இந்தியாவில் டிராம்கள்: ஒரு வரலாற்று படைப்பு

trams
73 / 100

சென்னை: இந்தியாவில் டிராம்கள் வரலாறு மிகவும் பழைமையானது. நாட்டில் டிராம் வாகனங்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா.

இந்த டிராம் வாகனங்கள் இயக்கம் ஆசியாவிலேயே பழமையானதாகும்.
1873-ஆம் ஆண்டில் முதன்முதலில் கொல்கத்தாவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.

டிராம் வண்டிகள் சரக்குகளை துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

சென்னையில் 1877-இல் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது இந்த டிராம் வண்டிகளை குதிரைகள் இழுத்துச் சென்றன.

'டிராம் வண்டி

1892-ஆம் ஆண்டில் மெட்ராஸ் டிராம்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன.

1895-ஆம் ஆண்டில் முதன்முறையாக சென்னை நகர வீதிகளில் மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த நேரத்தில் லண்டன் போன்ற பெருநகரங்களில் கூட இத்தகைய டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்படவில்லை.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்ன?

விடியோவை காணுங்கள்

இந்த டிராம்கள் சாலைகளில் பதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சென்றாலும், நமக்கு அவற்றால் டிராபிக் ஏற்படுவதில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக இன்றைக்கு அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன.

73 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *