைகள் மற்றும் பயன்பாடு:
    • https://www.arthritis.org/health-wellness/treatment/complementary-therapies/supplements-and-vitamins/health-benefits-of-ginger
  • மூட்டு வலிக்கு மேற்பூச்சு இஞ்சி ஒத்தடம் குறித்த ஆய்வு:
    • https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4230973/
  • இஞ்சி எவ்வாறு வலியைப் போக்க உதவுகிறது:
    • https://www.painspecialtygroup.com/blog/how-ginger-can-work-to-fight-pain

சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடங்கள்

  • காயங்கள் மற்றும் வலிகளுக்கு எப்போது ஐஸ் அல்லது சூடு பயன்படுத்த வேண்டும்:
    • https://www.unitypoint.org/news-and-articles/injuries-pain-when-to-use-ice-or-heat-infographic
  • வலிக்கான சிகிச்சையில் ஐஸ் vs. சூடு:
    • https://www.piedmont.org/living-real-change/when-to-treat-pain-with-ice-vs-heat
  • வலிக்கான ஐஸ் பேக்குகள் vs. சூடான ஒத்தடங்கள்:
    • https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/ice-packs-vs-warm-compresses-for-pain

86 / 100 SEO Score

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

More From Author

good bad ugly

Good Bad Ugly: சாதனைப் படைத்தது அஜித் பட டீசர்

விண்கல்

விண்கல் அணுஆயுதத்தை விட ஆபத்தானது தெரியுமா?

Leave a Reply