🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

விஜய் அரசியல் கூட்டணி No.1 பிளான்! அதிர்ச்சியில் பிஜேபி?

Read in English / பிற மொழிகளில் படிக்க:

விஜய் அரசியல் கூட்டணி ஆட்டம் ஆரம்பம்! தனித்துப் போட்டியா? பாஜக கூட்டணியா? சிபிஐ விசாரணை பின்னணி என்ன? நாயர் கடை அரசியல் பார்வையில் அலசல்.

(இது நடப்பு அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் நாயர் கடை நையாண்டி பகுதி)

-:பந்து மித்திரன்:-

விஜய் அரசியல் கூட்டணி

உள்ளடக்கம்

விஜய் அரசியல் கூட்டணி ஆட்டம் ஆரம்பம்!

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

“நாயர் நேத்தி இருமிகிட்டே இருந்தீங்களே… இப்போ உடம்பு பரவாயில்லையா… என்றபடி டீக்கடை பெஞ்சில் அமர்ந்த வைத்தி… . ஸ்ட்ராங்கா டீயப் போடுங்க. சூடா ஒரு நியூஸ் வந்திருக்கு!” அதப்பத்தி நம்ம கந்தசாமி அண்ணன்கிட்ட பேசுனும் என்றார் வாய்ப்பந்தல் வைத்தி.

அது என்ன அப்படி பரபரப்பான நியூஸ்… என்றார் நாயர்.

அதான்.. நம்ம விஜய் அரசியல் கூட்டணி.. என்றார் வாய்ப்பந்தல் வைத்தி.

“என்ன வைத்தி, நேத்து சாயங்காலமே வந்த விஜய் அரசியல் கூட்டணி நியூஸ வச்சிக்கிட்டு, இப்ப வந்து சூடுங்கற?” என்று சிரித்தார் கரைவேட்டி கந்தசாமி.

“அட, நீங்க வேற அண்ணே! விஜய் தனித்துப் போட்டிங்கறது சாதாரண விஷயமா? பிஜேபிக்கே பெரிய ஷாக்தானே!” என்று கண்களை விரித்தார் வைத்தி.

“80 சீட்டு, துணை முதல்வர் பதவின்னு எல்லாம் பேரம் பேசுனாங்க. கடைசில, ‘நீங்க உங்க வழில போங்க, நாங்க எங்க வழில போறோம்’ன்னு சொல்லிட்டாரு விஜய்” அவருக்கு ரொம்ப கான்ஃபிடன்ஸ்…. இதை விட அதிகமாக தனிச்சு நின்னு ஜெயிப்போம்னு… என்றார் திருவாளர் பொதுஜனம்.

இதை படித்தீர்களா?TVK Vijay – BJP கூட்டணி உறுதியா

சிபிஐ – விஜய் அரசியல் கூட்டணி முடிச்சு!

“ஆனா ஒன்னு கவனிச்சீங்களா? இந்த விஜய் அரசியல் கூட்டணி அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடிதான் சிபிஐ விசாரணை நடந்திருக்கு!” என்று ஒரு கொளுத்திப் போட்டார் நாயர்.

“ஆமா நாயர்! கரூர் கூட்ட நெரிசல் வழக்குல டெல்லில வச்சு விசாரிச்சாங்க. ஆனா, ‘இனிமேல் தமிழ்நாடுதான் என் கோட்டை, இங்கேயே வந்து விசாரிங்க’ன்னு சிபிஐக்கே லெட்டர் போட்டுட்டாராம்!” என்றார் கந்தசாமி.

“டெல்லிக்கே டஃப் குடுக்கறாருப்பா நம்ம தளபதி! இனிமேல் விஜய் அரசியல் கூட்டணி ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்! பாருங்க..” என்று மீசையே முறுக்கினார் வைத்தி.

ஸ்டாலின் நடத்தும் நேர்காணல்!

“அங்க விஜய் அரசியல் ஒரு பக்கம் சூடுபிடிச்சா, இங்க திமுக விருப்ப மனு நேர்காணல நம்ம முதல்வர் ஸ்டாலினே நேரடியா நடத்தப் போறாராம்!” என்று செய்தியைச் சொன்னார் கந்தசாமி.

“அப்ப, இம்முறை சீட்டு யாருக்குன்னு முடிவு பண்றதுல ரொம்ப கறாரா இருப்பாங்க போலயே!” என்றார் திருவாளர் பொதுஜனம்.

“ஆமாம், ஆமாம்! 2026 எலக்சன்ல ஜெயிக்கணும்னா, சரியான வேட்பாளர்களை நிறுத்தணுமே! அதான் இந்த தடவை கொஞ்சம் உஷாரா இருக்காங்க” என்று தலையாட்டினார் கந்தசாமி.

ரஜினி விவகாரம்!

“டீக்கடையில எப்பவும் சினிமா பாலிடிக்ஸ் பேசாட்டி தூக்கமே வராதே உங்களுக்கு! அந்த ரஜினி – ஆதவ் அர்ஜுனா மேட்டர சொல்லுங்க” என்று கேட்டார் நாயர்.

“ஆதவ் அர்ஜுனா, ரஜினிய விமர்சனம் பண்ணதுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கு. எடப்பாடி பழனிசாமில இருந்து எல். முருகன் வரைக்கும் எல்லோரும் கண்டனம் தெரிவிச்சிருக்காங்க” என்றார் கந்தசாமி.

“ரஜினிய தொட்டா சும்மா இருப்பாங்களா? உடனே பகிரங்க மன்னிப்பு கேக்கணும்னு சொல்லிட்டாங்க!” என்று சிரித்தார் வைத்தி.

“அது சரி, இன்னைக்கு அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துறாங்களே, அது எதுக்கு?” என்று கேட்டார் பொதுஜனம்.

“திமுக அரசை கண்டிச்சு நடக்குற ஆர்ப்பாட்டம். எடப்பாடி பழனிசாமி முதற்கொண்டு எல்லாரும் கலந்துக்கறாங்க. எலக்சன் நெருங்க நெருங்க, அரசியல் களம் சூடுபிடிக்குது!” என்று விவரித்தார் கந்தசாமி.

உலக அரசியல் நிலவரம்!

“நம்ம ஊரு விஜய் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். உலக நடப்ப பார்த்தீங்களா? ஈரான், இஸ்ரேல், அமெரிக்கான்னு ஒரே ரணகளமா இருக்கு!” என்று பேப்பரைத் திருப்பினார் பொதுஜனம்.

“ஆமாம் பொதுஜனம்! ஈரானோட கார்க் தீவுல இருக்கிற ராணுவ இலக்குகளை மட்டும்தான் அமெரிக்கா இப்போதைக்கு அழிச்சிருக்காம். ஆனா, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கலன்னா அடுத்தது உங்க எண்ணெய் கிணறுகளையும் காலி பண்ணிடுவோம்-ன்னு டிரம்ப் மிரட்டியிருக்காரு.

இந்த ரூட்ட கிளியர் பண்ண ஐரோப்பிய நாடுகள் உதவி பண்ணலன்னா, நேட்டோ அமைப்புக்கே ஆபத்துன்னும் சொல்லியிருக்காரு” என்றார் கந்தசாமி.

“அங்க ஆப்கானிஸ்தான்ல பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி 400 பேர் செத்துட்டாங்களாம். ஒரே சோகமா இருக்கு” என்று வருத்தப்பட்டார் பொதுஜனம்.

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செத்துட்டாருன்னு வதந்தி வந்துச்சு. ஆனா, அவரு புதுசா வீடியோ வெளியிட்டு, ‘நான் உயிரோடதான் இருக்கேன்’னு சொல்லியிருக்காரு!” என்று சிரித்தார் வைத்தி.

“கியூபாவுல கரண்ட் இல்லாம இருட்டுல கிடக்கறாங்களாம். அங்கேயும் டிரம்ப் ஏதோ பிளான் பண்றாரு போல!” என்று ஆச்சரியப்பட்டார் பொதுஜனம்.

தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள்!

“அரசியல் பேசினாலே நேரம் போறதே தெரியல. இங்க நம்ம தேர்தல் ஆணையம் என்ன சொல்லுது பாருங்க! சுவிதா செயலி மூலமாதான் இனிமேல் எல்லாத்துக்கும் அனுமதி வாங்கணுமாம்” என்றார் கந்தசாமி.

“ஆமா, வருமான வரித்துறை, பறக்கும் படைன்னு எல்லாரும் தீவிரமா கண்காணிப்புல இறங்கிட்டாங்க. 4 மாவட்டங்களுக்கு புது எஸ்பி-ய வேற மாத்தியிருக்காங்க” என்று தலையாட்டினார் வைத்தி.

“போகப் போகத்தான் தெரியும், இந்த எலக்சன்ல யாரு ஜெயிக்கப் போறாங்கன்னு!” என்று சொல்லியபடியே டீ கிளாஸைக் கழுவ ஆரம்பித்தார் நாயர்.

“சரி, நாளைக்கு பார்க்கலாம்” என்று விடைபெற்றனர் கந்தசாமியும், வைத்தியும்.

SASIKALA வைத்த ஆப்பு vs ADMK க்கு ஆபத்து என்ன? #shorts

Disclaimer: இது முழுவதும் கற்பனையான நையாண்டி உரையாடல். எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, அரசியல் கட்சியையோ புண்படுத்தும் நோக்கத்திலோ, களங்கப்படுத்தும் நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. Tvk Vijay Bjp கூட்டணி உறுதியா?உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் அணுகும் ஒரு முயற்சி மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவெளியில் உலா வரும் தகவல்கள் செய்திகளின் அடிப்படையிலானவை. அதனால் இந்த உரையாடல் ரசிக்க மட்டுமே)

FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கான பதில்கள்

விஜய் அரசியல் கூட்டணி நிலைப்பாடு என்ன?

விஜய் தனித்துப் போட்டியிடப் போவதாக இன்றையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையே என்ன நடக்கிறது?

விஜயை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமாக முயன்றது. ஆனால் விஜய் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

விஜய் சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டார். இனி வரும் விசாரணைகளைத் தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக நேர்காணலை யார் நடத்துகிறார்கள்?

திமுக விருப்ப மனு வேட்பாளர் நேர்காணலை மு.க.ஸ்டாலின் நேரடியாக நடத்துகிறார்.

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா என்ன சொன்னார்?

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய விமர்சனங்களுக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்துவுக்கு என்ன விருது கிடைத்தது?

கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.பி.ஜி தட்டுப்பாடு ஏன்?

ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வணிக ரீதியான எல்.பி.ஜி சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

உலக அரசியல் நிலவரம் எப்படி உள்ளது?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல், கியூபாவில் மின்சார நெருக்கடி எனப் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

தேர்தல் ஆணையம் என்ன புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது?

பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், வேட்புமனு தாக்கல் ஆகியவற்றுக்கு சுவிதா செயலி வாயிலாக அனுமதி பெற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#VijayArasiyal #VijayPolitics #NairKadaiArasiyal #TamilPolitics #Election2026 #VijayNews #MithiranNews

    ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

    🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *