Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி

கோகுலாஷ்டமி
75 / 100

கிருஷ்ணாவதாரத்தை விஷ்ணு பகவானின் 8-ஆவது அவதாரமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தென்னிந்தியாவில் இதை கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கிறார்கள். வடமாநிலங்களில் இதை கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்.

நினைத்த காரியம் கைக்கூடும்

இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து கிருஷ்ண பகவானை வழிபட்டால், வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் நினைத்த காரியங்கள் கைக்கூடும்.
இந்த நாளில் பசுவுக்கு உணவளித்தால் நம் குடும்பம் அனைத்து நன்மைகளையும் பெற்று பெருவாழ்வு வாழும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பசுவுக்கு வெல்லம் தருவதால் பித்ரு தோஷம் விடுபடும் என்பதும் ஐதீகம். முன்னோர்களின் ஆசியும் பசுவின் வழியாக நமக்கு கிடைக்கும்.
நாம் இதுவரை சந்தித்து வந்த கஷ்டங்கள் நீங்கி சுபவாழ்வு வாழ்வோம். மகிழ்ச்சியும், அமைதியும் வீட்டில் தாண்டவமாடும் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

உலகின் பொக்கிஷ பூமி எது தெரியுமா?

75 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *