🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

(Peace Talks) Epic! அமெரிக்காவின் தந்திரம்.. ஈரான் அதிரடி!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

அமெரிக்கா தன்னுடைய சர்வாதிகார தன்மையை கைவிட்டால் மட்டுமே உண்மையான (Peace Talks) வெற்றிபெறும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த 21 மணி நேர அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்துள்ள நிலையில் இந்த கருத்து சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

peace talks

உள்ளடக்கம்

PEACE TALKS – பின்னால் மறைந்திருக்கும் உண்மை

போர் வரலாற்றில், இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தைகள் என்பது மோதல்களின் நிரந்தர முடிவாக ஒருபோதும் அமைவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

மாறாக, அவை போரின் வடிவத்தை மாற்றியமைக்கும் ஒரு தந்திரத்திற்கான இடைவேளை என்பதுதான் பல நாடுகள் பின்பற்றும் ராணுவக் கோட்பாடாக உள்ளது.

அந்த வகையில்தான் அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை தந்திரமும் அமைந்திருக்கிறது என்பதை அதன் சமீபத்தில் நகர்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இதைப் படித்தீர்களா? Iran Israel conflict: போர் நிறுத்தம்! 14 நாட்கள் நிம்மதி!

அமைதிப் பேச்சு (Peace Talks) உணர்த்தும் 4 மறுசீரமைப்பு காரணங்கள்

அமைதி காலத்தை ஒரு தரப்பு எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அந்தத் தரப்பின் வெற்றியும் தோல்வியும் நேரடியாகத் தீர்மானிக்கப்படுகிறது அல்லது நிர்ணயிக்கப்படுகிறது.

சமாதான காலத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்ளாத எந்த நாடும், மீண்டும் போர் எழுந்தால் போர்க்களத்தில் அது வீழ்வது உறுதி என்பது உலகப் போர் வரலாற்றின் தாரக மந்திரம்.

இரு தரப்புக்கும் இடையே போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது, திடீரென ஒரு தரப்பு அமைதிக்கு அழைப்பு விடுக்கிறது என்றால் அதற்கு 4 முக்கிய காரணங்கள் உண்டு.

முதலாவதாக, தொடர்ந்து போரினால் நம்பிக்கையை இழந்த படைவீரர்களுக்குப் பதிலாகப் புதிய வீரர்களைத் திரட்டுவதற்கு இந்த (Peace Talks) காலத்தை பயன்படுத்துவது வழக்கம்.

பழுதடைந்த ஆயுதங்களை சரிசெய்வது,, சோர்வடைந்த படைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்த நேரம் செலவிடப்படும்.

இதைப் படித்தீர்களா? Atom Bomb Secrets: அணுகுண்டு என்றால் உலகம் அஞ்சுவது ஏன்?

இரண்டாவதாக, அமைதிப் பேச்சு என்ற போர்வையில் எதிரிகளின் எல்லைகளுக்குள் ஊடுருவி, தாக்குதலுக்கான இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து உளவுத் தகவல்களை சேகரிப்பது முக்கியப் பணியாக இருக்கும்.

மூன்றாவதாக, முந்தைய தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய போர் முறைகளை வகுப்பதற்கும் இந்த (Peace Talks) மிகப் பெரிய அளவில் உதவும்.

இறுதியாக, தடையற்ற கடல் மற்றும் தரை வழிப் பாதைகளைப் பயன்படுத்தி நவீன ஆயுதங்களைச் சேகரிக்க அமைதி காலத்தை சாதகமாகப் பயன்படுத்துவதும் வழக்கம்.

இந்த 4 விஷயங்களுக்காகவே அமெரிக்கா அமைதிப் பேச்சு என்ற பம்மாத்து வேலையை செய்திருக்கிறது என்பதும் அதனுடைய நடவடிக்கைகளில் உறுதியாகிறது.

அத்துடன், சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், தங்களுக்குச் சாதகமான சூழல் வரும் வரை மிரட்டலுடன் தொடர்ந்து போரைத் தள்ளிப்போடவும் இது சிறந்த கருவியாகப் பயன்படும். அதைத்தான் இப்போது டிரம்ப் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

இதைப் படிக்கவும்: அறிவியல் கண்டுபிடிப்புகள்: 7 Shocking News

தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டதும் அல்லதும் அதற்கான அண்டை நாடுகளின் நட்பை புதுப்புத்துக் கொண்டு தேவையான பலம் கிடைத்தவுடன், ஏதோ ஒரு நொண்டிச்சாக்கை முன்வைத்து மீண்டும் போரைத் தொடங்குவதுதான் அமெரிக்கா என்ற ஆதிக்க சக்தியின் திட்டம் என்பது உலகறிந்த உண்மை.

இலங்கை போரில் நடந்த அமைதிப் பேச்சு (Peace Talks) தந்திரம்

சமாதான கால தந்திரத்திற்குச் சிறந்த உதாரணமாக இலங்கையில் நடந்த இறுதிப் போரை நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். காரணம் இதை ஏராளமான தமிழர்கள் உன்னிப்பாக கவனித்த அல்லது வாசித்த தகவல் என்பதால் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் தற்போதைய நிலைமையா எளிதில் உணர முடியும்.

2002-ல் ஏற்பட்ட (Peace Talks) ஒப்பந்தம், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் போக்கை முழுமையாக மாற்றியது.

இந்த அமைதி காலத்தை இலங்கை ராணுவம் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு தங்களுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொண்டது.

அவர்கள் சர்வதேச அளவில் ஆயுதக் கொள்முதல் செய்து தங்களின் கடற்படை மற்றும் விமானப் படையைப் பெருமளவு பலப்படுத்தி முன் எப்போதையும் விட வலிமைப்படைத்ததாக மாற்றினார்கள்.

முக்கியமாக, இந்த (Peace Talks) தளர்வுகளைப் பயன்படுத்திப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் உளவு வலைப்பின்னலை அவர்கள் விரிவுபடுத்தினார்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம், புலிகளைப் பிடிவாதமானவர்கள் என உலக அரங்கில் இலங்கை அரசால் மிக எளிதாகச் சித்தரிக்க முடிந்தது.

இதன் வாயிலாக, சர்வதேச நாடுகளின் ராணுவ மற்றும் உளவுத் தகவல்கள் சார்ந்த அத்தனையையும் தடையின்றி பெற்றார்கள்.

புலிகளின் தாக்குதல் தந்திரத்தை பின்பற்றி இராணுவத்தை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர்களுக்கு நவீன முறையில் போர் பயிற்சி அளித்தார்கள்.

இதுவே பிற்காலத்தில் புலிகளுக்கு மிகப் பெரிய பேரிடியாக விழுந்தது. போர்க்களத்தில் புலிகள் எதிர்பாராத பலத்த இழப்புக்களை சந்திப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

இதைப் படித்துவிட்டீர்களா? ஈரான் – இஸ்ரேல் போர்: ஈரான் முக்கிய அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் சரிவுக்கு வித்திட்ட அமைதி காலம்

இலங்கை புலனாய்வுத் துறையை விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் ஆழமாக ஊடுருவச் செய்து, அமைப்பிற்குள்ளேயே தங்களுக்குச் சாதகமான உளவாளிகளை உருவாக்கத் தொடங்கினார்கள்.

மிகமிக ஆழமாக ஊடுருவக் கூடிய திறமையான படைத் தளபதிகளை களத்தில் இறக்கினார்கள்.

புலிகளின் முக்கிய தளபதிகள் முதலில் அமைதி காலத்தில் (peace talks) கொல்லப்பட்டார்கள். இதன் மூலம் புலிகளின் நிதானத்தை சிதைக்கத் தொடங்கினார்கள்.

நிதானமான செயல்பாடுகளால் ஒரு சிறிய படையால் கூட மிகப் பெரிய படையை வெல்ல முடியும் என்பது போர் தந்திரங்களில் ஒன்று. அந்த வலிமைதான் முதலில் சிங்கள ராணுவத்தால் சிதைக்கப்பட்டது.

தந்திரம் வீரத்தை வென்ற கதை

மறுபுறம் விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான நகர்வுகளில் காட்டிய அதீத அக்கறையால், தங்களுடைய ராணுவ வலிமையை மேம்படுத்துவதிலும், படைத் தளபதிகளை காப்பதிலும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த அமைதிப் பேச்சு காலத்தில்தான் (Peace Talks) கிழக்கு மாகாணத் தளபதி கருணாவை பிரித்தார்கள். அதன் மூலம் புலிகளின் உளவு மற்றும் தரைப்படை பலத்தை பாதியாகக் குறைத்தார்கள்.

இந்த போர்த் தந்திரம்தான் சிங்கள ராணுவத்திற்குப் புலிகளின் கோட்டைகளுக்குள் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பை கொடுத்தது. அத்துடன் உள்ளூர் வரைபடத்தை நேரடியாகவும் துல்லியமாகவும் பெறவும் முடிந்தது.

கொரில்லா போர் முறையில் மிகவும் கைதேர்ந்த புலிகள், தங்களை ஒரு நிழல் அரசாங்கமாக நிலைநிறுத்த முயன்றது ஒரு வரலாற்றுப் பிழையாகவும் அமைந்துவிட்டது.

புலிகள் நிழல் அரசாங்கமாக மாற முயன்றதால் அவர்கள் ஒரு நிலையான இலக்காக மாறினார்கள்.. அதனால்தான் அவர்கள் ராணுவத்தின் தாக்குதலுக்கு மிக எளிதில் இலக்காகி வீழ்ந்தார்கள்.

இலங்கை ராணுவம் நவீன தொழில்நுட்பங்களை நோக்கி நகர்ந்தபோது, புலிகள் வழக்கமான மரபுவழிப் போரிலேயே அதிக கவனம் செலுத்தியதும் அவர்கள் போரில் பின்னடைவை சந்திக்க காரணமாக அமைந்தது.

வான்புலிகள் மற்றும் கடற்புலிகளின் வளர்ச்சி இருந்தாலும்கூட, ராணுவத்தின் நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை அவர்களால் ஈடுகட்டக் கூடிய அளவில் உடனடியாக அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாமல் போனது.

ஒரு தரப்பு அமைதியை உண்மையாக நம்பியது, மறுதரப்பு அமைதியை ஒரு வியூகமாக மாற்றி பயன்படுத்தியது, அதன் விளைவு தந்திரம் வீரத்தை வென்றது.

ஈரானின் அமைதிப் பேச்சு (Peace Talks) வியூகங்கள்

இன்று உலக அரசியல் அரங்கில் ஈரானின் ஒவ்வொரு ராணுவ மற்றும் அரசியல் நகர்வுகளும் மிகவும் கூர்மையாக உற்று பார்க்கப்படுகின்றன.

ஈரானியர்கள் அல்லது பாரசீகர்கள், போர்க்கலையில் பல்லாயிரம் ஆண்டுகால அனுபவம் கொண்டவர்கள்தான். இது வரலாற்று உண்மை.

அவர்கள், எதிரிகள் எப்போது (Peace Talks) அழைப்பு விடுகிறார்களோ, அப்போது எதிரிகள் முன் எப்போதையும் விட மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்பதை ஈரான் பல அனுபவங்களில் உணர்ந்திருக்கிறது.

அதனால், ஈரான், மேற்கத்திய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது தனது பாதுகாப்பை பலப்படுத்த தவறியதில்லை.

குறிப்பாக, ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும், பிராந்திய அளவிலான ஆதரவுப் படைகளையும் பலப்படுத்த ஒருபோதும் தவறுவதே இல்லை.

எதிரி உன்னை நோக்கி கை குலுக்க வரும்போது, உன்னுடைய மறு கை வாளின் பிடியில் இறுக்கமாக பிடித்திருக்க வேண்டும் என்ற போர் தந்திரம் ஈரானுக்கு புதிதல்ல.

அந்த வகையில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட்டபோது, அதன் பின்னால் உள்ள தந்திரத்தை உணர்ந்தே இருக்கிறது. காரணம் எந்த போரிலும் நடத்தப்படக் கூடிய முதல் கட்ட பேச்சுவார்த்தை என்பது நிரந்தர அமைதிக்கு வழிவகுக்காது.

மாறாக அது மிரட்டல் மற்றும் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தும் தந்திரமாக பயன்படுத்தப்படும் என்பதுதான் உண்மையான உலக வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகள்.

பொதுவாக, சமாதானக் காலத்தில் எதிரி எத்தகைய வலிமையை மீண்டும் பெறக்கூடும் என திட்டமிட்டு அதைவிட இருமடங்கு பலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுவான போர் விதி. அந்த விதியை பின்பற்றாத எந்த நாடும் அமைதிப் பேச்சு (peace talks) தோல்வியில் முடியும்போது அழிவை சந்திக்கும் என்பதும் உண்மை.

எதிரி எப்போது அமைதி பற்றிப் பேசத் தொடங்குகிறானோ, அப்போதே நாம் உஷார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அடுத்ததாகத் தொடங்கப்போகும் போர் முந்தைய போரைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும் என்பதை ஈரான் ஆழமாக உணர்ந்திருக்கிறது.

அமெரிக்க பிரதிநிதிகளின் (Peace Talks) பின்னடைவு

சர்வதேச அரசியலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான (Peace Talks) ஒருபோதும் முழுமையான வெற்றியை எட்டாததற்கு ஒரு கசப்பான உண்மை உள்ளது.

அது அந்தந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் தார்மீக மற்றும் அறிவுசார் தகுதியை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது.

உலகின் வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள், சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டவர்கள் அல்ல.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது அந்நாட்டு மக்கள் அல்ல, மாறாக இஸ்ரேலிய ஆதரவு பெற்ற சியோனிச அமைப்புகள்தான்.

அமெரிக்கத் தூதர்களும் அதிகாரிகளும் பெரும்பாலும் இஸ்ரேலிய நலன்களைப் பாதுகாக்கும் முகவர்களாகவே மாறி இந்த அமைதிப் பேச்சில் (Peace Talks) கலந்துகொண்டார்கள்.

இவர்களுக்குச் சொந்தமாக முடிவெடுக்கும் துணிவு சிறிதும் கிடையாது. தங்களுக்கு உயர்மட்டத்தில் இருந்து வரக்கூடிய கட்டளைகளை செயல்படுத்தும் இயந்திரங்கள் அவ்வளவுதான்.

இவர்களின் நடவடிக்கைகளை ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் கூட அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய சூழலில் அவர்களால் கண்டிக்க முடியுமே தவிர தண்டிக்க முடியாது. அதற்கான காலத்துக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அப்படிப்பட்டவர்கள்தான் தற்போது நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள். மறுபுறமோ, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் மெத்த படித்தவர்கள். ஈரானிய நலனில் சிறிதும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற தேசப்பற்று மிக்கவவர்கள். அவர்களுக்கு யாரும் எஜமானர்கள் அல்ல. நாட்டு நலன் மட்டுமே அவர்களின் எஜமானர்களாக கருதுபவர்கள்.

இப்போது இந்த பேச்சுவார்த்தை ஏன் தோல்வியில் முடிந்தது? என்பதையும் சொல்லி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

வெளியுறவுக் கொள்கையில் AIPAC (American Israel Public Affairs Committee) செல்வாக்கு?

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் AIPAC (American Israel Public Affairs Committee) போன்ற அமைப்புகள் பெரும் செல்வாக்கு செலுத்துவதாக சொல்லப்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒருசில உங்கள் பார்வைக்கு.

AIPAC நேரடியாக வேட்பாளர்களுக்கு நிதி வழங்குவதில்லை. ஆனால் அதன் உறுப்பினர்கள் மூலம் ஆதரவான வேட்பாளர்களுக்குப் பெரும் தொகையைத் திரட்டித் தருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக இல்லாத வேட்பாளர்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்து விளம்பரங்கள் மூலம் அவர்களை தோற்கடிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் (congress) இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதை உறுதி செய்ய இந்த அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் தருகின்றன. விமர்சனம் செய்பவர்கள் மீது யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்ற முத்திரை குத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு.

ஜான் மியர்ஷைமர் மற்றும் ஸ்டீபன் வால்ட் ஆகிய பேராசிரியர்கள் எழுதிய “The Israel Lobby and U.S. Foreign Policy” என்ற புத்தகம், இந்த அமைப்புகள் அமெரிக்காவின் தேசிய நலனை விட இஸ்ரேலின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறது..

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்பிலும் AIPAC பலமான பிடியை வைத்திருக்கிறது. இதனால் அதிபர்கள் மாறினாலும் கூட, இஸ்ரேலுக்கான ராணுவ மற்றும் ராஜதந்திர ஆதரவு மாறாமல் தொடர்கிறது என்கிறார்கள்.

அமைதிப் பேச்சு (Peace Talks) ஈரானின் ராஜ தந்திரமும்

இப்போது மீண்டும் அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுக்கு வரலாம். ஈரான் தரப்பில் எந்தவொரு அமைதிப் பேச்சு (Peace Talks) மேசைக்கு வருபவர்களும் வெறும் அரசியல்வாதிகள் அல்ல; அவர்கள் சிறந்த கல்விமான்கள். அந்த மண்ணின் மைந்தர்கள் என்று பெருமைப்படுபவர்கள். சர்வதேச சட்டங்களை ஆழமாகக் கற்றறிந்தவர்கள்.

அவர்களிடம், தங்கள் நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் தொலைநோக்கு பார்வையும், ஆழமான பகுத்தறிவு தன்மையும் காணப்படுவதோடு, அவர்களின் வாத, பிரதிவாதத்தில் எடுத்து வைக்கப்படும் கருத்துக்கள் சர்வதேச சட்டங்களை பின்பற்றி இருப்பதையும் காண முடிகிறது.

சுயசிந்தனையுள்ள அறிஞர்களுக்கும், மற்றவர்களின் ஆதிக்கத்தில் இயங்கி வரும் ஏஜெண்டுகளுக்கும் இடையை நடந்த அமைதிப் பேச்சுதான் (Peace Talks) இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது.

இந்த குறுகிய காணொளியை பார்க்கலாமா? பெர்முடா இரகசியம் அறிந்து அதிர்ச்சியடையுங்கள்


FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாகிஸ்தானில் நடந்த ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணம் என்ன?

அமெரிக்க பிரதிநிதிகளின் தேவையற்ற நிபந்தனைகளும், இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாடுகளுமே இந்த பேச்சுவார்த்தை முறிய முக்கிய காரணமாகும்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்கா குறித்து கூறியது என்ன?

அமெரிக்கா தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

போர் நிறுத்த காலத்தில் நாடுகள் என்ன செய்யும்?

பழைய ஆயுதங்களை புதுப்பித்தல், உளவுத் தகவல்களை சேகரித்தல் மற்றும் படை மறுசீரமைப்பு போன்ற பணிகளுக்காக இந்த நேரத்தை நாடுகள் பயன்படுத்தும்.

இலங்கை போரில் சமாதான ஒப்பந்தம் எப்படி தோல்வியடைந்தது?

2002ல் ஏற்பட்ட போர் நிறுத்த காலத்தில் இலங்கை ராணுவம் நவீன ஆயுதங்களை வாங்கியும், உளவு வலையை விரித்தும் தன்னை தந்திரமாக பலப்படுத்திக்கொண்டது.

விடுதலைப் புலிகளின் சரிவுக்கு 2002 அமைதி ஒப்பந்தம் காரணமா?

ஆம், சமாதான காலத்தில் நிழல் அரசாங்கமாக மாற முயன்றதும், கருணாவின் பிரிவும் புலிகளின் தற்காப்பு அரண்களை பெருமளவு பலவீனப்படுத்தியது.

ஈரானின் போர் தந்திரங்கள் என்ன?

எதிரி கைகுலுக்க வரும்போது மறு கையில் வாளைத் தயாராக வைத்திருக்கும் கொள்கையை ஈரான் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பது யார்?

அமெரிக்காவின் பெரும்பாலான வெளியுறவுக் கொள்கைகள் AIPAC போன்ற சியோனிச லாபி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

AIPAC சியோனிச அமைப்பின் பின்னணி என்ன?

இது அமெரிக்காவில் செயல்படும் ஒரு வலுவான இஸ்ரேலிய ஆதரவு அமைப்பு, அமெரிக்காவின் அரசியல் முடிவுகளில் இது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.

ஈரானிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எப்படி செயல்படுகிறார்கள்?

அவர்கள் சர்வதேச சட்டங்களை முழுமையாக அறிந்த அறிஞர்களாகவும், நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத சுதந்திர சிந்தனையாளர்களாகவும் செயல்படுகிறார்கள்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஏன் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை?

அது நிரந்தர அமைதிக்கானது அல்ல, மாறாக போரின் வடிவத்தை மாற்றுவதற்கும் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்குமான ஒரு தந்திரமான இடைவெளியாகும்.

#IranUSTalks #GeopoliticsTamil #PeaceTalksFailure #SriLankaWarHistory #GlobalPolitics #IranStrategy #MithiranNews

    ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

    🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *