🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

5 ரகசியங்கள்: Tvk Vijay Bjp கூட்டணி உறுதியா?

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நேரத்தில் tvk vijay bjp கூட்டணி குறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் மிகக் குழப்பமான பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதைப் பற்றி இந்த நாயர் கடை அரசியலில் பார்ப்பதோடு, கடந்த 24 மணி நேரத்தில் நடந்தேறியுள்ள முக்கிய நிகழ்வுகளும் அலசப்படுகிறது.

(இது நடப்பு அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் நாயர் கடை நையாண்டி பகுதி)

-:பந்து மித்திரன்:-

tvk vijay bjp கூட்டணி அலசல்

உள்ளடக்கம்

தேர்தல் களம்

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

“அப்பாடா, ஒரு வழியா தமிழக தேர்தல் தேதியை நேத்து அறிவிச்சிட்டாங்க. ஏப்ரல் 23 ஓட்டுப்பதிவு, மே 4 ரிசல்ட். இனிமேல் தான் ஊருக்குள்ள அனல் பறக்கப் போவுது,” என்று உற்சாகமாக பேசியபடியே நாயர் கடை பெஞ்சில் உட்கார்ந்தார் கரைவேட்டி கந்தசாமி.

“ஆமாம் அண்ணே, இனிமேல் தான் வெள்ளை வேட்டி கட்டினவங்களையெல்லாம் தெருவுல அடிக்கடி பார்க்க முடியும். வாக்குறுதிகளுக்கும் பஞ்சமே இருக்காது,” என கலாய்த்தார் வாய்ப்பந்தல் வைத்தி.

“எலக்‌ஷன் வந்தா என் கடையில கூட்டமும் கூடும். ஆனா டீக்கு காசு கொடுக்காம ‘அண்ணன் பார்த்துப்பார்’னு போறவங்களும் வந்து சேர்ந்திடுவாங்களே,” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் டீக்கடை நாயர்.

கூட்டணி ரகசியம்

“அண்ணே… ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா… தேர்தல் அறிவிப்பு தமிழ்நாட்டில் வந்த சிறிது நேரத்துல சிபிஐ தலைமை அலுவலகத்தில் இருந்து தன்னோட கார் சன்ரூஃப் கண்ணாடியில் நின்றபடியே கை அசைத்து நடிகர் விஜய் வந்ததை எல்லோரும் பேசத் தொடங்கியிருக்காங்க,” என்று ஒரு சுவாரஸ்யமான பிட்டை போட்டார் வைத்தி.

இதைப் படித்தீர்களா: 7 அதிரடி: திமுக கூட்டணியில் ரகளை! Sharp Satire

“ஒருவேளை சிபிஐ இதுக்கு சிறப்பு அனுமதி கொடுத்திருக்கோ? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! tvk vijay bjp கூட்டணிக்கு இது ஒரு முன்னோட்டமா கூட இருக்கலாம், யார் கண்டது,” என்று தன் பங்குக்கு பொடி வைத்தார் திருவாளர் பொதுஜனம்.

“போன தடவை தில்லிக்கு போன விஜயோட விமானம் இரவு 7 மணிக்கு மேல பறக்க அனுமதியில்லைன்னு சொன்னது நினைவிருக்கா? ஆனா, இந்த தடவை நிலைமை தலைக்கீழா மாறிப்போச்சு,” இதைப் பார்த்த எனக்குக் கூட tvk vijay bjp alliance உறுதியாயிட்டோன்னு சந்தேகமா இருக்கு” என்று ஆச்சரியப்பட்டார் வைத்தி.

“ஆமா வைத்தி, இந்த தடவை விஜய் தனி விமானத்துல இரவு 8 மணிக்கு சென்னைக்கு புறப்பட விமான போக்குவரத்துத் துறை அனுமதி கொடுத்திருக்கு. நீ சொல்ற மாதிரி tvk vijay bjp கூட்டணி உறுதியாயிடுச்சோ,” ன்னு இப்ப இதை வச்சு பேசிக்கிறாங்க என்றார் கந்தசாமி.

“சரின்னே… ஒரு பக்கம் tvk vijay bjp கூட்டணி இல்லேன்னு எடப்பாடி சொல்றாரு… நாங்க பேச்சுவார்த்தையே நடத்துலன்னு வேற சொல்றாரு… இன்னொரு பக்கம் இந்த டிவிக்காரங்க… tvk vijay bjp கூட்டணி உறுதியாயிடும்னு அதிமுக தொகுதி பங்கீடு லிஸ்ட்டையே போட்டு கலக்குறாங்க” என்றார் பொதுஜனம்.

இதேக் கேட்டு சிரித்தபடியே, “இந்த tvk vijay bjp, தொகுதி பங்கீடு முடியப்போவுது, இல்ல… நாங்க தனிச்சு நிக்கப்போறோம். இப்படி மாத்திமாத்தி செய்து வர்றது எல்லாம் மார்ச் 30 வரைக்கும்சான். இது தேர்தல்ல தவிர்க்க முடியாத ஒண்ணு” என்று சொல்லி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கந்தசாமி.

தேர்தல் கெடுபிடி

“இதோ பார் வைத்தி… தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துட்டு. கொஞ்ச நாளைக்கு நீ ஜாக்கிரதையா இருக்கனும். 50 ஆயிரம் ரூவாய்க்கு மேல நீ வெளியில பணம் எடுத்துக்கிட்டு போகாதே. அப்புறம் கணக்கு கேட்டு புடுங்கி வச்சுவாங்க,” என்று எச்சரித்தார் கந்தசாமி.

“ஆமாண்ணே… ஊருக்கு இளிச்சவன் பிள்ளையார்கோயில் ஆண்டின்னு சொல்லுவாங்களே அந்த கதையா, தேவையில்லாம நாமதான் மாட்டுவோம்,” என்று சலித்துக் கொண்ட வைத்தி, “கோடிக்கணக்குல ஆம்புலன்ஸுல, லாரியில எடுத்துக்கிட்டு போனா கண்டுக்க மாட்டாங்க. இதுதானே ஒவ்வொரு தேர்தல்லேயும் நடக்குது!” என்று ஆவேசமாகச் சொன்னார் வைத்தி.

“சரியா சொன்ன வைத்தி! விதிமுறைகள் எல்லாம் எப்பவுமே சாதாரண மக்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் தான். பெரிய முதலைகள் எல்லாம் வலையில சிக்காம தப்பிச்சிடுவாங்க,” என்று ஆமோதித்தார் பொதுஜனம்.

மாம்பழமும் ரவுடியும்

“அதுசரி, மாம்பழக் கட்சியோட தைலாபுரம் தலைவர் இன்னைக்கு யாரோட கூட்டணின்னு சொல்லப்போறாராமே… உண்மையா அண்ணே?” என்று ஆர்வமாகக் கேட்டார் வைத்தி.

“அவங்களும் பல கணக்குகள் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வர்ற வரைக்கும், vijay tvk bjp நிலைப்பாடு மாதிரி எல்லாமே சஸ்பென்ஸ் தான்,” என விளக்கினார் கந்தசாமி.

“இன்னொரு பக்கம், சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறதா செய்தி வருதே…” என்று செய்தியை வாசித்தார் வைத்தி.

“தேர்தல் நெருங்குறதால சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுறோம்னு போலீஸ் வேகம் காட்டுறாங்க போலிருக்கு. இன்னும் என்னென்ன அதிரடிகளைப் பார்க்கப் போறோமோ!” என வியந்தார் பொதுஜனம்.

காக்கிகள் நிலை

“பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவை போலீஸ் அதிகாரியை கைது செஞ்சிருக்காங்க பாத்தீங்களா?” என்று அதிர்ச்சியோடு சொன்னார் வைத்தி.

“வேலியே பயிரை மேய்ஞ்ச கதையா இருக்கு. சட்டம் காக்க வேண்டியவங்களே இப்படி செஞ்சா, சாமானிய பெண்களுக்கு யாரு பாதுகாப்பு தருவா?” என்று கொதித்தார் கந்தசாமி.

“அது போகட்டும், அறிவாலயத்துல இன்னைக்கு தேர்தல் வியூகங்களை வகுக்க முதலமைச்சர் தலைமையில கூட்டம் நடக்குதாம். ராகுல் காந்தி வேற பிரச்சாரத்துக்கு வர்றாராம்,” என்று செய்தியை மாற்றினார் நாயர்.

உலக அரசியல்

“இஸ்ரேல் – ஈரான் போர் வேற தீவிரமாகிட்டிருக்கு. ட்ரம்ப் வேற கியூபா கூட ஒப்பந்தம் போடப்போறாராம். இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியலே!” என உலக அரசியலுக்கு தாவினார் கந்தசாமி.

“ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனையால கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வந்தா, பெட்ரோல் விலை கிடுகிடுன்னு லிட்டர் 200 ரூபாய்க்கு ஏறிப்போயிடும். அது இந்த தேர்தல்ல பெரிய பேசுபொருளாக வேற மாறிப்போய்டும்,” ன்னு நமக்கு கவலை இருக்கோ இல்லையோ, மத்தியில ஆளும் பாஜகவுக்கு இப்ப இருக்கு என்று பொருளாதாரத்தை அலசினார் பொதுஜனம்.

“சரி சரி, இப்படியே அரசியலை பேசிட்டே இருந்தா எப்படி? சூடா நாலு டீயை போடுறேன் குடியுங்க. tvk vijay bjp கூட்டணி என்ன ஆகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்!” என்று கூறி எல்லோருக்கும் டீயை நீட்டினார் நாயர்.

இதையும் பாருங்கள்: திமுக BJP ஆட்சியில் பங்களிப்பு செய்த நோக்கம் என்ன? #shorts

Disclaimer: இது முழுவதும் கற்பனையான நையாண்டி உரையாடல். எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, அரசியல் கட்சியையோ புண்படுத்தும் நோக்கத்திலோ, களங்கப்படுத்தும் நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. Tvk Vijay Bjp கூட்டணி உறுதியா?உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் அணுகும் ஒரு முயற்சி மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவெளியில் உலா வரும் தகவல்கள் செய்திகளின் அடிப்படையிலானவை. அதனால் இந்த உரையாடல் ரசிக்க மட்டுமே)


FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

tvk vijay bjp கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்குப் பின் டெல்லியிலிருந்து திரும்பிய விதம் மற்றும் விமானப் போக்குவரத்து அனுமதி ஆகியவற்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (nda) அவர் இணையலாம் என்ற ஊகங்களை இப்போது எழுப்பி வருகிறார்கள். அவ்வளவுதான்.

தமிழக தேர்தல் 2026 வாக்குப்பதிவு எப்போது நடைபெறுகிறது?

ஏப்ரல் 23, 2026 அன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ரவுடி தொப்பை கணேஷ் என்கவுண்டர் எங்கு நடந்தது?

சென்னை மாதவரம் பகுதியில் ரவுடி தொப்பை கணேஷ் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி கையில் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்?

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது.

கூட்டணி குறித்து டாக்டர் ச. ராமதாஸ் அறிவிப்பு என்ன?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு இரவு நேரத்தில் தனி விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதா?

ஆமாம், முன்பு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்போது விசாரணை முடிந்து விஜய் இரவு 8 மணிக்கு தனி விமானத்தில் சென்னை திரும்புவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட காரணம் என்ன?

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் கோவையில் காவல் துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் போர் தமிழக தேர்தலை எவ்வாறு பாதிக்கும்?

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலை உயர்ந்தால், அது தேர்தலில் முக்கியப் பிரச்சாரப் பொருளாக மாறும்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் நோக்கம் என்ன?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க இக்கூட்டம் நடைபெறுகிறது.

#TNAssemblyElection2026 #TamilNaduPolitics #ThalapathyVijay #PoliticalSatire #TamilNewsLive #MithiranNews

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

2 thoughts on “5 ரகசியங்கள்: Tvk Vijay Bjp கூட்டணி உறுதியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *