🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

அதிமுக கூட்டணியில் தவெக – திமுகவை வீழ்த்த முடியுமா?

Read in English / பிற மொழிகளில் படிக்க:

ஆளுங்கட்சியான திமுக தனது பலமான கூட்டணியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், அதிமுக – தவெக கூட்டணி குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளன.

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் பின்னணி வியூகத்தால் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், பலமான திமுகவை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

உள்ளடக்கம்

இதை படித்தீர்களா: நாயர் கடை அரசியல்: விஜய் டப்பிங் பிளான் – பாஜக செக்-மேட்!

அதிமுக – தவெக கூட்டணி சாத்தியமானால்…

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

பாஜகவின் தொடர் வலியுறுத்தலின் பேரில், அதிமுக அணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

அரசியலில் எதுவும் நடக்கும் என்பது கடந்த கால வரலாறு. அப்படி ஒரு அதிரடியான அரசியல் நகர்வு உருவானால், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் எங்கும் சிதறாமல் ஒரே அணியில் குவியும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை எதிரணிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக விஜய் கூட்டணி அமைந்தால் இந்த அணி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுவிடும் என்ற ரீதியில் கூட பேசப்படுகிறது. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தமிழக மக்களின் மனநிலையையும், கடந்த காலத்தில் மக்கள் எடுத்த முடிவுகளையும் அலசி பார்ப்பது அவசியம்.

கடந்த கால அரசியல் பாடம்

தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், கூட்டணி அமைச்சரவை அல்லது தொங்கு சட்டமன்றம் என்ற பேச்சுக்கே மக்கள் இடமளித்தது இல்லை என்பது வரலாறு..

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகும் என விமர்சகர்கள் கணிக்கும் போதெல்லாம், வாக்காளர்கள் அமைதியான முறையில் மாபெரும் வாக்குப் புரட்சியில் இந்த சிக்கலுக்கு எளிதான தீர்வை கண்டிருக்கிறார்கள்.

நிலையான ஆட்சிக்காக, ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டணிக்கோ அல்லது கட்சிக்கோ தனிப்பெரும்பான்மை வழங்கி தேர்தல் போக்கையே மாற்றுவது தமிழ் நாட்டு மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

1989 சட்டப் பேரவை தேர்தல்

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக 1989 சட்டமன்றத் தேர்தலைக் குறிப்பிடலாம். எம்.ஜி.ஆர் மறைவால் அதிமுக உடைந்ததோடு, காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டதால் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டு தொங்கு சட்டமன்றம் அமையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த நெருக்கடியான அரசியல் சூழலிலும் திமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்கி மக்கள் நிலையான ஆட்சியை உறுதி செய்தனர்.

அதேபோல 1980-ல் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலிலும், பலமான எதிர்க்கூட்டணியை மீறி தனிப்பெரும்பான்மையோடு அதிமுகவுக்கு தெளிவான தீர்ப்பை மக்கள் வழங்கினர்.

எப்போதெல்லாம் நிலையற்ற தன்மை ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுகிறதோ, அப்போதெல்லாம் குழப்பமான முடிவுகளைத் தவிர்த்து, தெளிவான அதிகாரத்தை ஒரு கட்சியின் கையில் கொடுப்பதையே தமிழக மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையாகக் கொண்டுள்ளனர்.

அதிமுக – தவெக கூட்டணி – துணை முதல்வர் பதவி

விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர, அவருக்கு துணை முதல்வர் பதவி கூட ஆஃபராக வழங்கப்படலாம் என அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வாறு நடந்தாலும் கூட, தனித்து அதிமுக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.

காரணம், ஒரு பெரிய கூட்டணியை அமைக்கும் போது, அதில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் கணிசமான இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் நெருக்கடி

இப்படி அதிமுக விஜய் கூட்டணி மெகா கூட்டணியாக உருவெடுத்தால், அதிமுக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.நெருக்கடியான நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அணியில் சேர்ப்பதற்கு அக்கட்சிக்கு கடந்த காலத்தில் விஜய்காந்த் உயிரோடு இருந்தபோது அவரது தேமுதிகவுக்கு அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியது போல் இப்போது ஒதுக்க வேண்டும்.

ஏற்கெனவே அணியில் உள்ள கட்சிகளை விட்டுக் கொடுக்காமல் அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் நிலையில், அதிகபட்சமாக 130 முதல் 140 இடங்களில் மட்டுமே அதிமுக போட்டியிட வேண்டிய சூழல் உருவாகலாம் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.

இது அதிமுக – தவெக கூட்டணிக்குள் ஆரம்பத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தி, அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

காரணம் அதிமுக நிற்கும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 30 முதல் 40 இடங்களை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நிலை ஏற்படுமாயின் அதிமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட அறிவார்கள்.

தொங்கு சட்டமன்றமா? கூட்டணி ஆட்சியா?

அதிமுக குறைந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகும்.

இது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய கூட்டணி அமைச்சரவை அல்லது தொங்கு சட்டமன்றத்தை உருவாக்கக் கூடும். அதில் தேசிய கட்சியான பாஜகவுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இதை நோக்கியே பாஜகவின் நீண்ட கால அரசியல் காய்கள் நகர்த்தப்படுவதாகவும், இது தேசிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தெளிவான முடிவெடுக்கும் தமிழக வாக்காளர்கள்

தமிழக மக்கள் எப்போதுமே சட்டமன்றத் தேர்தல்களில் யாருக்கு ஆட்சி அதிகாரம் என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்கும் முடிவையே வழங்கி வந்துள்ளனர்.

தொங்கு சட்டமன்றம் அல்லது நிலையற்ற கூட்டணி ஆட்சி அமைவதை அவர்கள் வரலாற்று ரீதியாகப் பெரும்பாலும் விரும்புவதில்லை.

மக்களின் இந்த தீர்க்கமான மனநிலை இப்படி ஒரு அதிமுக – தவெக கூட்டணி அமையும் நிலையில் அந்த அணிக்கு சாதகமாக இல்லாமல், பாதகமாக மாறவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

திமுகவுக்கு சாதகமாக மாறுமா நடுநிலை வாக்குகள்?

நிலையற்ற ஆட்சி அமையலாம் என்ற சந்தேகம் நடுத்தர மக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் எழுந்தால், தேர்தல் களம் முற்றிலுமாகத் தலைகீழாக மாறிவிடும்.

எப்போதுமே ஆளும் கட்சி மீது ஒரு அதிருப்தி நிலவும். அதேபோல் நடுநிலை வாக்காளர் மனநிலையும் தற்போதைய ஆட்சி மீது பல காரணங்களால் அதிருப்தியில் இருப்பார்கள். அவர்கள் இப்போதுள்ள அதிமுக அணிக்கு சாதகமாகவே வாக்களிக்க முடிவு செய்திருப்பார்கள்.

ஆனால் அதிமுக விஜய் கூட்டணி காரணமாக ஒரு கூட்டணி அமைச்சரவையே அமையும் என்ற சூழல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிலவுமானால், இந்த வாக்காளர்களின் மனநிலை தலைகீழாக மாறும்.

இத்தகைய மனநிலை கொண்டவர்களின் வாக்குகள்தான் எப்போதுமே வெற்றித் தோல்வியை பல நேரங்களில் முடிவு செய்திருக்கின்றன.

அவர்கள் தற்போதைய ஆட்சி மீதான அதிருப்தியைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் பலமான திமுக அணிக்கே வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

ஆகவே, இந்த அதிரடி கூட்டணி அமைந்தாலும் அது யாருக்கு லாபம் என்பதில் இன்னும் பல அரசியல் திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதே நிதர்சனம்.

FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

அதிமுக – தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?

அரசியல் களத்தில் இதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வியூகங்கள் பாஜக தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் உலா வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கும்?

தற்போதைய சூழலில் அவர்கள் தனித்து நிற்பதாகக் கூறினாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொண்டர்களின் மனநிலையைப் பொறுத்து கூட்டணி நிலைப்பாட்டை எடுக்கலாம்.

இந்த கூட்டணியில் பாஜகவின் திட்டம் என்ன?

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்துவதோடு, தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சியை அல்லது தொங்கு சட்டமன்றத்தை உருவாக்குவதே பிரதான திட்டமாக இருக்கலாம்.

விஜய் துணை முதல்வர் ஆவாரா?

இந்த மெகா கூட்டணி அமைந்தால், விஜய்யின் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு இது போன்ற முக்கிய பதவிகள் பேரத்தின் ஒரு பகுதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

மெகா கூட்டணி அமைந்தால் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?

பாமக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்தால், கூட்டணிக் தர்மத்திற்காக அதிமுக 140 தொகுதிகள் வரை சுருங்குவதற்குச் சாத்தியங்கள் உள்ளன.

கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு செட் ஆகுமா?

தமிழக வாக்காளர்கள் பொதுவாக எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை வழங்கி, நிலையான ஆட்சியையே அதிகம் விரும்புவார்கள் என்பது கடந்த கால வரலாறு.

தொங்கு சட்டமன்றம் அமைந்தால் யார் லாபமடைவார்கள்?

நிலையான ஆட்சி வராது என்ற எண்ணம் நடுநிலை வாக்காளர்களைச் சிந்திக்க வைத்து, மீண்டும் பலமான கட்டமைப்புள்ள கூட்டணிக்கே வாக்களிக்கத் தூண்டலாம்.

திமுகவின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்?

தற்போதைய பலமான கூட்டணியை எந்த விரிசலும் இல்லாமல் அப்படியே தக்கவைத்து, அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பார்கள்.

நடுத்தர மற்றும் நடுநிலை வாக்காளர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

அன்றாடப் பிரச்சனைகள் இல்லாத, நிலையான ஆட்சி மற்றும் தெளிவான தலைமையை நோக்கியே அவர்களின் வாக்குகள் அதிகம் பதியும்.

2026 தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

கூட்டணிகளின் இறுதி வடிவம், தேர்தல் அறிக்கைகள் மற்றும் அந்த நேரத்து மக்களின் மனநிலையைப் பொறுத்தே உறுதியான முடிவைத் தீர்மானிக்க முடியும்.

விஜயின் முதல்வர் கனவு பலிக்குமா? ஒரு அலசல் காணொளி

#ADMKTVKAlliance #VijayInPolitics #TNElection2026 #TamilNaduPolitics #DMKvsADMK #PoliticalAnalysis #TNAssemblyElection #MithiranNews

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும். இது மித்திரன் செய்திகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல.

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *