Read in English / பிற மொழிகளில் படிக்க:
அஇபுதமமுக என சசிகலா கட்சி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சின்னம், ராமதாஸ் சந்திப்பு மற்றும் 2026 தமிழக அரசியலில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விரிவான அலசல்.
தமிழக அரசியல் களத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குவதன் மூலம் பெரும் அதிர்வலைகள் உருவாகியுள்ளன. கட்சியின் பெயர், சின்னம், ராமதாஸ் சந்திப்பு மற்றும் இதற்கான பின்னணி குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் அலசுவோம்.

உள்ளடக்கம்
சசிகலா கட்சி பெயர் அறிவிப்பு
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அமைதியாக ஒதுங்கி இருப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால், அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வுகளை மிகவும் நிதானமாகவே அவர் திட்டமிட்டிருக்கிறார்.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஅதிமுகவை சட்ட ரீதியாக மீட்பேன் என அவர் பலமுறை கூறியிருந்தார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அவருக்கு எதிரான கடுமையான நிலைப்பாடே தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.
இதனால், தொண்டர்கள் நலன் கருதி சசிகலா புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைகளை அதிரடியாகத் தொடங்கினார். இது தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
டிடிவி தினகரனுடன் விரிசல் மற்றும் தனித்தன்மை
ஆரம்ப காலகட்டத்தில் டிடிவி தினகரன் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது போன்ற தோற்றம் இருந்து வந்தது. அமமுக கட்சியின் பொதுச் செயலாளராகவும் சசிகலா பெயரே முன்னிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், காலப்போக்கில் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான சில கருத்து வேறுபாடுகள் முளைத்தாக சொல்லப்படுகிறது. திடீரென டிடிவி தினகரன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமானார்.
இதனால், தினகரனின் நிழலில் இருந்து விலகி, சசிகலா புதிய கட்சி மூலம் தனது சொந்த பலத்தை நிரூபிக்க தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டிய அரசியல் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதையடுத்து சசிகலா கட்சி பெயரை தற்போது அறிவித்திருக்கிறார்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் நகர்வுகள்
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இவர்கள் இருவரும் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதேபோல், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களுடனும் அவர் சில ரகசிய நகர்வுகளை மேற்கொண்டதாக செய்திகள் கசிந்தன. இருப்பினும், திடீரென நீண்ட காலம் சசிகலா அரசியல் ரீதியாக மௌனம் காத்தார்.
இந்த நீண்ட அமைதி ஒரு மிகப்பெரிய திட்டத்திற்கான தயாரிப்பு என்பது தற்போது சசிகலா புதிய கட்சி அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் தெளிவாகியுள்ளது.
அஇபுதமமுக பெயர் மற்றும் தென்னந்தோப்பு சின்னம்
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா திடீரென தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இசசம்பவம் தமிழக அரசியலில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
அதனைத் தொடர்ந்து சசிகலா கட்சி பெயர், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனிமரம் தோப்பாகாது என்பதைக் குறிக்கும் வகையில் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சசிகலா கட்சி பெயர் அறிவிப்பு அவருடைய தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டாக்டர் ராமதாஸுடன் சந்திப்பு
சசிகலா கட்சி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே, பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸை சசிகலா நேரில் சந்தித்தார். சுமார் 90 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
இதைப் படித்தீர்களா? அதிரடி: பரபரப்பான சசிகலா ராமதாஸ் சந்திப்பு!
இந்த சந்திப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டது. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
சசிகலா கட்சி பெயர் அறிவிப்பை அடுத்து, வரும் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பு உருவெடுத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் வழியில் சசிகலாவின் புதிய பயணம்
அஇபுதமமுக என்ற சசிகலா கட்சி பெயர், எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையை அடியொற்றி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. சசிகலா கட்சி பெயரில் எம்.ஜி.ஆர் பெயரை இணைத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா பெயர் தவிர்க்கப்பட்டது கூட பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்த வியூகம், உண்மையான அதிமுக தொண்டர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் கிடைக்காத குறையை தென்னந்தோப்பு சின்னம் தீர்க்குமா? என்பதை வரும் சட்டப் பேரவை தேர்தல் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2026 தேர்தலில் யாருக்கு பாதிப்பு?
சசிகலா கட்சி பெயர் அறிவிப்பு, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை பெருமளவு பிரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக வாக்கு வங்கியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தவும் முடியும்.
சசிகலாவை பொறுத்தவை தனக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும். மிக பலமான கூட்டணி அமைத்து அவர் மீண்டும் ஆட்சியில் அமரும் நிலை ஏற்பட்டால் அது தனக்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறார்.
இதனால் எடப்பாடி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சசிகலா கட்சி பெயர் அறிவிப்பின் நோக்கமாக தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் வாக்குகளும் இதனால் சிதறும் அபாயம் உருவாகியுள்ளது.
2026 தேர்தலில் சசிகலா புதிய கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்பதை விட, எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடி கொடுத்து தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்துவதே அவரது இப்போதைய இலக்கு.
2026 தேர்தலில் நடிகர் விஜயை அடுத்து புதிய கட்சி இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அல்லது புதிய அணியை உருவாக்குவது என்ற வாய்ப்புகள் சசிகலாவுக்கு இருந்தது.
இதில் புதிய அணியை அவர் உருவாக்கவே தற்போது முயற்சிக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கையில் இருந்து உறுதியாகிவிட்டது.
அதன்படி, டாக்டர் ச. ராமதாஸ் அணி, பிற கூட்டணிகளில் தொகுதி பங்கீடுகளில் சமரசம் செய்துகொள்ளாமல் வெளியேறும் கட்சிகளுக்கு சசிகலா அடைக்கலம் தருவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
ஒருவேளை பாஜகவின் நெருக்குதலில் பல பேரங்களை முன்வைத்து விஜயின் தவெக அதிமுக அணியில் இணைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து நிலவுகிறது. ஒருவேளை தவெக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டால், திமுக அணி, அதிமுக அணி, தவெக, நாம் தமிழர் கட்சி, சசிகலாவின் அஇபுதமமுக ஆகிய 5 அணிகள் தேர்தல் களத்தில் நிற்கும் வாய்ப்பு உருவெடுத்துள்ளது.
இப்படி அணிகள் பிரிவது நிச்சயமாக திமுக அணி தவிர பிற கட்சிகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழக தேர்தல் தேதி இன்னும் 3 தினங்களில் அறிவிக்கப்படும் சூழலும் நிலவுகிறது.
இந்த விடியோ பார்த்தீர்களா – விஜயின் அரசியல் பயணம் ஏன் சவால் மிகுந்தது?
FAQ: மக்கள் அதிகம் தேடும் கேள்விகள்
சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் என்ன?
சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக)
சசிகலா புதிய கட்சியின் சின்னம் என்ன?
சசிகலாவின் அஇபுதமமுக கட்சிக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் யார்?
சசிகலாவின் புதிய கட்சி கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்டுள்ளது.
சசிகலா ராமதாஸை சந்தித்ததன் பின்னணி என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாமகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான வியூகங்களை வகுக்கவே டாக்டர் ராமதாஸை சசிகலா சந்தித்ததாக கூறப்படுகிறது.
சசிகலாவின் அஇபுதமமுக கட்சி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக வாக்கு வங்கியை இது நேரடியாகப் பிரிக்கும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சசிகலாவுடன் இணைவார்களா?
தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். இதனால் தற்போதைய சூழலில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. அதனால் அவர் எதிர்காலத்திலும் கூட இணைய வாய்ப்பில்லை.
2026 தேர்தலில் சசிகலா புதிய கட்சி போட்டியிடுமா?
ஆம், வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇபுதமமுக உறுதியாகப் போட்டியிடும் என்றும், அதற்காகவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.
தென்னந்தோப்பு சின்னம் உணர்த்தும் தத்துவம் என்ன?
“தனிமரம் தோப்பாகாது, நாம் கூட்டுக்குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும்” என்ற ஒற்றுமையின் தத்துவத்தையே தென்னந்தோப்பு சின்னம் உணர்த்துவதாக சசிகலா தெரிவித்திருக்கிறார்.
சசிகலா புதிய கட்சி எப்போது தொடங்கப்பட்டது?
2026 பிப்ரவரி 24 அன்று கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் சசிகலா புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சசிகலாவின் கட்சி அதிமுகவின் வாக்குகளை பிரிக்குமா?
ஆம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை ஈர்க்கும் வகையில் சசிகலா செயல்படுவதால், கணிசமான அதிமுக வாக்குகள் அஇபுதமமுக பக்கம் சாயும் வாய்ப்புள்ளது.
#SasikalaNewParty #AIPTMMK #TnPolitics2026 #AIADMK #TNElection2026 #VK_Sasikala #ThennathoppuSymbol #MithiranNews

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்