Read in English / பிற மொழிகளில் படிக்க:
தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே மிகக் கடுமையாகச் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) வியூகங்கள் குறித்து ஒரு பெரிய அரசியல் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

உள்ளடக்கம்
தமிழ்நாடு மக்களை நம்பாத பாஜக?
தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) மக்கள் நேரடியாக பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையை கொண்டிருப்பதை அதனுடைய நடவடிக்கைகளில் சில காட்டிக் கொடுக்கின்றன.
இதனால் தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை அதிமுகவுக்கு இருக்கிறதோ இல்லையோ, பாஜகவுக்கு நிச்சயமாக இல்லை என்பது அதனுடைய செயல்பாடுகளில் தெரிகிறது.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsஇதை படித்தீர்களா: Political Manifesto Big Expose: 4 சாத்தியமற்ற வாக்குறுதிகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகளே இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.
மக்களின் வாக்குகளை நேரடியாகப் பெறுவதை விட, குறுக்கு வழிகளில் அதிகாரத்தை நெருங்கவே தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) முயற்சி எடுப்பது இதன் மூலம் தெரிகிறது.
தங்களுக்குப் போதிய வாக்கு வங்கி இல்லாத நிலையில், செல்வாக்குள்ள கட்சிகளின் தோள் மீது ஏறி சவாரி செய்ய தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) நினைக்கிறது. இது இன்றைய தேர்தல் அரசியலில் பேசுபொருளாக கண்டிப்பாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராமதாஸ் அத்வாலே வீசிய அரசியல் வெடிகுண்டு
மத்திய இணை அமைச்சரும், குடியரசுக் கட்சியின் (RPI-A) தலைவருமான ராமதாஸ் அத்வாலே சமீபத்தில் புதுச்சேரியில் பேசிய வார்த்தைகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
தமிழ்நாட்டில் தவெக உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைக்கும் என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) பல அரசியல் கணக்குகளை அம்பலப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: கமலின் திடீர் முடிவு: மக்கள் நீதி மய்யம் ஏமாற்றப்பட்டதா?
“தேர்தலுக்குப் பிறகு நாங்கள் சில இடங்களில் வெற்றி பெறுவோம். போதிய இடங்கள் இல்லாதபட்சத்தில் விஜய்யின் ஆதரவைப் பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்” என அவர் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வார்த்தைகள் வெறும் யூகங்கள் அல்ல, மாறாக டெல்லி தலைமையின் திட்டமாகவே பார்க்கப்படுகிறது. தவெகவின் மூலம் ஆட்சியில் அமர (Tamil Nadu BJP) ரகசியமாகத் திட்டமிடுவதை இந்த பேச்சு உறுதி செய்கிறது.
பியூஷ் கோயலின் பகிரங்க எச்சரிக்கை
பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலின் கருத்துக்களும் இந்த வியூகத்தையே பிரதிபலிக்கின்றன.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் ஆரம்பத்தில் விமர்சனப் பார்வையுடன் பேசினார்.
ஆனால் ஒரு கட்டத்தில், “விஜய் நிச்சயமாக எங்களுடையவர்” என்பது போன்ற தொனியில் அவர் கருத்து தெரிவித்தார். இது அரசியல் பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சூழலில் அவர் சுதாரித்துக் கொண்டு “NDA கூட்டணி இந்தத் தேர்தலில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் மீண்டும் திரைத்துறைக்கே சென்றுவிடுவார்” என்று விமர்சித்தார்.
அதேவேளையில், “கமல்ஹாசனுக்குக் கிடைத்தது போல விஜய்க்கும் ‘பூஜ்ஜியம்’ தான் கிடைக்கும்” என்றும் அவர் பகிரங்கமாக கூறினார். இதன் மூலம் விஜய்க்கு மறைமுக அழுத்தம் கொடுக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
இதை படித்துவிட்டீர்களா? அதிர்ச்சி! 131 தமிழக எம்எல்ஏக்கள் மீது வழக்குகள்
மற்ற மாநிலங்களில் நடந்த ஆபரேஷன் தந்திரங்கள்
தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) தேர்தல் வியூகத்தைப் புரிந்து கொள்ள, அவர்கள் மற்ற மாநிலங்களில் கையாண்ட உத்திகளை நாம் உற்று நோக்க வேண்டும். அது அதிகாரத்தைக் கைப்பற்றும் வித்தையாகவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பது நாடறிந்த ஒன்று. சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சியைப் பிடித்தார்கள். பின்னர் அஜித் பவார் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்தார்கள்.
அதேபோல பீகாரில் நிதிஷ்குமாரை மீண்டும் தங்கள் பக்கம் இழுத்து, தேர்தல் இல்லாமலேயே பின்வாசல் வழியாக அதிகாரத்தை அடைந்தார்கள். இது அவர்களின் மாஸ்டர் பிளான்.
பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில், மாநிலக் கட்சிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தி, அவர்களின் மீது ஏறி சவாரி செய்யும் வித்தையை அவர்கள் நன்கு பழகிவிட்டார்கள். கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் இதே தந்திரம் அரங்கேறியது.
இதனால் தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) நடவடிக்கைகளை பார்க்கும்போது, தமிழ்நாடு அரசியலிலும் பாஜக நேர்மையாக மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதை விட குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. இதை அரசியல் பற்றி பேசிக்கொள்ளும் சாதாரண மக்கள் கூட சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) அரசியல் கணக்குகள்
மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்திய அதே ஃபார்முலாவைத்தான் தற்போது தமிழ்நாட்டிலும் கச்சிதமாகச் செயல்படுத்த அவர்கள் திட்டமிடுகிறார்கள். தனிப் பெரும் கட்சியாக வளர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதுதான் இதற்கு காரணம்.
எனவேதான் தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) இந்த குதிரை சவாரி தந்திரத்தை இங்கு மிகத் தீவிரமாக கையில் எடுக்கிறது.
நேரடியாக மக்களின் வாக்குகளை நம்புவதை விட, வெற்றி பெறும் குதிரை மீது பந்தயம் கட்டுவது அவர்களுக்கு எளிதானது.
தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகள் முதலமைச்சர் நாற்காலியை மட்டுமே குறிவைக்கின்றன. தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவானால், இவர்களின் தந்திரம் எளிதாகிவிடும்.
திமுக – அதிமுக கள நிலை
ஆளுங்கட்சியான திமுக தங்களின் திராவிட மாடல் திட்டங்களை முன்னிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்டங்கள் தங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
தமிழ்நாடு பாஜகவை (Tamil Nadu BJP) உள்ளே நுழைய விடமாட்டோம் என்ற முழக்கத்தின் மூலம் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை அவர்கள் நம்பி வெற்றியை கணக்கிடுகிறார்கள். இதுவே அவர்களின் பிரதான ஆயுதம்.
மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை முழுமையாக ஈர்க்க பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. அத்துடன் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற தீவிரமாக முயற்சி செய்கிறது.
ஆனால், விஜய்யின் அரசியல் வருகை தங்கள் வாக்கு வங்கி இன்னும் மோசமான நிலையை இந்த தேர்தலில் எட்டி விடுமோ என்ற அச்சம் அதிமுகவுக்கு இருக்கிறது. அதேபோல் ஆளும் திமுகவுக்கும் முந்தைய வாக்கு வங்கி சதவீதம் விஜய் வருகையால் பாதித்தால் என்ன செய்வது என்ற அச்சம்தான் இப்போதைய மெகா கூட்டணியாக மலர்ந்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சி மற்றும் தேர்தல் கள நிலவரம்
இதற்கிடையே சீமானின் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகப் பயணிக்கிறது. திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்று நாங்களே என அவர்கள் முழங்குகிறார்கள்.
தங்களின் அடிப்படை வாக்கு வங்கி எந்தச் சூழலிலும் கலையாது என நாம் தமிழர் கட்சி தலைவர்கள் ஆழமாக நம்புகிறார்கள். விஜய்யின் வருகை இவர்களுக்கும் ஒரு சிறிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்த தேர்தல் வெறும் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் இல்லை. பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் அரசியல் தந்திரங்களுக்கு இடையிலான மாபெரும் யுத்தமாக உள்ளது.
இன்றைய இளம்தலைமுறை வாக்காளர்களில் படித்தவர்கள் நாம் தமிழர் பக்கம் சாய்வது போன்ற பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் படிப்பறிவு குறைந்த, அதே சமயத்தில் பின்தங்கிய சமுதாயத்தினரின் வாக்குகள் விஜய் பக்கம் செல்வது போன்ற பிம்பமும் உருவாகியுள்ளது.
இதனால் திமுக கடந்த முறை பெற்ற வெற்றிகளைக் கூட இம்முறை பெற முடியாது என்ற ஒரு அதிர்வலையை ஒருசில ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் மூலம் வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றன.
இந்த சூழலில்தான், அதிமுக ஒருவேளை அதிக இடங்களை கைப்பற்றினாலும் கூட, அது தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்ற நம்பிக்கையில் பாஜக தெம்பாக இருக்கிறது. அதனால்தான் வரும்முன் காப்போம் என்ற ரீதியில் விஜய் ஒருசில தொகுதிகளில் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டால், அவரையும் இழுத்து ஆட்சிக் கட்டிலில் பாஜக மறைமுகமாக கோலோச்ச முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு பாஜக (Tamil Nadu BJP) செய்யும் இந்த மறைமுக வியூகங்களை மக்கள் எவ்வாறு பார்க்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
இந்த விடியோவை பார்த்தீர்களா? Edappadi ஆட்சி BJP கையிலா? | Vijay போட்ட திட்டம்! | செந்தில் பாலாஜிக்கு Risk Target
FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
2026 தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி?
பாஜக தற்போது அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்குப் பின் தவெக போன்ற கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்கும் திட்டத்தில் இருக்கிறது.
ராமதாஸ் அத்வாலே விஜய் பற்றி என்ன சொன்னார்?
தேர்தலுக்குப் பிறகு போதிய இடங்கள் கிடைக்காதபட்சத்தில் விஜய்யின் ஆதரவைப் பெற்று தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார்.
பியூஷ் கோயல் தவெக குறித்து கூறியது என்ன? “
விஜய் நிச்சயமாக எங்களுடையவர்” என்று கூறிய அவர், கூட்டணி இல்லை என்றால் விஜய்க்கும் பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என எச்சரித்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் பாஜக என்ன செய்தது?
மாநிலக் கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை உடைத்து, அதன் தலைவர்களைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது.
தவெக பாஜகவுடன் இணையுமா?
தற்போதைக்கு தவெக தனித்து நிற்பதாகக் கூறப்பட்டாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை அமைந்தால் அது தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.
திமுகவின் தேர்தல் வியூகம் என்ன?
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை முன்னிறுத்தியும், பாஜக எதிர்ப்பை மையப்படுத்தியும் திமுக தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.
அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?
ஆளுங்கட்சிக்கு எதிரான விஷயங்களை மையமாக வைத்து வாக்குகளை சேகரிக்கிறது. ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை பெறுவதோடு, சிறுபான்மையினர் வாக்குகளையும் பெற முயற்சி எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் என்ன?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோராயமாக 10 முதல் 11 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன?
சீமானின் நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வழக்கம் போல யாருடனும் கூட்டணி இன்றி தனித்தே போட்டியிடுகிறது.
2026ல் தமிழ்நாட்டின் முதல்வர் யார்?
திமுக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளுமே முதல்வர் கனவோடு மக்களை சந்திக்கின்றன. இவர்களிடையே நிலவும் போட்டியின் முடிவை இப்போது கணிப்பது மிகவும் கடினம்.
#TNElection2026 #ThalapathyVijay #TVK #DMK #AIADMK #Seeman #MithiranNews

மித்திரன் நியூஸ் செய்திப் பிரிவு (Mithiran News Desk): அரசியல், சமூகம், மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கும் பிரத்யேக ஆசிரியர் குழு. 28 ஆண்டுகளுக்கும் மேலான கள அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், எந்தவித சார்புமின்றி, நடுநிலையான மற்றும் உண்மையான செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்