🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

அதிரடியாக மாறும் தமிழ்நாடு அரசியல் களம்

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத தற்போதைய அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல சமன்பாடுகள் இப்போது உடையத் தொடங்கியுள்ளன.

புதிய கட்சிகளின் வருகையும், கூட்டணிகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்களும் தமிழ்நாடு அரசியல் திசையையே மாற்றியமைக்கின்றன.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளன. இதுதவிர அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மூன்றும் இணைந்தால் தமிழ்நாடு அரசியல் தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. எந்த மண்டலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளது, யாருக்கு லாபம் என்பதை தற்போதைய சூழல் விளக்குகிறது.

தமிழ்நாடு அரசியல்

உள்ளடக்கம்

தமிழ்நாடு அரசியல் – 10 ஆண்டுகளின் தேர்தல் வரலாறு

மண்டல வாரியான நிலவரத்தைப் பார்ப்பதற்கு முன், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசியலில் மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில், 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களையும், 2014, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களையும் கடந்து வந்திருக்கிறது.

2014-ல் தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதா 37 இடங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

தொடர்ந்து 2016-ல் 136 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தார். ஆனால், அதன் பிறகு தமிழ்நாடு அரசியல் களம் திமுக வசமாக மாறியது.

2019 மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக ஆட்சியைப் பிடித்தது.

தமிழ்நாடு அரசியலில் சமீபத்திய 2024 தேர்தலில் 40-க்கு 40 என்ற முழுமையான வெற்றியை திமுக கூட்டணி பதிவு செய்து மற்றொரு சாதனையை நிகழ்த்தியது.

வடக்கு மற்றும் டெல்டா மண்டல ஆதிக்கம்

வரலாற்று ரீதியாகவே வடக்கு மண்டலம் மற்றும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் திமுகவிற்குச் சாதகமான பகுதிகளாகவே இருந்து வருகின்றன.

தற்போதைய சூழலில், 2026 பிப்ரவரி 19 அன்று பிரேமலதா தலைமையிலான தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது கூடுதல் பலமாக இப்போது பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு மக்கள் மத்தியில் உள்ள அனுதாப அலை தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையலாம்.

மேலும், நகர்ப்புறங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வாக்குகளை ஒருங்கிணைத்து திமுகவுக்கு திசைத் திருப்ப உதவும். இது அதிமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

காவிரி டெல்டா பகுதியை உள்ளடக்கிய மத்திய மண்டலமும் எப்போதுமே திமுகவின் கோட்டை. அங்கு தேமுதிகவின் வரவு கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம் உட்கட்சிப் பூசலால் அதிமுக அங்குத் தொடர்ந்து பலவீனமாகவே காணப்படுகிறது.

இதைப் படித்தீர்களா? விஜய் அரசியல் கூட்டணி No.1 பிளான்! அதிர்ச்சியில் பிஜேபி?

கொங்கு கோட்டையில் புதிய சவால்கள்

தமிழ்நாடு அரசியல் களத்தில் கொங்கு மண்டலம் எப்போதுமே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகவே கருதப்பட்டு வந்தது. 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இங்கு மிக வலுவாக இருந்தது.

ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் இந்த மண்டலத்திலும் திமுக கூட்டணி கணிசமான முன்னேற்றத்தைக் கண்டது.

இதுமட்டுமின்றி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் பாஜக தனது வாக்கு வங்கியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது கொங்கு மண்டலத்தில் மிகப் பெரிய மாற்றமாக அமைகிறது.

காரணம் கோவை, திருப்பூர் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் பெற்ற 10% முதல் 15% வாக்குகள் திமுக கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும் அதிமுகவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

தென் மாவட்டங்களில் மாற்றம்

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை தேவர் மற்றும் நாடார் சமூக வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன. இங்கு எப்போதுமே திமுக, அதிமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவும்.

மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, 2026 பிப்ரவரி 27 அன்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இது அதிமுகவிற்குத் தென் மாவட்டங்களில் ஈடுசெய்ய முடியாத இழப்பாக தற்போது பார்க்கப்படுகிறது.

முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்தோர் சமூக வாக்குகள் ஓபிஎஸ் வருகையால் பெருமளவு திமுக பக்கம் திரும்பும். குறிப்பாகப் போடிநாயக்கனூர் போன்ற பகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பல மடங்கு உறுதியாகியுள்ளது என்று அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

விஜய், சீமான் தாக்கம்

திமுக கூட்டணி முன்பை விட அசுர பலத்துடன் களமிறங்குகிறது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தற்போது இரண்டாக உடைந்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி சசிகலா தொடங்கியுள்ள கட்சி அமைக்கும் புதிய கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகக் களமிறங்கினாலும், அது கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், தனித்துப் போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பாஜகவும் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெறத் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறது.

வரும் தேர்தல் யாருக்கு சாதகம்?

இப்போதைய சூழலில் களநிலவரத்தை பார்க்கும்போது குழப்பமான சூழலை நிலவுகிறது. கூட்டணி இறுதி செய்தல், வேட்பாளர்கள் மனுத் தாக்கல் முடிந்த பிரச்சாரம் தொடங்கும்போதுதான் ஓரளவுக்கு முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்று சொல்ல முடியும்.

உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.

இந்த விடியோவை பார்த்தீர்களா? Sasikala New party தேர்தல் வியூகம் யாருக்கு பாதிப்பு?


FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

2026 தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக கூட்டணி பலம் என்ன?

தேமுதிக, மநீம மற்றும் ஓபிஎஸ் வருகையால் திமுக கூட்டணி கடந்த தேர்தல்களை விட மிகவும் பலமாக உருவெடுத்துள்ளது.

ஓ. பன்னீர்செல்வம் (OPS) எந்த கட்சியில் இணைந்தார்?

2026 பிப்ரவரி 27 அன்று ஓ. பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாகத் திமுகவில் இணைந்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

விஜய் கட்சி முதல்முறையாகப் போட்டியிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பிரித்துத் தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் நிலை என்ன?

பாரம்பரியமாக அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில், இப்போது மநீம – திமுக கூட்டணியால் அதிமுக கடும் சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளது.

பாமக உடைந்ததால் யாருக்கு லாபம்?

பாமக இரண்டாக உடைந்ததில் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. இது எதிரணிகளுக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும்

தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால், முக்குலத்தோர் வாக்குகள் திமுக பக்கம் திரும்பி, தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி உயருமா?

தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சி, முந்தைய தேர்தல்களை விடத் தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ல் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

கூட்டணி கட்சிகளின் விலகல், உள்கட்சிப் பூசல் மற்றும் புதிய கட்சிகளின் வரவால் அதிமுக இந்தத் தேர்தலில் மிகக் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. கூட்டணியை பலப்படுத்தும் வகையில் வேறு சில கட்சிகள் வந்தால்தான் அதிமுக அணி வலிமையை பெறும்.

#TamilNaduPolitics #TNElection2026 #TNPoliticalUpdates #DMKAlliance #VijayTVK #MithiranNews

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *