எலுமிச்சை ஜூஸ் பயன்கள் – உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த தீர்வு

lemon juice uses
85 / 100

எலுமிச்சை ஜூஸ் பயன்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் எலுமிச்சை ஜூஸ் தினமும் குடிப்பதால் நம்முடைய உடல் எடை குறைகிறது என்று சிலர் சொல்வதை நம்பாதீர்கள்.

உள்ளடக்கம்

எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

எலுமிச்சை ஜூஸ் பல்வேறு உடல் நலத்துக்கான ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக ஆரோக்கியமான இரைப்பை, குடல் பராமரிப்பை மேற்கொள்வதற்கு எலுமிச்சை சாறு நல்ல மருந்து.
எலுமிச்சை ஜூஸ் ஒரு நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. அதனால்தான் இதை சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
எலுமிச்சை பழத்தில் ஃபிளாவனாய்டுகள் ஆக்ஸிஜனேற்ற குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன. இது குடலை சுத்தப்படுத்தவும், நச்சுக்களை நீக்கவும் உதவி புரிகிறது. அந்த வகையில் எலுமிச்சை ஜூஸ் பயன்கள் நமக்கு கிடைக்கின்றன.

நார்ச்சத்து தரும் நன்மைகள்

எலுமிச்சையில் பெக்டின் என்ற ஒரு வகை நார்ச்சத்து உள்ளது. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவி புரிகிறது.
பொதுவாக உணவில் நார்ச்சத்து அதிகம் இருந்தால், அது பசியை தாமதப்படுத்தும். அத்துடன் அதிகப்படியான உணவை ஏற்க மறுக்கும். அத்துடன் கழிவுகள் வெளியேற உதவும்.
அந்த வகையில் எலுமிச்சையை சாறாக பயன்படுத்துவதை விட அதை பழக்கூழாக சாப்பிடுவதால் அதிக பலன் கிடைப்பதோடு, ஓரளவு எடை குறைப்புக்கும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யக் கூடியவர்கள் எலுமிச்சை சாறு சாப்பிட்டால், அவர்களின் உடல்பயிற்சியின்போது 30 சதவீதம் கூடுதலாக கொழுப்பை கரைக்க முடிவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இத்தகவலை அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷன் ஜர்னல் தெரிவித்திருக்கிறது. எலுமிச்சை ஜூஸ் பயன்கள் பட்டியலில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

பழக்கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மை

2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் எலுமிச்சையை சாறு பிழியாமல், பழமாக சாப்பிடும்போது அதில் உள்ள பெக்டின் நார்ச்சத்து நம் வயிற்றை நிரப்புகிறது. அதனால் பசித் தூண்டல் தவிர்க்கப்படுவதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது என தெரியவந்திருக்கிறது.
ஒரு எலுமிச்சையில் 53 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பொதுவாக வைட்டமின் சி நிறைந்த பானங்கள், பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதால் இதயநோய், பக்கவாதத்தின் தீவிரத் தன்மையை குறைக்க உதவுகின்றன. அந்த வகையில் எலுமிச்சை ஜூஸ் பயன்கள் அமைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஒவ்வாமையைத் தடுக்கிறது

எலுமிச்சை பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களின் வளமான மூலமாகவே உள்ளது.
அதாவது ஃபிளாவனாய்டுகள் , வைட்டமின்கள், டெர்பெனாய்டுகள் மற்றும் பிற சேர்மங்கள் இருக்கின்றன.

எலுமிச்சை ஜூஸ் பயன்கள் வரிசையில், Antimutagenic – டிஎன்ஏ பிறழ்வுகளை தவிர்ப்பது, Anticarcinogenic – அதாவது புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது, Antiallergic – ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுப்பது போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
சிறிய அளவிலான இந்த பழத்தில் புரோட்டின், வைட்டமின் சி, கால்சியம், ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்களின் ஆற்றல் மிக அதிகம். அதேபோல் எலுமிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளன.

தொண்டை வலிக்கு நிவாரணம்

எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதால் தொண்டை வலி இருப்பவர்கள் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
இந்த சாறு தொண்டையை சுத்தப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. எலுமிச்சை ஜூஸ் பயன்கள் வரிசையில் இது முதலிடத்தை பெறுகிறது.

செரிமான பிரச்னைக்கு நல்ல மருந்து

எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை தோலில் பெக்டின் எனப்படும் கரையக் கூடிய நார்ச்சத்து இருக்கிறது. இது கல்லீரலில் செரிமான நொதிகளை ஊக்குவிக்கிறது. அதனால் செரிமானம் மேம்படுகிறது.
அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு மிகவும் நல்ல மருந்து. எலுமிச்சை சாறு உடலின் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எலுமிச்சை ஜூஸ் பயன்கள் வரிசையில் இது இரண்டாவது இடத்தை பெறுகிறது.

எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

எலுமிச்சை சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். எலுமிச்சை பழச்சாறு சாப்பிடுவது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் எலுமிச்சை சாற்றை சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது எலுமிச்சை ஜூஸ் பயன்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பெறுகிறது.

சருமம் பளபளக்க

எலுமிச்சை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தோல் நிறமிக்கு உதவிபுரிந்து சருமத்தை புதுப்பிக்கச் செய்கிறது.
அமெரிக்கன் சொசைட்டி ஃபார் கிளினிக்கல் நியூட்ரிஷன் ஆய்வின்படி, வைட்டமின் சி அதிகமாக உட்கொள்பவர்களுக்கு தோல் சுருக்கம் மற்றும் வறண்ட சருமம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, எலுமிச்சை சாறு உள்ளிட்ட சிட்ரஸ் உணவு பானங்கள் தோல் சுருக்கங்களை தடுப்பவையாக இருக்கின்றன. இதுவும் எலுமிச்சை ஜூஸ் பயன்கள் பட்டியலில் இடம்பெறுகிறது.

எலுமிச்சை சாறு ஏற்படுத்தும் தீமைகள்

தினமும் காலை நேரத்தில் எலுமிச்சை சாறு குடிப்பது ஆரோக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஆனால் நீண்ட நாள்கள் தொடர்ந்து சாப்பிடுவோரின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இதனால் சிறிதுகால இடைவெளிக்கு பிறகே எலுமிச்சை சாறு அருந்துவதை நல்லது.
ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 125 மில்லி கிராம் எலுமிச்சை சாறை தண்ணீர் கலந்து சாப்பிடலாம். அதில் மனித உடலுக்கு போதுமான சிட்ரிக் அமிலம் இருக்கிறது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடலுக்கு அளிப்பதோடு, புத்துணர்வோடு செயல்படவும் உதவுகிறது.

உடல் சோர்வு

ஆய்வுகளின்படி, எலுமிச்சை நீரில் அஸ்கார்பிக் அமிலம் அல்லது வைட்டமின் சி அதிகம் இருப்பதால், டையூரிடிக் தன்மை கொண்டதாக இருக்கிறது. இது சிறுநீரகத்தில் அதிக சிறுநீர் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
இதனால் அதிக அளவில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறுகின்றன. இது நீரிழப்பு, சோர்வு, உலர்ந்த உதடுகள் மற்றும் அதிகப்படியான தாகத்திற்கு வழிவகுக்கும்.
சில நேரங்களில் எலுமிச்சையின் அமிலத் தன்மை சிறுநீர்ப் பையை எரிச்சலடையச் செய்து சிறுநீர் கழிக்க தூண்டுவதும் உண்டு.

ஒற்றை தலி வரும் அபாயம்

தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளில் ஒன்று சிலருக்கு ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி வருவதுண்டு.
ஒரு ஆய்வின்படி, எலுமிச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் டைரமைன் உள்ளது. இது சிலருக்கு ஒற்றைத் தலைவலி, தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தும். அடிக்கடி தலைவலி பாதிப்பை சந்திப்பவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்ப்பது நல்லது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்

ஜலதோஷம் உடையவர்கள் எலுமிச்சை சாறு சாப்பிடலாமா?

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய்களை எதிர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது. இது ஜலதோஷத்தால் ஏற்படும் சளியை எதிர்த்து போராடும். நோயெதிப்பு மண்டலத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதனால் இதை அருந்தலாம்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து குடித்தால் உடல் எடை குறையுமா?

இது ஒரு ஆதாரமற்ற தகவல். எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடித்தால் உடல் எடை குறைவதற்கான எந்தவித தெளிவான ஆராய்ச்சி முடிவுகளும் இதுவரை கிடைக்கவில்லை.
எலுமிச்சை சாறு கலந்த நீர் அருந்துவதால் சிறுநீர் அதிகம் உடலில் இருந்து வெளியேறும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். அதன் காரணமாக சிறிதளவு எடை குறைவு ஏற்படும். ஆனால் மீண்டும் உடல் நீர்ச்சத்தை பெற்றதும் மீண்டும் முந்தைய எடையை உடல் அடைந்துவிடும்.

எலுமிச்சை சாறு சிறுநீரக கற்களை உடைப்பது உண்மையா?

ஆய்வுகளின்படி, தினமும் அரை கப் எலுமிச்சை சாறு அல்லது 2 எலுமிச்சை பழங்களில் சாற்றை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கல் ஆபத்து குறைவது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை உடைத்து கரைய வைக்கக் கூடியது. இது எலுமிச்சை ஜூஸ் பயன்கள் வரிசையில் முக்கியமானது.

எலுமிச்சை புற்றுநோய் வருவதைத் தடுக்குமா?

எலுமிச்சையில் உள்ள நரிங்கெளின் (naringenin), லிமோனென் (limonene) ஆகிய தாவரச் சத்துக்கள் புற்றுநோயை தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்திருக்கிறது.
குறிப்பாக தொண்டை, மார்பகம், நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களின் வீரியத்தை எலுமிச்சை சாறு தடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எலுமிச்சையில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கிறது. புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
பொதுவாக சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக சில ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில் நம் உடலுக்கு எலுமிச்சை ஜூஸ் பயன்கள் கிடைக்கின்றன.

எலுமிச்சை சாறு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?

எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம், இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது. இதவும் எலுமிச்சை ஜூஸ் பயன்கள் பட்டியலில் இடம்பெறுகிறது.

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால் என்ன நன்மை?

நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறை குடிப்பது நல்லது. அத்துடன் கல்லீரல் பிரச்னைக்கும் நல்ல தீர்வை தருகிறது. வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பது உங்கள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. எளிதில் மலம் கழிக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து சாப்பிடலாமா?

எலுமிச்சை சாறில் சிறிதளவுஉப்பு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை கலந்து எலுமிச்சை சாறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீண்ட நாள்கள் தொடர்ந்து எலுமிச்சை சாறு சாப்பிடுவதால் என்ன பாதிப்பு வரும்?.

நீண்ட நாள்களுக்கு எலுமிச்சை சாறு சாப்பிடுவது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு தொடர்ந்து சாப்பிடுவதே நல்லது.
தொடர்ந்து நீண்ட நாள் எலுமிச்சை சாறு சாப்பிடுவோருக்கு நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்துவதுண்டு.
சில நேரங்களில் வயிற்றில் புண்களை கூட ஏற்படுத்துவது உண்டு.. அதிக அளவு எலுமிச்சை சாற்றின் அமிலத் தன்மையால் வயிறு, குடலின் உட்புற பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் போதுமான அளவு சாற்றுடன் தண்ணீர் கலந்து சாப்பிடவதே நல்லது.

அல்சர் பாதிப்பை சந்தித்தவர்கள் எலுமிச்சை சாறு சாப்பிடலாமா?

வயிறு மற்றும் குடல் புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எலுமிச்சை சாறு சாப்பிடலாம்?

கால் லிட்டர் நீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிடுவது பாதுகாப்பானது. அதிகபட்சம் ஒரு நாளைக்கு நீர் கலந்த 2 எலுமிச்சை பழச்சாறு சாப்பிடலாம்.

நச்சுக்கள் நீங்க எப்படி எலுமிச்சை சாறு சாப்பிடுவது?

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், புதினா இலை அல்லது இஞ்சி சேர்த்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குகிறது என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை சாறு சாப்பிடலாமா?

பதப்படுத்தப்பட்ட எந்த உணவு பொருளையும் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் புதிதாக தயாரிக்கப்பட்ட பானங்கள் மட்டுமே ஆரோக்கியத்துக்கு நல்லது.

எந்தெந்த ஆங்கில மருந்துகள் சாப்பிடுவோர் எலுமிச்சை சாறை தவிர்ப்பது நல்லது?

எலுமிச்சை சாறு நேரடியாக எந்த மருந்துகளுடனும் வினை புரிவதில்லை. ஆனாலும், ஒரு ஆய்வின்படி, சிட்ரஸ் பழச்சாறு ஒருசில மருந்துகளின் வீரியத்தை குறைப்பது அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரியவந்திருக்கிறது.
ட்ரையாசோலம் ( ஹால்சியன் ), லோவாஸ்டாடின் ( மெவகோர் ), இட்ராகோனசோல் ( ஸ்போரனாக்ஸ் ), கெட்டோகோனசோல் ( நிஜோரல் ), ஃபெக்ஸோஃபெனாடின் ( அலெக்ரா ) போன்ற சில மருந்துகளின் வீரியத்தை எலுமிச்சை சாறு பாதிக்கலாம் அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
இத்தகைய மருந்துகளை சாப்பிடுவோர் எலுமிச்சை சாற்றை தவிர்ப்பது நல்லது.

இரவில் எலுமிச்சை சாறு சாப்பிடலாமா?

இரவு உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து கழித்து, உறங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்த எலுமிச்சை சாற்றை பருகுவதால், தசைகளில் தளர்வு ஏற்பட்டு பதற்றம் குறைந்து நல்ல உறக்கத்தை ஏற்படுத்த உதவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இன்சோமேனியா என அழைக்கப்படும் ஒருவகை தூக்கமின்மை வியாதியால் அவதிப்படுவோருக்கு இரவில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது நல்ல பலனைத் தரும். இரவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

தமிழ்நாட்டில் தினசரி எலுமிச்சை சந்தை எங்கே நடைபெறுகிறது?

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில், புளியங்குடியில் நாள்தோறும் எலுமிச்சை சந்தை நடைபெறுகிறது. இதற்கு காரணம் சுற்றுவட்டாரப் பகுதியில் எலுமிச்சை விளைச்சல் அமோகமாக இருப்பதோடு, அதிக நீர்ச்சத்து உடைய எலுமிச்சை பழங்கள் இப்பகுதிகளில் விளைவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இவற்றை மொத்த வாங்கிச் செல்கிறார்கள்.


நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

விடியோ வடிவில் – நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் பற்றிய தகவல்கள்











85 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mithiran News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading