202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

மு.க.ஸ்டாலின் சொல்கிறார்

சென்னை, செப்.25: திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பது:

மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால்தான் நான் முதல்வர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன்.

நீங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்கும் நான் இன்று கோட்டையில் உட்கார அடித்தளமாக அமைந்துள்ளது. நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டேன். அப்போது, கருணாநிதி பாணியில் சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்றேன்.

ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 மாதங்கள் கடந்துள்ளன. இந்த 4 மாதங்களில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்துள்ளோம்.

தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகளை அளித்தோம். மே 7-இல் பதவியேற்ற சில மணி நேரங்களில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

2 கோடியே 9 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீட திட்டத்தில் அரசு ஏற்பு ஆகிய 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. உழவர்கள் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க, முதன்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கப்படுகிறது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

பத்திரிக்கையாளர்கள், 8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு எதிராக போடப்பட்ட 5570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது என 4 மாத சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *