பொன்மகன் சேமிப்புத் திட்டம் உதவும்

பொன்மகன் சேமிப்புத் திட்டம்
75 / 100

ஆண் குழந்தை இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்

சென்னை: பொன்மகன் சேமிப்புத் திட்டம் (ponmagan semippu thittam). இது ஆண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டம். குறிப்பாக படிப்புக்காக உதவும் திட்டம்.

பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியபோது ஆண் குழந்தைகளுக்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கத் தொடங்கியவர்கள் எண்ணிக்கை ஏராளம்.

இந்த சூழலில்தான் தமிழக அரசு 2015-ஆம் ஆண்டு பொன்மகன் சேமிப்புத் திட்டத்தை தொடங்கியது. இது ஆண் குழந்தைகளுக்கான பிரத்யேகத் திட்டமாக இருக்கிறது..

பொன்மகன் சேமிப்புத் திட்டம்

இத்திட்டத்தில் சேருவதற்கு பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிப்பு தொகை செலுத்த முடியும்.

ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு இத்திட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஒருவர் குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.500 செலுத்தத் தொடங்கினால் 15 ஆண்டுகளில் அவர் செலுத்திய தொகை ரூ.90 ஆயிரமாக இருக்கும்.

இதன் முதிர்வு தொகை 1.83 லட்சம் கிடைக்கும்.

பொன்மகன் சேமிப்புத் திட்டம்

10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்குத் தொடங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவர்கள் பெயரிலேயே கணக்குத் தொடங்க முடியும்.

இத்திட்டத்தில் சேமிக்க வயது வரம்பு கிடையாது. இத்திட்டத்தில் சேர சில ஆவணங்கள் தேவை.

சிறுவனின் பிறப்புச் சான்றிதழ், புகைப்படம், பெற்றோரின் ஆதார் எண், பான் கார்டு, சரியான முகவரி ஆகியவை தேவைப்படுகிறது.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஏன்

படித்தீர்களா?

திட்ட சேமிப்பு காலம்

திட்டத்தின் சேமிப்பு காலம் 15 ஆண்டுகள். 7-ஆவது ஆண்டில் 50 சதவீதத் தொகையை பெறுவதற்கு வசதி இருக்கிறது.

15 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்கிறது.

வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு உண்டு. வட்டிக்கும் வரி விலக்கு உண்டு.

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள

காணொலியை காணுங்கள்

பொன்மகன் சேமிப்புத் திட்டம், இதர சேமிப்புத் திட்டங்கள் குறித்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலக கிளையை நாடினால் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விடை அளிப்பார்கள்.

75 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *