Hockey india: ஒரு வெற்றியின் வரலாறு

இந்திய ஹாக்கி அணி
68 / 100

உலக விளையாட்டு அரங்கில் இந்திய ஹாக்கி (hockey india) அணிக்கு ஒரு தனி இடம் உண்டு.

1980-ஆம் ஆண்டுக்கு பிறகு உலக அளவில் ஹாக்கி அணி பின்தங்கியிருந்தாலும், அது சுமார் 50 ஆண்டுகள் ஹாக்கி வரலாற்றில் தொடர்ந்து கோலோச்சி இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு.1928-இல் முதன்முதன்லில் இந்திய ஹாக்கி அணியை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

மறக்க முடியாத தயான்சந்த்

இந்த அணிக்கான வீரர்களை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்தது. கடைசியில் இந்திய ராணுவத்தில் இருந்து வீரர்கள் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இப்படித்தான் இந்தியாவின் முதல் ஹாக்கி அணி உருவெடுத்தது. அந்த அணியில்
23 இளைஞர் தயான்சந்த் இந்த அணியில் இடம் பெற்றார்.

இப்படி உருவான இந்திய அணி வீரர்கள் காலில் ஷூ கூட அணியாமல் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்த்த மேலை நாட்டு அணிகள் கேலியும், கிண்டலும் கூட செய்தன.

அதையெல்லாம் இந்த அணி பொருட்படுத்தவில்லை. ஹாக்கி போட்டியில் எப்படி ஒலிம்பிக் போட்டிக்கு தயார் ஆவது என்பது பற்றித்தான் இந்த அணியின் 24 மணி நேரமுமான சிந்தனையாக இருந்தது.

இந்த அணியின் ஆர்வத்தை அடுத்து இங்கிலாந்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டார்கள்.

இந்திய ஹாக்கி

ஒலிம்பிக்கில் தங்கம்

என்ன ஆச்சர்யமான விஷயம். இங்கிலாந்தின் உள்ளூரை சேர்ந்த அத்தனை அணிகளையும் இந்த வீரர்கள் தோற்கடித்தார்கள். இதைக் கண்டு இங்கிலாந்தே வியந்து போனது.

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் வென்று வந்த இங்கிலாந்து அணி 1928 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தவிர்த்தது.

முதன் முறையாக ஒலிம்பிக் போட்டியில் கால் பதித்த இந்திய அணி, அன்றைய உலகின் ஜாம்பாவான்களை மண்ணை கவ்வ வைத்தது.

இறுதியாக தங்கப் பதக்கத்தை தட்டிக் கொண்டு இந்தியா வந்தடைந்தது. இப்படி ஆற்றல் மிக்க அணியாக உருவெடுத்த இந்திய அணியின் ஆதிக்கம் 1980 வரை நீடித்தது.

68 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *