Amoeba infection: கேரளாவில் பரபரப்பு

மனிதர்களை தாக்கும் ஆபத்தான அமீபா
71 / 100

குளோரினேஷன் இல்லாத நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்

சென்னை: தேங்கிய நீர்நிலைகளில் குளிப்பவர்களுக்கு மிக அரிதான மூளையைத் தின்னும் அமீபா தாக்குதல் (Amoeba infection) ஏற்பட்டு சமீபத்தில் கேரளாவில் இதுவரை 3 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
இதையடுத்து தமிழ்நாடு அரசு சில வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தெரிவித்திருக்கிறது.

கேரளாவில் அமீபா ஏற்படுத்திய பாதிப்பு

கேரள மாநிலத்தில், ஏற்கெனவே பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சுகாதார பராமரிப்பில் அதிக கவனத்தை கேரள அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், நீர்நிலைகளில் குளிப்போரின் உடலுக்குள் புகும் அமீபா, மூளைக்குள் சென்று திசுக்களை உணவாகக் கொண்டு மூளையை வீங்கச் செய்வதால் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
கோழிக்கோட்டைச் சேர்ந்த சிறுவன், கண்ணூரைச் சேர்ந்த ஒருவர், மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் தற்போது வரை இந்த அமீபாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இவர்கள் மூவருமே நீர்நிலைகளில் குளித்த பிறகு தலைவலி, வாந்தி மயக்கம், அதிக காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

Ameoba Infection

மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த அரிய வகை அமீபாவின் பெயர் “பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்” (amoebic meningoencephalitis) என அழைக்கப்படுகிறது.

இதை சுருக்கமாக PAM என்றும் மருத்துவத் துறையில் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
நாகிலேரியா ஃபோலேரி என்ற ஒரு செல் உயிரினமாக இந்த அமீபாக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.

குட்டைகளில் காணப்படும் ஆபத்தான அமீபா
dangerous amoeba in bonds

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

முதன்முதலில் மனித மூளையை தின்னும் இத்தகைய அமீபா இருப்பது 1965-ஆம் ஆண்டில் உடல்நிலை பாதிப்பு அடைந்த ஒருவரை சோதித்தபோது தெரியவந்தது.
இந்தியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஒருவர் இத்தகைய அமீபாவால் பாதிக்கப்பட்டது பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் கடந்த ஜனவரி மாதம் கூட இத்தகைய பாதிப்பை சந்தித்த 40 வயதுடைய ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்படி நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆமீபா தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.


மனிதனை எப்படி தாக்குகிறது


இந்த வகை ஆபத்தான அமீபா வெப்பமான நன்னீர் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் வசிக்கக் கூடியவை. இவை மனிதர்கள் குளிக்கும்போது அவர்களின் மூக்கு வழியாக மூளைக்கு எளிதில் சென்றுவிடுகிறது.
அதைத் தொடர்ந்து அவை மூளை திசுக்களை மெல்லத் தின்று அழிக்கத் தொடங்கிறது. மூளையை சென்றடைந்ததும் இந்த அமீபா திசுக்கள் மட்டுமின்றி மைய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. இதனால்தான் இதை மூளையை தின்னும் அமீபா அதாவது brain earting amoena என்று அழைக்கப்படுகிறது.

அமீபா பாதிப்பு அறிகுறிகள்


பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் அமீபா மூக்கு வழியாக மூளையைச் சென்றடைந்த பிறகு இரண்டு நாள்கள் முதல் 15 நாள்கள் வரையிலான இடைவெளியில் பாதிப்பு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
திடீரென தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரம்மை, வலிப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இந்த பாதிப்பை கடந்த காலங்களில் அடைந்தவர்களுக்கு ஏற்பட்டிருப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இத்தகைய தீவிரத் தன்மையை அடைந்தவர்களின் உயிரை காப்பாற்றுவது தற்போது மருத்துவத் துறையில் சவாலாகவும் உள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன


பொதுமக்கள், தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் ஆறு, குளங்கள், தேங்கிய குட்டைகளில் குளிப்பதைத் தடுக்க வேண்டும்.
நகர்புறங்களில் நீச்சல் குளங்களில் பயிற்சி அல்லது குளிக்கச் செல்வோர், அந்த நீச்சல் குளங்களில் கிருமிகளை அழிக்கும் வகையில் போதிய அளவில் குளோரினேஷன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொது இடங்களில் நீர் அருந்தும்போதும், சுத்திகரிக்கப்பட்ட நீரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

வீட்டில் நாம் குளிப்பதற்கும், பிற உபயோகங்களும் பயன்படுத்தக் கூடிய நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் வாட்டர் டேங்க் போன்றவற்றில் அடிக்கடி குளோரினேஷன் நடவடிக்கைகளை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும்.

71 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *