🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

108 ஆம்புலன்ஸ் சேவை: உயிர் காக்க Whatsapp-இல் ஒரே மெசேஜ்!

Read in English / பிற மொழிகளில் படிக்க:

உயிர்காக்கும் சேவையை மிகவும் எளிதாக்க, 108 ஆம்புலன்ஸ் சேவை whatapp மூலம் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இனி உயிர் காக்க Whatsapp-இல் ஒரு மேசேஜ் பதிவிட்டால் போதும்.

உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் அழைக்கு புதிய வசதி தமிவகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

உள்ளடக்கம் (உங்கள் தேவைக்காக)

வாட்ஸ்அப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை

இப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் மிக எளிதாக பெற முடியும்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

உங்களின் மொபைல் போனில் 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு HI என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

அதைத் தொடர்ந்து Book Ambulance என்பதை தேர்வு செய்து, Send Location மூலம் உங்கள் இருப்பிடத்தை லைவ்வாக பகிர்ந்தால் ஆம்புலன்ஸ் உடனே நீங்கள் குறிப்பிட்ட இருப்பிடத்துக்கு வந்துவிடும்.

108 ஆம்புலன்ஸ் சேவை வரலாறு

இந்தியாவில் அவசரகால மருத்துவ உதவிக்கு தொடங்கப்பட்ட சிறப்பான திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம்.

ஒரு காலத்தில் சாலை விபத்துக்களில் சிக்கினால், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல வாகனங்கள் கிடைக்காத நிலை இருந்தது. இதனால் பல உயிர்கள் பறிபோயின.

இந்தியாவில் மருத்துவ அவசரங்களுக்கு என ஒருங்கிணைந்த இலவச உதவி அமைப்பு எதுவும் இல்லாத காலம் அது.

அமெரிக்க நாட்டில் 911 என்ற அவசர எண் சேவையை முன்மாதிரியாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பெறுவதுதான் திட்டத்தின் பிரதான நோக்கம்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது இதை மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியாகவே பார்த்தார்கள்.

இன்றைக்கு ஏழை எளிய மக்களுடைய உயிர் காக்கும் சேவையாக இது இருந்து வருகிறது.

108 ஆம்புலன்ஸ் பயன்

Ambulance என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதன் பொருள் அவசரகால ஊர்தி அல்ல. மருத்துவ அவசர ஊர்தி என்பதாகும்.

பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் ஒரு சிறப்பு வாகனம். அதில் அத்தியாவசிய முதலுதவி உபகரணங்கள் அனைத்தும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

இதை படித்தீர்களா? கற்பூரவல்லி இலை பயன்கள்: Discover the Amazing Benefits

108 ஆம்புலன்ஸ் சேவை யார் கொண்டு வந்தது?

இந்த சிறப்பான சேவையை முதன் முறையாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் அங்கமான EMRI அமைப்பு கொண்டு வந்தது.

2005-ஆம் ஆண்டில் அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசின் உதவியோடு நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் எப்போது கொண்டு வரப்பட்டது?

108 ஆம்புலன்ஸ் சேவை முதன் முதலில் 2008-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2008 அன்று இதை தொடங்கி வைத்தார்.

இப்போது ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

108 பெயர் வரக் காரணம் என்ன?

அவசர காலத்தில் மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பழக்கப்பட்ட ஒரு எண் தேவைப்பட்டது. அத்துடன் அந்த எண்ணை எந்த பதற்றமும் இன்றி டெலிபோனில் டயல் செய்யும் வகையிலும் அமைய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக 108 என்ற தேர்வு செய்யப்பட்டது. இந்து மத நம்பிக்கையின்படி மிகவும் புனிதமான எண் 108. அத்துடன் மங்களகரமான எண்ணும் அதுவே.

இந்த நம்பிக்கையூட்டும் எண் அடிப்படையில்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை எனப் பெயரிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: A New Challenge Cicada Virus: சிகாடா வைரஸ் பேரதிர்ச்சி!

இலவச அமரர் ஊர்தி சேவை எண்

எப்படி 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறதோ, அதே போன்று அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரின் உடல்களை இலவசமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்ல உதவும் ஒரு திட்டமும் உள்ளது.

இந்த சேவைக்கு இலவச அமரர் ஊர்தி சேவை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த சேவையைப் பெற மக்கள் அழைக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்.155377 அல்லது 1097.

இந்த சேவையில் சமீபகாலமாக குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருவதை அரசு கவனிக்க வேண்டும்.

காரணம் பல ஏழைகளின் சடலங்களை எடுத்துச் செல்வதற்கு கட்டாய கட்டண வசூல் வேட்டையை சிலர் நடத்துவதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவை தரும் வேலைவாய்ப்பு
சமூக சேவையுடன் கூடிய இந்த வேலைவாய்ப்பை விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பை அளிக்கிறது.

இதில் ஓட்டுநர் (Pilot), அவசரகால மருத்துவ உதவியாளர் (EMT) என்ற இரு முக்கியமான பொறுப்புகளுக்கு அடிக்கடி வேலைவாய்ப்பு தகவல்கள் அறிவிக்கப்படுகின்றன.

முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் மருத்துவப் பயிற்சி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முகாம்கள் மூலம் இதில் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதை படித்தீர்களா? மூலிகை தேநீர்: 10 வயது இளமையாக்கும் அதிசயம்!

FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

108 ஆம்புலன்ஸ் சேவை இந்தியாவில் எப்போது தொடங்கப்பட்டது?

நாட்டில் முதன்முதலில் இந்த இலவச மருத்துவ அவசர சேவை 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் ஆந்திர மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

தமிழ்நாட்டில் இந்த சேவையை 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார்.

Ambulance meaning in Tamil – ஆம்புலன்ஸ் என்பதன் பொருள் என்ன?

ஆம்புலன்ஸ் என்பது தமிழில் அவசரகால ஊர்தி அல்லது மருத்துவ அவசர ஊர்த்தி என்பதே.

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு whatsapp மூலம் அழைக்க முடியுமா?

whatsapp மூலம் அழைக்கும் சேவையை இப்போது தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்திருக்கிறது. 94450 30725 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்து உங்களின் அல்லது விபத்து அல்லது பாதிக்கப்பட்டவரின் இடத்தை பகிர்வதன் மூலம் உடனடியாக ஆம்புலன்ஸ் உங்கள் இடத்திற்கு வந்து சேரும்.

108 என்ற பெயர் வரக் காரணம் என்ன?

மிக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் எண்ணாக இது தேர்வு செய்யப்பட்டது. ஆன்மிகத்தில், அத்துடன் நம்பிக்கைக்கு உரிய எண்ணாக 108 இருப்பதால் அந்த எண் தேர்வானது.

மருத்துவமனையில் இறந்தவரின் உடலை இலவசமாகக் கொண்டு செல்ல எந்த எண்ணுக்கு தொடர்பு கொள்வது?

அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை இலவசமாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல 155377 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஒருவேளை இலவச வாகன சேவை ஓட்டுநர் பணம் கேட்டால் யாரிடம் புகார் தெரிவிப்பது?

இந்த இலவச அமரர் ஊர்தி சேவை தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் கீழ் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படுகிறது.
சேவையில் அதிகப்படியான தாமதம் அல்லது முறைகேடுகள் இருப்பின், தொடர்புடைய அரசு மருத்துவமனையின் இருப்பிட கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி ஆகியோரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
இந்த புகார்கள் கண்டுகொள்ளபடவில்லையெனில், முதலமைச்சரின் உதவி மையம் (1100) எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரசு சேவைகளில் ஏற்படும் எந்த குறைபாட்டுக்கும் முதல்வரின் முகவரி (cm helpline) திட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம்.
இணையதளம் cmhelpline.tnega.org என்ற தளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம்.

108 ஆம்புலன்ஸ் சேவை முற்றிலும் இலவசமா?

ஆமாம். சாலை விபத்துக்கள், கர்ப்பிணி பெண்கள், அவசரகால மருத்துவத் தேவைகளுக்காக இந்த சேவை எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

108 சேவை மையத்தில் இருந்து இருப்பிடத்தை பகிர்ந்தவருக்கு அழைப்பு வருமா?

ஆமாம். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருப்பிடத்தை பகிர்ந்ததும், நோயாளியின் நிலையை கேட்டறியவும், முதலுதவி ஆலோசனைகளை வழங்கவும் மையத்தில் இருந்து உடனடியாக அழைப்பார்கள்.

108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு பெற முடியுமா?

இது சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கான ஒரு வேலைவாய்ப்பு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் இன்றி முற்றிலும் சேவை மனம் கொண்டவர்களுக்கு மட்டுமே இது பொருந்தக் கூடியது.
GVK EMRI நிறுவனம் சார்பில் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி, ஓட்டுநர் (Pilot) மற்றும் மருத்துவ உதவியாளர் (EMT) பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

உடலை பாதுகாக்கும் 7 நாள் நடைமுறை – காந்தி கடைப்பிடித்த வித்தை


108AmbulanceService #108AmbulanceTamilNadu #FreeAmbulance #EmergencyServiceTN #WhatsAppChatbot #TamilNaduNews #MithiranNews

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *