Read in English / பிற மொழிகளில் படிக்க:
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா மோதல்: உடனுக்குடன் தகவல்கள் மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உலக நாடுகளை உலுக்கியுள்ள இந்த மோதலின் தொடக்கம் முதல் தற்போது வரையிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
மார்ச் 07 – கடந்த 24 மணி நேரத்தில் ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் 6-வது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்தது நேற்றைய முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) பகுதி மீதும், அமெரிக்கத் தளங்கள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அதேசமயம், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தொடர்ந்து கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஉலக வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் தலைநகரான டெஹ்ரான் மீது 7-ஆவது நாளாகக் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
போர் சூழல் காரணமாகச் சர்வதேச வான்வெளியில் இதுவரை 20,000 விமானங்கள் ரத்து செய்யபட்டிருக்கின்றன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் என்பது தெரியவந்தது.
(செய்திகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் 2 மணி நேர இடைவெளியில் இந்த அப்டேட்டுகளை வாசகர்கள் படிக்க முடியும்.)
மார்ச் 6, அதிகாலை (இன்று காலை 7:45 மணி வரை):
- பஹ்ரைனில் தாக்குதல்: பஹ்ரைன் தலைநகர் மனாமா-வில் உள்ள இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் இன்று அதிகாலை அறிவித்தது.
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.
மார்ச் 5, இரவு: - இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: ஈரானிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளைக் குறிவைத்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறித்தன; இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
- ஈரான் வெளியுறவுத்துறையின் எச்சரிக்கை: அமெரிக்காவும் இஸ்ரேலும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் அது அவர்களுக்குப் “பேரழிவாக” அமையும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) எச்சரித்தார்.
மார்ச் 5, பகல்/மாலை: - ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு: இந்தியப் பெருங்கடலில் இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) மூலம் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உறுதிப்படுத்தினார். இதில் 87 பேர் உயிரிழந்தனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தி மூடல்: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC) அறிவித்தது.
- வான்வழித் தாக்குதல்கள்: ஈரானில் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்களை அழிக்க அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசின. இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் சைபர் போர் தலைமையகத்தின் மீது குண்டுவீசியது.
- அமெரிக்க செனட் வாக்கெடுப்பு: ஈரானுக்கு எதிரான போரைத் தொடர அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை வாக்கெடுப்பு மூலம் (53-47) நிராகரித்தது.
மார்ச் 4, 2026 – ஈரான் – இஸ்ரேல் முக்கிய அப்டேட்கள்
- மாலை 06:13: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160 குழந்தைகள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கடும் அதிர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- மாலை 04:00: லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா தளங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல்கள் தொடர்ந்தன.
- பிற்பகல் 02:15: துபாயில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
- பகல் 11:30: போர் பதற்றம் காரணமாக மேற்காசியாவில் உள்ள இந்தியப் பயணிகளுக்கும் குடிமக்களுக்கும் உதவுவதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) சிறப்பு கட்டுப்பாட்டு அறையை (Control Room) அமைத்தது. இந்திய விமான நிறுவனங்கள் அப்பகுதிக்கு 58 சிறப்பு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- காலை 09:00 – 10:00 ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அதிபர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல்களை (Broad wave of strikes) தொடங்கியது. டெஹ்ரானின் வடகிழக்கு பகுதியில் பலத்த வெடிச்சத்தங்கள் பதிவாகின.
- காலை 8:00: ஈரான் வான்வெளியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இந்தப் போரில் ஈரானில் சுமார் 780-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசென்ட் (Red Crescent) அமைப்பு தெரிவித்திருக்கிறது.
- காலை 6:00: ஈரானின் ‘அசெம்பிளி ஆஃப் எக்ஸ்பெர்ட்ஸ்’ (Assembly of Experts) கட்டிடம் மற்றும் தெஹ்ரானில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கியது என அறிக்கைகள் வெளியாகின.
- காலை 4:00 – 5:30: இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது “பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்” (Broad wave of strikes) நடத்தியிருப்பதாக தகவல் வெளியிட்டது
- அதிகாலை 2:30: டெல் அவிவ் பகுதியில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததில் ஒரு பெண் காயமடைந்தார். மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்டனர்.
- அதிகாலை 12:00 – 1:30: ஈரான் புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது தொடுத்தது. இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் சத்தம் கேட்கத் தொடங்கின.
மார்ச் 3, 2026 – ஈரான் – இஸ்ரேல் முக்கிய அப்டேட்கள்
- இரவு 11:30 மணி: சவூதி அரேபியா ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
- இரவு 10:00 மணி: துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
- இரவு 8:00 – 10:00 மணி: ஈராக்கில் உள்ள எர்பில், கத்தாரில் உள்ள தோஹா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி வான்வெளியில் அடிக்கடி பெரும் வெடிச்சப்தம் கேட்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
- இவை ஈரான் ஏவிய ஏவுகணைகளை இந்த நாடுகளின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து தாக்கி அழித்ததன் காரணமாக ஏற்பட்ட சத்தமாக கருதப்படுகிறது.
- இரவு 09:30 (IST): ஈரானின் அரசு ஒளிபரப்பு தலைமையகத்தை (IRIB) இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
- இரவு 09:15 (IST): இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை ஈரான் செலுத்திய ஏவுகணைகள் தாக்கின. இந்த நிலையில், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் சில ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழித்துள்ளன.
- இரவு 08:45 (IST): வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- இரவு 08:15 (IST): சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- (இரவு 7:55 மணி IST): ஈரானிய அதிகார மையத்தின் மீது தாக்குதல்: ஈரானின் புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க அமைப்பின் (Assembly of Experts) கட்டடத்தின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
- இந்தத் தாக்குதலில் அந்தக் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
- (இரவு 7:45 மணி IST): ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்: மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனது அவசரக் கூட்டத்தை நடத்தியது. “உலகம் ஒரு மிகப்பெரிய அணுமின் அழிவின் விளிம்பில் உள்ளது” என ஐநா பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.
- (இரவு 7:24 மணி IST): ரியாத் தூதரகத் தாக்குதலுக்குக் கண்டனம்: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ (Muslim World League) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- (இரவு 7:06 மணி IST): டெல் அவிவ் நகரில் ஏவுகணைச் சிதறல்கள்: ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்தன. ஆனால், அதன் சிதறல்கள் டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் விழுந்தன. இதைக் கண்டு அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.
- (மாலை 6:30 மணி IST): ஜோர்டான் பதற்றம்: ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஜோர்டான் வான்வெளி வழியாகச் செல்வதைத் தடுக்க, ஜோர்டான் தனது வான்வெளியை முழுமையாக மூடியுள்ளது. அந்நாடு தன்னுடைய வான்வெளியை கடந்து செல்லும் ட்ரோன்களை தொடர்ந்து சுட்டு வீழ்த்தி வருகிறது.
- (மாலை 6:06 மணி IST): பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளபதிகள் தங்கியிருந்த இடங்களைக் குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.
- (மாலை 5:50 மணி IST): எல்லையோர மக்கள் வெளியேற்றம்: ஹிஸ்புல்லா தாக்குதல் எதிரொலியாக லெபனான் எல்லையில் இருந்து 80,000 இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.
- (மாலை 5:40 மணி IST): ஈரான் ஏவுகணைகள் தயார்: இஸ்ரேலைத் தாக்க ‘ஷாபாப்-3’ உள்ளிட்ட அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுதரைக்குக் கொண்டு வந்தது ஈரான் ராணுவம்.
- (மாலை 5:30 மணி IST): ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை: போர் நிறுத்தப்படாவிட்டால் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அகதிகள் நெருக்கடி ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை.
- (மாலை 5:20 மணி IST): இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சி: போர் பதற்றத்தால் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்தது; முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு.
- (மாலை 5:10 மணி IST): நெதன்யாகு நேரடி எச்சரிக்கை: “ஈரான் பெரிய தவறு செய்துவிட்டது, அதற்கான விலையை இன்று இரவே கொடுக்கும்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை.
- (மாலை 4:45 மணி IST): தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: போர் அச்சத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கித் திரும்பியதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது.
- (மாலை 4:00 மணி IST): வான்வெளி மூடல்: ஈரானிய ஏவுகணைகள் வான்வெளி வழியாகச் செல்வதைத் தொடர்ந்து, ஜோர்டான் மற்றும் ஈராக் நாடுகள் தங்கள் வான்வெளியை முழுமையாக மூடின.
- (பிற்பகல் 2:15 மணி IST): ஈரான் அவசரக் கூட்டம்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் ராணுவத் தளபதிகள் எச்சரிக்கை.
- (பிற்பகல் 1:50 மணி IST): எல்லையை நோக்கி இஸ்ரேல் தரைப்படை: ஹிஸ்புல்லாவுடன் நேரடி மோதலுக்குத் தயாராகும் வகையில், லெபனான் எல்லைக்கு இஸ்ரேலிய ராணுவம் (IDF) நகர்வு.
- (பிற்பகல் 1:30 மணி IST): ஐநா அவசர எச்சரிக்கை: போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அழிவைச் சந்திக்கும் என பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை.
- (பிற்பகல் 1:10 மணி IST): இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல்: இஸ்ரேலிய மின்சாரக் கட்டமைப்பு மீது ஈரான் நடத்திய மிகப்பெரிய சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு.
- (நண்பகல் 11:50 மணி IST): டெல் அவிவ் தாக்குதல்: ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம் என இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல்.
- (நண்பகல் 11:30 மணி IST): ரஷ்யா – சீனா கவலை: போர் உலகப் போராக மாற வாய்ப்புள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை; இரு நாடுகளும் போரை நிறுத்த வலியுறுத்தல்.
- (நண்பகல் 11:10 மணி IST): அமெரிக்கப் படைகள் உஷார்: இஸ்ரேலைப் பாதுகாக்க மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் முழு தயார் நிலையில் வைப்பு.
- (காலை 10:50 மணி IST): சைபர் தாக்குதல் தீவிரம்: இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலால் ஈரானின் முக்கிய அரசு, ராணுவ இணையதளங்கள் மற்றும் தகவல் தொடர்பு முடக்கம்.
- (காலை 10:30 மணி IST): எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்?: பாதுகாப்பு கருதி கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த சவுதி மற்றும் குவைத் நாடுகள் ஆலோசனை.
- (காலை 09:45 மணி IST): புதிய தளபதி உறுதிமொழி: அலி காமெனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப்படும் என ஈரானின் புதிய தளபதி முகமது ரெசா பலாஹ்ஜாதே சபதம்.
- (காலை 09:10 மணி IST): வடக்கு எல்லையில் மக்கள் வெளியேற்றம்: ஹிஸ்புல்லா தாக்குதல் எதிரொலியாக இஸ்ரேலிய எல்லை நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற உத்தரவு.
- (காலை 08:20 மணி IST): யேமன் ஹூதிகள் தாக்குதல்: செங்கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்.
- (காலை 07:30 மணி IST): கச்சா எண்ணெய் விலை உயர்வு: எண்ணெய் விலை பீப்பாய்க்கு $110-ஐத் தாண்டியது; உலக பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி.
- (காலை 06:00 மணி IST): இரவு நேரத் தாக்குதல்கள்: லெபனான்-இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே விடிய விடியக் கடும் போர்.
- இதர முக்கியச் செய்திகள்: ரியாத் அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்; குவைத்தில் ஈரானியத் தாக்குதலால் 6 அமெரிக்க வீரர்கள் பலி; கத்தார் மற்றும் யுஏஇ (UAE) வான்வெளியில் ஏவுகணைகள் இடைமறிப்பு.
மார்ச் 2, 2026 – ஈரான் – இஸ்ரேல் மோதல்
- லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
- குவைத்தில் விபத்து: குவைத் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு, தவறுதலாக 3 அமெரிக்க F-15 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. எனினும், விமானிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
- ஈரான் எச்சரிக்கை: உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) மூடுவதாகவும், கடந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்தது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8% வரை கடுமையாக உயர்ந்தது.
- ட்ரம்ப் & நெதன்யாகு அறிவிப்பு: “இந்த ராணுவ நடவடிக்கை (Operation Epic Fury) நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். “இது முடிவில்லாத போராக மாறாது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்தார்.
- இதை படித்தீர்களா: ஈரான் இஸ்ரேல் யுத்தம்: அமெரிக்கா தாக்குதல்! பகீர் திருப்பம்
மார்ச் 1, 2026 – ஈரான் – இஸ்ரேல் போரின் தொடக்கம்
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ‘ப்ரீ-எம்டிவ்’ (Pre-emptive strike) கூட்டு ராணுவத் தாக்குதலைத் தொடங்கின. அமெரிக்காவின் B-2 ரக ஸ்டெல்த் (Stealth) போர் விமானங்கள் ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி மையங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.
ஈரான் உச்ச தலைவர் பலி: இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவரான அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்.
பதிலடி: இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்களைக் குறிவைத்தும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்தும் ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது.
போரின் தொடக்கம்: ஈரான் மீதான முதல் கூட்டுத் தாக்குதல் (மார்ச் 1, 2026)
திட்டமிட்ட அதிரடி (Operation Epic Fury): அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ‘ப்ரீ-எம்டிவ்’ (Pre-emptive strike) எனப்படும் முன் எச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கின. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய ராணுவத் தளங்களை முடக்கும் நோக்கில் இந்த அதிதீவிர கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஸ்டெல்த் விமானங்களின் தாக்குதல்: அமெரிக்காவின் அதிநவீன B-2 ரக ஸ்டெல்த் (Stealth) போர் விமானங்கள் மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்து சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. ஈரானின் முக்கிய ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் முதல் கட்டமாக அழிக்கப்பட்டன.
உச்ச தலைவர் பலி: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வாக, இந்த முதல் கட்ட அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவரான அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்.
பதிலடிப் போர் மூண்டது: ஈரானின் தலைமைக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத பேரிழப்பைத் தொடர்ந்தே, ஈரான் தனது கடுமையான பதிலடியைத் தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசத் தொடங்க, மத்திய கிழக்கு முழுவதும் இந்தப் போர் முழுமையாக வெடித்தது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் எப்போது தொடங்கியது?
மார்ச் 1, 2026 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ மையங்கள் மீது நடத்திய ‘ப்ரீ-எம்டிவ்’ (Pre-emptive strike) கூட்டுத் தாக்குதலுடன் இந்தப் போர் தொடங்கியது.
இந்தத் தாக்குதலுக்கான முக்கிய காரணம் என்ன?
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை முடக்குவதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த முதல் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் பலியானதால், போர் தீவிரமடைந்தது.
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஏன் முக்கியமானது?
இது உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையாகும். இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தப் பாதையை மூடுவோம் என ஈரான் எச்சரித்ததால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த மோதலில் பிற நாடுகளின் நிலை என்ன?
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. மேலும், குவைத், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடப்பதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
போர் பதற்றம் நிலவும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அவசர உதவி எண்கள் என்ன?
மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளன:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (டெல்லி கன்ட்ரோல் ரூம்): * Toll-Free: 1800 118 797 தொலைபேசி: +91-11-23012113, +91-11-23014104
WhatsApp: +91-9968291988
Email: situationroom@mea.gov.in
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு (டெல் அவிவ் தூதரகம்): * அவசர எண்கள்: +972-54-7520711, +972-54-3278392 Email: cons1.telaviv@mea.gov.in
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு (தெஹ்ரான் தூதரகம்): * அவசர எண்கள்: +98 912 810 9115, +98 912 810 9109 Email: cons.tehran@mea.gov.in
லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு (பெய்ரூட் தூதரகம்): * மொபைல்/WhatsApp: +961 76860128 Email: cons.beirut@mea.gov.in
ஐக்கிய அரபு அமீரகம் (UAE – துபாய்/அபுதாபி): * Toll-Free: 800-46342 WhatsApp: +971-543090571
இந்திய ராணுவத்தின் வெற்றிக் கதை – இந்த விடியோவை காணுங்கள் – இந்திய ராணுவ சாதனையை அறியலாம்

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்