Read in English / பிற மொழிகளில் படிக்க:
உடைந்த பானை கதையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் (self confidence) எனப்படும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும், மனஅமைதி எதில் இருக்கிறது என்பதை பற்றியும் சொல்லும் உத்வேக கதை இது.
உள்ளடக்கம்

தாழ்வு மனப்பான்மை
வாழ்வில் பல நேரங்களில் நாம் நம்மைப் பற்றித் தாழ்வாக நினைத்துக் கொள்கிறோம். எனக்கு இந்தத் திறமை இல்லை, நான் அழகாக இல்லை, என்னால் மற்றவர்களைப் போலச் சாதிக்க முடியவில்லை என்று நம்மிடமுள்ள குறைகளை மட்டுமே நாம் பெரியதாகப் பார்க்கிறோம்.
நாமும் ஒரு உடைந்த பானை போலப் பயனற்றவர்கள் என்ற எண்ணம் நம் மனதை வாட்டுகிறது. ஆனால் நம் பார்வையில் குறையாகத் தெரிவது, இறைவனின் பார்வையில் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக இருக்கலாம். இந்தக் கதை உங்களது தன்னம்பிக்கை எனப்படும் (self confidence) திறனை நிச்சயம் அதிகரிக்க உதவும்.
Self Confidence தரும் உடைந்த பானை கதை
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsபண்டைய காலத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவன் தினமும் ஆற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து தன் எஜமானின் வீட்டில் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனிடம் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. ஒரு தடியின் இரு முனைகளிலும் அந்த பானைகளைக் கட்டி, தன் தோளில் அவன் சுமந்து செல்வது வழக்கம்.
அந்த இரண்டு பானைகளில் ஒன்று மிகவும் அழகாகவும், முழுமையாகவும் இருந்தது. ஆனால் மற்றொன்றில் ஒரு சிறிய விரிசல் இருந்தது. ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு விவசாயி எஜமானின் வீட்டை அடையும்போது, முழுமையான பானை நிறைய தண்ணீருடன் இருக்கும்.
இதை படித்தீர்களா? Nation Builder: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன?
ஆனால் உடைந்த பானையிலோ பாதி தண்ணீர் மட்டுமே இருக்கும். அந்த விரிசல் வழியாக வழிநெடுகத் தண்ணீர் சிந்திச் சிந்திச் சென்றிருக்கும். தொடர்ந்து இரண்டு வருடங்களாக இதுதான் நடந்து கொண்டிருந்தது.
முழுமையான பானைக்குத் தான் எஜமானின் வீட்டிற்கு முழுத் தண்ணீரையும் கொண்டு சேர்க்கிறோம் என்ற மகா பெருமை இருந்தது. ஆனால் உடைந்த பானைக்கோ தான் ஒரு குறையுள்ள பானை, எஜமானின் தேவைக்கு முழுமையாகப் பயன்படவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் வெட்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
குறைபாடும் ஒரு அழகான வாய்ப்புதான்!
ஒருநாள் அந்த உடைந்த பானையால் தன் வேதனையைத் தாங்க முடியவில்லை. ஆற்றில் தண்ணீர் எடுக்கும்போது அது விவசாயியிடம் பேசியது. ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றது.
விவசாயி ஆச்சரியத்துடன், ஏன் உனக்கு என்ன வருத்தம் இப்போது என்று கேட்டான். அதற்கு அந்த பானை தன் உடலில் உள்ள விரிசலால் தண்ணீர் வீணாவதை நினைத்து கதறி அழுதது.
என்னுடைய குறை காரணமாக உங்களுக்கான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகிறது. இதனால் என்னை தூக்கிப் போட்டு உடைத்துவிட்டு, புதிய பானையை வாங்கி பயன்படுத்துங்கள் என்று சோகமாகக் கூறியது.
விவசாயி முகத்தில் புன்னகை பூத்தது. அவன் மிகவும் கனிவாக, நீ ஏன் அப்படி நினைக்கிறாய் என்று கேட்டான். சரி, இன்று நான் எஜமானன் வீட்டுக்கு திரும்பும்போது வழிநெடுக ஒரு விஷயத்தை கவனித்து வா என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தான்.
விவசாயி எஜமான் வீட்டுக்கு வழக்கம்போல் இரு பானைகளையும் சுமந்தபடி பயணமானான். இப்போது உடைந்த பானை அவன் சென்ற பாதை நெடுகிலும் கவனித்தபடியே வந்தது. பானையில் இருந்து தண்ணீர் சிந்தும் இடங்களில் எல்லாம் அழகிய காட்டுப் பூக்கள் மலர்ந்து வண்ணமயமாக காட்சித் தந்தன.
இதைப் படித்தீர்களா? நேர்மை பெற்றுத் தந்த அமைச்சர் பதவி
இந்த அழகைக் கண்ட உடைந்த பானை இப்போது விவசாயியிடம் கேட்டது. என்னிடம் இருந்து சிந்திய தண்ணீர் துளிகளா? இவ்வளவு அழகிய மலர்களை தரையில் பூத்துக் குலுங்க வைத்திருக்கின்றன என்று ஆச்சரியமாகக் கேட்டது.
இறைவனின் படைப்பின் விந்தை!
அதற்கு விவசாயி, ஆமாம் நீ நன்றாக கவனித்தாயா, முழுமையான பானையில் இருந்து தினமும் தண்ணீர் சிந்துவதில்லை. அதனால் அந்த பானை கடக்கும் பாதையில் எந்த செடிகளும் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை என்றார்.
ஆனால் நீ பயணிக்கும் பாதையில் மட்டும் அழகிய மலர்கள் பூத்திருப்பதை பார்த்தாயா என்று கேட்டான் விவசாயி. இதைக் கேட்ட உடைந்த பானைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இப்போது விவசாயி பேசினான். உன்னால் முழுமையாக தண்ணீரை எஜமான் வீடு வரை கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதை உன் குறையாக நான் நினைக்கவில்லை.
அதனால் அந்த தண்ணீரை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்று யோசித்தேன். உன்னை சுமந்துவரும் பக்கத்தில் நான் நடக்கும் பாதையோரம் அழகிய மலர்ச் செடிகளின் விதைகளை தூவி வைத்தேன்.
தினந்தோறும் உன்னிடம் இருந்து சிந்திய தண்ணீர் இன்றைக்கு அழகிய மலர்களாக பூத்துக் குலுங்குகின்றன. உன் குறைதான் எனக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பைக் கூட ஏற்படுத்தியது.
நாள்தோறும் இந்த செடிகளில் இருந்து பறித்துச் செல்லும் பூக்கள்தான் எஜமான் வீட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை அலங்கரிக்கின்றன. உன்னுடைய குறைபாடுதான் இன்றைக்கு இறைவனை அர்ச்சிக்கும் மலர்களாக மாறியிருக்கின்றன என்று சொன்னான்.
இதனால் நீ தன்னம்பிக்கையோடு (self confidence) இரு. அதுதான் உன்னை அழகுபடுத்தும். உன்னை குறையுள்ளவானாக கருதாமல் இருப்பதே (self confidence) தன்னம்பிக்கையை வளர்க்கும். நம்மால் இந்த உலகுக்கு அல்லது சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்தால் (self confidence) தன்னம்பிக்கை தானாக மிளிரும் என்றார் விவசாயி.
தாழ்வு மனப்பான்மையை வெல்வது எப்படி?
இந்தக் கதை நமக்குச் சொல்லும் ஆழமான தத்துவம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் அந்த உடைந்த பானை போலத்தான் வாழ்கிறோம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குறை, ஒரு பலவீனம் இருக்கவே செய்கிறது.
நாம் யாருமே முழுமையானவர்கள் அல்ல. நாம் நம் குறைகளைக் கண்டு வருந்துகிறோம், மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி விடுகிறோம்.
ஆனால் ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், நம்மைப் படைத்த அந்தப் பரம்பொருள் அல்லது இயற்கை ஒருபோதும் தவறுகளைச் செய்வதில்லை. நம்மிடம் இருக்கும் குறைகளும் அந்தப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதிதான்.
உங்கள் குறைகளே உங்களைத் தனித்துவப்படுத்துகின்றன. விவசாயி அந்த விரிசலைப் பயன்படுத்தி மலர்களை வளர்த்தது போல, இறைவனும் உங்கள் குறைகளைப் பயன்படுத்திப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு நன்மையைச் செய்து கொண்டிருக்கிறார்.
உங்கள் பலவீனம் உங்களைப் பணிவானவராக மாற்றியிருக்கலாம். உங்கள் கடந்தகாலத் தோல்விகள் உங்களுக்குப் புதிய ஞானத்தைக் கொடுத்திருக்கலாம்.
உங்கள் குறைகளால் நீங்கள் மற்றவர்களிடம் இரக்கத்துடனும், அன்புடனும் நடந்து கொள்ள பழகியிருக்கலாம். எனவே நண்பர்களே, உங்கள் குறைகளை ஒருபோதும் வெறுக்காதீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் (self confidence) வளர்க்கும் வழிகள்
நான் உடைந்த பானை என்று நினைத்து முடங்கிவிடாதீர்கள். அந்த உடைந்த பானையும் தன் விரிசல் வழியாக வழிநெடுகப் பூக்களை வளர்த்தது போல, நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நன்மைகளைச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை (self confidence) வளருங்கள்.
உங்கள் குறைகளையும் தாண்டி ஏதோ ஒரு நன்மையை, அழகை இந்த உலகத்திற்கு உங்களை அறியாமலேயே தந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குறைகளையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஏற்றுக்கொள்ளுதலே அமைதியைத் தரும் என்பதை உணருங்கள். இதை உணர்ந்தால், உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறுவதுடன் உங்கள் தன்னம்பிக்கை எனப்படும் (self confidence) குணம் பன்மடங்கு உயரும்.
ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை அடையாளம் காண வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தும்போது மட்டுமே நம் உண்மையான பலம் என்ன (self confidence) என்பது நமக்குத் தெரியவரும்.
தோல்விகள் என்பவை தற்காலிகமானவை மட்டுமே. அவற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது அவசியம். நாம் செய்யும் சிறிய நன்மைகளும் இந்த உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்கக் கூடாது.
ஏற்றுக்கொள்ளுதல் தரும் மாபெரும் மனஅமைதி
வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற நம்மால் முடியாது. சில சூழ்நிலைகளையும் சில குறைபாடுகளையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள பழக வேண்டுவது கட்டாயம்..
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு வாழும்போது மனஅமைதி தானாகவே தேடி வரும். உடைந்த பானை கதையில் வந்த விவசாயியைப் போல நம்மிடம் உள்ள குறைகளை வாய்ப்புகளாக மாற்ற பழக வேண்டும்.
இறைவனின் படைப்பில் எதுவுமே வீணானது கிடையாது. ஒவ்வொரு புல்லுக்கும் ஒரு குணம் உண்டு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்திறமை உண்டு.
அதை உணர்ந்து செயல்படும்போது நம் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும். இந்த ஆன்மிகப் பாடம் நமக்குத் தருவது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, வாழ வழிகாட்டும் உன்னதமான தத்துவமும் ஆகும்.
இனி உங்கள் குறைகளைக் கண்டு வருந்தாமல், தன்னம்பிக்கையோடு (self confidence) அதை எப்படி நன்மையாக மாற்றலாம் என்று யோசியுங்கள். வெற்றி நிச்சயம் உங்கள் கதவைத் தட்டும்.
தன்னம்பிக்கை மற்றும் (self confidence) எண்ணங்களை எப்போதும் மனதில் விதையுங்கள். அதுவே உங்களை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சேர்க்கும் மாபெரும் சக்தியாக மாறும்.
விடியோ வடிவில் கதையை கேட்க – உண்மையான சுய மதிப்பு: ஒரு உடைந்த பானையின் கதை!
மக்கள் அதிகம் கேட்கும் கேள்விகள்
உடைந்த பானை கதையின் முக்கிய கருத்து என்ன?
மனிதர்களிடம் உள்ள குறைகளும் பலவீனங்களும் கூட உலகிற்கு ஏதோ ஒரு வகையில் நன்மையை விளைவிக்கும் என்பதே இக்கதையின் முக்கிய கருத்து ஆகும்.
நம்மிடம் உள்ள குறைகளை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?
குறைகளை பலவீனமாகக் கருதாமல், அவற்றை நம்மைத் தனித்துவப்படுத்தும் ஒரு சிறப்பம்சமாக நேர்மறையான பார்வையில் பார்க்க வேண்டும்.
தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவது எப்படி?
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, நம்மிடம் உள்ள தனித்துவமான திறமைகளை மதிப்பதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏன் முக்கியம்?
தடைகளையும் தோல்விகளையும் கடந்து இலக்குகளை அடையவும், மனஅமைதியுடன் வாழவும் தன்னம்பிக்கை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
விவசாயி உடைந்த பானையை ஏன் தூக்கி எறியவில்லை?
உடைந்த பானையில் இருந்து சிந்தும் நீரைக் கொண்டு பாதையோர மலர்ச் செடிகளை வளர்க்கலாம் என்ற மாற்றுத் திட்டத்தை விவசாயி வைத்திருந்ததால் அதைத் தூக்கி எறியவில்லை.
ஆன்மிக ரீதியாக குறைகள் என்பவை என்ன?
ஆன்மிகப் பார்வையில் குறைகள் என்பவை இறைவனின் மாபெரும் பிரபஞ்சத் திட்டத்தின் ஒரு பகுதி மற்றும் நம்மைப் பக்குவப்படுத்தும் வழிகள் ஆகும்.
உடைந்த பானை கதையில் வரும் எஜமான் வீட்டுப் பூக்கள் எங்கிருந்து வந்தன?
உடைந்த பானையில் இருந்து வழிநெடுக சிந்திய தண்ணீர் துளிகளால் வளர்ந்த செடிகளிலிருந்து அந்தப் பூக்கள் பறிக்கப்பட்டன.
மனஅமைதி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய சூழ்நிலைகளையும் குறைபாடுகளையும் மாற்ற முயலாமல், அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
குறைகளை வாய்ப்புகளாக மாற்றுவது எப்படி?
நம் பலவீனங்களை உணர்ந்து, அவற்றைக் கொண்டு பிறருக்கு எப்படி உதவலாம் அல்லது புதிய வழிகளில் எப்படிச் செயல்படலாம் என யோசிப்பதன் மூலம் மாற்றலாம்.
இந்த உடைந்த பானை கதை யாருக்குப் பொருந்தும்?
தங்களை நினைத்துத் தாழ்வு மனப்பான்மையில் வாடும் மற்றும் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தேடும் ஒவ்வொரு மனிதருக்கும் இக்கதை பொருந்தும்.
#ஆன்மிகம் #தன்னம்பிக்கை #வாழ்க்கைதத்துவம் #மனஅமைதி #பாசிட்டிவ்திங்கிங் #MithiranNews

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக அலசுவதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம். 28 ஆண்டுகால கள அனுபவம் கொண்ட இவர், ‘மித்திரன் நியூஸ்’ இணையதளம் மற்றும் ‘Arasiyal Akkappore’, ‘RR Views and Facts’ யூடியூப் சேனல்கள் மூலம் அரசியல், கல்வி, அறிவியல் தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்