Read in English / பிற மொழிகளில் படிக்க:
தமிழக அரசியல் களம் இப்போது ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. “மதச்சார்பற்ற கூட்டணி” என்ற குடையின் கீழ் திமுகவுடன் இத்தனை காலமாக பயணித்த பல கட்சிகள், இப்போது ‘அதிகாரப் பகிர்வு’ மற்றும் ‘அமைச்சர் பதவி’ என்ற ஆசையில் தவெக (TVK) பக்கம் மெல்ல சாயத் தொடங்கியுள்ளன.

ஒரு ஊர்ல இரண்டு இடங்களில் கல்யாணம் நடந்தது. ஒரு பெரியவர் வீட்டு திருமணத்தில் (திமுக) பிரம்மாண்டமா ஒரு பந்தியை ஏற்பாடு செஞ்சார். அந்த பந்திக்கு “மதச்சார்பற்ற பந்தி”னு பேர் வெச்சு, ஊர்ல இருக்குற பலரையும் கூப்பிட்டு இலையைப் போட்டார்.
எல்லாரும் சமத்தா உக்காந்து “அண்ணே, ரசம் ஊத்துங்க, கூட்டு வைங்க”னு சொல்லிட்டு இருந்தாங்க. சில பேர் எனக்கு அதிகமாக பந்தியில வைக்கணும்னு உரிமையா கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsபக்கத்து தெருவில் நடந்த கல்யாணத்துக்கு கூட்டம் இல்லை. இலைகள் எல்லாம் காலியாக இருந்தது. இதனால் அவசரஅவசரமாக ஒரு பேனரை கொண்டு வந்து கல்யாண மண்டப வாசலில் வைத்தார்கள்.
அதில் கல்யாண விருந்தில் பங்கேற்கும் அனைவர் வீட்டுக்கும் ஷோபா அனுப்பி வைக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
இதை தெருவில் போன ஒருவர் செல்போனில் படம் எடுத்து பெரியவர் வீட்டு திருமண விழா பந்தியில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அவ்வளவுதான், பாதியிலேயே எல்லோரும் கையைக் கழுவிவிட்டு, சோறு போட்டவரை திரும்பிக் கூட பார்க்காம, பக்கத்து தெருவுல போடற சாப்பாட்டுக்கு ஓட்டமும், நடையுமா போய் சேர்ந்தாங்க…
கடைசியா மூன்று பேர் மட்டும்தான் பந்தியில் உட்கார்ந்திருந்தாங்க.. பெரியவருக்கு (DMK) ஒரே ஆச்சரியம்.
என்னங்க… நீங்க மட்டும் உட்கார்ந்திருக்கீங்க…. அடுத்த தெரு கல்யாண பந்தியிலே உட்காரும் எல்லோருக்கும் ஷோபா தரப்போறதா சொல்றாங்களேன்னு ஆதங்கத்தோடு கேட்டார்..
அதில் ரெண்டு பேர் (கம்யூனிஸ்ட் கட்சிகள்) சொன்னாங்க… நாங்க எதிர்பார்க்கிறது சொத்து சுகம் இல்லை. மக்கள் நலமாக வாழ வேணும். அதனால நாங்க போகலேன்னு சொன்னாங்க…
மூன்றாவதா உட்கார்ந்திருந்தவர் (DMDK) என்ன சொல்வதுன்னு தெரியாம இலையை வெறித்து பார்த்தபடியே இருந்தார்.
இப்போது இதுதான் இன்றைய அரசியல் நிலைமை.
மக்கள் சேவையை பிரதானம் என்ற கொள்கைப் பிடிப்புள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இந்த விஷயத்தில் அவசர முடிவை எடுக்கவில்லை.
கடைசி நேரத்தில் இணைந்த தேமுதிக இன்னும் கூட்டணியில் தொடர்ந்தாலும், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
மதச்சார்பற்ற கூட்டணியின் ஆணிவேராக இருந்த சிறுபான்மை சமூக அமைப்புகளும் கூட, சில அரசியல் காரணங்களுக்காக மெல்ல திமுகவை விட்டு விலகி நிற்கத் தொடங்கியுள்ளன.
திமுகவின் புதிய வியூகம்: சண்டைக்காரனுடன் சமாதானம்?
கூட்டணிக்குள் தனித்து விடப்பட்டுள்ள இந்தச் சூழல், திமுகவுக்கு ஒரு மிகப்பெரிய அக்னிப் பரீட்சை. இந்த நெருக்கடியான நிலையில், தேசிய அளவில் தொடர்ந்து விரோதம் பாராட்டி வந்த பாஜகவை நோக்கிய திமுகவின் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
“சாட்சியின் காலில் விழுவதை விட, சண்டைக்காரனோடு சமாதானம் செய்வதுதான் புத்திசாலித்தனம்” என்ற உணர்வு திமுகவின் ஒரு தரப்பினரிடையே மேலோங்கி வருகிறது.
மத்தியில் இன்று பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு பிரதான சக்திகள் மட்டுமே உள்ளன. மூன்றாம் அணி என்பது இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று.
பலவீனமாக உள்ள காங்கிரஸை நம்பி தேசிய அளவில் அரசியல் செய்வதை விட, பாஜகவுடன் குறைந்தபட்ச உத்தரவாதத்துடன் (Minimum Guarantee) இணக்கமாக செல்வது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்சிக்கும் நல்லது என மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.
அதாவது, மத்திய பாஜகவுடன் விரோதம் பாராட்டாமல் இணக்கமாக இருப்பது; அதே சமயம் தமிழ்நாட்டில் அவர்களின் அரசியல் ஆதிக்கம் வராமல் தடுப்பது என்ற புதிய ‘இரட்டை நிலைப்பாட்டை’ திமுக முன்னெடுப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது!
உங்களுடைய கருத்து என்ன? தமிழக அரசியலில் இந்த புதிய மாற்றம் சாத்தியமா? கமெண்டில் சொல்லுங்கள்! 👇
DMK #TamilNaduPolitics #TNElection2026 #TVK #BJP #Congress #Communist #DMDK #PoliticalHumor #DravidianPolitics #TNPolitics #Stalin #ThalapathyVijay #TamilNews #AlliancePolitics

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்