🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

தமிழ்நாடு அரசியல் களம்: 5 Massive Shocking திருப்பங்கள்!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் வேளையில் தமிழ்நாடு அரசியல் சார்ந்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை தங்களின் கூட்டணி கணக்குகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளன.

இந்த தமிழ்நாடு அரசியல் களத்தின் சதுரங்க ஆட்டத்தில் தினமும் பல ஆச்சரியமான மற்றும் அதிரடியான மாற்றங்கள் தமிழ்நாடு அரசியல் களத்தில் நிகழ்ந்து வருகின்றன. அவற்றை பற்றிய அலசல் இது.

தமிழ்நாடு அரசியல் களம்
image: Mithiran Newes AI Desk

உள்ளடக்கம்

குடும்ப உறுப்பினர் தலையீடும் திமுக கூட்டணியில் நீடிக்கும் சிக்கலும்

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

ஒவ்வொரு கட்சியும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க பல்வேறு புதிய வியூகங்களை கையாண்டு வருவதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடாகி வருகிறது. இந்த சூழலில் இரு திராவிட கட்சிகளின் கூட்டணிகளிலும் நடக்கும் சில முக்கிய திருப்பங்களை தமிழ்நாடு அரசியல் பார்வையில் காணலாம்.

குறிப்பாக திமுக கூட்டணி முடிவுகளில் சொதப்பல், அதுவும் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்து வந்துவிட்டு அது தரும் குடைச்சல் பற்றி அதிக அளவில் திமுக தொண்டர்களிடையே டீக்கடைகள் தோறும் பேசப்படுகிறது.

திமுகவின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணமாக, முதல்வரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் தலையீடுதான் காரணம் என்ற பேச்சும் உயர்மட்ட நிர்வாகிகள் தரப்பில் நிலவுவதாகவும் திமுக தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இதனால், திமுக எதிர்பார்க்கும் 234-க்கு 200 வெற்றி என்பது கனவாக மாறும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அஞ்சுகிறார்கள்.

இதைப் படித்தீர்களா? கமலின் திடீர் முடிவு: மக்கள் நீதி மய்யம் ஏமாற்றப்பட்டதா?

தமிழ்நாடு அரசியல் களம் – அதிமுக வியூகம்

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பல புதிய வியூகங்களை அமைப்பதை தமிழக அரசியல் களம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல்களை சரிசெய்ய சிறிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதேபோல கட்சிக்குள் உள்ள சிறு சிறு மனக்கசப்புகளை போக்கி அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளும் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்கூட்டிய செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஒரு சாதகமான தொடக்கத்தை தந்துள்ளதாக ஊடகச் செய்திகள் மதிப்பிடுகின்றன.

திமுக மெகா கூட்டணி ஆனால் சறுக்கல்..

திமுகவின் மெகா கூட்டணியில் முன்எப்போதையும் விட அதிகமாக சில எதிர்பாராத சலசலப்புகள் உருவாகி வருவதை தமிழ்நாடு அரசியல் களம் பார்க்கிறது.

இதற்கு காரணம் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் பாரம்பரிய கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அதிக பங்கு வேண்டும் என உறுதியாக நின்றன. இதனால் திமுக தலைமை சற்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

சமீபத்தில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க எடுத்த முயற்சிகள்தான் தமிழ்நாடு அரசியல் களம் திமுகவுக்கு சரிவையும், கூட்டணிக் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இதை சமாளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிகிறது.

கூட்டணி தர்மத்தை மீறாமல் அதே சமயம் கட்சியின் நலனையும் காக்கும் சவாலான பணியை திமுக தலைமை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை இப்போது.

திமுகவின் இக்கட்டுக்கு என்ன காரணம்?

திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வந்தால் பலன் கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் மறைமுகமாக அதிகாரத்தை கோலோச்சுபவரும், நேரடி அரசியல் அனுபவம் இல்லாதவரும் சொன்னதுதான் வேதவாக்காக எடுக்கப்பட்டதாக பேச்சு எழுந்திருக்கிறது.

தேமுதிக பாஜக, அதிமுகவுடன் தொடக்கத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து அதை திமுகவுக்கு இழுக்கலாம். அதனால் அதிமுகவுக்கு பலம் குறையும் என்ற ஆசை வார்த்தைகள் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு இழுக்க அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவர் ஒருசில விஷயங்களில் திமுக நிலைப்பாட்டை சொல்லி கறாராக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.

ஆனால் கூட்டணி பேரத்தில் குடும்ப உறுப்பினர் தலையிட்டு அதிமுகவிடம் எதிர்பார்க்கும் எண்ணிக்கையை, கோரிக்கையை தாங்கள் நிறைவேற்றித் தருவதாக வாக்குக் கொடுத்து அணிக்கு இழுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இறுதியில் தமிழ்நாடு அரசியல் களத்தில் கூட்டணியில் கடந்த 3 தேர்தல்களாக ஒற்றுமையாக தேர்தலை சந்தித்து வந்த கட்சிகள் இன்றைக்கு தொகுதிகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கையில் குறைப்பு, கேட்ட தொகுதிகளை பெற முடியாமை போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

கனிமொழி போன்றவர்கள் கூட்டணியை பேசி வந்த நிலையில், அவர்களைப் புறக்கணித்துவிட்டு குடும்ப உறுப்பினரை நம்பி திமுக தலைமை இப்போது சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது என்று கட்சியின் நடவடிக்கைகளை அறிந்த நிர்வாகிகள் சிலர் கூறுகிறார்கள்.

கமலுக்கு இதயத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்த மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் முழுமையான ஆதரவை பெற்றிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சி கோரும் தொகுதிகளையோ, அக்கட்சி தன்னுடைய சின்னத்தில் போட்டியிடுவதையோ விரும்பவில்லை. ஆனாலும் அக்கட்சியின் ஆதரவை பெற்றிருப்பதால், தன்னுடைய இதயத்தில் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசியல் களம் இதுவரை காணாத புதுமை. இப்படி ஒரு நிலைப்பாட்டை கமல் எடுக்கலாம். ஆனால் திமுக தலைமை இப்படி ஒரு தியாகம் என்ற பெயரை சூட்டி தன்னை பாதுகாத்துக்கொள்ள இன்னொருவரை பலிக்கடா ஆக்கலாமா என்பதுதான் திருவாளர் பொதுஜனங்களில் பேச்சாக இருக்கிறது.

இது ஏறக்குறைய நடுநிலை வாக்காளர்களின் மனதை திமுக சார்பில் இருந்து மாறச் செய்யும் சம்பவமாகவும் அமைந்திருக்கிறது.

சிறிய கட்சிகளின் தாக்கம்

தற்போதைய தமிழ்நாடு அரசியல் களம் வழக்கத்தை விட சிறிய மற்றும் பிராந்திய கட்சிகளின் பேரம் பேசும் திறன் கணிசமாக அதிகரித்திருப்பதை காண்கிறது.

வாக்கு வங்கி சதவீதத்தை சுட்டிக்காட்டி இரு திராவிட கட்சிகளிடமும் தாங்கள் விரும்பும் தொகுதிகளை பெற இந்த கட்சிகள் முனைப்பு காட்டியதையும் தமிழ்நாடு அரசியல் களம் சந்தித்தது.

பல சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், கடந்த தேர்தலில் மிகக் குறைவான வாக்கு சதவீதத்தை பெற்ற தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைத்ததோடு, ஒரு மாநிலங்களவை உறுப்பினர், 10 சட்டப் பேரவை தொகுதிகள் என்ற அதிர்ஷ்ட காற்று வீசியிருக்கிறது என்பதையும் தமிழ்நாடு அரசியல் களம் உணர்ந்திருக்கிறது.

இது திமுக கூட்டணி கட்சிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருப்பதால், அது தேர்தல் நேரத்தில் எதிரொலிப்பதோடு, வாக்குச் சாவடி நிலைகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதனால் திமுக தலைமை எதிர்பார்க்கும் 200 தொகுதிகளில் வெற்றி கணக்கு சொதப்பிவிடும் என்பதிலும் சந்தேகமில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

போதாக்குறைக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை மக்களே இப்போது பேசத் தொடங்கிவிட்டார்கள். இதுவும் கூட திமுகவுக்கு சாதகமான பலனை தராது என்பதுதான் தமிழ்நாடு அரசியல் களத்தின் யதார்த்தம்.

தமிழ்நாடு அரசியல் களம் காணும் தனி ஆவர்த்தனம்

தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிலைப்பாடுகள் தமிழ்நாடு தேர்தல் களத்தில் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களுக்கான அழுத்தத்தை கொடுத்து 3 இடங்களை கடந்த தேர்தலை விட அதிகமாக பெற்றிருக்கிறது.

பாஜக தமிழகத்தில் தன்னை ஒரு பலமான மாற்று சக்தியாக நிலைநிறுத்த தனி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. இதனால் இம்முறை அதிமுக கூட்டணியில் இணைந்த சிறு கட்சிகள் கூட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை புறக்கணித்து பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதை காண முடிகிறது.

தமிழ்நாடு அரசியல் களம் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வலு சேர்த்து வருகிறது.

மக்கள் மனநிலையை எடைபேடும் தமிழ்நாடு அரசியல் களம்

கூட்டணி கணக்குகள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாடு அரசியல் களத்தில் வாக்காளர்களின் மனநிலையே இறுதி வெற்றியை தீர்மானிக்கப் போகிறது.

ஆளுங்கட்சியின் திட்டங்கள் மற்றும் அதன் மீதான விமர்சனங்களை மக்கள் நடுநிலையோடு கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் இந்த முறை பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசியல் களத்தில், இந்த இளைஞர்களின் வாக்குகள் பெரும்பாலும் புதிதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் போராடும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் பக்கம் மட்டுமே இப்போது இருப்பதை களநிலவரம் உணர்த்துகிறது.

தமிழ்நாடு அரசியல் களம் வழக்கமாக, கூட்டணிகளின் வலிமையைத் தாண்டி, வலிமையான தலைமை மற்றும் செயல்வடிவம் கொண்ட தேர்தல் அறிக்கை அதிகமாக எதிர்ப்பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இப்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் இருப்பதாகவும், ஆனால் அவற்றில் பல எந்த அளவுக்கு சாத்தியமானவை என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.

கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்பட்டு வந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் அதிகம், ஆனால் நிறைவேற்றப்படாத ஒருசில சவாலான வாக்குறுதிகள் நிலுவையில்தான் இருக்கின்றன.

திமுக நிறைவேற்றாத சில வாக்குறுதிகள்

வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிலுவையில் உள்ளது. பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்பட்ட நிலையில், டீசல் விலை ரூ.4 குறைப்பதாக சொன்ன வாக்குறுதி நிறைவேறவில்லை.

மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து, அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது நிலுவையில் உள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் போனதால் அது நிலுவையில் உள்ளது.

மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கப்படும் வாக்குறுதியும் நிலுவையில் உள்ளது.

முழுமையான மதுவிலக்கு என்பது தனது இலக்கு என்றும், அதனை எட்டும் வகையில் மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்ததும், முதலில் 500 கடைகள் பெயரளவில் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடினால் கள்ளச் சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை அதிகரிக்கும் என்பதால், படிப்படியாகக் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மதுக்கடைகள் குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் பொதுவெளியில் இப்போது அரசியல் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. போதாக்குறைக்கு பாட்டிலுக்கு ரூ.10 தனியாக வசூலிப்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அது ஊழல் குற்றச்சாட்டாகவும் உலா வருகிறது.

தமிழ்நாடு அரசியல் களம் இப்போதைய சூழலில் அதிமுகவின் வெற்றிக்கான முயற்சி ஓட்டமாக தொடங்கியிருக்கிறது. திமுக இன்னமும் ஓட்டத்தை தொடங்காமல் கூட்டணி கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாகி நிற்கிறது.

இதைப் பார்த்தீர்களா? Dr Ramadoss vs Anbumani Ramadoss – PMK எதிர்காலம் யார் கையில்?

தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை பிரதானப்படுத்தி அதிமுக கூட்டணி வாக்குகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறுகிறது?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 நடைபெறவுள்ளது. இதனால் இப்போது தமிழ்நாடு அரசியல் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

முக்கிய கூட்டணிகள் என்னென்ன?

தமிழ்நாடு அரசியல் களத்தில், இப்போதைய சூழலில் 4-க்கும் அதிகமான பலமுனைப் போட்டிகள் உருவாகும் நிலை உள்ளது. இவற்றில் முக்கியமானவை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகியன.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) யாருடன் கூட்டணி வைத்திருக்கிறது?

விஜய் தன்னுடைய கட்சி எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும் திமுக, அதிமுக அணிகளில் தொகுதிகள் கிடைக்காத சிறுகட்சிகள் தமிழக வெற்றிக் கழக அணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக-பாஜக கூட்டணி நிலைப்பாடு எப்படி உள்ளது?

செப்டம்பர் 2023-இல் பிரிந்த அதிமுக மற்றும் பாஜக, ஏப்ரல் 2025-இல் மீண்டும் இணைந்தன. தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இக்கூட்டணியை வழிநடத்துகிறார். கூட்டணி கட்சிகளுடன் சுமூக உடன்பாடும் எட்டியுள்ளது.

தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளது?

2026 தேர்தலில் தேமுதிக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதான் இப்போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தலில் எதிரொலிக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்ன?

தமிழ்நாடு அரசியல் களத்தில், போதைப்பொருள் நடமாட்டம் (20.1%), பெண்களுக்குப் பாதுகாப்பு (17.8%), வேலையின்மை (15.5%) மற்றும் விலைவாசி உயர்வு போன்றவை வாக்காளர்கள் மத்தியில் பிரதான விவாதங்களாக உள்ளன.

அதிமுகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

மகளிர் உதவித்தொகை ₹2,000 ஆக உயர்வு, கல்விக்கடன் ரத்து, ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் மற்றும் கள்ளச்சாராயத்தைத் தடுக்க தனிப்படை அமைப்பு போன்றவை அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்ன நிலை?

திமுக சுமார் 175 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக காங்கிரசுக்கு 28 இடங்களும், தேமுதிகவுக்கு 10 இடங்களும், விசிகவிற்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்?

2026 தேர்தல் தரவுகளின்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் (Gen Z) வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

வாக்குச் சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் பிரச்சாரம் செய்யக்கூடாது. வாக்காளர்களுக்குப் பணம் அல்லது அன்பளிப்பு வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி (MCC), மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#TamilNaduPolitics #TNAssemblyElection #DMKAlliance #AIADMKStrategy #TamilPoliticalNews #TNElection2026 #MithiranNews

    பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

    ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

    🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *