🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

6 அதிரடிகள்: 2026 திமுக கூட்டணி கட்சிகள்!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போது சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளுங்கட்சி, தேர்தலுக்கான வியூகங்களை மிகவும் தீவிரமாக வகுத்து வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தங்கள் பெருமளவு வெற்றிகரமாகக் கையெழுத்தாகியுள்ளன.

திமுக கூட்டணி கட்சிகள்
courtesy:@arivalayam/X

உள்ளடக்கம்

2026 தேர்தல் களம்: திமுகவின் வியூகம்

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யத் திமுக பல்வேறு களப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

தங்களது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதிலும், வெற்றி வாய்ப்புகளைப் பகிர்வதிலும் தலைமை சிறப்பு கவனம் செலுத்துவதை காணமுடிகிறது.

குறிப்பாக, தொகுதிப் பங்கீட்டில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து முன்கூட்டியே முடிவுகளை எடுக்கத் திட்டமிடுவதையும் அறிய முடிகிறது.

திமுக கூட்டணி கட்சிகள்: தொகுதிப் பங்கீடு நிலவரம்

இதுவரை பல முக்கியக் கட்சிகளுடன் சுமுகமான முறையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய திமுக கூட்டணி கட்சிகள் நிலைப்பாட்டில் கடந்த 2021 தேர்தலை விடச் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 18 நிலவரப்படி, அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்சிகளின் முழுமையான விவரங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

இதை படித்தீர்களா? அதிரடியாக மாறும் தமிழ்நாடு அரசியல் களம்

காங்கிரஸ் – மதிமுக தொகுதிகள் ஒதுக்கீடு

தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு இந்த முறை 28 சட்டமன்றத் தொகுதிகள் உறுதியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 தேர்தலில் 25 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக தொகுதிகளை கேட்ட காங்கிரஸ் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு 28 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி கடந்த தேர்தலைக் காட்டிலும் 3 இடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் திமுகவின் அதிகாரப்பூர்வமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஒரு தொகுதியில் மட்டும் மதிமுக தனது சொந்தச் சின்னத்தில் களமிறங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

புதிய வரவாக திமுக கூட்டணி கட்சிகள்

இந்த முறை திமுக கூட்டணி கட்சிகள் பட்டியலில் சில புதிய கட்சிகளும் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் எஸ்டிபிஐ (SDPI) ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கின்றன.

இந்தப் புதிய கட்சிகளின் சேர்க்கை திமுக கூட்டணி கட்சிகள் வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதில் குறிப்பாக, தேமுதிகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கெனவே தேமுதிக 10 தொகுதிகள் வரை தர வேண்டும் என கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டாலும் கூட, அதன் தலைவர் கமல்ஹாசன் பிரசாரங்களில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது. இது நகரப் பகுதிகளில் உள்ள வாக்குகளை திமுக கூட்டணிக்கு அதிக அளவில் ஈர்க்க உதவும்.

இந்தப் புதிய வரவுகள் வட மற்றும் தென் மாவட்டங்களில் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிகரிக்கும்.

சிறுபான்மையினர் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள்

சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைக்க முஸ்லிம் லீக் (IUML) மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு (MMK) தலா இரு தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கீடு செய்திருக்கிறது.

முஸ்லிம் லீக் கட்சியினர் ஏணி சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சியினர் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது.

அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு (KMDK) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே களமிறங்குகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

இழுபறியில் உள்ள கட்சிகளும் அடுத்தகட்ட நகர்வும்

ஒருபுறம் பெரும்பாலான கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தாலும், சில கட்சிகளுடன் இன்னும் இழுபறி தொடர்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் (VCK) ஆகியவற்றுடன் தொடர்ந்து தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் முடிவானவுடன் முழுமையான திமுக கூட்டணி கட்சிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

2021 மற்றும் 2026: முக்கிய வேறுபாடுகள்

கடந்த 2021 தேர்தலோடு ஒப்பிடுகையில், கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்தான் சில கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டிருககின்றன என்பதை பேச்சுவார்த்தையின்போது திமுக குழு தெரிவித்திருக்கிறது.

மதிமுகவுக்கு கடந்த முறை 6 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு முதலில் தொகுதிகளை குறைக்க விருப்பம் இல்லை. ஆனால் இந்த முறை எதிரணியில் இருப்பவர்கள் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஒரே நோக்கம் காரணமாக மதிமுகவும் இந்த 4 இடங்களை ஒப்புக்கொண்டிருக்கிறது.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை 6 இடங்கள் வழங்கப்பட்டு, தற்போது 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொடர்ந்து முரண்டு பிடித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு முக்கிய அரசியல் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த அனைத்து முடிவுகளும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகின்றன.

அனைத்து உடன்பாடுகளும் முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரம்மாண்டமான தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை பார்த்தீர்களா? சசிகலா நியூ பார்ட்டி – கொங்கு மண்டலத்தில் அதிமுக அவுட், திமுக டவுட்


FAQ – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

2026 தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எவை?

காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI, CPI-M), விசிக, கொமதேக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய வரவுகளாக தேமுதிக, மநீம, SDPI ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது?

காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தரப்பட்டுள்ளன.

மதிமுக 2026 தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறது?

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தமுள்ள 4 தொகுதிகளில், 3 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும், 1 இடத்தில் தங்களது சொந்தச் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

2026-ல் புதிதாக இணைந்துள்ள திமுக கூட்டணி கட்சிகள் எவை?

தேமுதிக (DMDK), மக்கள் நீதி மய்யம் (MNM), மற்றும் SDPI ஆகிய கட்சிகள் இந்த முறை புதிதாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளன.

தேமுதிகவுக்கு எத்தனை சீட்?

தற்போது வெளியாகும் தகவல்களின்படி தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக பேசப்படுகிறது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் சீட் விவரம் என்ன?

இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், MMK உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டதா?

இல்லை, விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை அது திமுகவுடன் இணக்கமாகவே தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள விரும்புகிறது. அதே நிலையைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்திருக்கிறது.

2021-க்கும் 2026-க்கும் உள்ள தொகுதிப் பங்கீடு மாற்றங்கள் என்ன?

காங்கிரஸுக்கு 3 இடங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், மதிமுக (6-ல் இருந்து 4) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (6-ல் இருந்து 5) ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறது?

கொமதேக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளிலும் அவர்கள் திமுகவின் அதிகாரப்பூர்வமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலவரம் என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) கட்சியுடனான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது.

#MithiranNews #DMKAlliance #TamilNaduElection2026 #MKStalin #TNElection #PoliticalAnalysis @arasiyalakkappore

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *