🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

HMPV VIRUS 2025 தொற்று அறிகுறிகள் என்ன?

Read in English / பிற மொழிகளில் படிக்க:

சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் hmpv virus இந்தியாவிலும் இருப்பதை அடுத்து மக்களிடம் தேவையில்லாத அச்சம் காணப்படுகிறது.

இந்த வைரஸால் எந்த விதத்திலும் பொதுமக்களுக்கு கொரோனா அளவுக்கு பெரிய அளவில் பாதிப்பு வராது என்பதே உண்மை.

யாரை பாதிக்கும்

இந்த வைரஸ் மிகச் சிறிய குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே அதிக பாதிப்புக்குள்ளாக்கும்.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

இதனால் இளம் குழந்தைகளையும், வயது முதிர்வு அடைந்தவர்களையும் நாம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டாலே போதும்.

hmpv virus ஆபத்தானதா

உலகம் முழுவதும் 2019-இல் பரவிய கோவிட் 19 வைரஸால் இந்திய மக்களில் பலர் உயிரிழப்புகளை சந்தித்தார்கள். அதனால் இப்போது பரவும் வைரஸ் மீது ஒருவகை அச்சம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

சீனாவில் ஏன் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்திருக்கிறது?

hmpv virus இந்தியாவுக்கு புதிதா? இந்த நோய் தாக்குதலின் அறிகுறிகள் என்ன?

எத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் இந்த சூழலில் அறிந்துகொள்வது அவசியம்.

சீனாவில் பரவும் hmpv virus

இப்போது, வடசீனா, பெய்ஜிங், சோங்கிங், தென் சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஆகியவற்றில் hmpv virus தாக்கம் காணப்படுவதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இணையதளமான குளோபல் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

human metap-neumo-virus என்பதன் சுருக்கமே hmpv ஆகும்.

இந்த hmpv virus இந்தியாவுக்கு புதிதல்ல. அத்துடன் இது கொரோனா தொற்று போல் அதிக உயிர்களை பலிக்கொள்ளும் ஆபத்தான வைரஸும் அல்ல.

2001-இல் கண்டறியப்பட்ட வைரஸ்

இந்த hmpv virus 2001-ஆம் ஆண்டில், அதாவது 24 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
ஆனாலும் இதற்கு தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை.

இந்த hmpv virus தொடர்பாக சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் மூலம் சில தகவல்கள் நமக்கு தெளிவை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளில் பறவைகளிடம் காணப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு அந்த வைரஸ் சூழலுக்கு ஏற்ப மாற்றம் பெற்றிருக்கிறது.

அதனால் அது பறவைகளை தாக்குவதில்லை. ஆனால், மனிதனை தாக்கத் தொடங்கியிருக்கிறது.

மனிதர்களிடையே இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது 2001-ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது.

அப்போதுதான் மனிதர்களை இந்த வைரஸ் தாக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது.
இதை அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் – சிடிசி தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறது.

சீனாவில் ஏற்கெனவே சிறிய அளவில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது அது அதிக எண்ணிக்கையில் மக்களை தாக்கத் தொடங்கியிருக்கிறது.

அதனால் கொரோனா போன்ற பாதிப்பை இது ஏற்படுத்தி வருவதாக பரவிவரும் தகவல்கள் உண்மையல்ல.

சீனாவில் வைரஸ் பரவலுக்கான காரணம் என்ன?

குளிர்காலங்களில் சீனாவின் சில பகுதிகளில் சுவாசப் பிரச்னைகள் வழக்கமாக அதிகரிப்பது உண்டு.

அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு இப்பிரச்னையின் தீவிரம் குறைந்திருக்கிறது என்று சீனா தெரிவித்திருக்கிறது.

நோய் தொற்று பாதிப்புகள்

பொதுவாக, இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை ஜலதோஷம் தொற்றிக் கொள்கிறது.

ஆனால், நம் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியால், சில நாள்களில் இந்த hmpv virus தானாகவே மறைந்துவிடுகிறது.

இதனால் இந்த hmpv virus தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று நாம் அறியாமலேயே இந்த வைரஸ் போய்விடும்.

பொதுவான அறிகுறிகள்

இந்த hmpv virus தாக்குதலுக்கு ஆளானவர்கள் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த வைரஸின் வளர்ச்சி காலம் 3 முதல் 6 நாள்களாக இருக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்பு நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்து மாறுபடுகிறது.

ஆனால் குழந்தைகள், வயதானவர்களுக்கு இந்த வைரஸ் நிமோனியா போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

யாருக்கு அதிக பாதிப்பு வரும்?

இந்த வைரஸ் பிறந்தது முதல் ஒரு வயதுக்குட்பட்ட இளம் குழந்தைகளிடமோ, நுரையீரல் பாதிப்பு உடையவர்களிடமோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களிடமோ மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

மற்றவர்களுக்கு இந்த எச்எம்பிவி வைரஸால் எந்த பெரிய பாதிப்பும் வராது.

இது புதிய வைரஸா?

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் குப்தா, இது புதிய வைரஸ் அல்ல. காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் போன்றதுதான் இதுவும்.

இருமல், சளி போன்றவற்றுக்கு பொதுவாக பயன்படுத்தும் மருந்துகளே இந்த நோய் பாதிப்புக்கு தரப்படுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஓய்வெடுப்பதுதான் அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த மருத்துவமனையின் மருத்துவர் பாபி பலோத்ரா அந்த பேட்டியில், ஏற்கெனவே ஆஸ்துமா, க்ரானிக் அப்ஸ்ரக்டிவ் பல்மொனரி டிசீஸ் எனப்படும் நுரையீரல் நோய் பாதிப்புடைய நோயாளிகள் இந்த வைரஸ் தாக்குதலால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.

எப்படி பரவுகிறது?

இது ஒரு சகஜமான நோய்த்தொற்று ஏற்படுத்தக் கூடிய வைரஸ். சளி, இருமலால் பாதிக்கப்பட்ட நபர், இருமும்போதும், தும்மும்போதும் வெளியேறும் நீர்த்திவளைகள் மூலம் இந்த வைரஸ் மற்றவர்களை பாதிக்கிறது.

பாதிக்கப்பட்டவர் அடிக்கடி முகம், மூக்கு மற்றும் உடலில் பிற இடங்களைத் தொடும்போது அந்த வைரஸ் அந்த இடத்துக்கு மாறும்.

அப்போது அவர்களுடன் மற்றவர்கள் கைக் குலுக்கும்போதோ,, கட்டிப் பிடிக்கும்போதோ, தொட்டு பேசும்போதோ இந்த வைரஸ் தொற்று ஏற்படும்.

hmpv virus

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

குடும்பத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், மற்றவர்கள் நோயாளியை தனி அறையில் சில நாள்களுக்கு வைத்திருந்தாலே போதுமானது.

நோய் பாதிப்பை சந்திப்பவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் எப்போதும் மூக்கு, வாயை மூடிக் கொள்வது அவசியம். அதன் மூலம் காற்றில் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுவதை தடுக்கலாம்.

பேருந்துகள், வாகனங்களில் பயணிக்கும்போது, தும்மல், இருமலின்போது வெறும் கைகளை பயன்படுத்தினால் அந்த கைகளில் ஒட்டிக் கொள்ளும் வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கு எளிதில் பரவும்.

அதனால் இத்தகைய செயல்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபடக் கூடாது.
தும்மல், இருமல் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது அவசியம்.

நோய்த் தொற்று இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வெளியில் சென்று திரும்பியதும் கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்துகொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

யாருக்கு சிகிச்சை தேவை?

இந்த வைரஸ் தாககுதலுக்கு ஆளானவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தால், மேல் சிகிச்சை எதுவும் தேவையி்ல்லை.

போதுமான அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்தாலே நோய் பாதிப்பு நீங்கி விடும்.

பெரும்பாலும் நோய்த் தொற்று பாதிப்பு 5 முதல் 7 நாள்களில் மறைந்துவிடும்.
வேறு சில நோய்தொற்றுக்கு ஆளானவர்கள், அதிக வயதை நெருங்கியர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் சற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

அவர்கள் மருத்துவ சிகிச்சையையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்படும்.

தடுப்பு மருந்து ஏன் இல்லை?

24 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வைரஸ் கண்டறியப்பட்டபோதே, இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் அந்த தடுப்பூசிகளின் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தின.

சோதனை முயற்சிகளை விலங்குகளில் மேற்கொண்டபோது அந்த தடுப்பு மருந்தால் நுரையீரல் அழற்சி அவற்றுக்கு ஏற்பட்டது. இதனால் இந்த சோதனை முயற்சியை ஆராய்ச்சியாளர்கள் கைவிட்டனர்.

வழக்கமாக ஜலதோஷம் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு இருமுறை ஏற்படுவதுண்டு. இது ஏதோ ஒரு வைரஸால் மட்டும் ஏற்படுவதில்லை.

கிட்டத்திட்ட ஜலதோஷத்தை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்கள் 200-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன.

இவை அனைத்துக்கும் வேக்சின் கண்டறிவதும் இயலாத காரியமாகவும் இருக்கிறது.
இத்தகைய ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ்கள் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகின்றன.

இதனால் இத்தகைய வைரஸுகளுக்கு கண்டறியப்படும் நோய் தடுப்பு மருந்துகளை நீண்ட நாள்களுக்கு நாம் பயன்படுத்தவும் முடியாது.

இதனால்தான் ஜலதோஷத்தை தடுப்பதற்கான தடுப்பூசிகள் இன்றைய மருத்துவ உலகில் உருவாக்கவில்லை.

மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸ்களால் நம் உடல் நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடிகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திப்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய வைரஸ் பாதிப்புகள் உதவுகின்றன என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
உயிரிழப்பு சதவீதம் மிகக் குறைவு.

மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட தகவல்படி, 2018-இல் உலகில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 16,100 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களில் 65 சதவீதத்தினர் 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகள்.

இந்த ஆய்வறிக்கைப்படி, எச்எம்பிவி வைரஸ் காரணமாக ஒரு வயதுக்குடபட்ட குழநதைகள் அதிக ஆபத்தை சநதிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் சிஇஓ மார்கரெட் ஹரிஷ், எச்எம்பிவி வைரஸ் இறப்பு விகிதம் குறைவு என்கிறார்.

குழந்தைகளுக்கு ஏன் அதிக பாதிப்பு?

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மென்மையான சுவாசப் பாதைகளைக் கொண்டிருக்கின்றன. அதனால் அக்குழந்தைகள் அதிக பாதிப்பை சநதிக்கிறார்கள்.

அந்த குழந்தைகளிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் இந்த வைரஸை எதிர்த்து போராடுவது கடினமாக இருக்கிறது.

உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
உலக சுகாதார அமைப்பு உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவிக்காமல் இருப்பதற்கு என்று அறிவிக்காததற்கு இதுதான் காரணம்.

எலுமிச்சை சாற்றின் பயன்கள் என்ன?

வித்தியாசமான கலைப் படைப்புகள்

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *