🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

விஜய் டப்பிங் பிளான் – பாஜக செக்-மேட்! | Sharp political satire

Read in English / பிற மொழிகளில் படிக்க:

(காலை நேரம். நாயர் கடையில் சுடச்சுட டீ ஆத்தப்படும் சத்தம். பெஞ்சில் கால்மேல் கால் போட்டு பேப்பரை படித்துக் கொண்டிருக்கிறார் கதர்வேட்டி கந்தசாமி. அவர் கண்ணில் முதலில் பட்டது விஜய் டப்பிங் பிளான் தலைப்பு. அப்போது வேகமாக சைக்கிளை பிரேக் அடித்து நிறுத்திவிட்டு, பதட்டமும் ஆர்வமுமாக வந்து அமருகிறார் வாய்ப்பந்தல் வைத்தி.)

(இது நடப்பு அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் நாயர் கடை நையாண்டி பகுதி)

-:பந்து மித்திரன்:-

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

வாய்ப்பந்தல் வைத்தி: “நாயரே… சீக்கிரமா ஒரு ஸ்ட்ராங் டீ போடுங்க! தொண்டை வறண்டு போச்சு. அண்ணே கந்தசாமி அண்ணே! ஊருக்குள்ள என்ன நடக்குதுன்னு பாத்தீங்களா? நேத்து வரைக்கும் ஆளுங்கட்சியை விளாசி தள்ளிட்டு இருந்த நம்ம தளபதி விஜய், இப்போ தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்காரு. ஆனா, அதுல ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்குண்ணே!”

கதர்வேட்டி கந்தசாமி (கண்ணாடியை கழற்றிவிட்டு சிரித்தபடியே): “என்னப்பா வைத்தி, காலங்காத்தாலயே கச்சேரியை ஆரம்பிச்சிட்ட? விஜய்யோட வாக்குறுதிகள் பத்திதானே சொல்ற? நான் இப்பதான் படிக்கிறேன்… சொல்லு சொல்லு, உன் வாயாலயே கேட்போம்.”

வைத்தி: “அண்ணே, நம்ம தளபதி சினிமால ரீமேக் பண்ணி ஹிட் குடுக்குறதுல கில்லாடினு ஊருக்கே தெரியும். ஆனா, அரசியல்லயும் அதே ரீமேக் ஃபார்முலாவை கையில எடுத்திருக்காரே! ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த திட்டங்களை அப்படியே ‘டப்பிங்’ பண்ணி நம்ம ஊருக்கு வாக்குறுதியா கொடுத்திருக்காருன்னு சோஷியல் மீடியாவுல கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்களே! என்னண்ணே இது நியாயம்? ஒரு ஒரிஜினல் கதை இருந்தாதானே நல்லாயிருக்கும்.”

கந்தசாமி : “தம்பி வைத்தி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. ஒரு மாநிலத்துல சக்சஸ் ஆன திட்டத்தை இன்னொரு மாநிலத்துல கொண்டு வர்றது தப்பில்லை. ஆனா, சினிமா கதையை காப்பி அடிக்கிற மாதிரி, எந்த மாடிஃபிகேஷனும் இல்லாம அப்படியே இறக்குனா இப்படித்தான் பேச்சு வரும். ஆளுங்கட்சியை அவர் விமர்சிச்சதை மக்கள் விசில் அடிச்சு வரவேற்றாங்க, ஆனா இந்த டப்பிங் திட்டங்கள் தேர்தல்ல வொர்க்-அவுட் ஆகுமாங்குறதை கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கணும். திட்டங்களை அறிவிக்கலாம், ஆனா அதை செயல்படுத்துறதுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும்னு விளக்கினா இன்னும் தெளிவா இருக்கும்.”

வைத்தி (கண்களை விரித்து): “நீங்க சொல்றது கரெக்ட்டுண்ணே. ஆனா, அதைவிட பெரிய ஹைலைட் என்ன தெரியுமா? அவரோட விவாகரத்து வதந்தி பத்தி மறைமுகமா கேள்வி கேட்டப்போ, மனுஷன் அசரவே இல்ல! ‘அதெல்லாம் ஒர்த்தே இல்லாத மேட்டர், நான் பாத்துக்குறேன்’னு கூலா ஒரே போடா போட்டுட்டாரே. இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை இப்போத்தான் நான் பாக்குகிறேன். அவர் குடியும் குடித்தனமா நல்லாயிருக்கனும்னு சாமியை வேண்டிக்கிறேன்!”

இதைப் படித்தீர்களா? விஜய் அரசியல்: ஆளுங்கட்சி பகீர் | Sharp Political Satire

கந்தசாமி: “அங்கதான் அவர் ஸ்கோர் பண்ணிட்டார். அரசியல்னு வந்துட்டா தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டி துருவுறது நம்ம ஊருல வாடிக்கை. அதுக்குள்ள அவர் சிக்கி சின்னாபின்னமாகாம, இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்க முடியாதுன்னு கடந்து போனது ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதிக்கான அழகு. இதை வளரவிடாம கிள்ளியெறிஞ்சது புத்திசாலித்தனம் நான் இந்த விஷயத்துல பாராட்டுறேன். ஆனாலும் அவருடைய ரசிகைகள் எப்படி எடுத்துப்பாங்கன்னு இப்போ எதுவும் சொல்ல முடியாது.”

வைத்தி (டீயை உறிஞ்சியபடி): “சரிண்ணே, தளபதியை விடுங்க. டெல்லியில இருந்து ஒரு பெரிய டீம் வந்து, விஜய்யை அப்படியே தூக்கி அதிமுக தலைமையிலான கூட்டணியில வைக்கப் பாக்குதாமே? இது என்னண்ணே ஒரு தினுசான கணக்கா இருக்கே?”

கந்தசாமி (ஆர்வமான பார்வையுடன்): “வைத்தி, இது சும்மா சாதாரண கணக்கு இல்ல… இது பாஜகவோட மாஸ்டர் பிளான்! ஆளுங்கட்சியான திமுக இப்போ ரொம்ப ஸ்டிராங்கா ஒரு கூட்டணியை அமைச்சு வெச்சிருக்கு. போதாக்குறைக்கு முதல்வர் ஸ்டாலின் தீத்துட்டோம்ல என்று ரஜினி ஸ்டைலில் ஒரு மேனரிசத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரு… திமுகவின் இந்த மெகா கூட்டணியை பூச்சாண்டி மாதிரி காட்டி, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி பணிய வைக்கிறதுதான் டெல்லியோட முதல் ப்ளான். அது ஒர்க்அவுட் ஆனாக் கூட ஆச்சரியப்படுறத்துக்கு இல்ல. ஏற்கெனவே விஜய் பாஜக “பி” டீம்னு பேசிக்கிட்டுதான் இருக்காங்க… அதனால் விஜய்க்கு ஒண்ணும் பெரிய பாதிப்பு இல்ல.”

வைத்தி (ஆச்சரியமாக): “அப்போ எடப்பாடியாரை அவங்க இரும்புப் பிடியில வெச்சுக்கப் பாக்குறாங்களா?”

கந்தசாமி: “பின்ன என்ன? எடப்பாடியாரை இக்கட்டான நிலைக்கு தள்ளி, சீட் ஒதுக்கீட்டுல அதிமுகவை ஒரு ‘டம்மி பீஸ்’ ஆக்கப் பாக்குறாங்க. உதாரணமா சொல்லணும்னா, வரப்போற தேர்தல்ல அதிமுகவை வெறும் 130 சீட்ல மட்டும் நிக்க வெச்சு, மீதி சீட்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரிச்சு கொடுக்க வைக்கிறதுதான் திட்டம். இப்படி செஞ்சா, அதிமுக தனிப்பெரும்பான்மை வாங்குறது ரொம்ப கஷ்டம். ஒருவேளை கூட்டணி ஜெயிச்சாலும், அதிமுகவால தனித்து ஆட்சியமைக்க முடியாது.”

வைத்தி: “அடப்பாவமே! அப்போ கூட்டணி ஆட்சின்னு வந்து நிக்குமா?”

கந்தசாமி: “அதுதானே அவங்களோட இலக்கே! ஒன்றிய அரசு ஏற்கனவே முடிவு பண்ணிடுச்சு… அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கண்டிப்பா ‘கூட்டணி அரசா’தான் இருக்கணும்னு. அமைச்சரவையில நமக்கும் பங்கு வேணும்னு பாஜக கணக்கு போடுது. அதுக்குதான் விஜய்யை உள்ளே கொண்டு வந்து, சீட்டுகளை பிரிச்சு, எடப்பாடியாரை ஒரு செக்-மேட் சூழ்நிலையில வைக்கப் பாக்குறாங்க. இது அக்மார்க் டெல்லி அரசியல் தம்பி!”

வைத்தி (சத்தமாக சிரித்தபடி): “அப்போ விஜய்க்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும்னு சொல்லுங்க… அரசியல்னா சும்மாவா… எவ்ளோ பெரிய வலை பின்னுறாங்க! ஆனா அண்ணே, இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்குற சொத்து கணக்கைப் பாத்தா, எனக்கு தலையே சுத்துது. நேத்து பேப்பர்ல அந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களோட சொத்து மதிப்பை போட்டிருந்தாங்க. பாத்தீங்களா?”

கந்தசாமி: “பாத்தேன் பாத்தேன்… ஒருசில மக்கள் பிரதிநிதிகள் எப்படி கோடீஸ்வரர்களா இருக்காங்கங்குறதை பாத்து மக்கள் வாயைப் பிளக்குறாங்க.”

வைத்தி: “அதுல நம்ம அன்புமணி ஐயா மேட்டருதான் செம காமெடி! அவருக்கு இருக்குற சொத்தை விட, அவர் மனைவி பெயருலதான் எக்கச்சக்க சொத்து குவிஞ்சு கிடக்குதாம். இதைப் பாத்துட்டு இணையத்துல பசங்க, ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், ஆனா இப்படிப்பட்ட மனைவி அமைவதெல்லாம் மக்கள் கொடுத்த வரம்’னு கலாய்ச்சு தள்ளுறாங்கண்ணே!”

கந்தசாமி (சிரித்துக் கொண்டே): “ஆமா வைத்தி. இதுல கொடுமை என்ன தெரியுமா? கோடிக்கணக்குல சொத்து இருக்கு, சரி. ஆனா அவைக்கு போய் மக்கள் பிரச்சனையை பேசணுமா இல்லையா? மாநிலங்களவைக்கு மிகக் குறைந்த சதவீத நாட்களே போனவர் நம்ம அன்புமணிதான். இதுக்கு எதுக்குப்பா இந்தப் பதவி? வெறும் கௌரவத்துக்கு மட்டும்தானான்னு மக்கள் கேக்குறதுல நியாயம் இருக்கே!”

வைத்தி: “ஆமாண்ணே… நாக்கைப் பிடுங்குற மாதிரில்ல கேக்குறாங்க. ‘பார்லிமென்ட் பக்கம் எட்டிப் பாக்காதவங்களுக்கு எதுக்கு எம்.பி பதவி? வீட்ல உக்காந்து சொத்தை எண்ணிட்டு இருக்க வேண்டியதுதானே’ன்னு மக்கள் நக்கல் அடிக்கிறதை கேட்கும்போதே நமக்கு ஒரு மாதிரி இருக்கு. சாதாரண மனுஷன் ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டா சம்பளம் கட் ஆகுது. அதுமாதிரி ஏதும் பார்லிமெண்டுக்கு போகலேன்னா சம்பளம் கட்டாகாதேன்னே… “

கந்தசாமி: “இதுதான் தம்பி நம்ம ஜனநாயகத்தோட இன்றைய நிலைமை. ஒரு பக்கம் சினிமா பாணியில ரீமேக் வாக்குறுதிகள், இன்னொரு பக்கம் கூட்டணிங்குற பேர்ல ஒரு கட்சியோட குரல்வளையை நெரிக்கும் அதிகார ஆட்டம், வேறொரு பக்கம் பதவியை அனுபவிச்சுக்கிட்டு பொறுப்பை தட்டிக்கழிக்கும் கோடீஸ்வர பிரதிநிதிகள். எல்லாம் சேர்ந்து மக்களைத்தான் சுத்தி சுத்தி சுத்தியலால அடிக்கிறாங்க… இதை மக்கள் விசில் அடிச்சு ரசிக்கிறாங்க….”

நாயர் (கல்லாவில் இருந்து குரல் கொடுக்கிறார்): “என்ன கந்தசாமி, உனக்கு நாடாளுமன்றத்துல பேச வேண்டிய விஷயத்தை எல்லாம் இங்க என் டீ கடையில பேசிட்டு இருக்க! அரசியல்வாதிகள் அவைக்குப் போறாங்களோ இல்லையோ, நீங்க ரெண்டு பேரும் கரெக்ட்டா காலையில என் கடைக்கு வந்துடுறீங்க… அந்த அளவுல எனக்கு சந்தோஷம்தான்! டீ ரெடி… எடுத்துங்கோங்க..”

(நாயரின் சூடான டீயுடன் அரசியல் விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நாளை தொடரும்.)

இந்த ‘நாயர் கடை அரசியல்’ தொடர் முற்றிலும் அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு கற்பனையான நையாண்டி (Political Satire) பதிவு ஆகும். இதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் கற்பனையே. நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் சமகால அரசியல் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த நையாண்டி விவாதங்கள் எழுதப்பட்டுள்ளன. விஜய் டப்பிங் பிளான் உள்ளிட்ட அரசியல் செய்திகளில் எந்தவொரு அரசியல் கட்சியையோ, தலைவர்களையோ, தனிநபர்களையோ தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் நோக்கமோ, களங்கப்படுத்தும் நோக்கமோ மித்திரன் இணையதளத்திற்கு இல்லை

2026 Election Tamil Nadu: யார் பக்கம் வெற்றி சாயும் வாய்ப்பு இப்போது இருக்கு? – விடியோ

அரசியல் வரலாறு

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *