White Dosa: தக்காளி சட்னி காம்பினேஷன்

white dosa
72 / 100

வொயிட் தோசையை (White dosa) வாரத்தில் ஒரு நாள் காலை உணவாக பயன்படுத்தலாம். அதற்கு சரியான காம்பினேஷனாக தக்காளி சட்னியை பயன்படுத்தலாம்.

இதுகுறித்த தயாரிப்பு பொருள்கள் மற்றும் செய்முறை விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி – ஒரு கப், தேங்காய்த் துருவல், அரை கப்  சர்க்கரை, ஒரு டீஸ்பூன்  நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

அரிசியை குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஊறவைத்துத் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகு சர்க்கரை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரவா தோசை பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

whiite dosa and chutney

அடுப்பு தீயை மிதமாக வைக்க வேண்டும். தோசைக் கல் காய்ந்ததும், மெல்லிய தோசையாக ஊற்றவும். சிறிதளவு நெய்விட்டு மூடி வேக வைத்து எடுக்கவும். தோசை இரண்டு நிமிடங்களில் வெந்துவிடும். தேவையெனில் தோசையை திருப்பி போட்டு வேக வைக்கலாம்.

இந்த தோசைக்கு சரியான காம்பினேஷன் தக்காளி சட்னி.

72 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *