🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

கமலின் திடீர் முடிவு: மக்கள் நீதி மய்யம் ஏமாற்றப்பட்டதா?

Read in English / பிற மொழிகளில் படிக்க:

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தமிழ்நாட்டில் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை அறிவித்துள்ளார்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

திமுக தலைமையிலான கூட்டணிக்குத் தனது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், இந்த முடிவின் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

குறிப்பாக, கூட்டணியில் நிகழ்ந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தற்போதைய அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளன.

மக்கள் நீதி மய்யம்
image: @ikamalhaasan/X

உள்ளடக்கம்

மக்கள் நீதி மய்யம் அரசியல் பயணம்

கமல்ஹாசனால் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் இந்த கட்சி மிகவும் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.

மாற்று அரசியலை முன்னிறுத்தி களமிறங்கிய கட்சி, இதுவரை இரண்டு முக்கிய தேர்தல்களை நேரடியாகச் சந்தித்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவை இதில் அடங்கும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி 3.72% வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 2.5% வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டது.

தற்போது 2026 தேர்தலிலும் கட்சி கணிசமான வாக்குகளைப் பெறும் என அரசியல் பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இதை படித்தீர்களா? 10 சீட்! தேமுதிக திமுக கூட்டணி: கூட்டணிக் கட்சிகள் ஷாக்!

திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற கட்சித் தலைமை ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டியது.

தொடக்கத்தில் 15 தொகுதிகள் வரை திமுகவிடம் கோரப்பட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், சுமுகமான பேச்சுவார்த்தைகளின் போது இது 10 இடங்களாகக் குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் வெறும் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகத் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, அந்த 2 இடங்களிலும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் கட்சியின் தனித்துவத்தைப் பாதிக்கும் என்பதால் இந்த உடன்பாடு எட்டப்படவில்லை.

கமல்ஹாசனின் முடிவு – ஸ்டாலின் நெகிழ்ச்சி

திமுகவின் இந்த கடுமையான நிபந்தனைகளால், தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பதே மேல் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இன்றைய சூழலில் ஏன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என கமல்ஹாசன் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதற்கு உறுதுணையாகவே தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனின் இந்த முடிவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த விட்டுக்கொடுத்தல் வெறும் கடமை அல்ல, அது ஒரு மாபெரும் தியாகம் என ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார்.

இதுவரை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியின் தலைவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்தது அரிதான ஒன்றாகும்.

வெளிப்படையாக தெரியும் ஆளுங்கட்சி சுயநலம்

ஸ்டாலின் இதனை தியாகம் எனப் புகழ்ந்தாலும், சில அரசியல் விமர்சகர்கள் இதனை வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.

ஒருவர் செய்யும் தியாகத்தை ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் திமுக சுயநலத்தோடு பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

தேர்தல் கூட்டணி என்ற பெயரில் நம்பி வந்த ஒருவரை ஆளுங்கட்சி திட்டமிட்டு ஓரம் கட்டுவதாகவே இதை நடுநிலையாளர்கள் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

ஏற்கெனவே கூட்டணியில் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஒரு தொகுதியை மட்டுமே திமுக தலைமை ஒதுக்கீடு செய்ய முன் வந்ததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கைகளும் திமுகவால் புறக்கணிக்கப்பட்டு, தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.

இதனால் அக்கட்சிகளும் வருத்தம் அடைந்திருக்கின்றன. இதேபோல் மதிமுக வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லோருக்குமே திமுகவின் தொகுதி பங்கீட்டில் காட்டப்பட்ட கடுமையை சற்று விரக்தியோடுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன் கடந்த மக்களவை தேர்தலில் கூட இந்தியா கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர். இந்த சூழலில் அந்த கட்சியின் எதிர்காலத்தை முன்னிட்டு நாகரிகமான முறையில் அக்கட்சிக்கு தொகுதி பங்கீட்டை திமுக செய்திருக்க வேண்டும்.

ஆனால் கமல்ஹாசன் விரக்தியின் உச்சத்துக்கே செல்லும் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகள் இப்போது கமல்ஹாசன் தொகுதிகளை விட்டுக் கொடுத்து நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஸ்டாலின் போடும் தவறான கணக்கு

ஒரு கட்சித் தலைமை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் கூட்டணியில் நட்புணர்வோடு, அரசியல் நாகரிகத்தோடு இணைந்தவர்களையும் சுயநலத்தோடு தன்னுடைய தொகுதி பங்கீடு விஷயத்தில் ஒரு தலைமை நடத்துமேயானால் அதன் எதிர்காலம் கசப்பானதாகத்தான் முடியும் என்பதுதான் யதார்த்தம்.

ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக தோழமை கட்சிகளின் உணர்வுகளை மதிக்கத் தவறி மேற்கொள்ளும் இது போன்ற கூட்டணிக் கணக்குகள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு வலு சேர்க்குமா என்பது சந்தேகமே.

அதிகாரத்தைத் தக்கவைக்க கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கும் போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல என்பதுதான் சில அரசியல் நோக்கர்கள் கருத்தாக இருக்கிறது.

மநீம தொண்டர்களின் மனநிலை வேறாக இருக்கும்!

கமல்ஹாசனின் இந்தத் தியாக முடிவை தமிழகத்தில் உள்ள அவரது கட்சித் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

தங்கள் தலைவரை திமுக தரப்பு மிகக் கடுமையாகப் புறக்கணிப்பதாகவே தொண்டர்கள் கருதுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதனுடைய தாக்கம் நிச்சயமாக ஓரிரு நாளில் பொதுவெளியில் பிரதிபலிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஆண்டுக் கணக்கில் களப்பணியாற்றிய தொண்டர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கத்தான் செய்யும். இரண்டு சீட் மட்டுமே ஒதுக்கியது மற்றும் சின்னத்தை மாற்றச் சொன்னது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், நெருக்கடிகளுக்கு ஆளாவதை தவிர்த்து சுதந்திரமாக முடிவு எடுக்கும் இத்தகைய துணிச்சல் கமல்ஹாசனுக்கு மட்டுமே இப்போது இருக்கிறது.

இதை அரசியல் நாகரிகம் என்று பொதுவெளியில் பேசினாலும், அது ஒரு கட்சித் தலைமை, தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு கூட்டணி அங்கத்தில் சிறுமைப்படாமல் தப்பிக்கும் அரசியல் தந்திரமாகவே பார்க்க வேண்டும்.

கமல்ஹாசனே தொண்டர்களை சமாதானம் செய்தாலும், அந்த தொண்டர்களின் மனதில் திமுகவின் மீது இனம்புரியாத வெறுப்புணர்வு இருக்கத்தான் செய்யும்.

அது திமுக எதிர்நோக்கும் வாக்கு வங்கி அரசியலில் பின்னடைவாகக் கூட ஒருசில தொகுதிகளில் மாறும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

கூட்டணி தர்மம் என்ற பெயரில் தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதை மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் விரும்பமாட்டார்கள். கமல்ஹாசனும் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீட்டுக்காக மற்ற அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளும் எண்ணத்தை தவிர்த்து எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவு தான் அது.

நீண்ட நாள் காதலித்த ஒரு பெண் திடீரென ஏமாற்றிவிட்டால், அந்த பெண்ணை பெருந்தன்மையோடு “நீ எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்துவது போல கமல்ஹாசனின் முடிவு அமைந்திருக்கிறது.

இது வரும் தேர்தலில் வெண்ணை திரண்டு வரும்போது தாழியை போட்டுடைத்த கதையாக மாறினால்கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. காரணம் கமல்ஹாசனை அவரது சமூக பக்கங்களில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

இதனால், எப்போதுமே விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போனதில்லை என்ற பழமொழிக்கு ஏற்பவே கமல்ஹாசனின் அடுத்தக் கட்ட அரசியல் பயணம் அமையும் என்பதிலும் சந்தேகமில்லை.

தற்போது இதை தியாகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வார்த்தை ஜாலங்களால் கமல்ஹாசனை குளிர்வித்தாலும் கூட, அதன் மூலம் அவருடைய தொண்டர்களை குளிர்விக்க முடியாது. அதேபோல் கமல்ஹாசனின் இந்த திடீர் முடிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியையும் நிச்சயமாக உறுத்தும்.

இன்றைய சூழலில் கமல்ஹாசன் ஒரு சராசரி அரசியல்வாதியாக இல்லாமல் உயர்ந்து நிற்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை பார்த்தீர்களா? Did Kamal Haasan Sell Out? The DMK Alliance உண்மை Revealed


FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மக்கள் நீதி மய்யம் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது?

மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் திரு. கமல்ஹாசன் அவர்களால் தொடங்கப்பட்டது.

2026 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் முதலில் எத்தனை தொகுதிகள் கேட்டது?

ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் சுமார் 15 தொகுதிகள் வரை கேட்கப்பட்டு, பின்னர் அது 10 ஆகக் குறைக்கப்பட்டது.

திமுக தரப்பில் இறுதியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன?

திமுக தரப்பில் வெறும் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடாததற்கு முக்கிய காரணம் என்ன?

2 இடங்கள் மட்டுமே ஒதுக்கியதுடன், அவற்றை ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடச் சொன்னதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு வரவேற்றார்?

கமல்ஹாசனின் இந்த விட்டுக்கொடுத்தல் கடமை அல்ல, அது ஒரு மாபெரும் தியாகம் என முதல்வர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

2019 மற்றும் 2021 தேர்தல்களில் கட்சியின் வாக்கு சதவீதம் என்ன?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.72% வாக்குகளையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 2.5% வாக்குகளையும் கட்சி பெற்றிருந்தது.

மக்கள் நீதி மய்யம் யாருக்கு ஆதரவு அளித்துள்ளது?

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாகக் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தொண்டர்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது?

திமுக தங்களின் தலைவரைப் புறக்கணித்துவிட்டதாகக் கருதி, கட்சித் தொண்டர்கள் பெரும் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் அதிருப்தி தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?

தொண்டர்களின் இந்த அதிருப்தியால், திமுகவிற்குச் செல்ல வேண்டிய மாற்று அரசியல் வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

#MithiranNews #MakkalNeedhiMaiam #KamalHaasan #TNAssemblyElection2026 #DMKAlliance #TamilNaduPolitics #Election2026 @arasiyalakkappore

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *