தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை வாசித்தார்.

சுமார் 2.07 நிமிடங்கள் உரையாற்றிய அவருடைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்கள், துறைவாரியாக நிதிஒதுக்கீடுகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

2) பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

3) `மருத்துவத் துறைக்கு ரூ.20 ஆயிரத்து 198 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கk

1. இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

 1. தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
 2. 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும்
 3. தமிழ்ப் புதல்வன் என்ற புதியத் திட்டத்துக்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவியருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
 4. ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு
 5. 45 பாலிடெக்னிக்குகள், தொழில்துறை 4.0 தரத்துக்கு உயர்த்தப்படும்.
 6. புதிதாக 10 இடங்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலித்தனவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும்.
 8. அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கப்படும்.
 9. காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக 600 கோடி ஒதுக்கீடு.ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 10. 7.5 சதவீத உள்ஒதுக்கீாடு மூலம் 10 ஆயித்துக்கும் மேற்பட்ட மருத்துவம், தொழில் படிப்பு படிக்கும் நிலையில், அவர்களுக்கான கல்வி, உணவு உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களுக்காக ரூ.511 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 11. புதுமைப் பெண் திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
 12. அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக் கழங்கரளில் படிக்க முற்பட்டால் அவர்களுக்கான உதவித் தொகை திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்
 13. 1, 000 புதிய வகுப்பறைகள், 15 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் கட்ட ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மகளிர் திட்டங்கள்


1. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

2. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.

3. 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

4. பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டையிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும்

5. 10 ஆயிரம் புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.

6. ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்


வேலைவாய்ப்பு

 1. சென்னை, கோவை, மதுரையில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
  கோவையில் 20 லட்சம் சதுரடியில் 1100 கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
 2. மத்திய அரசுப் பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 3. இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப் பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.
 4. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா 20 லட்சம் சதுரடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.
 5. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்.
 6. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

கட்டமைப்பு திட்டங்கள்
சாலைகள் மேம்பாடு திட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் சாலைப் பணிகளுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியும், புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.1,289 கோடியும், சிங்காரச் சென்னை திட்டத்துக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2024-25 நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் மினி பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும்.
திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதிகள் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் வழித் தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு முனையம் வரை நீட்டிக்க விரிவாக்கத் திட்ட அறிக்கை ரூ.4625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டிருக்கிறது.
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டத்துக்கு 10 கோடி ஒதுக்கீடு
தாமிரபரணி, வைகை, நொய்யல் நதிகள் புனரமைக்க திட்டம் அறிமும் செய்யப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.

தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்

தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் முதல்கட்டமாக 5 லட்சம் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படுவர் என அரசு தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் கணிப்பின்படி, தமிழகத்தில் 2.2 சதவீத மக்கள் பன்முக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலையில், அவர்களில் 5 லட்சம் பேருக்கு உதவி புரியும் திட்டமாக இந்த தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் குடும்பங்கள் இன்னும் குடிசைகளில் வாழ்வது கணக்கெடுப்பில் தெரிய வந்ததை அடுத்து குடிசை இல்லா தமிழ்நாடு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பட்ஜெட் பார்வை


சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதோடு, மேலும் சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் நெருங்கக் கூடிய நேரத்தில் கவர்ச்சிகரமான திட்ட அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் இந்த பட்ஜெட்டில் அப்படி எந்த கவர்ச்சிகரமான திட்டங்களும் இடம்பெறவில்லை.
பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை ரூ.1.08 லட்சம் கோடியாக உயரும். மானிய செலவுகள் ரூ.1.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பணவீக்கம் தேசிய சராசரியை விட குறைந்திருக்கிறது. மூலதனச் செலவு அதாவது கட்டமைப்பு செலவுகள் இம்முறை ரூ.47 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.42,532 கோடியாக இருந்தது.
நிதி பற்றாக்குறை 3.5 சதவீத்துக்குள் இருக்க வேண்டும் என்று நிதி பொறுப்புடைமை சட்டம், நிதிக்குழு சொல்கிறது. அந்த வரம்புக்குள் தமிழ்நாடு அரசின் நிதிபற்றாக்குறை இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
சொந்த வரி வருவாய் வணிகவரித்துறை வருவாய் 15 சதவீதம் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அத்துறை மூலம் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் வரி வருவாயின் நிதி பகிர்வு 6.64 சதவீதத்தில் இருந்து தற்போது 4.08 சதவீதமாக குறைந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் மானியத் தொகையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.