திருக்குறள் கதைகள் 27: தீயோர் நட்பு

திருக்குறள் கதைகள் 27
83 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் தீயோர் நட்பை தவிர்ப்பது தொடர்பான திருக்குறள் விளக்கமும், கதையும் இந்த திருக்குறள் கதைகள் 27-இல் இடம்பெறுகிறது.

தேர்வு கூடம்

ஆனந்தனுக்கு அன்று தேர்வு. அவன் தன்னுடைய நண்பன் வருணோடு தேர்வறைக்குள் நுழைந்தான். அப்போது ஆசிரியர் வினாத் தாளுடன் தேர்வு அறைக்குள் வந்தார்.

எல்லோருக்கும் விடை எழுதுவதற்கான தாள்களை விநியோகித்தார். தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 5 நிமிடம் இருந்தது.

அப்போது அவர், மாணவர்களே, இப்போது வினாத்தாளை உங்களுக்கு விநியோகிக்கப் போகிறேன்.

வினாக்களுக்கான விடைகளை கவனமாக எழுதுங்கள். அதே நேரத்தில் விடை தெரியாத நிலையில், மற்றவர்களை பார்த்து எழுதுவதற்கு முயற்சிக்கக் கூடாது.

நீங்கள் யாரேனும் சிறு குறிப்புகளை உங்கள் ஆடைகளில் மறைத்து எடுத்து வந்திருந்தாள். அதை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

தேர்வு நேரம் தொடங்கியது. எல்லா மாணவர்களும் வினாத் தாளை படித்து விடை எழுதத் தொடங்கினார்கள்.

காப்பியடித்த நண்பன்

மாணவர்களை சிறிதுநேரம் கண்காணித்துக் கொண்டிருந்த அவருக்கு தேர்வறை வாசலில் தேநீர் கொடுக்க பள்ளி ஊழியர் காத்திருந்தார். அவர் அதை வாங்கச் சென்றார்.

ஆனந்தனும், அவனது நண்பன் வருணும் அருகருகே இருந்த மேஜைகளின் முன்பு அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் தேநீர் குடிக்கச் சென்றதைக் கண்ட வருண், ஆனந்தனிடம் அவன் எழுதிய விடைத்தாளை கேட்டான்.

ஆனந்தன் நண்பனின் தொடர் வற்புறுத்தலால் வேறு வழியின்றி தான் எழுதிய விடைத் தாளை தந்தான்.

அதை வாங்கிய அருண், ஆனந்தனின் விடைத் தாளை அப்படியே காப்பியடித்தான். தேர்வறையை மீண்டும் கண்காணிக்கத் தொடங்கிய ஆசிரியர் ஆனந்தன் முகத்தில் ஒரு பதட்டத்தை பார்த்தார்.

தலைகுனிவை சந்தித்த ஆனந்தன்

அருகில் இருந்த மேஜையில் வருண் எதையோ பார்த்து காப்பியடிப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ஆசிரியர் மற்றொரு விடைத்தாளை பார்த்து எழுவதைக் கண்டு அதை அவனிடம் இருந்து பறித்தார்.

அந்த கையெழுத்து ஆனந்தனுடையது என்பதை அறிந்த ஆசிரியர், இருவரின் விடைத் தாள்களையும் பெற்றுக் கொண்டு தேர்வு அறையை விட்டு வெளியேறச் சொன்னார்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்த ஆனந்தன் செய்வதறியாது கண்ணீர் விட்டான். தன்னால் வருண் பாதிக்கப்பட்டதை உணராமல், தான் மாட்டிக் கொண்டதை மட்டுமே சொல்லி புலம்பினான்.

வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்த தர்மர், ஆனந்தன் மிக சோகமாக வீட்டை நோக்கி வருவதைக் கண்டார்.

அவனை அருகே அழைத்து தேர்வு சரியாக எழுதவில்லையா என்று கேட்டார். அவன் அழுதபடியே நடந்ததைச் சொன்னான்.

ஆனந்தா, உன் நண்பனாக இருப்பவன் வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சை கேட்காதவன். படிப்பில் கவனம் செலுத்தாதவன். அவனோடு நட்பு வைத்தது உன் தவறு. இப்போது வருத்தப்பட்டு என்ன பயன் என்று கூறினார்.

திருக்குறள் கதைகள் 27

திருக்குறள் விளக்கம்

திருவள்ளுவர் ஒரு திருக்குறளில் தீய நட்பு குறித்து கூறியிருக்கிறார். அதைக் கேள்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

(குறள் – 792)

அதாவது நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். இறுதியில் சாதலுக்கும் அதுவே காரணமாகி விடும்.

இதனால் இனிமேலாவது நண்பராக ஒருவரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்த பிறகே நட்பு கொள்ள வேண்டும். புரிகிறதா…

நல்ல வேளையாக இது அரையாண்டு தேர்வு. இதனால் உன்னுடைய எதிர்காலம் பாதிக்காது.

நான் உன் ஆசிரியரை சந்தித்து நடந்தவற்றை கூறி, ஆனந்தன் இனி தவறு செய்ய மாட்டான் எனறு கோரிக்கை விடுத்து வரும் தேர்வுகளை எழுத வைக்கிறேன் கவலைப் படாதே.

அடுத்த தேர்வில் கவனம் செலுத்தி படி என்றார் தாத்தா.

திருக்குறள் கதைகள் 27 சொல்வது என்ன?

திருக்குறள் கதைகள் 27-இல் தீயவர் நட்பு நமக்கு எப்போதும் தீமையைத்தான் தரும். நல்லவர் நட்பு மட்டுமே நமக்கு நன்மை தரும். நாம் பழகும் ஒருவர் தீய பண்புடையவர் எனத் தெரியவந்தால் அவரிடம் இருந்து விலகுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறது.

திருக்குறள் கதைகள் 27 உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு மறக்கமாமல் ஷேர் செய்யுங்கள்.

பொறுத்தலின் எல்லை எது? திருக்குறள் கதைகள் 26

தொலைத் தொடர்பில் நாசா புதிய கண்டுபிடிப்பு

83 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *