Read in English / பிற மொழிகளில் படிக்க:
நீட் தேர்வு விலக்கு (NEET Exemption) பெறுவதற்கான ஒரு புதிய அரசியல் வாய்ப்பு தமிழகத்தை நோக்கி வந்திருக்கிறது. நீட் முறைகேடு தொடர்பான மாணவர் போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருக்கும் நிலையில், இதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாதகமாக மாற்ற முடியுமா? என்பதே இப்போதைய அலசல்.
நீட் தேர்வு விவகாரம் தேசிய அரசியலில் ஒரு மாபெரும் புயலை கிளப்பியுள்ளது. முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த மகத்தான வெற்றிக்கு திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் X (ட்விட்டர்) தளத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகள் போராடி வென்றது போல், நீட் தேர்வு ரத்தும் நிறைவேறும் என அவர் சூளுரைத்துள்ளார்.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsதற்போதைய அரசியல் சூழலில், நீட் தேர்வை ரத்து செய்யும் தொலைநோக்கு பார்வை திமுகவிடம் தொடர்வதை காட்டுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக எப்படி இதனை சாதிக்கும் என்ற கேள்விக்கு, தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவே ஒரு மாபெரும் துருப்புச் சீட்டாக அமைந்துள்ளது.
உள்ளடக்கம்
தற்போதைய அரசியல் யதார்த்தம் என்ன?
2026 மே தேர்தலில் திமுக மாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும், அதன் அரசியல் வியூகங்கள் குறையவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவை பாஜக கொண்டு வந்தபோது, தேவையான 352 வாக்குகள் கிடைக்காமல் 298-230 என படுதோல்வி அடைந்தது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த திமுகவின் பங்களிப்பு இதில் அதிகம். 2026 மே சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தவெக பக்கம் சென்றுவிட்டது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டது.
இநத சூழலில் தற்போது “தொகுதி மறுவரையறை 2.0” என்ற பெயரில் இதை மீண்டும் கொண்டுவர பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதை நிறைவேற்ற திமுக உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவிற்கு அத்தியாவசியமாகிறது.
இந்த இக்கட்டான சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, முள்ளை முள்ளால் எடுப்பது போல் நீட் விலக்கு (NEET Exemption) மசோதாவை திமுக எளிதாக நிறைவேற்ற முடியும்.

நீட் விலக்கு (NEET Exemption) மசோதாவில் 6 முக்கிய திருத்தங்கள் செய்யலாம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து (NEET Exemption) செய்ய பாஜக முன்வராது என்றாலும், விலக்கு மசோதாவுக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க திமுக முன்வைக்க வேண்டிய 6 முக்கிய திருத்தங்கள்
- சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் பொருட்டு, நிறுவன வகைப்பாட்டின் (Institutional Classification) அடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும்; மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துத் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வு (NEET) மதிப்பெண் அடிப்படையிலும் மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.”
- (சட்டம் அனுமதிக்குமா? – அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 14 (Article 14) மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், மாநிலப் பாடத்திட்டம் போன்ற கல்வி வாரியங்களின் (Boards) அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வெவ்வேறான சேர்க்கை முறையை (ஒருவருக்கு நீட், ஒருவருக்கு மதிப்பெண்) அமல்படுத்த முடியாது. அது ‘சட்டவிரோத பாகுபாடு’ ஆகும்.
- (சட்டப்பூர்வ வடிவம்): பள்ளி வாரியங்களை (Boards) பிரிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, “அரசுப் பள்ளி மாணவர்கள்” (Government School Students) என்பதை ஒரு தனிப் பிரிவாக (Institutional Preference) வகைப்படுத்தலாம். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தமிழக அரசின் 7.5% உள்ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டதற்கு இதுவே காரணம். இந்த ‘நிறுவன வகைப்பாடு’ – Institutional Classification என்பதால் அரசியலமைப்புச் சட்டம் article 14 மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் இருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு).
2) மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 50% இடங்கள், அவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் தகுதிப்படி (No NEET), அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மற்றும் தனியார்/நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு (State Government Quota) இடங்களின் கீழும் மாநில அரசே நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.”
3) மாநிலத்தில் உள்ள அனைத்துத் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள மொத்த இடங்களில் 50% இடங்களை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நிறுவன முன்னுரிமை ஒதுக்கீடாக (Government School Institutional Preference Quota) மாநில அரசு தன்வசப்படுத்திக் கொள்ள மத்திய அரசு சிறப்புச் சட்ட அங்கீகாரம் வழங்குகிறது.
4) மாநிலத்தில் உள்ள அனைத்துத் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மொத்த இடங்களில் 50% இடங்களை மாநில அரசின் கீழ் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக (Government School Institutional Preference) கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். (அவ்விடங்களில் சேரும் ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கான கட்டணத்தின் பெரும்பகுதியை அல்லது முழுவதையும் மாநில அரசே ஏற்கும் வகையிலான கட்டண மானியச் சட்டம் (Fee Subsidy & Reimbursement Act) இந்த மசோதாவில் சேர்ப்பது அவசியம். இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்கள் நஷ்டமடைவதாக நீதிமன்றத்தை நாடினால், உச்சநீதிமன்றம் அதை ஒருபோதும் ஏற்காது).
5) நீட் தேர்ச்சி பெற்ற அந்தந்த மாநில இருப்பிடச் சான்று (Nativity) கொண்ட மாணவர்கள், அவர்களின் நீட் மதிப்பெண் தகுதிப்படி மீதமுள்ள 50% இடங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு, தனியார் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கான கட்டண உச்சவரம்பை மாநிலக் கட்டணக் குழு முறைப்படுத்தும்.
6) .நீட் தேர்வில் தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, அந்தந்த மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்களை (State-level Vigilance Committees) அமைக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படும். ஒருவேளை தேசிய முகமையால் (NTA) பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிடில், குளறுபடிகள் இல்லாத மருத்துவச் சேர்க்கையை நிலைநாட்டும் பொருட்டு, மாநில அரசுகளே மருத்துவ நுழைவுத் தேர்வை முழுப் பொறுப்பேற்று நடத்த மத்திய அரசு சட்டப்பூர்வ அனுமதி (Statutory Consent) வழங்கும். இத்தகைய சூழலில், தேர்வு பாதுகாப்பு மற்றும் முறைகேடு தடுப்பு நடைமுறைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே முழுப் பொறுப்பேற்கும்.
இந்தத் திருத்தங்கள் மூலம் ஏழை மாணவர்களின் கனவு நனவாவது மட்டுமின்றி, தனியார் பல்கலைக்கழகங்களின் கோடிக்கணக்கான கட்டணக் கொள்ளையும் தடுத்து நிறுத்தப்படும்.
இதைப் படித்தீர்களா? TVK Rule: 6 சாதனைகளும், 6 சோதனைகளும்!
தொகுதி மறுவரையறையில் (Delimitation) சமரசப் புள்ளி
மக்களவைத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தென்மாநிலங்களுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளைக் களைய ஒரு நடுநிலையான சமரசப் புள்ளி அவசியமாகிறது. இதை சரியாக திமுக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய இதர தென்மாநிலங்களின் தற்போதைய தேசிய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பங்கு (Percentage of Seats) எக்காரணம் கொண்டும் குறையாமல், மாறாகப் பராமரிக்கப்படும் அல்லது சிறிதளவு உயர்த்தப்படும் வகையில் ஒரு புதிய தொகுதிப் பங்கீட்டு ஃபார்முலா (Formula) அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம், தென்மாநிலங்களின் ஒட்டுமொத்த அரசியல் பலமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட திருப்தி திமுகவுக்கு கிடைக்கும்.
அதே வேளையில், “பல 5 ஆண்டுகளாக தள்ளிப் போடப்பட்ட தொகுதி மறுவரையறையை நிறைவேற்றி விட்டோம்” என்ற வரலாற்றுச் சாதனையையும், அரசியல் லாபத்தையும் பாரதிய ஜனதா கட்சியும், மத்திய அரசும் அறுவடை செய்ய முடியும்.
இருதரப்புக்கும் நஷ்டமில்லாத இந்த ‘வின்-வின்’ (Win-Win) அணுகுமுறை நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த உதவும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய அரசின் திட்டங்களை ஏற்று, மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய முற்போக்கு மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகும்.
சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மூலம் சாதித்த இந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு, தொகுதி மறுவரையறையின் போது தென்மாநிலங்களுக்குத் தண்டனையாக மாறிவிடக் கூடாது. அதனால் புதிய ஃபார்முலா மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நலனை பாதுகாத்த பெருமை திமுகவை சேரும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கும் அதே வேளையில், அதில் மிக முக்கியமான திருத்தத்தையும் திமுக வலியுறுத்த வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு கட்டாயம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை திமுக மிகத் தெளிவாகப் பதிவு செய்வது அவசியம்.
இதைப் படிக்கவும் – Minister Viswanathan சர்ச்சை: காங்கிரஸுக்கு தலைக்குனிவு!
திமுக இந்த செக்மேட்டை எப்படி வைக்கலாம்?
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் சிறிதளவும் பாதிக்கப்படாத வகையிலான தொகுதி மறுவரையறை திருத்தங்களையும், எதிர்காலத்தில் இதே நிலை நீடிக்கும் ஒரு சட்டரீதியான உறுதியையும் மத்திய அரசு அளிப்பதாக இருந்தால், திமுக தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் நீட் தேர்வு விலக்கு மசோதா (NEET Exemption) (8 அம்ச திருத்தங்களைக் கொண்ட மசோதா) ஆகிய மூன்றையும் ஆதரிக்கத் தயார் என ஒரு செக்மேட் திமுக முன்வைக்கலாம்.
இப்போது மக்களவைத் தொகுதி மறுவரையறை (Delimitation), மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் எந்த விலை கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தை பாஜக கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் நீட் தேர்வு குளறுபடிகளால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் மீண்டும் ஏதேனும் தவறு நடந்தால் பாஜகவின் பிம்பம் அடியோடு சரிந்துவிடும். அதனால் நீட் விலக்கு மசோதா (NEET Exemption) விஷயத்தில் ஒருசில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் நேரடி சிக்கலையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
பாஜக ஆதரவு முத்திரை திமுகவுக்கு விழுமா?
பாஜகவுக்கு ஆதரவு முடிவால் தமிழ்நாட்டில் திமுகவுக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்வி இப்போது எழக்கூடும். பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்த திமுக திடீரென பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் திசைத் திருப்பலாம்.
ஆனால், “தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவில் திருத்தம் கொண்டு வந்ததால் அதை ஆதரித்தோம்.அத்துடன் எதிர்காலத்தில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை பெற்றிருக்கிறோம். அத்துடன் தென்மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்த்து அவற்றுக்கான பங்கை நாங்கள்தான் போராடி பெற்றுத் தந்திருக்கிறோம்.
இரண்டாவதாக, நீட் தேர்வு விலக்கு மசோதா (NEET Exemption) மூலம் மாநில அரசின் கல்வி உரிமையை நிலைநாட்டியிருக்கிறோம். (NEET Exemption) நீட் தேர்வு விலக்கு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு உயிர் ஊட்டியிருக்கிறோம். இதன் மூலம் (NEET Exemption) இந்திய அளவில் பிற ஏழை மாநில மாணவர்களும் பலனடைவார்கள்.
மூன்றாவதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கான உள்ஒதுக்கீட்டையும் பெற்றுத் தந்திருக்கிறோம்.
ஆக திமுக பாஜகவை ஆதரிக்கும் நோக்கத்தில் இந்த சட்ட மசோதாக்களை ஆதரிக்கவில்லை. மாநில நலன், மாணவர் நலன், மகளிர் நலன் ஆகிய மூன்று விஷயங்களை முன்னிறுத்தியே ஆதரவு தந்தோம்” என்று எதிர்க்கட்சிகளுக்கு நெத்தியடி பதிலை தர முடியும்.
மூன்றாவது அணியை உருவாக்கவும் வாய்ப்பு!
திமுக ஒருவேளை தன்னுடைய வியூகத்தின் மூலம் நீட் விலக்கு மசோதா (NEET Exemption) உள்ளிட்ட மூன்று மசோதாக்களிலும் திருத்தம் கொண்டு வர முடியுமானால், பாஜகவின் 3 மசோதாக்களும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஒருசில மாநில கட்சிகளின் ஆதரவோடும் நிறைவேற வாய்ப்பு அதிகம்.
இதன் மூலம் விரைவில் மாநிலங்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலான மூன்றாவது அணியை (Third Front) திமுக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியும். இது திமுக விரும்பும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியாகவும் அமையும்.
பாஜக எதிர்ப்பு அரசியலை காங்கிரஸ் தலைமையிலான “இந்தியா” கூட்டணி வழியாக அல்லாமல், மாநிலங்களின் அடையாள அரசியல் அடிப்படையில் ஒரு தனி தளத்தில் திமுக தலைமை தாங்கி இயங்க முடியும்.
இது உங்களுக்காக – சமையலறையில் மறைந்திருக்கும் 5 மகத்தான மூலிகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதுதான் விதி. அதனால் திமுகவை நெருங்கி வரும் பாஜகவை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் தருணம் இது. நீட் தேர்வு விலக்கு (NEET Exemption) உள்ளிட்ட மசோதாக்கள் மூலம் இதை திமுக சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. திமுக தலைவர் M.K. Stalin முயற்சித்து பார்ப்பாரா?
மக்கள் அதிகம் கேட்கும் கேள்விகள்
தற்போதைய நிலையில் நீட் விலக்கு (NEET Exemption) சாத்தியமா?
ஆம், தொகுதி மறுவரையறை மசோதாவில் பாஜகவுக்கு ஆதரவு தேவைப்படுவதால், சில திருத்தங்களுடன் நீட் விலக்கு மசோதாவை (NEET Exemption) மத்திய அரசு ஏற்கச் செய்ய முடியும். நீட் விலக்கு மசோதா (NEET Exemption) மூலமே ஏழை மாணவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய முடியும்.
நிறுவன வகைப்பாடு (Institutional Classification) என்றால் என்ன?
அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என தனித்தனியாக வகைப்படுத்தி, மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வமான வழிமுறையாகும். இது நீட் தேர்வு விலக்கு (NEET Exemption) மசோதாவில் அவசியம இடம் பெறுவது நல்லது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ன சலுகை கிடைக்கும்?
நீட் விலக்கில் (NEET Exemption) இந்த திருத்தம் நிறைவேறினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50% இடங்கள் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும், எவ்வித நுழைவுத் தேர்வும் இன்றியும் ஒதுக்கப்படும்.
தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டணக் கொள்ளையை எப்படித் தடுப்பது?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில், மாநில அரசே முழுமையாகக் கல்வி மானியம் (Fee Subsidy) வழங்குவதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.
தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவால் தென் மாநிலங்களுக்கு என்ன சிக்கல்?
மக்கள் தொகையைக் குறைத்த தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும், தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.
#NEETExemption #TNPolitics #MKStalin #StudentProtest #Delimitation #WomensReservation #BanNEET #TamilNadu #MithiranNews

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்