முள்ளங்கி – பன்னீர் பொரியல்

முள்ளங்கி
Spread the love

நாம் இப்போது முள்ளங்கி – பன்னீர் பொரியல் செய்வதற்கான பொருள்கள் அதன் செய்முறை விளக்கத்தை அறியலாம்..

தேவையான பொருள்கள்

முள்ளங்கித் துருவல் – ஒரு கப்

துருவிய பன்னீர் – 2 டேபிள்ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை

ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய்,

உப்பு – தேவையான அளவு

செய்முறை

kitchen style

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, முள்ளங்கித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் கழித்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும்.

முள்ளங்கி வெந்ததும், பன்னீர் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *