நாம் இப்போது முள்ளங்கி பன்னீர் பொரியல் செய்வதற்கான பொருள்கள் அதன் செய்முறை விளக்கத்தை அறியலாம்..
தேவையான பொருள்கள்
முள்ளங்கித் துருவல் – ஒரு கப்
துருவிய பன்னீர் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, முள்ளங்கித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் கழித்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும்.
முள்ளங்கி வெந்ததும், பன்னீர் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சமையல் டிப்ஸ் படித்தீர்களா?