நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?

earthquake Mithiran News

சென்னை: பூமியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல இடங்களில் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவதை நாம் அறிவோம்.


நாம் வாழும் பூமியின் ரகசியங்களை அறிந்துகொள்வது என்பது இன்னும் முடியாத காரியமாகவே உள்ளது. குறிப்பாக பூமியின் மையப் பகுதி எப்படி உள்ளது என்பதை பல்வேறு யூகங்களில் அடிப்படையில்தான் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகளின் யூகங்களுக்கு ஏற்ப பூமியின் மையப் பகுதி உள்ளதா? என்பதை இன்னமும் அறுதியிட்டு கூறமுடியவில்லை.

புரியாத புதிர்

அறிவியலில் இன்னமும் புரியாத புதிராகவே பூமியின் மையப் பகுதி உள்ளது. தற்போது வரை பூமியில் 12 கி.மீட்டர் ஆழம் வரை மட்டுமே துளையிட்டு அதன் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். அதையும் கடந்த ஆராய்ச்சிகள் தற்போது தொடர்கின்றன.

விஞ்ஞானிகள் அதிர்ச்சி

கோர் என அழைக்கப்படும் பூமியின் மையப்பகுதி பூமியின் மேற்பரப்பில் இருந்து 5 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இதுகுறித்த ஆராய்ச்சிகள் வெளியாகும் சூழலில்தான் அதில் நடைபெறும் மாற்றங்களையும், அதனால் பூமியில் வாழும் உயிரினங்கள் சநதிக்கவிருக்கும் ஆபத்துக்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.
பூமியின் மையப் பகுதி திரவ நிலையில் உள்ளதாகவும், அது வேகமாக சுற்றுவதாகவும் ஒருகாலக் கட்டத்தில் விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

சமீபத்தில் இந்த மையப் பகுதி தனக்குத்தானே சுற்றுவதை நிறுத்தியுள்ளதாகவும், இனி வருங்காலத்தில் இது எதிர்திசையில் சுற்றும் எனவும் விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கின்றனர்.
பூமி மொத்தம் 3 அடுக்குகளைக் கொண்டது. மேலோடு எனும கிரஸ்ட் நாம் இருக்கும் பகுதி. அதைத்தொடர்ந்து மேன்டில் எனப்படும் மேற்பரப்புக்கும், மையப் பகுதிக்கும் இடையிலான பகுதி. அடுத்து திரவ நிலையில் உள்ள மையப் பகுதி என 3 ஆக பிரிக்கலாம்.

பூமியின் மையப் பகுதி இரும்பு மற்றும் நிக்கல் ஆகியன உயர்வெப்பம் காரணமாக உருகிய நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. இதன் ஆரம் 1221 கி.மீட்டர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் வெப்பநிலை 5400 டிகிரியாகும்

காரணங்கள்

இந்த உருண்டை வடிவ மையப்பகுதி ஒருசில காலத்துக்கு ஒரு முறை சுழற்சியை மாற்றிக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் காந்த மண்டலமும் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிகளின்படி கடந்த 1970-இல் தனது சுழற்சியை மாற்றியதாகவும், இதைத் தொடர்ந்து 2040-இல் இது எதிர்திசையில் சுழலும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் தொடர்பான கூடுதல் தகவல்கள் மேற்கண்ட விடியோவில் உரிய விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *