🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

விஜய் அரசியல்: ஆளுங்கட்சி பகீர் | Sharp Political Satire

Read in English / பிற மொழிகளில் படிக்க:

காலை வெயில் சுளீரென்று அடிக்கத் தொடங்கியிருக்க, நாயர் கடையில் பாய்லர் சத்தம் அதைவிடச் சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ‘ஸ்ட்ராங் டீ’யை உறிஞ்சியபடி, அன்றைய செய்தித்தாளில் விஜய் அரசியல் – ஆளுங்கட்சியில் வெடித்த புதிய பூகம்பம் பற்றி மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கரைவேட்டி கந்தசாமி. தூரத்தில் இருந்தே அவரை பார்த்தபடி,வேக நடையுடன் வந்து பெஞ்சில் அமர்ந்தார் வாய்ப்பந்தல் வைத்தி.

(இது நடப்பு அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் நாயர் கடை நையாண்டி பகுதி)

-:பந்து மித்திரன்:-

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

நாயர் கடையில் இன்றைய அரசியல் பற்றிய அவர்களின் உரையாடல் இது.

வைத்தி: “என்ன கந்தசாமி, நேத்து ஏதோ ஆளுங்கட்சியில பெரிய பூகம்பம் வெடிக்கப் போகுது, தலைகளெல்லாம் உருளப் போகுதுன்னு பெரிய குண்டை தூக்கிப் போட்ட… அது நம்ம மாநில ஆளுங்கட்சியா? இல்ல ஒன்றிய ஆளுங்கட்சியா? ராத்திரி பூரா எனக்குத் தூக்கமே இல்லை…” என்று மூச்சு வாங்கக் கேட்டார்.

கந்தசாமி: (கண்ணாடியைக் கழற்றி சட்டைப்பையில் வைத்துவிட்டு, நக்கலாகச் சிரித்தபடி) “அவசரப்படாத வைத்தி… நான் சொன்னது ஒன்றியத்துலதான்! அங்க நடக்குற கூத்துகளுக்கு அளவே இல்லாம போச்சு. திடீர்னு பார்த்தா, செய்திச் சேனல்களோட டிஆர்பி (TRP) ரேட்டிங்கை வெளியிடக் கூடாதுன்னு மத்திய அரசு தடை போட்டிருக்கு. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?”

விஜய் அரசியல்

வைத்தி: டிஆர்பி ரேட்டுக்காக, இஸ்ரேல்-ஈரான் போர் பத்தி ரொம்ப ஓவரா செய்தி போடுறத தடுக்க 4 வாரத்துக்கு தடைன்னு சொன்னாங்க… கரெக்டா…

கந்தசாமி: “அதுதான் இல்ல. இதுல ஒரு அரசியல் தந்திரமும் இருக்கு தெரியுமோ! தேர்தல் நேரத்துல எந்தச் சேனல் யாருக்கு ஆதரவா நிக்குது, யாருக்கு மக்கள் மத்தியில செல்வாக்கு இருக்குன்னு தெரியாமலே ஒரு மர்மத்தை மெயின்டெய்ன் பண்ணத்தான் இந்த திடீர் தடை. இதுக்கெல்லாம் பின்னணியில பெரிய ‘ஸ்கெட்ச்’ இருக்கு வைத்தி.”

வைத்தி: “அப்படியா சங்கதி… சரி, ஒன்றியத்துல குடைச்சல்னா, நம்ம ஊர்ல குடைச்சல் கொடுத்த அந்த ‘பெரியவரை’ காணோமே?”

கந்தசாமி: “அட நீ வேறப்பா… நம்ம ஊர்ல அவ்வளவு குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவிக்கு பிரமோஷன் கொடுத்து மேற்கு வங்கத்துக்கு அனுப்பிட்டாங்கப்பா… ஆனா இதுல பெரிய ட்விஸ்ட் என்ன தெரியுமா? அவரோட எலியும் பூனையுமா இருந்த நம்ம முதல்வர், நேராப் போய் ரவியைச் சந்திச்சு சிரிச்ச முகமாப் பேசியிருக்காரு. ‘போய் வாருங்கள்’னு வழியனுப்பப் போனாரா, இல்ல வேற ஏதாவது அரசியலான்னு கோட்டை வட்டாரத்துல பேசிக்கிறாங்க.”

கூட்டணிக்குள் புகைச்சல்… கலக்கத்தில் தோழமை கட்சிகள்!

வைத்தி: (டீயை மெதுவாக ஆற்றியபடி) “ஸ்டாலின் கணக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா அறிவாலயத்துல கூட்டணிக்குள்ள புகைச்சல் அதிகமாயிடுச்சுன்னு ஒரு பேச்சு அடிபடுதே… உண்மையா?”

கந்தசாமி: “புகைச்சல் இல்ல வைத்தி, உள்ளுக்குள்ள எரிமலையே வெடிக்கக் காத்துக்கிட்டு இருக்கு. ஏற்கெனவே இருக்கிற கூட்டணிக் கட்சிகளுக்கே ‘சீட்’ பங்கீட்டுல சிக்கல் இருக்கும்போது, இப்போ தேமுதிக வேற உள்ள வந்துருக்காங்க. அவங்களுக்கு அதிக சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்கப் போறாங்கன்னு ஒரு தகவல் லீக் ஆனதுமே, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் ரொம்பவே கலங்கிப் போயிருக்காங்க.”

வைத்தி: “பின்ன கலங்காம என்ன பண்ணுவாங்க? புதுசா வர்றவங்களுக்குப் பெரிய பட்டுக் கம்பளம் விரிச்சா, பல வருஷமா கொடி பிடிச்சவங்களுக்குக் கோபம் வர்ரது நியாயம்தானே!”

கந்தசாமி: “அதைவிடக் கொடுமை, உனக்கு இத்தனை சீட்டுதான், வேணும்னா இரு, இல்லன்னா கிளம்புன்னு மேலிடத்துல கறாரா சொல்லிட்டாங்களாம். அடுத்த சில நாளுல தமிழக அரசியல் நிலவரம் ரொம்ப ரணகளமா மாறப்போகுது, எழுதி வச்சுக்கோ!”

தளபதி விஜய் அரசியல் சிக்கல்…

வைத்தி: (குரலைச் சற்றே தாழ்த்திக்கொண்டு) “சரி கந்தசாமி, இந்த கூட்டணிக் கதையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம தளபதி விஜய் அரசியல், தவெக (TVK) நிலவரம் எப்படிப் போகுது? ஒரு பக்கம் மாநாடு, அரசியல்னு மாஸா இறங்குறாரு… ஆனா சமூக வலைதளத்துல வேற ஏதோ வதந்தி ஓடிக்கிட்டு இருக்கே?”

கந்தசாமி: (சத்தமாகச் சிரித்துவிட்டு) “அது வதந்தி இல்ல வைத்தி… விஜய் அரசியல் வாழ்க்கையில மட்டுமில்ல, இப்போ தனிப்பட்ட வாழ்க்கையிலயும் பெரிய சிக்கலைச் சந்திச்சிட்டு இருக்காரு. மனைவி சங்கீதாவோடு விவாகரத்து நோக்கிச் போயிட்டு இருக்காருன்னு பத்திரிகைகள்ல செய்தி வந்துட்டே இருக்கு. அதை உறுதிப்படுத்துற மாதிரி, சமீபத்துல நடந்த பல கல்யாண நிகழ்ச்சிகளுக்கு நடிகை த்ரிஷாவோட சேர்ந்தே விஜய் வர்றார்.”

வைத்தி: “ஆமாம், நானும் பார்த்தேன். ரசிகர்கள் மத்தியில இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காமே? மெய்யாலுமா”

கந்தசாமி: “கலவையான உணர்வுகள் வைத்தி! ஒரு பக்கம் முரட்டுப் பக்தர்கள் எப்பவும் போல விஜய அரசியல் விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணாலும், நடுநிலை ரசிகர்கள் ரொம்பவே குழம்பிப் போயிருக்காங்க.

இது பத்தாதுன்னு இயக்குநர் அமீர் மாதிரி ஆட்களும் இதை வெளிப்படையாவே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ‘குடும்ப அரசியலை ஒழிப்பேன்னு சொல்லிட்டு, தனிப்பட்ட வாழ்க்கையில இப்படி ஒரு குழப்பத்தை வெச்சுக்கிட்டு எப்படி மக்களைச் சந்திப்பார்?’னு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இதில் விஜய் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் தடுமாறுது”

வைத்தி: “அப்போ விஜய் அரசியல் வாழ்க்கை தடுமாற்றம், எதிர்க்கட்சிகளுக்கு நல்ல வேட்டைதான் போ! நெட்டிசன்களும் சும்மா இருக்க மாட்டாங்களே?”

கந்தசாமி: “அதை ஏம்பா கேக்குற… ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு எல்லாத்துலயும், ‘தவெக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணியார் திரிஷா’னு பெயர் வச்சு கண்டபடி கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. இதுல உச்சக்கட்டம் என்னன்னா, விஜய்க்கு ஆதரவா த்ரிஷா பேசுற மாதிரி ஏஐ (AI) தொழில்நுட்பத்துல உருவாக்கப்பட்ட வீடியோ ஷார்ட்ஸ் எல்லாம் வைரலாப் பரவிட்டு இருக்கு. எது நிஜம், எது பொய்னு தெரியாம கட்சித் தொண்டர்கள் முழிச்சிட்டு இருக்காங்க. ஒட்டுமொத்தமாக விஜய் அரசியல் சமூக ஊடகங்களில் களைக்கட்டியிருக்கு”

வைத்தி: (டீ கிளாஸை பெஞ்சில் வைத்துவிட்டு) “அடப்பாவமே! அரசியல் களத்துல இறங்குறதுக்கு முன்னாடியே, இப்படிப் பல முனைகள்ல இருந்து தாக்குதல் வந்தா, தளபதி விஜய் அரசியல் வாழ்க்கையில் எப்படித்தான் சமாளிக்கப் போறாரோ தெரியலையே?”

கந்தசாமி: “அரசியல்னா சும்மாவா வைத்தி… படத்துல ஒரே பாட்டுல சி.எம் ஆகிடலாம். ஆனா ரியல் லைஃப்ல ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் படமே ஓடும். சரி, நாயரே… வைத்தி சந்தேகத்தை தெளிவுபடுத்துறதுக்குள்ள எனக்கு தலைவலியே வந்துட்டு… இன்னொரு டீ போடு…!”

வைத்தி:நாயரே… இரண்டு பேருக்கும் ஒரு கட்டிங் டீ கொடு…

(இவர்களின் பேச்சை அரைகுறையாக கேட்டபடியே டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிய இரு இளைஞர்களில் ஒருவர், மாப்ள… சுத்த வெட்டி ஆசாமிங்கடா! இருக்கிற பொழப்பை விட்டுட்டு, முதலமைச்சர் வீட்ல என்ன நடக்குது, எதிர்க்கட்சி ஆபீஸ்ல என்ன நடக்குதுன்னு ஆராயுறதே இவங்களுக்கு முழுநேர வேலையாப் போச்சுடா)”

இதை படித்தீர்களா: விஜய் விவாக ரத்து – பொதுவெளியில் விமர்சிக்கப்படும் தனிப்பட்ட வாழ்க்கை

விஜயின் அழுகை கூட ஸ்கிரிப்ட் பார்த்துதானா… விடியோ காணத் தவறாதீர்கள்

இந்த ‘நாயர் கடை அரசியல்’ தொடர் முற்றிலும் அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு கற்பனையான நையாண்டி (Political Satire) பதிவு ஆகும். இதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் கற்பனையே. நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் சமகால அரசியல் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த நையாண்டி விவாதங்கள் எழுதப்பட்டுள்ளன. விஜய் அரசியல் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியையோ, தலைவர்களையோ, தனிநபர்களையோ தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் நோக்கமோ, களங்கப்படுத்தும் நோக்கமோ மித்திரன் இணையதளத்திற்கு இல்லை

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *