🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

Sanatana Dharma 7 ரகசியங்களும், அரசியல் விழிப்புணர்வும்!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

சனாதன தர்மம் (Sanatana Dharma) என்பது இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு பழமையான வாழ்வியல் முறையாகும். இது மனிதகுலத்தின் அழிவற்ற அறநெறிகளைக் குறிக்கிறது.

காலம், தேசம் மற்றும் இனம் கடந்து பின்பற்றப்பட வேண்டிய கடமைகளை உள்ளடக்கிய இந்த (Sanatana Dharma) தத்துவத்தை ஆதி இந்திய மக்களின் வரலாற்று அனுபவமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது ஒரு மதக் கோட்பாட்டையும் தாண்டி பண்பாட்டு விழுமியமாகத் திகழ்கிறது.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

நேர்மை, தூய்மை, கருணை, சகிப்புத்தன்மை மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற நற்பண்புகளை வளர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இதிகாசங்கள் இதன் அடிப்படைகளாக உள்ளன.

Sanatana Dharma
image: Mithiran News AI Desk

உள்ளடக்கம்

சனாதன தர்மம் (Sanatana Dharma) என்றால் என்ன?

சனாதனம் என்ற சொல்லுக்கு எப்போதும் நிலைத்திருப்பது அல்லது அழிவற்றது என்று பொருள். தர்மம் என்பது ஒரு மனிதன் சமூகத்தில் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் கடமைகளையும் குறிக்கிறது.

இந்த சனாதன தர்மம் (Sanatana Dharma) ஒரு குறிப்பிட்ட நபரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல. மாறாக, இயற்கையான நியதிகளின் அடிப்படையில் உருவான ஒரு நிலையான தத்துவமாகக் கருதப்படுகிறது.

தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கடந்து, பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறைக்கு ஏற்ப வாழ்வதே இதன் சாராம்சம். இது ஒரு ஆன்மீகத் தேடலை மையமாகக் கொண்ட வாழ்வியல் முறையாகும்.

ஆனால் இதை பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களுக்கு சாதகமான வகையில் (Sanatana Dharma) கோட்பாடுகளை கூடுதலாக சேர்த்துக் கொண்டார்கள்.

சனாதனத்தின் அடிப்படை 7 ஆன்மீகக் கோட்பாடுகள்

சனாதன தர்மம் (Sanatana Dharma) ஏழு முக்கிய தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது ‘தர்மம்’, இது நீதியையும் சரியான செயல்களையும் வலியுறுத்துகிறது.

இரண்டாவது ‘கர்ம வினை’, அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலன் உண்டு என்பதாகும்.

மூன்றாவது ‘ஆன்மாவின் நித்தியத் தன்மை’, உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவற்றது என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது.

நான்காவது ‘மறுபிறவி’, கர்மாவிற்கு ஏற்ப ஆன்மா பல பிறவிகளை எடுக்கும் என்கிறது.

ஐந்தாவது ‘மோட்சம்’, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் இறுதி இலக்காகக் கருதப்படுகிறது.

ஆறாவது ‘ஒழுக்கம்’, வாய்மை மற்றும் அகிம்சையைப் பின்பற்றுவதாகும்.

ஏழாவது ‘ஆன்ம தேடல்’, உலக இன்பங்களைத் தாண்டி தன்னைத் தானே உணரும் ஞானத்தைத் தேடுவதாகும்.

இன்றைக்கு எப்படி யாரால் ஏற்கப்படுகின்றன?

இவற்றில் இன்றைய பகுத்தறிவு உலகில் முதலாவது கோட்பாடும், ஆறாவது கோட்பாடும் மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன.

பிற 5 கோட்பாடுகள் சராசரி மனித வாழ்வில் ஆன்மிக மனம் கொண்ட எந்த இந்து சமூகத்தினரும் நம்பக் கூடியவையாகவும், ஏற்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.

ஆனால் இந்த கோட்பாடுகளை (Sanatana Dharma) தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கடந்து, பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறைக்கு ஏற்ப வாழ்வதே இதன் சாராம்சம். இது ஒரு ஆன்மீகத் தேடலை மையமாகக் கொண்ட (Sanatana Dharma) வாழ்வியல் முறையாகும்.

இந்த நிலையில்தான், உயர் சமூகத்தினராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், சனாதன கோட்பாடுகளை (Sanatana Dharma) கற்பிக்கும் குருவாக உயர்த்திக் கொண்டு பிற சமூகத்தினரை தங்களுக்கு கீழானவர்களாக நிலை நிறுத்தத் தொடங்கினார்கள்.

கடவுளோடு மிக நெருங்கிய உறவு தங்களுக்கு மட்டுமே இருப்பதாக இந்த சனாதன தர்மத்தை சித்தரித்து, மற்றவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஒரு மாய வலையை தொடர்ந்து விரித்தார்கள். தொடர்ந்து விதைத்து வந்தார்கள்.

இதை படித்தீர்களா? ADMK MLA’s (அதிமுக எம்எல்ஏக்கள்) ஆதரவு! தவெகவுக்கு பாதிப்பு?

போலி கோட்பாடுகளுடன் (Sanatana Dharma) சனாதன தர்மம்

அனைத்து சமுதாயத்தினரும், அனைத்து சமூகத்தினரும் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு அற்றவர்கள். மனிதகுலம் அனைத்துமே ஒரே சாதி என்ற கோட்பாடு (Sanatana Dharma) இந்து சமூகத்தில் ஆதிகாலத்தில் இருந்த ஒன்று.

ஆனால், இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் இடையே மெல்ல உயர் சமூகத்தினராக தங்களை அடையாளப்படுத்தி ஊடுருவியவர்கள், அந்த இறைவழிபாடு நம்பிக்கையை வைத்து தங்களின் பிழைப்பை தொடங்கினார்கள்.

தங்களுக்கு மட்டுமே தெரிந்த மொழியில் உருவாக்கப்பட்ட கடவுளர் துதிகள் மந்திரங்களாக மாற்றப்பட்டன. மற்ற மொழிகளில் கடவுளரை துதிக்கும் மந்திரங்களை புறக்கணிக்கும் அளவுக்கு அந்த குறிப்பிட்ட மொழி மந்திரத்துக்கு வலிமை உண்டு என்பதை மக்களிடையே மெல்ல நம்ப வைத்தார்கள்.

சனாதன தர்மத்தை (Sanatana Dharma) போற்றும் பல நீதிக் கதைகள் புனையப்பட்டன. அத்துடன் உயர்சாதியினரை கடவுளுக்கு நிகரானவர்களாக உருவகப்படுத்தவும் கதைகள் புனையப்பட்டன.

பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் நடந்தேறும் அனைத்து சுக, துக்கங்களுக்கும் சடங்குகள் என்ற முறையை உருவாக்கினார்கள்.

கடவுளோடு இத்தகைய மந்திரங்கள் மூலமே தொடர்புகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தார்கள்.

அதைத் தொடர்ந்து தங்களை தொடர்ந்து கல்வி, அரசியல், சமூகத்தில் குருவாக தனிமைப்படுத்திக் கொண்டார்கள். அன்றைய அரச வம்சங்களில் இதன் மூலம் தனித்துவமான அந்தஸ்தையும், சலுகைகளையும் சாதுர்யமாக பெறத் தொடங்கினார்கள்.

அதிலும் பாவ காரியங்கள், குற்றங்கள் போன்றவற்றில் அரசின் தண்டனையில் இருந்து தப்பிக் கொள்ளவும் கூட இந்த சனாதன தர்மம் மாற்றி எழுதப்பட்டது.

இதனால் கடவுளுக்கு பிறகு மன்னர், மன்னரை அடுத்து இத்தகைய உயர் ஜாதியினர்தான் சமூகத்தில் உயர்ந்தவர்களாக, வணங்கப்பட கூடியவர்களாக கருதப்பட்டார்கள்.

இவை அனைத்துக்கும் சனாதான தர்மம் (Sanatana Dharma) என்ற புனிதமான வார்த்தையை புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட போலியான கோட்பாடுகள் மூலம் மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இதையும் படியுங்கள்: Massive 108 TVK Sway: Risk ஆன கூட்டணி?

(Sanatana Dharma) போர்வையில் அதிகார ஆக்கிரமிப்பு

சனாதன தர்மம் (Sanatana Dharma) என்ற போர்வையில், ஆதிக்க சமூகத்தினர் தங்களை மற்றவர்களை விட மேம்பட்டவர்களாகக் காட்டிக் கொண்டனர்.

கல்வி மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் இவர்கள் அதீத கவனம் செலுத்தினர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கான பாதைகளைத் திட்டமிட்டு அடைத்தனர்.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த ஆதிக்கவாதிகளின் பிடி தளரவில்லை. மாறாக, அதே வலிமையோடு புதிய சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களையும் இவர்கள் எளிதாகக் கைப்பற்றிக் கொண்டனர்.

தங்களின் சமூக அந்தஸ்தைப் பயன்படுத்தி உயர்பதவிகளைத் தங்களுக்குள்ளேயே பங்கிட்டுக் கொள்ளும் சூழ்ச்சியைச் செய்தனர். (திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் வேரூன்றி 50 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்தும் கூட இந்த சூழ்ச்சிகளை வெல்ல முடியவில்லை என்பதும் கண்கூடு).

சாதியப் படிநிலைகளும் கொடூரமான தீண்டாமையும்

உயர் சமூகமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள், ஒட்டுமொத்த சமூகத்தையும் பல சாதிகளாகப் பிரித்தனர். உயர்சாதி முதல் தாழ்த்தப்பட்ட சமூகம் வரை பல படிநிலைகளை உருவாக்கி, அதில் பிளவுபடுத்தி வெற்றி கண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் சக மனிதர்களாகக் கூட மதிக்கப்படாத ஒரு இருண்ட காலம் இதுவாகும்.

உயர் சமூகத்தினர் வீட்டுத் திண்ணையில் பிற சமூகத்தினர் உட்கார்ந்தால் அது தீட்டு என்ற கொடூரமான சடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பொது வீதிகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் நீர் அருந்தவும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மனிதத் தன்மையற்ற இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் சனாதன தர்மத்தின் பெயராலேயே நியாயப்படுத்தப்பட்டன.

பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட அவலம்

சமூகத்தின் சரிபாதியான பெண்களின் அடிப்படை உரிமைகள் காலம் காலமாக இரக்கமின்றிப் பறிக்கப்பட்டு வந்தன. இந்த அவல நிலை சுதந்திர இந்தியாவிலும் எந்த மாற்றமுமின்றித் தொடர்ந்து அரங்கேறியது. கல்வி, சொத்துரிமை மற்றும் சுதந்திரமாகச் சிந்திக்கும் உரிமை ஆகியவை பெண்களுக்கு மறுக்கப்பட்டன.

சனாதன தர்மம் விதித்த கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டனர். பால்ய விவாகம், கைம்பெண் கொடுமை போன்ற பிற்போக்குத்தனமான நடைமுறைகள் தர்மத்தின் பெயரால் பாதுகாக்கப்பட்டன. பெண்களை வெறும் போகப் பொருளாகவும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரமாகவும் மட்டுமே இவர்கள் கருதினர்.

பெரியார் உயர்சாதி ஆதிக்கத்தை எதிர்த்தது ஏன்?

சமூகத்தில் புரையோடிப் போயிருந்த இந்த அநீதிகளைக் கண்டு தந்தை பெரியார் கடுமையாகக் கொதித்தெழுந்தார்.

பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் பிரிக்கும் சதியை அவர் வேரறுக்க நினைத்தார். இதனால்தான் உயர்சாதி ஆதிக்க சமூகத்தை அவர் சமரசமின்றி, மூர்க்கமாக எதிர்த்தார்.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் எந்தவொரு சாத்திரமும், தர்மமும், கடவுளும் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பெரியார் முழங்கினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியும், சுயமரியாதையும் மட்டுமே விடுதலையைத் தரும் என்பதை அவர் ஆழமாக நம்பினார். அதற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடினார்.

வைக்கம் போராட்டம் முதல் சுசீந்திரம் போராட்டம் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலய நுழைவுக்காகப் பெரியார் களம் கண்டார்.

மனிதனுக்கு மனிதன் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற உயர்சாதி ஆதிக்க வெறியை அவர் பொதுவெளியில் அம்பலப்படுத்தினார். உழைக்கும் மக்களின் வியர்வையை உறிஞ்சும் வஞ்சக வலையை அவர் அறுத்தெறிந்தார்.

சமூக நீதிக்கான பெரியாரின் சமரசமற்ற போர்

கடவுள், மதம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் பெயரால் நடக்கும் சுரண்டல்களைப் பெரியார் தோலுரித்துக் காட்டினார்.

பிராமணிய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் சமூக நீதி மலராது என்பதை அவர் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தினார். இதனால்தான் அந்த உயர் சமூகம் தூக்கிப் பிடித்த கடவுள் வழிபாட்டுக்கு எதிராக போர் முழக்கமிட்டார் பெரியார்.

இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகியவையே இதற்கான தீர்வு என வாதிட்டார்.

பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை மற்றும் மறுமண உரிமை வேண்டும் எனப் பெரியார் உரக்கக் குரல் கொடுத்தார்.

அவர் மூட்டிய பகுத்தறிவு நெருப்புதான் இன்று தமிழகத்தில் சமூக நீதி மரபாக வேரூன்றி நிற்கிறது. பெரியாரின் அந்தப் போராட்டமே ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் இன்று அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.

பகுத்தறிவும் சமத்துவ சமுதாயமும்

ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்தை நிமிர்ந்து நிற்கச் செய்த பெருமை தந்தை பெரியாரையே சாரும். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையே சமத்துவ சமுதாயத்திற்கான ஒரே திறவுகோலாகும்.

தற்போதைய சமூக நீதிக்கான கட்டமைப்புகள் அனைத்தும் அவர் போட்ட அடித்தளமே ஆகும்.

இன்றைய தலைமுறையும் ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளப் பெரியாரின் தத்துவங்கள் திசைகாட்டியாக அமைகின்றன.

சமூக நீதித் தளத்தில் நாம் அடைந்த முன்னேற்றங்களைத் தக்கவைக்க அவரது சமரசமற்ற போராட்டக் குணமே நமக்குத் துணைநிற்கிறது. உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அவரின் இறுதிச் செய்தியாகும்.

திராவிட இயக்கங்கள் அரசியல் பார்வை

பெரியாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மதிமுக, தேமுதிக என பல கட்சிகள் திராவிட சித்தாந்தத்தை நிலைநாட்ட ஒன்றன்பின் ஒன்றாக தோன்றின. அந்த வரிசையில்தான் இப்போது அரசியலுக்கு புதியவர்களாக இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகத்தை தமிழக மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.

பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் சனாதனம் ஆதரிக்கிறது என்பது இவர்களின் முதன்மைக் குற்றச்சாட்டாகும். சமத்துவத்திற்கு இது தடையாக இருப்பதாக இவர்கள் கருதுகின்றனர்.

தங்களின் விமர்சனம் தனிமனித நம்பிக்கைக்கு எதிரானது அல்ல என்றும், சனாதனம் என்ற பெயரில் பரப்பப்படும் சமூக அநீதிக்கு எதிரானது மட்டுமே என்றும் இக்கட்சிகள் தெளிவுபடுத்துகின்றன.

சனாதன தர்மத்தின் (Sanatana Dharma) பழைய கோட்பாடுகள் என்ன, இடையில் அதில் திணிக்கப்பட்ட கோட்பாடுகள் என்ன, இதனால் தமிழ் சமுதாயத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது. இப்போது திராவிட இயக்கங்களால் எப்படி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் இன்றைக்கும் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள்தான் தாங்கள் உயர்சமூக அடையாளம் இல்லாதவர்களாக இருந்தும், அதனால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளாமல் பின்னால் இருந்து இயக்கும் உயர் சமூகத்தினரின் சாவிக் கொடுத்த பொம்மையாக சிலர் திருத்தியமைக்கப்பட்ட சனாதன தர்ம கொள்கையை (Sanatana Dharma) தூக்கிப் பிடிப்பதையும் கூட தமிழ் சமூகம் சந்தித்து வருகிறது.

வர்ணாஸ்ரம தர்மம் மற்றும் சமூக ஆதிக்கக் குற்றச்சாட்டுகள்

பெரியாரிய மற்றும் அம்பேத்காரிய சிந்தனையாளர்கள் சனாதனத்தை பிராமணீயம் என்ற சொல்லோடு ஒப்பிடுகின்றனர். வர்ணாஸ்ரம அமைப்பு மக்களை நால்வகையாகப் பிரித்து ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக வாதிடுகின்றனர்.

கல்வி, உயர் பதவிகள் மற்றும் ஆன்மீக அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் தக்கவைத்துக் கொள்ள இக்கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டதாக விமர்சிக்கின்றனர். இது உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவி என்பது இவர்களின் பார்வை.

இருப்பினும், சனாதன தர்ம ஆதரவாளர்கள் இதனை மறுக்கின்றனர். பிராமணன் என்பது பிறப்பால் அல்ல, ஒருவரின் செய்கையாலும் குணத்தாலும் தீர்மானிக்கப்படுவது என்று அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

ஆனால் அவர்களின் சொல்லும், செயலுக்கும் பெரும் வேறுபாடுகள் என்றைக்கும் இருப்பதையும் மக்களால் உணர முடிகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அமைப்புகளின் பார்வை

இன்றைய அரசியல் சூழலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை சனாதனத்தை இந்தியாவின் தேசிய அடையாளமாகக் கருதுகின்றன. இது வெறும் மதம் அல்ல, இந்தியாவின் ஆன்மா என்று அவை கூறுகின்றன.

இந்தியாவின் பண்பாடு, சகிப்புத்தன்மை மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிக விழுமியங்களை சனாதனமே தாங்கிப் பிடிக்கிறது என்பது இவர்களின் வாதம்.

இதனை (Sanatana Dharma) இந்தியாவின் கலாச்சார அடையாளமாக முன்வைக்கின்றனர். இதற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களை ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டிற்கும் எதிரான தாக்குதலாக இவர்கள் பார்க்கின்றனர். சனாதனத்தைப் பாதுகாப்பதே தேசத்தைப் பாதுகாப்பது என்பது இவர்களின் கொள்கையாக உள்ளது.

இன்றைய அரசியலில், சனாதன தர்மத்தை (Sanatana Dharma) நிலைநாட்டுவதாகக் கூறி பிற சமூக மக்களை முன்னிறுத்தி பின்னால் இருந்து உயர் சமூகமாக கருதிக்கொள்ளும் ஒரு சாரார் இயக்கி வருகிறார்கள்.

இவர்களின் நோக்கம் சனாதன தர்மம் என்ற இந்து தர்மத்தின் வாயிலாக தங்களை மீண்டும் தங்களுக்கு கீழானவர்களாக மற்ற சமூகத்தினரை கொண்டு வந்து நிறுத்துவதுதான் அவர்களின் நோக்கமே தவிர, உண்மையான சனாதன தர்மத்தை நிலைநாட்டுவது அல்ல.

இதனால்தான் இந்து மதத்தில் கடவுளர்களை வழிபடும் பெரும்பாலான மக்கள் இந்த சனாதன தர்மம் முகமூடி அணிந்து மீண்டும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியாக வலம் வருகிறதோ என்ற அச்சத்தால் “சனாதன தர்மம் (Sanatana Dharma)” என்ற பெயரையே அச்சத்தோடு பார்க்கிறார்கள்.

நவீன ஜனநாயகமும் சனாதன தர்மமும்: ஒரு பார்வை

நவீன ஜனநாயகத்தின் அடிப்படை “அனைவரும் சமம்” என்பதாகும். ஆனால் சனாதனத்தின் வர்ணாஸ்ரமக் கோட்பாடு இந்த சமத்துவத்திற்கு முரணானது என்ற வாதம் வலுவாக உள்ளது.

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கர்ம வினை மற்றும் விதி போன்ற கருத்துக்கள் சமூக மாற்றத்தைத் தடுப்பதாக முற்போக்காளர்கள் கூறுகின்றனர். இது மனிதர்களின் பகுத்தறிவை முடக்குவதாகக் கருதப்படுகிறது.

பாலினச் சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை நோக்கிய நவீன உலகின் பயணத்தில், சனாதனத்தின் சில பழமையான நெறிமுறைகள் தடையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட உயர் சமூகத்தினர் சனாதன தர்மத்தின் உண்மையான கோட்பாடுகளை மறைத்து போலியான கோட்பாடுகளை உருவாக்கியதன் விளைவாகவே இன்றைக்கு ஆன்மிகத்திலும், கடவுள் வழிபாட்டிலும் ஈடுபாடு காட்டும் மக்கள் இந்த சனாதன தர்மம் என்பது போலி முகமூடி அணிந்தது என்று அச்சப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: Kamal Reaction: Makkal Needhi Maiam திமுகவுக்கு தரப்போகும் அதிர்ச்சி!

மக்கள் அதிகம் கேட்கும் கேள்விகள்

சனாதனம் என்பதன் நேரடிப் பொருள் என்ன?

சனாதனம் என்றால் எப்போதும் நிலைத்திருப்பது அல்லது அழிவற்றது என்று பொருள்.

சனாதன தர்மத்தின் அடிப்படை நூல்கள் எவை?

வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை இதன் அடிப்படை நூல்களாகும்.

கர்ம வினை என்றால் என்ன?

ஒருவர் செய்யும் நன்மைகளுக்கு நல்ல பலன்களும், தீமைகளுக்குத் தீய பலன்களும் கிடைக்கும் என்ற விதியாகும்.

மோட்சம் என்பது எதைக் குறிக்கிறது?

பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியில் இருந்து விடுபட்டு ஆன்மா இறைநிலையை அடைவதே மோட்சம் எனப்படும்.

திராவிட இயக்கங்கள் ஏன் சனாதனத்தை எதிர்க்கின்றன?

சனாதனம் சாதியக் படிநிலைகளையும், பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டையும் ஆதரிப்பதாகக் கருதுவதால் எதிர்க்கின்றன.

வர்ணாஸ்ரம தர்மம் என்றால் என்ன?

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை நால்வகையாகப் பிரிக்கும் சமூக அமைப்பைக் குறிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் சனாதனத்தை எவ்வாறு பார்க்கிறது?

ஆர்.எஸ்.எஸ் இதனை இந்தியாவின் பண்பாட்டு அடையாளம் மற்றும் கலாச்சார வாழ்வியல் முறையாகப் பார்க்கிறது.

சனாதனம் ஒரு மதமா அல்லது வாழ்வியல் முறையா?

இது ஒரு மதக் கோட்பாடு என்பதை விட, ஆதி இந்திய மக்களின் வாழ்வியல் முறையாகவே கருதப்படுகிறது.

சனாதன தர்மத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டா?

இது விவாதத்திற்குரியது. விமர்சகர்கள் இது பெண்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூற, ஆதரவாளர்கள் இது பெண்களை மதிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் கடந்த நூற்றாண்டு வரை சனாதன தர்மம் பெண்களை பல வகையிலும் கட்டுப்படுத்தியது.

நவீன காலத்திற்கு சனாதனம் பொருந்துமா?

அதன் அறநெறிகள் பொருந்தினாலும், வர்ணாஸ்ரமம் போன்ற பிரிவினைகள் நவீன ஜனநாயகத்திற்குப் பொருந்தாது என்பது பொதுவான கருத்தாகும்.

#SanatanaDharma #SocialJustice #IndianPolitics #Spirituality #Culture #DravidianIdeology #Equality #MithiranNews

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *